Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


வைகோ, திருமா வாய் திறக்க மறுப்பு; ஸ்டாலின் கடுப்பு!

Posted: 09 Sep 2017 07:23 AM PDT

முரசொலி பவள விழாவில் பேசிய, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர்கள், தி.மு.க., கூட்டணியில் இடம்பெறுவது குறித்து, எதுவும் தெரிவிக்காததால், தி.மு.க., மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது.

செப்., 5ல், சென்னை, கொட்டிவாக்கத்தில் நடந்த முரசொலி பவள விழா கூட்டத்தில், 27 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். புதிய வரவாக, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவும், அதில் இடம் பிடித்தார். கூட்டணி அறிவிப்பை, அவர் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு, தி.மு.க., தொண்டர்களிடம் காணப்பட்டது. அதனால், வைகோ தாமதமாக வந்த போதும், அவரை வரவேற்று, தொண்டர்கள்கரவொலி ...

ஆளாளுக்கு பதவி: தினகரன் திட்டம் என்ன?

Posted: 09 Sep 2017 07:25 AM PDT

ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்களையும், குற்ற பின்னணி உள்ளவர்களையும், அ.தி.மு.க., நிர்வாகிகளாக,தினகரன் அறிவித்து வருகிறார்.அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த ஜெயலலிதா, 2011 டிச., 19ல், சசிகலா, அவரது கணவர் நடராஜன், தம்பி திவாகரன், அக்கா மகன் தினகரன் உட்பட, 14 பேரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார்.

அதன்பின், மன்னிப்பு கடிதம் கொடுத்ததால், சசிகலாவை மட்டும் சேர்த்தார். ஜெ., இருந்த வரை, சசிகலா தவிர, அவரது குடும்பத்தை சேர்ந்த யாரையும் சேர்க்கவில்லை.அவரால் நீக்கப்பட்டவர்கள், மீண்டும் கட்சியில் சேர்க்க ...

சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், 'தில்லுமுல்லு' துணை முதல்வர் ஆய்வில் தகவல்கள் மறைப்பு

Posted: 09 Sep 2017 07:41 AM PDT

துணை முதல்வர் ஆய்வுக் கூட்டத்தில், நேரடி பணியாளர் தேர்வு குளறுபடி, தற்காலிக பணியிட குழப்பம் போன்ற விபரங்களை மறைத்து, ஒப்புதல் பெற, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒத்தி வைப்பு
சி.எம்.டி.ஏ.,வை உள்ள டக்கிய, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்க பட்டு உள்ளது. இத்துறை, முதன்முறையாக, துணை முதல்வர் வசம் சென்றுள்ளது. இத் துறையில் உள்ள பிரிவுகள் வாரியாக, தற்போதைய நிலவரம் குறித்து, நேற்று முன்தினம், துணை முதல்வர் ஆய்வு செய்ய ...

இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு... திட்டம்? பெண்கள் ஓட்டுகளை அள்ள பா.ஜ., அதிரடி வியூகம்

Posted: 09 Sep 2017 07:49 AM PDT

மறைந்த பிரதமர், இந்திராவுக்கு பின், பெண் ராணுவ அமைச்சராக, நிர்மலா சீதாராமனை நியமித்துபரபரப்பை ஏற்படுத்திய, பிரதமர் மோடி, அடுத்தகட்டமாக, பார்லி., மற்றும் சட்டசபை தேர்தல்களில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டு உள்ளார். இதன் மூலம், பெண்களின் ஓட்டுகளை ஈர்க்க, பா.ஜ., அதிரடி வியூகம் வகுத்துள்ளது.மத்திய அமைச்சரவை, சமீபத்தில் விரிவு படுத்தப்பட்ட போது, ராணுவ அமைச்சராக, தமிழகத்தைபூர்வீகமாக உடைய, நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.இதன் மூலம், மறைந்த பிரதமர், இந்திராவுக்கு பின், ராணுவத் துறை பொறுப்பேற்கும் ...

பெட்ரோல் திருட்டை தடுக்க மத்திய அரசு.. அதிரடி! நவீன கருவி பொருத்த, 'பங்க்'களுக்கு உத்தரவு

Posted: 09 Sep 2017 08:46 AM PDT

புதுடில்லி:பெட்ரோல், 'பங்க்'கள், பெட்ரோல் மற்றும் டீசல் அளவை குறைத்து வழங்கி, முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க, மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலை சரியான முறையில் அளவிடும் வகையில், உயர் பாதுகாப்பு, 'எலெக்ட்ரானிக்' கருவிகளை பொருத்த, 'பங்க்'களுக்கு, உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள பெட்ரோல் மற்றும் வாகன, 'காஸ்' நிரப்பும், நிலையங்களில், வாடிக்கையாளர்களுக்கு, உரிய அளவில், பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் வழங்காமல், முறைகேடுகள் செய்வதாக, நீண்டகாலமாக, புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.பெட்ரோல், ...

தொடரும் குழந்தைகள் இறப்பு உ.பி., முதல்வருக்கு நெருக்கடி

Posted: 09 Sep 2017 08:48 AM PDT

உ.பி.,யில், மருத்துவமனைகளில், அடுத்தடுத்து, குழந்தைகள் பலியாகும் சம்பவம், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அம்மாநில சுகாதார துறையை முடுக்கி விட்டு, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், கோரக்பூர் அரசு மருத்துவ மனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால், 73 குழந்தைகள் உயிரிழந்ததாக, சமீபத்தில் தகவல் வெளியாகி, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதை தொடர்ந்து, பரூக்காபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில், ...

மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் அரசு...கவனம்

Posted: 09 Sep 2017 10:42 AM PDT

பொதுமக்களை பாதிக்கும் போராட்டங்களுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தில், சட்டம் -- ஒழுங்கை பாதுகாப்பதில், அரசு கவனம் செலுத்த துவங்கி உள்ளது. போராட்டம் என்ற பெயரில், அனுமதியின்றி சாலைகளில் திரள்பவர்களை அப்புறப்படுத்த, ரோந்து பணிகளில் ஈடுபடும்படி, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இது போன்ற கடும் நடவடிக்கைகள் வாயிலாக, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதில், அரசு தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது.தமிழகத்தில், 'நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டம் அதிகரித்து வருகிறது. போராட்டத்தை துாண்டும் விதமாக, சமூக ...

வெற்றி வியூகத்தை வகுக்க தி.மு.க., கள ஆய்வு பிரசாந்த் கிஷோரிடம் பொறுப்பு ஒப்படைப்பு

Posted: 09 Sep 2017 11:09 AM PDT

லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, 'ஹைடெக்' முறையில், தி.மு.க., கள ஆய்வை துவங்கி உள்ளது. 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றிக்கு பெரிதும் உதவிய, அரசியல் சாணக்கியர் பிரசாந்த்கிஷோரிடம், அப்பொறுப்பை, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் ஒப்படைத்து உள்ளார்.

கவலை
கடந்த, 2014 லோக்சபா தேர்தலில் படுதோல்வியை சந்தித்த, தி.மு.க.,வால், அதை தொடர்ந்து வந்த சட்டசபை தேர்தலிலும், பெரிய வெற்றியை பெற முடியவில்லை; ஆட்சிக்கும் வர முடியவில்லை. அதனால், தி.மு.க.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற கவலை, அக்கட்சியினரிடம் ஏற்பட்டது.இந்த சரிவில் இருந்து ...

சி.பி.ஐ., பிடியில் ஜெயந்தி நடராஜன் சென்னை வீட்டில் பல மணி நேரம், 'ரெய்டு'

Posted: 09 Sep 2017 11:22 AM PDT

தனியார் நிறுவனத்திற்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதில் செய்த முறைகேடு தொடர்பாக, சென்னை யில் உள்ள, முன்னாள் மத்திய அமைச்சர், ஜெயந்தி நடராஜன், ௬௩, வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர். மேலும், டில்லி உட்பட நான்கு மாநிலங்களிலும் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன். 28 மாதம் அமைச்சராக இருந்த அவர், 2013 டிசம்பரில், பதவியை ராஜினாமா செய்தார்.

வழக்குப் பதிவு
அப்போது, கட்சிப் பணிக்கு செல்வதால், ...

கட்டண சலுகையால் மெட்ரோ பயணம் அதிகரிப்பு

Posted: 09 Sep 2017 12:09 PM PDT

சென்னை: மெட்ரோ ரயிலில், கட்டண சலுகை வழங்கப்படுவதால், தினமும், 30 ஆயிரம் பேர் வரை பயணம் செய்கின்றனர்.
சென்னையில், விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து, நேரு பூங்காவிற்கும்; விமான நிலையத்தில் இருந்து, சின்னமலைக்கும், மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயிலில், பயணியர் போக்குவரத்தை அதிகரிக்க, அவ்வப்போது, புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. பண்டிகை காலத்தையொட்டி, ஆக., 25ல் இருந்து, அக்., 31 வரை, 20 சதவீதம், கட்டண சலுகை வழங்கப்பட்டு உள்ளதால், பயணியர் வரத்து அதிகரித்துள்ளது.
மெட்ரோ ரயில் அதிகாரி கூறியதாவது:மெட்ரோ ரயிலில், ...

பணம், ஜாதி சிபாரிசுக்கு முற்றுப்புள்ளி இணையத்தில் மின் வாரிய இடமாறுதல்

Posted: 09 Sep 2017 12:39 PM PDT

எந்த சிபாரிசுகளுக்கும் இடம் தராமல், நேர்மையான முறையில், விருப்ப இடமாறுதல் வழங்குவதை உறுதி செய்ய, அது தொடர்பான விபரங்களை, ஜனவரி முதல், இணையதளத்தில் வெளியிட, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்கள், பொறியாளர்களுக்கு, இடமாறுதல், பதவி உயர்வு வழங்க விதிமுறைகள் உள்ளன. அதன்படி, ஆண்டுக்கு இரு முறை, அதாவது, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், இடமாறுதல் தேவைப்படுவோரிடம், விருப்ப மனு பெறப்படும். அதில், ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அம்சங்களை பரிசீலித்த பின், இடமாறுதல் ...

ஸ்டாலின் கனவு பலிக்காது பழனிசாமி நம்பிக்கை

Posted: 09 Sep 2017 01:14 PM PDT

காஞ்சிபுரம்: ''அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்க்கும் ஸ்டாலின் கனவு, பலிக்காது,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
வேலுாரில் நடைபெறும் முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், கலந்து கொள்வதற்காக, நேற்று காலை, முதல்வர் பழனிசாமி காஞ்சிபுரம் வழியாக காரில் சென்றார். வழியில் சுங்குவார்சத்திரம், சேக்கான்குளம், பொன்னேரிகரை போன்ற இடங்களில், அவருக்கு கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேக்கான்குளத்தில், முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
நான் முதல்வராகஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, ...

கவுரவக் கொலை செய்த இருவரை இந்தியா அனுப்ப கனடா கோர்ட் உத்தரவு

Posted: 09 Sep 2017 01:46 PM PDT

மான்ட்ரீல்: கவுரவ கொலை வழக்கு தொடர்பாக, இருவரை, இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப, கனடா நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில், அந்நாட்டு குடியுரிமை பெற்று வசித்து வரும் இந்தியர், சுர்ஜீத் சிங் படேஷா, அவருடன், அவரது சகோதரி, மல்கித் கவுர் சித்து, மல்கித்தின் மகள், ஜஸ்வீந்தர் கவுர், ஆகியோரும் வசித்து வந்தனர்.
ஜஸ்வீந்தர், சிலஆண்டுக்கு முன், பஞ்சாப் மாநிலத்துக்கு வந்திருந்தார். அப்போது, ரிக் ஷா ஓட்டுனர், மிது சித்து என்பவருடன், அவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் ரகசிய திருமணம் செய்தனர். பின், ...

மருத்துவகல்லூரிகளுக்கு அபராதம் வசூலித்து மாணவர்களுக்கு வழங்க உத்தரவு

Posted: 09 Sep 2017 02:26 PM PDT

சென்னை,: மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகளை சரி செய்யாத, மருத்துவ கல்லுாரிகளிடம் இருந்து, இழப்பீடு தொகையை பெற்று, மாணவர்களுக்கு வழங்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னையில் உள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி, புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி, ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் பல்கலை உள்ளிட்ட சில கல்லுாரிகளில், மருத்துவப் படிப்பு மற்றும் முதுகலை வகுப்புகளை முடித்த, மாணவர்களின் சான்றிதழ்களை, பதிவு செய்ய, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மறுத்தது.
இதை எதிர்த்து, சென்னை ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™