Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'இந்திய பிரதமர் பயங்கரவாதி': பாக்., அமைச்சர், 'காமெடி!'

Posted: 03 Oct 2017 06:59 AM PDT

புதுடில்லி: இந்தியர்கள், ஒரு பயங்கரவாதியை, பிரதமராக தேர்ந்தெடுத்து உள்ளனர்,'' என, பாக்., வெளியுறவு அமைச்சர், கவாஜா ஆஸிப் கூறினார்.

சமீபத்தில், ஐ.நா., பொது சபையில் பேசிய, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜ், 'பாகிஸ்தான், பிற நாடுகளுக்கு, பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது' என்றார்.இதற்கு, பாக்., தரப்பில், இந்தியாமீது, அபாண்டமாக குற்ற சாட்டுகள் கூறப்பட்டன.இந்நிலையில், பாக்., வெளியுறவு அமைச்சர், கவாஜா ஆஸிப், தனியார், 'டிவி'க்கு அளித்த பேட்டி: பயங்கரவாதத்தை, பாக்., ஏற்றுமதி செய்வதாக, இந்திய வெளியுறவு அமைச்சர், சுஷ்மாசுவராஜ் குற்றஞ்சாட்டக் கூடாது. ...

மாநில தலைநகரங்களில் அமித் ஷா யாத்திரை

Posted: 03 Oct 2017 07:33 AM PDT

கண்ணுார்: மார்க்சிஸ்ட் கட்சியினரின் வன்முறைகளை கண்டித்து, அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும், பாத யாத்திரை செல்லப் போவதாக, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா அறிவித்து உள்ளார்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்.சை சேர்ந்த பலர், சமீபகாலமாக படுகொலை செய்ய பட்டு உள்ளனர். இதற்கு, பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். இந் நிலையில், கேரள மாநிலம், கண்ணுாரில், இடதுசாரி கட்சியினரின் வன்முறைகளை கண்டித்து, பா.ஜ., சார்பில், நேற்று பொதுக்கூட்டம் நடந்தது.இதில், பா.ஜ., தேசிய தலைவர், அமித் ...

நுகர்வோர் பாதுகாப்பில் மத்திய அரசு... தீவிரம்!

Posted: 03 Oct 2017 08:18 AM PDT

தரமற்ற பொருள் தயாரிப்பாளர்களிடம் இருந்து, நுகர்வோரை பாதுகாக்கும் வகையில், கடுமையான, புதிய சட்டத்தை இயற்ற, பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், தரம் குறைந்த பொருட்களை, நுகர்வோருக்கு ஏமாற்றி விற்பது, அத்தனை சுலபமாக இருக்காது.

நம் நாட்டு சந்தைகளில், தரமான பொருட்களை தேடி வாங்குவது எளிதல்ல. தரமான பொருட்கள் அரிதாக கிடைப்பதால், பெரும்பாலும்,தரம் குறைந்த பொருட்களையே, நுகர்வோர் வாங்கி ஏமாறும் சூழல் உள்ளது. தரம் குறைந்த பொருட்களால், நுகர்வோர், பல்வேறு இன்னல்களுக்கு ...

15 நாள் பரோல் கேட்ட சசிகலாவின் விண்ணப்பம்... நிராகரிப்பு!

Posted: 03 Oct 2017 09:54 AM PDT

கவலைக்கிடமாக உள்ள கணவர் நடராஜனை பார்க்க, 15 நாள் பரோல் கேட்ட சசிகலாவின் விண்ணப்பம்,நிராகரிக்கப்பட்டது.'நடராஜன் உடல்நிலை சரியில்லை என்பதற்கு,தகுந்த ஆதாரமில்லை' என, பரோல் மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக சிறைத்துறை, புதிய மனு தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டு உள்ளது. சசிகலா வருகையை பயன்படுத்தி, பழனிசாமி அரசுக்கு நெருக்கடி தர நினைத்த தினகரன், 'அப்செட்' ஆகியுள்ளார்.

இதற்கிடையில், சசிகலாவுக்கு, 15 நாட்கள் பரோல் அளிப்பது தொடர்பாக, கர்நாடக சிறைத்துறை நிர்வாகம், சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு, 'தடையின்மை சான்று' கோரி கடிதம் அனுப்பியுள்ளது; அது ...

அமேதியை கை கழுவுகிறாரா ராகுல்; காங்கிரசுக்குள் உச்சக்கட்ட குழப்பம்

Posted: 03 Oct 2017 10:15 AM PDT

அடுத்த லோக்சபா தேர்தலில், தன் பாரம்பரிய தொகுதியான அமேதியை கைகழுவ, காங்., துணை தலைவர் ராகுல் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆந்திரா அல்லது கர்நாடகா மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில், அவர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.

உ.பி., மாநிலத்தில் உள்ள, அமேதி லோக்சபா தொகுதி, காங்கிரஸ் மேலிட தலைவர்களின் பாரம்பரிய தொகுதியாக கருதப்படுகிறது. முன்னாள்பிரதமர் இந்திராவின் மகன்கள், சஞ்சய், ராஜிவ் ஆகியோர், இந்த தொகுதியில் பெரும் செல்வாக்கு உள்ள தலைவர்களாக திகழ்ந்தனர்.இவர்களுக்கு பின், இந்த தொகுதியில், காங்கிரஸ் தலைவர் சோனியா ...

சசிகலா கணவர் நடராஜனுக்காக மூளை சாவு வாலிபரின் உடல் அபகரிப்பு

Posted: 03 Oct 2017 10:31 AM PDT

சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக, மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல், திருச்சியிலிருந்து சென்னைக்கு, விமானத்தில் வரவழைக்கபட்டு உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி,பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகாலாவின் கணவர் நடராஜன், 74, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழந்ததால், சென்னை, குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.'நுரையீரல் பாதிப்பும் உள்ளதால், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்' என, ...

உள்ளாட்சி தேர்தல் நடத்த மறுப்பு; அரசு மீது தி.மு.க., அவமதிப்பு வழக்கு

Posted: 03 Oct 2017 10:35 AM PDT

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடாததால், மாநில தேர்தல் கமிஷன் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு, 9ம் தேதி, விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.

தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. செப்., ௧௮க்குள், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடவும், நவ., ௧௭க்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டது.
நிதி ஒதுக்கீடு:உயர் நீதிமன்ற ...

தமிழகத்தில் 5.95 கோடி வாக்காளர்கள்

Posted: 03 Oct 2017 10:38 AM PDT

சென்னை: தமிழகத்தில், மூன்று கோடி பெண்கள் உட்பட, 5.95 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இம்மாதம் முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற உள்ளது.

அடுத்த ஆண்டு, ஜன., 1ம் தேதியை, தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, தமிழகம் முழுவதும், இம்மாதம் நடைபெறுகிறது. இதற்காக, நேற்று அனைத்து மாவட்டங்களிலும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
நடவடிக்கை
இப்பட்டியல், elections.tn.gov.in என்ற, இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. திருத்தப் பணியின்போது, புதிதாக பெயர் சேர்ப்பதோடு, இறந்த மற்றும் இடம் பெயர்ந்தவர் பெயர்களை, பட்டியலில் ...

கைதுக்கு பயந்து தினகரன் பதுங்கல்!

Posted: 03 Oct 2017 10:40 AM PDT

கைது நடவடிக்கைக்கு பயந்து, தினகரனும், அவரது ஆதரவாளர்களும் ஓடி ஒளிந்து வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.

முதல்வர் பழனிசாமி, செப்., 27ல், அவரது சொந்த மாவட்டமான, சேலத்தில் முகாமிட்டு இருந்தார். அப்போது, சேலம், தாதகாப்பட்டி பகுதியில், தினகரன் ஆதரவாளர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக, துண்டு பிரசுரம் வினியோகித்தனர். உச்ச நீதிமன்ற தடையை மீறி, மருத்துவ கல்விக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு எதிராக, போராட்டங்களை துாண்டினர்.இது குறித்து, அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், இதன் பின்னணியில், தினகரன், பெங்களூரு புகழேந்தி, ...

தாஜ்மஹால் புனரமைப்பு; ரூ.156 கோடியில் திட்டம்

Posted: 03 Oct 2017 01:18 PM PDT

லக்னோ: ஆக்ராவில் அமைந்துள்ள, உலக அதிசயங்களில் ஒன்றான, தாஜ்மஹால் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை, 156 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்துவதற்கான திட்டத்தை, மத்திய அரசின் ஒப்புதலுக்கு, அனுப்பி உள்ளதாக, உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், வாரணாசி, அயோத்தி மற்றும் மதுரா ஆகியவை, முதல் மூன்று இடங்களில் உள்ளன.
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹால், சுற்றுலா ...

அரசியல் கட்சிகளுக்கு நிதி: சுப்ரீம் கோர்ட் ‛நோட்டீஸ்'

Posted: 03 Oct 2017 02:05 PM PDT

புதுடில்லி: அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு அமல்படுத்தி உள்ள, புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து, அரசு சாரா தொண்டு நிறுவனம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது; இதற்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு, சுப்ரீம் கோர்ட், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுதல், நிதி திரட்டுதல் தொடர்பாக, சில விதிகளை தளர்த்தி, சட்டத்திருத்த மசோதா, பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அந்த மசோதா, சட்ட வடிவம் பெற்றுள்ளது. இதன்படி, அரசியல் கட்சிகளுக்கு, ...

ஐ.நா., சபையின் உயர் பதவியில் தமிழர்

Posted: 03 Oct 2017 02:39 PM PDT

புதுடில்லி: ஐ.நா., சபையின் உலக சுகாதார நிறுவனத்தின்(டபிள்யு.எச்.ஓ.,) துணை இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த சவுமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் துணை இயக்குனர் பதவிக்கு, அதில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் சார்பாக ஒருவரை பரிந்துரை செய்தன. இந்தியா சார்பில் சவுமியா சுவாமிநாதன் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் உயர் பதவிகளில் ஒன்றான துணை இயக்குனர் பதவிக்கு, சவுமியா சுவாமிநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர், பசுமைப் புரட்சியின் தந்தை ...

வேலைக்கு உத்தரவாதம்; வருகிறது புது பாடத்திட்டம்

Posted: 03 Oct 2017 03:20 PM PDT

திருச்சி: ''வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், புதிய பாடத்திட்டம் இருக்கும்,'' என, கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ் கலாசாரம், பண்பாடு போன்றவற்றை, வருங்கால மாணவ சமுதாயத்துக்கு உணர்த்தும் வகையில், பாடங்கள் மாற்றி அமைக்கப்படும். எதிர்காலத்தில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், புதிய பாடத்திட்டம் இருக்கும்.
தமிழகத்தில், 12 ஆண்டுகளுக்கு பின், பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்படுவதால், நவம்பர், 15ம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™