Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மாவட்டங்களில் மின் தடை: மக்கள் அவதி

Posted: 08 Sep 2017 08:04 AM PDT

சென்னை தவிர்த்த பகுதிகளில், இரவில் தொடரும் மின் தடையால், மக்கள் அவதிக்கு உள்ளாகி வருவது, மின் வாரிய அதிகாரிகளுக்கு தெரியுமா என்ற சந்தேகம் எழுந்துஉள்ளது.

தமிழகத்தில், 2015ல் இருந்து, தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின்சாரம் கிடைக்கிறது. இதனால், மின் பற்றாக்குறை ஏற்படுவதில்லை. இருப்பினும், தேவை அதிகமுள்ள பகுதிகளில், 'ஓவர் லோடு' காரணமாக, மின் தடை தொடர்கிறது. இந் நிலையில், சில தினங்களாக, சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், மாலை முதல் இரவு வரை, மின் தடை செய்யப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, மின் நுகர்வோர் கூறியதாவது:
மாலை, 6:00 ...

மரண தண்டனையை எதிர்நோக்கும் 22 பயங்கரவாதிகள்

Posted: 08 Sep 2017 08:15 AM PDT

மும்பை: மஹாராஷ்டிராவில், 22 பயங்கரவாதிகள் உள்ளிட்ட, 55 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.

மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது.
55 குற்றவாளிகள் :
மும்பையில், 1993ல், 257 பேரை பலி வாங்கிய, மும்பை தொடர் குண்டுவெடிப்பின், 2-வது வழக்கில், தாஹிர் மெர்ச்சன்ட், பெரோஸ் அப்துல் ரஷீத் கான் ஆகியோருக்கு, மரண தண்டனை விதித்து, சிறப்பு தடா நீதிமன்றம், நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதை அடுத்து, மஹாராஷ்டிராவில், மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை, 55 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை, ...

'செக்ஸ்' சாமியார் ஆசிரமத்தில் தேடுதல்... வேட்டை!

Posted: 08 Sep 2017 09:12 AM PDT

சிர்சா:பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, குர்மீத் ராம் ரஹீம் தலைமையில்செயல்படும், 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைமையகத்தில், நேற்று, தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. இதில், ஆசிரம அறைகளில், ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

ஹரியானாவில், முதல்வர்,மனோகர் லால் கட்டார்தலைமையில், பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள,சிர்சாவில், 700 ஏக்கர் பரப்பில், 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ளது.இரண்டு பெண் துறவிகளை பாலியல் பலாத்காரம்செய்ததாக, இந்த அமைப்பின் தலைவர், குர்மீத் ராம்ரஹீம், 50, என்ற சாமியாருக்கு எதிராக வழக்கு ...

அமைச்சர் விஜயபாஸ்கர் ரூ.285 கோடி வரி ஏய்ப்பு : வருமானவரித்துறை விசாரணையில் கண்டுபிடிப்பு

Posted: 08 Sep 2017 09:20 AM PDT

தமிழக சுகாதார அமைச்சர், விஜயபாஸ்கர் மீதான வருமான வரி வழக்கு முடிவுக்கு வந்து விட்டதாக, வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். அவருடைய மணல் குவாரியில், 285 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரூ.89 கோடி பட்டுவாடா :
சென்னை, ஆர்.கே.நகரில் நடக்கவிருந்த இடைத்தேர்தலை ஒட்டி, ஏப்., 8ல், அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், சுகாதார துறை பெண் அதிகாரி கீதாலட்சுமி, முன்னாள், எம்.பி., ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளில், வருமான வரித் துறையினர், ஒரே நாளில் சோதனை நடத்தினர். விஜயபாஸ்கரின் சென்னை வீடு மட்டுமின்றி, புதுக்கோட்டை ...

7,000 பேருக்கு, 'டெங்கு' : இறந்தது ஒருவர் தானாம்!

Posted: 08 Sep 2017 09:29 AM PDT

தமிழகத்தில், 6,919 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. தமிழகத்தில், மழை பெய்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைய தளத்தில், ஆக., 20ல் கொடுத்த புள்ளி விபரப்படி, தமிழகத்தில், 6,919 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று உள்ளதாகவும், அதில், ஒருவர் இறந்து விட்ட தாகவும் தெரிவித்து உள்ளது.
டில்லியில் அதிக பலி :
சுகாதாரதுறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில், 36 ஆயிரத்து, 635 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில், 58 பேர் ...

எதற்காக கூடுகிறது அ.தி.மு.க., பொதுக்குழு?

Posted: 08 Sep 2017 10:23 AM PDT

'அ.தி.மு.க.,வில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருதி, விவாதித்து முடிவு எடுப்பதற்காக, பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது' என, பொதுக்குழு அழைப்பிதழில், காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சென்னை, ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில், செப்., 12 காலை, 10:35 மணிக்கு நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் :அதன் விபரம்: அ.தி.மு.க.,
நிரந்தர பொதுச் செயலர், ஜெயலலிதா, 2016 டிச., 5ல், இவ்வுலகை விட்டு மறைந்த நிலையில், டிச., 29ல், அவசர பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், கட்சி விதிப்படி, அடிப்படை உறுப்பினர்களால், பொதுச் ...

யாருக்கு முக்கியத்துவம்? : அதிமுகவில் குழப்பம்

Posted: 08 Sep 2017 10:24 AM PDT

அ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும், கட்சியில் யாருக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பதில், குழப்பம் நீடிக்கிறது.

அ.தி.மு.க.,வில், பன்னீர் அணியும், பழனிசாமி அணியும் இணைந்து விட்டன. அதன்பின், ஜெ.,வால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், அந்தந்த பதவிகளில் நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பொருளாளராக, பன்னீர்செல்வம், அவைத் தலைவராக, மதுசூதனன் உள்ளதாக அறிவிக்க பட்டு உள்ளது. மற்ற நிர்வாகிகள்யார் என்பதில்கட்சி அலுவலக ஊழியர்களுக்கும்,கட்சி நிர்வாகிகளுக்கும், குழப்பம் நீடிக்கிறது. அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், 5ல் நடந்தது. இதற்கு, விழுப்புரம், எம்.பி., ...

'நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டங்களை உடனே...நிறுத்து

Posted: 08 Sep 2017 10:57 AM PDT

'நீட்' தேர்வுக்கு எதிராக, அரசியல் கட்சிகள், அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களை உடனே நிறுத்தச் சொல்லி, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

'சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் போராட்டம் நடத்துபவர்களைக் கைது செய்து, 'உள்ளே' தள்ள வேண்டும்' என்றும், உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால், தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த குழப்பங்களுக்கு, முடிவு ஏற்பட்டுள்ளது.மருத்துவக் கல்விக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, பல்வேறு வழக்குகளுக்கு பின் நடத்தப்பட்டது; 'நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்' என, ...

சசியை நீக்கினால் ஏற்படும் குழப்பங்கள்

Posted: 08 Sep 2017 11:40 AM PDT

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் முடிந்த உடன் ஏற்படப்போகும் குழப்பங்களை, முழுவதுமாக அறிந்து வைத்து இருப்பதால், இது குறித்த, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை, தலைமை தேர்தல் கமிஷன், எதிர்பார்த்து உள்ளதாக கூறப்படுகிறது.

டில்லியில், நேற்று, தேர்தல் கமிஷனின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:வரும் 12ல், சென்னையில் கூடும் அ.தி.மு.க., பொதுக்குழுவின் மிக முக்கிய நோக்கம் சசிகலாவை பொதுச் செயலர் பதவியில் இருந்து நீக்குவது தான். பழனிசாமியும் பன்னீர் செல்வமும் இணைந்த பின் எடுக்கப்போகும், மிக முக்கிய முடிவு இது.இணைப்பிற்கான முக்கிய நிபந்தனையாக சசிகலா நீக்கப்பட ...

பிரதமர் பிறந்த தினம்: பா.ஜ., சிறப்பு ஏற்பாடு

Posted: 08 Sep 2017 11:48 AM PDT

லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியின் 67வது பிறந்த தினம், செப்., 17ல், வரவுள்ள நிலையில், அதை, நாடு முழுவதும், வெகு விமரிசையாக கொண்டாட, பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ள, உ.பி.,யில், பிரதமர் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இங்குள்ள, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள், அரசு பள்ளிகளுக்கு, சென்று, மாணவ - மாணவியருக்கு, இனிப்புகள் வழங்க உள்ளனர். பிரதமர், நரேந்திர மோடி, மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், மாணவர்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர்.
இதற்காக, அரசு ...

சீனா செல்ல கேரள அமைச்சருக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு

Posted: 08 Sep 2017 01:12 PM PDT

திருவனந்தபுரம்:சீனாவில் நடைபெறும் உலக சுற்றுலா கழக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செல்ல இருந்த கேரள சுற்றுலா அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரனுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.
சீனாவில் செப்- 11ல் உலக சுற்றுலா கழக நிகழ்ச்சி நடக்கிறது. ஐ.நா சபை நடத்தும் இந்த உலக அளவிலான நிகழ்ச்சியில் பங்கேற்க கேரள சுற்றுலா அமைச்சர் சுரேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவிலிருந்து அவருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகக்கது.
அனுமதி மறுப்பு
இந்நிலையில், சீனா செல்வதற்கு ...

புல்லட் ரயில் திட்டம் : சீனாவுக்கு, 'நோ!'

Posted: 08 Sep 2017 02:43 PM PDT

புதுடில்லி: நம் நாட்டில் மேற்கொள்ளப்பட உள்ள புல்லட் ரயில் திட்டங்களை, டோக்லாம் எல்லை பிரச்னையைத் தொடர்ந்து, சீனாவுக்கு பதில், ஜப்பானுக்கு கொடுப்பது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

ஆசிய பிராந்தியத்தில், புல்லட் ரயில்கள் திட்டத்தில், சீனா - ஜப்பான் இடையே, கடும் போட்டி உள்ளது. இந்தோனேஷியா, சிங்கப்பூர் - கோலாலம்பூர் அதிவிரைவு ரயில் திட்டம், தாய்லாந்தில் அதிவேக ரயில் திட்டம் ஆகியவற்றை சீனா பெற்றுள்ளது. அடுத்ததாக, தாய்லாந்து - மலேஷியா இடையேயான ரயில் திட்டப் பணிக்கு, ஜப்பானும், சீனாவும் மோதி ...

சொகுசு கார் விலை உயருமா? : இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

Posted: 08 Sep 2017 04:05 PM PDT

ஐதராபாத்: சொகுசு கார்களுக்கான வரியை உயர்த்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள், இன்று நடக்க உள்ள, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி முறை, ஜூலை, 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த வரி விதிப்பு முறையில் உள்ள பிரச்னைகள், வரி விகிதத்தை மாற்றி அமைப்பது குறித்து, ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 21வது கூட்டம், தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இன்று நடக்கிறது.
கூடுதல் வரி
மத்திய நிதி அமைச்சர் தலைமையிலான இந்த கவுன்சிலில், மாநில நிதி அமைச்சர்கள் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™