Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


விஜய் நடிக்கும் மெர்சல் திரைப்படத்தின் பெயருக்கு தடை இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்

Posted: 06 Oct 2017 08:32 AM PDT

- ராஜேந்திரன் தொடர்ந்த மனு மீது, 'மெர்சல்' என்ற பெயரில் திரைப்படத்தை வெளியிட ஏற்கனவே இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, மெர்சல் என்ற தலைப்பு யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பு 6-ந் தேதி (இன்று) பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார். இதன்படி இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மெர்சல் என்ற பெயரை பயன்படுத்த தடையில்லை என்று என்று உத்தரவிட்டுள்ளது. மெர்சல் என்ற தலைப்பிலேயே படத்தை வெளியிடவும் விளம்பரப்படுத்தவும் அனுமதி அளித்த நீதிமன்றம் ...

கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு

Posted: 06 Oct 2017 08:06 AM PDT

புதுடெல்லி, புதுடெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏற்றுமதியாளர்களுக்கான ஐ.ஜி.எஸ்.டி வரியில் இருந்து 6 மாதம் விலக்கு அளிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ரூ. 1 கோடிக்கு கீழ் வணிகம் புரிபவர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்தால் போதும். மாதாமாதம் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரூ 50 ஆயிரத்துக்கும் மேல் நகை வாங்குபவர்கள் பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டிய அவசியமில்லை. ...

சென்னை:தரம் குறைந்த 24 ஆயிரம் சீன செட்டாப்-பாக்ஸ்கள் பறிமுதல்

Posted: 06 Oct 2017 07:57 AM PDT

சென்னை: சீனாவில் இருந்து சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட தரம் குறைந்த செட்டாப் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு 24 ஆயிரம் செட்டாப்பாக்ஸ்கள் வந்திறங்கின. இவற்றின் தரம் குறித்து சோதனை நடத்தப்பட்ட போது தரம் குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவை சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்டதும் கண்டறியப்பட்டது. செட்டாப் பாக்ஸ்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.இது குறித்து சுங்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். - ------------------------------------------ தினமலர்

ஒரு பேனாவின் பயணம்

Posted: 06 Oct 2017 07:55 AM PDT

அனைவருக்கும் வணக்கம்      இவனின் சிறு கவிதைகளையும் கட்டுரைகளையும் "ஒரு பேனாவின் பயணம்" என்ற தலைப்புடன் இத்திரியில் தொடங்க எண்ணியிருக்கிறேன்.  தங்களின் மேலான கருத்துக்களை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.                                 அன்புடன்,                    மகேந்திர ராஜ் பிரபாகரன் கடவுள் வாழ்த்தாய் அணிந்துரை இயற்கையின் தலைவனே இங்கிருப்பவனுக்கெல்லாம் தகப்பனே உன் கடையவனின் அடியவன் இவன் – அவன் ஆசியுடன் என் மனம் பதிக்க நினைக்கிறேன் ஆதி உன் அணிந்துரை வேண்டும் உன் ஆகமவிதி அறியா ...

20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் உயிரினத்தின் உணவு என்ன?

Posted: 06 Oct 2017 05:57 AM PDT

20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் உயிரினத்தின் உணவு என்ன? இங்கிலாந்தில் உள்ள டோர்செட் கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு கடல்வாழ் ஊர்வன உயிரியின் படிமத்தை ஆய்வு செய்ததன் மூலம் அது உயிரிழக்கும் முன்பு கடைசியாக உண்ட உணவு என்ன என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இக்தியோசார் (Ichthyosaur) என்று அழைக்கப்படும் அந்த உயிரினம் கடைசியாக சிப்பி மீன்களை உணவாக உட்கொண்டிருந்ததை, அதன் இரைப்பை பகுதியில் இருந்த எச்சங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இறந்தபோது ...

ஜெயகாந்தன் " சில நேரங்களில் சில மனிதர்கள் "

Posted: 06 Oct 2017 04:45 AM PDT

ஜெயகாந்தன் " சில நேரங்களில் சில மனிதர்கள் " mediafire.com file/gsbgemt8v8o86cm/jeyakanthan%27s%20SILA%20NAERANGALIL%20SILA%20MANIDHARGALL.pdf

ராஜம் கிருஷ்ணன் "ரோஜா இதழ்கள்"

Posted: 06 Oct 2017 04:35 AM PDT

ராஜம் கிருஷ்ணன் "ரோஜா இதழ்கள்"http://www.mediafire.com/file/bz4kof4iwqxdths/Rojaethzhkal.pdf

தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள்; அமைச்சர்

Posted: 06 Oct 2017 03:17 AM PDT

சென்னை: தீபாவளி சிறப்பு பஸ்கள் குறித்து ஆய்வு நடத்திய பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து11,445சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். 13ம் தேதியில் இருந்து 5 நாட்கள் முன் பதிவு நடக்கும். சென்னையில் கோயம்பேடு, பூந்தமல்லி, அண்ணா நகர், தாம்பரம், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தீபாவளிக்கு பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 3,794 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை கோயம்பேட்டில் அக்., 13 ...

பாடல்

Posted: 06 Oct 2017 03:16 AM PDT

ஆ: தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன? ஆ: நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? ஆ.. நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? - இல்லை என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா? தெய்வம் செய்த பாபம் இது போடி தங்கச்சீ கொன்றால் பாபம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி ஆதி வீடு அந்தம் காடு இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன? ஆ: வெறும் கோவில் இதிலென்ன ...

அருணாச்சல பிரதேசத்தில் ஹெலிகாப்டர் நொறுங்கி 7 பேர் பலி

Posted: 06 Oct 2017 03:15 AM PDT

தவாங்:
இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ -17 வி5 ரக
ஹெலிகாப்டர் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங்
பகுதியில் நொறுங்கி விழுந்தது.

7 பேர் பலியாயினர். இறந்தவர்களில் 2 பேரது உடல்கள்
மீட்கப்பட்டன. மற்றவர்களது உடலை மீட்கும் பணி நடந்து
வருகிறது. சம்பவம் குறித்து விசாரணைக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமலர்

அரசியல் சார்பின்றி இருப்பேன்: கவர்னர் பன்வாரிலால் முதல் பேட்டி

Posted: 06 Oct 2017 03:13 AM PDT

சென்னை: "செயல்பாடுகளை பொறுத்து தமிழக அரசுக்கு தனது அதரவு இருக்கும்", அரசியல் சார்பின்றி இருப்பேன் என்றும் தமிழக கவர்னராக பதவியேற்ற பின்னர் பன்வாரிலால் நிருபர்களுக்கு அளித்த முதல் பேட்டியில் கூறினார். கவர்னர் மேலும் கூறியதாவது: அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதில் உறுதியாக இருப்பேன். அரசியல் சட்டத்தை காப்பது எனது முதல் கடமை. அரசியல் சார்புடன் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க மாட்டேன். செயல்பாட்டை பொறுத்து தமிழக அரசுக்கு எனது ஆதரவு இருக்கும். அரசின் ...

இரட்டை இலை சின்னம்: தேர்தல் கமிஷன் விசாரணைக்கு தடையில்லை

Posted: 06 Oct 2017 03:11 AM PDT

புதுடில்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் கமிஷனின் இறுதி விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க நவம்பர் 10ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. மேல்முறையீடு: இரட்டை இலை சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில், தேர்தல் கமிஷன் முடிவெடுக்க 2018 பிப்.,வரை கால நீட்டிப்பு வழங்க உத்தரவிடக் கோரி தினகரன் தாக்கல் செய்த மனுவை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து தேர்தல் கமிஷனின் இறுதி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் ...

சிறிது இடைவெளி

Posted: 06 Oct 2017 02:41 AM PDT

சிறிது இடைவெளி

இன்னும் 10 /15 நாட்களுக்கு ,

வந்தாலும் வருவேன்
வராமலும் இருப்பேன்
வந்தாலும்
பார்த்தாலும் பார்ப்பேன்
மறுமொழி இட்டாலும் இடுவேன்
இடாமலும்  இருப்பேன்
மீண்டும் சந்திப்போம்
சிறிது இடைவெளிக்குப் பிறகு.

ரமணியன்

சிந்தனையாளர் முத்துக்கள்

Posted: 06 Oct 2017 02:39 AM PDT


-
ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு மூன்று நிலைகளை
கடந்தாக வேண்டும்,
முதலில், அது உண்மை என்பதை மக்கள் மறுப்பர்.
அடுத்து, அது முக்கியமானது என்பதை மறுப்பர்.
கடைசியில், அதை கண்டுபிடித்தது வேறு ஒருவர்
என்று மாற்றிச் சொல்வர்.

————————————–
பில் பிரைசன்
நுாலாசிரியர்

நன்றி- தினமலர்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 06 Oct 2017 12:07 AM PDT

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

**YOU ARE NOT AUTHORIZED TO ACCESS THIS WEB PAGE AS PER THE DOT COMPLIANCE**

Posted: 05 Oct 2017 10:57 PM PDT

நீங்கள் ஒரு மின்னூலை தரவிறக்கும் போது மேற்கண்டவாறு மறுப்பு வருகிறதா..! இதோ எளிய வழியில் அதை தவிர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.. நமது பதிவர்கள் தரும் மின்னூல் சுட்டியை அழுத்தும் போது மேற்சொன்ன மறுப்பு வருகிறது என்றால் உடனே அந்த தேடுபொறியின் இணையதள உள்ளீட்டு பட்டியில் ( URL search Bar) mediafire.com view/da3zj3vr46vzepj/arrm_cirruktaikll_-_jeymooknnn.pdf இவ்வாறு இருக்கும். இதில் www.mediafire.com என்ற முகவரிக்கு முன்னுள்ள எழுத்துக்களை அழிக்கவும். உம்: www.mediafire.com/view/da3zj3vr46vzepj/arrm_cirruktaikll_-_jeymooknnn.pdf பிறகு ...

மொக்க ஜோக்ஸ் - சிறுவர் மலர்

Posted: 05 Oct 2017 09:22 PM PDT

வேலன்:-இலவச வீடியோ கன்வர்டர்.

Posted: 05 Oct 2017 07:23 PM PDT

சில வீடியோக்களை நாம் உபயோகப்படுத்தும் டிவைஸ்க்கு ஏற்ப பயன்படுத்த இயலாது. நமது தேவைக்கு ஏற்ப வீடியோவினை நமது விருப்பமான பார்மெட்டில் கொண்டு வர இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.  இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை  இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நம்மிடம் உள்ள வீடியோவினை தேர்வு செய்யவும். சேமிக்க விரும்பும் இடத்தினையும் எந்த பார்மெட்டுக்கு நாம் மாற்ற வேண்டுமோ அந்த பார்மெட்டினையும் தேர்வு செய்யவும். கன்வரட் என்ப்தனையும் ...

சுயசரிதை எழுத உள்ளார் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ்

Posted: 05 Oct 2017 06:35 PM PDT

- புதுடெல்லி, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர். ஒரு நாள் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை (6,190) கடந்த ஒரே வீராங்கனை என்ற பெருமைக்குரியவர். இவர் பேட்டிங்கில் 51.58 சராசரி வைத்து உள்ளார். 50க்கு மேல் பேட்டிங் சராசரி கொண்ட 5 பெண்களில் இவரும் ஒருவர். ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து 7 போட்டிகளில் அரை சதம் கடந்த முதல் வீராங்கனை. 2005 மற்றும் 2017 வருடங்களில் நடந்த ஐ.சி.சி. உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணியை இறுதி போட்டி ...

மயக்க மருந்தாக வி‌ஷ வாயுவை செலுத்தியதால் 14 நோயாளிகள் சாவு?

Posted: 05 Oct 2017 06:32 PM PDT

வாரணாசி, பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான, உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இதனுடன் இணைந்து சர் சுந்தர்லால் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 6–ந் தேதிக்கும், 8–ந் தேதிக்கும் இடையில் 14 அறுவை சிகிச்சை நோயாளிகள், இந்த சுந்தர்லால் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். வழக்கத்துக்கு மாறான இந்த சம்பவத்தில், அலகாபாத் ஐகோர்ட்டு விசாரணைக்கு உத்தரவிட்டது. மத்திய, மாநில அரசுகளின் கூட்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. உத்தரபிரதேச ...

சிதம்பரம் : மருத்துவ மாணவர்களின் போராட்டத்துக்கு ஐகோர்ட் தடை

Posted: 05 Oct 2017 05:11 PM PDT

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ பல்கலைகழக மாணவவர்களின் போராட்டத்திற்கு சென்னை ஐகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: மருத்துவ மாணவர்களின் கோரிக்கைகள் நியாயம் இருந்தாலும் தொழிலாளர்கள் போல் வேலை நிறுத்தம் செய்வது தவறு. பேச்சு மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர அரசை மிரட்டும் வகையில்வேலை நிறுத்தம் கூடாது. மாதம் ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை பெற்றுக்கொண்டு சிகிச்சை அளிக்க முன்வாரதது கண்டிக்கத்தக்கது. ...

அனைத்து வகுப்புகளிலும் பயணம்: ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவு

Posted: 05 Oct 2017 05:09 PM PDT

புதுடில்லி: 'ரயில் பயணியரின் குறைகளை நேரில் தெரிந்து கொள்ளும் வகையில், அனைத்து வகுப்பு பெட்டிகளிலும் பயணம் செய்ய வேண்டும்' என, ரயில்வே உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில்வேயின் பல்வேறு சேவைகளின் தரம் குறித்த புகார்கள், சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. ரயிலில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை; படுக்கை சுத்தமாக இல்லை என்பது போன்ற புகார்கள், அதிகரித்து வருகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், புதிய நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து, ரயில்வே ...

போலீசாருக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு; ஒன்றின் விலை ரூ.2 லட்சம்!!!

Posted: 05 Oct 2017 04:45 PM PDT

சென்னை: தமிழக போலீசாருக்கு வாங்கப்பட்ட வாக்கி டாக்கி டெண்டரில், வாங்கப்பட்ட ஒரு வாக்கி டாக்கியின் விலை ரூ.2.08 லட்சம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெண்டர்: தமிழக காவல்துறை நவீனமயமாக்கும் திட்டத்தின்படி, ஆப்கோ வாக்கி டாக்கி வாங்கப்படும் என ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அறிவிக்கப்பட்டது. இதற்கு டி.ஜி.பி., அலுவலக அதிகாரிகள் ரூ.88 கோடி மதிப்புள்ள டெண்டர் கோரினர். டெண்டரில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றது. அந்த நிறுவனத்துக்கு ரூ.83.45 கோடிக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™