Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காந்தி கொலை வழக்கு: மீண்டும் விசாரணையா?

Posted: 06 Oct 2017 08:24 AM PDT

புதுடில்லி: மஹாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரும் வழக்கு தொடர்பாக எழும் கேள்விகளுக்கு விடை தேடுவதில், நீதிமன்றத்துக்கு உதவ, 'அமிகஸ் கியூரி'யை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

மஹாத்மா காந்தி, 1948, ஜன., 30ம் தேதி, டில்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர், 1949, நவ., 15ல் துாக்கிலிடப்பட்டனர். போதிய ஆதாரங்கள் இல்லாததால், வழக்கில் இருந்து விநாயக் தாமோதர் சர்வாகர் விடுவிக்கப்பட்டார்.'மஹாத்மா காந்தி கொலை வழக்கில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்' என, ...

பூரண மது விலக்குக்கு 'நிடி ஆயோக்' கடும் எதிர்ப்பு

Posted: 06 Oct 2017 08:26 AM PDT

சென்னை: 'ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்ட வரம்பிற்குள் வரும், திட்டங்களின் விளம்பரங்களை, ஆணையத்தின் பதிவு எண் இன்றி, வெளியிட வேண்டாம்' என, நாளிதழ்களை, தமிழக ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர், தர்மேந்திர பிரதாப் யாதவ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக, நாளிதழ்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: மத்திய அரசு, 2016ல் நிறைவேற்றிய, ரியல்எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை பின்பற்றி, 'தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை விதிகள் - 2017' ஜூன், 22ல் வெளியிடப்பட்டன. இதற்கான அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை பிறப்பித்துள்ளது.* இதன்படி, 500 சதுர மீட்டர், ...

மரண தண்டனை கைதிகளை தூக்கிலிடுவதை தவிர்க்கும்படி... யோசனை!

Posted: 06 Oct 2017 09:05 AM PDT

புதுடில்லி: மரண தண்டனை கைதிகளை துாக்கிலிடுவதை தவிர்க்க வேண்டும் என்று யோசனை கூறியுள்ளஉச்ச நீதிமன்றம், வலியில்லாமல் சாகடிக்கும் முறையை கண்டறியும்படி ஆலோசனை வழங்கியுள்ளது. துாக்கிலிடுவதை எதிர்க்கும் பொதுநலன் வழக்கில், மத்திய அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மரண தண்டனையை நிறைவேற்ற துாக்கிலிடும் குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவை எதிர்த்து, வழக்கறிஞர், ரிஷி மல்ஹோத்ரா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மாற்று வழிகள்
இந்த வழக்கு, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா ...

வீடுகள், மனைகள் விற்பனை திட்ட விளம்பரங்களுக்கு... கட்டுப்பாடு

Posted: 06 Oct 2017 09:12 AM PDT

சென்னை:'ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்ட வரம்பிற்குள் வரும், திட்டங்களின் விளம்பரங்களை, ஆணையத்தின் பதிவு எண் இன்றி, வெளியிட வேண்டாம்' என, நாளிதழ்களை, தமிழக ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர், தர்மேந்திர பிரதாப் யாதவ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக, நாளிதழ்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:மத்திய அரசு, 2016ல் நிறைவேற்றிய, ரியல்எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை பின்பற்றி, 'தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை விதிகள் - 2017' ஜூன், 22ல் வெளியிடப்பட்டன. இதற்கான அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை பிறப்பித்துள்ளது.* இதன்படி, 500 சதுர மீட்டர், அதாவது, ...

கவர்னர் பதவியேற்பில் ஸ்டாலின் கோபம்

Posted: 06 Oct 2017 10:02 AM PDT

கவர்னருக்கு வாழ்த்து கூற, தன்னை அழைக்காததால், எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் கோபமடைந்தார்.

தமிழக கவர்னர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற, ஸ்டாலினுக்கு, முன் வரிசையில், அமைச்சர்களுக்கு அடுத்த வரிசையில், இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவருடன் வந்த, தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்களுக்கு, பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.ஸ்டாலின், தனியாக அமர்ந்திருந்தார். எனவே, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வேலு, அன்பழகன் ஆகியோர், முன் வரிசைக்கு வந்து, ஸ்டாலின் அருகே அமர்ந்தனர்.அவர்களை, அதிகாரிகள் தடுத்தனர். கோபமடைந்த அன்பழகன், . அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ...

ஐகோர்ட்டை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டிலும் சசி தரப்புக்கு... மூக்குடைப்பு!

Posted: 06 Oct 2017 10:44 AM PDT

இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் கமிஷனின் விசாரணைக்கு தடை கோரியும், தங்கள் தரப்பு வாதத்தை வலுப்படுத்தும் வகையில் கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க அவகாசம் கேட்டும் தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற விவகாரத்தில் நவம்பர் 10க்குள் முடிவை அறிவிக்கவும், தேர்தல் கமிஷனுக்கு அவகாசம் வழங்கியது. இதனால் ஏற்கனவே ஐகோர்ட்டில் 'குட்டு'ப்பட்ட சசிகலா தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மூக்குடைப்பை சந்தித்தது.

இதையடுத்து சின்னம் தொடர்பான விசாரணை நேற்று மாலை தேர்தல் கமிஷனில் ...

பயங்கரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை; இந்தியா - ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தல்

Posted: 06 Oct 2017 10:50 AM PDT

புதுடில்லி: 'லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது, போன்ற பயங்கரவாத அமைப்புகள் மீதும், ஹபீஸ் சயீத், தாவூத் இப்ராகிம் போன்ற சர்வதேச பயங்கரவாதிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இந்திய - ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில், வலியுறுத்தப்பட்டது.

இந்தியா - ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு, டில்லியில், நேற்று நடந்தது. இதில், பிரதமர், நரேந்திர மோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர், டொனால்டு பிரான்சிஸ்ஜக் டஸ்க், ஐரோப்பிய கமிஷன் தலைவர், ஜங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.மாநாட்டுக்கு பின், வெளி யிடப்பட்ட கூட்டறிக்கை: உலக அமைதிக்கு பெரும் ...

கணவரை பார்க்க சசிக்கு 'எமர்ஜென்சி பரோல்'

Posted: 06 Oct 2017 10:56 AM PDT

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு மத்திய சிறையில், எட்டு மாதமாக அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு, அவர் கணவர் நடராஜனை பார்த்து வர, 'எமர்ஜென்சி பரோலில்' ஐந்து நாட்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறைத் தண்டனை, உறுதி செய்யப்பட்ட பின், சசிகலா, பெங்களூரு மத்திய சிறையில், பிப்., 2ம் தேதி அடைக்கப்பட்டார்.சிறையில் பல சலுகை வழங்கப்பட்டதாகவும், அதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், சிறைத்துறை, டி.ஜி.பி., சத்ய நாராயணா மீது, சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டி இருந்தார். இதனால், சிறைத்துறை ...

ஓட்டல் வரியை குறைக்க குழு அமைப்பு; ஜி.எஸ்.டி., கூட்ட முடிவில் ஜெட்லி அறிவிப்பு

Posted: 06 Oct 2017 11:02 AM PDT

புதுடில்லி: ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறையில், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்துள்ள மத்திய அரசு, ஓட்டல்களுக்கான வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து ஆராய, அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

ஜி.எஸ்.டி., முறையில் வரி விகிதங்களை நிர்ணயிக்க, மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி தலைமையில், மாநில நிதி அமைச்சர்களை உறுப்பினர்களாக உடைய, ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. கவுன்சிலின், 22வது கூட்டம், டில்லியில் நேற்று ...

வீடுகளில், 490 யூனிட் மின்சாரம்: ஆய்வு நடத்த வாரியம் உத்தரவு

Posted: 06 Oct 2017 12:24 PM PDT

இரு மாதங்களில், 490 யூனிட் மின்சாரம் பதிவாகியுள்ள வீடுகளை ஆய்வு செய்யுமாறு, பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம், இரு மாதங்களுக்கு, 500 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு, மானிய விலையில் வழங்குகிறது. இதற்காக, மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை, அரசு வழங்குகிறது.
மின் பயன்பாடு கணக்கு எடுக்க செல்லும் சில ஊழியர்கள், வீட்டு உரிமையாளர்களுடன் சேர்ந்து, மின் பயன்பாட்டை, குறைத்து கணக்கு எடுப்பதாக, மின் வாரியத்திற்கு புகார்கள் வந்துள்ளன.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ...

'இன்ஜினியரிங் படிக்க நுழைவு தேர்வு இல்லை'

Posted: 06 Oct 2017 01:00 PM PDT

'இன்ஜினியரிங் படிப்புக்கு, வரும் கல்வி ஆண்டில் நுழைவுத் தேர்வு இல்லை,'' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் தலைவர், அனில் தத்தாத்ரேயா சகஸ்ரபுதே தெரிவித்தார்.

இந்தியாவுக்கான கல்வி மேம்பாட்டு அமைப்பின் சார்பில், இன்ஜி., நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த தேசிய அளவிலான மாநாடு, வேலுார், வி.ஐ.டி., பல்கலை வேந்தர், ஜி.விஸ்வநாதன் தலைமையில், சென்னையில் நடந்தது.
இதில், ஏ.ஐ.சி.டி.இ., யின் தலைவர், அனில் தத்தாத்ரேயா சகஸ்ரபுதே பேசியதாவது: இன்ஜினியரிங் கல்லுாரி மற்றும் பல்கலைகளின் ...

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் ஏன் கொண்டுவரவில்லை

Posted: 06 Oct 2017 01:48 PM PDT

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. கட்டுப்பாட்டில் ஏன் வைக்கவில்லை என காங்.துணை தலைவர் ராகுல் கூறினார்.ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் நேற்று நடந்துது. இதில் சிறு, நடுத்தர வியாபாரிகள் ஏற்றுமதியாளர்களுக்கு ஜி.எஸ்.டியில் சலுகைகள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில் காங். துணை தலைவர் ராகுல் தனது டுவீட்டரில்கூறியது,ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் கொண்டு வந்தது பிரதமர் மோடியின் தேர்தல் ஆதாயத்திற்காக தான். ஏழைகளை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலையையும் ஜி.எஸ்.டி.க்குள் ஏன் கொண்டு வரவில்லை.இவ்வாறு அவர் டுவீட்டரில் ...

'கொடூர குற்றங்களில் சமரசம் செய்தாலும் வழக்கு தொடரும்': சுப்ரீம் கோர்ட்

Posted: 06 Oct 2017 02:27 PM PDT

புதுடில்லி: 'கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களில், பாதிக்கப்பட்டவரும், குற்றஞ் சாட்டப்பட்டவரும் சமரசம் செய்தாலும், வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
குஜராத்தில், நில அபகரிப்பு தொடர்பாக, நான்கு பேர் மீதான வழக்கில், சமரசம் செய்து கொண்டதால், வழக்கை வாபஸ் பெறுவதாக கூறப்பட்டதை, குஜராத் உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து, விசாரணை தொடரும் என, அறிவித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அதை விசாரித்த, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு ...

ரயில் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை: பியுஷ் கோயல்

Posted: 06 Oct 2017 03:10 PM PDT

புதுடில்லி: ரயில் பயணியரிடம், எம்.டி.ஆர்., கட்டணம் வசூலிக்கப்படும் நடைமுறையை கைவிட, மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதன் மூலம், ரயில் பயண கட்டணம் குறைய வாய்ப்புள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணையதளத்தை பயன்படுத்தி, ஆன் - லைனில், ரயில் பயண டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, எம்.டி.ஆர்., எனப்படும், 'மெர்சன்ட் டிஸ்கவுன்ட் ரேட்' கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தற்போதைய நடைமுறைகளின்படி, 1,000 ரூபாய் வரையிலான தொகைக்கு, 0.25 சதவீத கட்டணம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™