Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


டில்லியில் யாருக்கு அதிகாரம்? சுப்ரீம் கோர்ட் முக்கிய முடிவு

Posted: 05 Sep 2017 08:00 AM PDT

புதுடில்லி : 'டில்லியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது தொடர்பான வழக்கை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

டில்லியில், முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி அரசு அமைந்து உள்ளது. டில்லி நிர்வாகம் தொடர்பாக, டில்லி அரசுக்கும், துணை நிலை கவர்னருக்கும் மோதல் ஏற்பட்டது. ஆம் ஆத்மி அரசு, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.'டில்லி யூனியன் பிரதேசம்; அதன் ஆட்சி நிர்வாக அதிகாரம், துணை நிலை கவர்னருக்கு மட்டுமே உள்ளது' என, டில்லி ...

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் நிகழ்ச்சிக்கு மேற்கு வங்கத்தில் அனுமதி மறுப்பு

Posted: 05 Sep 2017 08:24 AM PDT

கோல்கட்டா: ஆர்.எஸ்.எஸ்., தலைவர், மோகன் பாகவத், பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அனுமதியை, அம்மாநில அரசு, திடீரென ரத்து செய்து உள்ளது.

மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் தலைவர், மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார்.
திடீரென ரத்து :
தலைநகர், கோல்கட்டாவில் உள்ள அரசு
விளை யாட்டு அரங்கில், அக்., 3ல், நிகழ்ச்சி நடத்த, சகோதரி நிவேதிதா மிஷன் சார்பில் முன் பதிவு செய்யப்பட்டது; நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர், மோகன் பாகவத் கலந்து கொள்கிறார். இந்நிலையில், அந்நிகழ்ச்சிக்குவழங்கப்பட்ட அனுமதியை, அம்மாநில அரசு, திடீரென ரத்து ...

2.09 லட்சம் போலி நிறுவனங்களின் பதிவு ரத்து!

Posted: 05 Sep 2017 09:48 AM PDT

புதுடில்லி: நாடு முழுவதும், சட்டவிரோத பண பரிமாற்றம் செய்த புகாரில் சிக்கிய, 2.09 லட்சம் போலி நிறுவனங்களின் பதிவை ரத்து செய்து, மத்திய அரசு, நடவடிக்கை எடுத்துள்ளது; இதன், இயக்குனர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. போலி நிறுவனங்கள் துவக்கி, சட்டவிரோத பண பரிமாற்றம் செய்த வர்களுக்கு எதிராகவும், அதிரடி நடவடிக்கை களை, மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.

சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபடும், போலி நிறுவனங்களை அடையாளம் காண, அமலாக்க துறைக்கு, பிரதமர் அலுவலகம் சில மாதங்களுக்கு முன், அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்ந்து, நாடு ...

பன்னீர் இணைந்த பிறகு பழனிசாமி அரசு... மெஜாரிட்டி?

Posted: 05 Sep 2017 10:24 AM PDT

தினகரன் நெருக்கடியால் திணறிய, முதல்வர் பழனிசாமி அரசுக்கு, பன்னீர் அணி இணைந்த தால், மெஜாரிட்டி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள் ளது. முதல்வர் தலைமையில், நேற்று நடந்த கூட்டத்தில், 109 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். தினகரன் அணி, எம்.எல்.ஏ.,க்கள், ஒன்பது பேர், போனில் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதை எதிர்பார்க்காத தினகரனின் ஆதரவாளர்கள், 'எங்கள் அணி எம்.எல்.ஏ.,க்கள் யாரும், ஆதரவு தெரிவிக்கவே இல்லை' என, அலறும் விதமாக பதில் அளித்துள்ளனர்.

அ.தி.மு.க.,வில், தினகரன் அணி எம்.எல்.ஏ.,க் கள், 19 பேர், கவர்னரை சந்தித்து, முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக, கடிதம் ...

செயல்படாத வங்கி கணக்குகளில் ரூ.31,300 கோடி, 'டிபாசிட்'

Posted: 05 Sep 2017 10:29 AM PDT

ஆமதாபாத்: செல்லாத நோட்டு அறிவிப்பின் போது, வழக்கத்திற்கு மாறாக, 80 லட்சத்திற்கும் மேற்பட்ட, செயல்படாத வங்கி கணக்குகளில், 31 ஆயிரத்து, 300 கோடி ரூபாய், 'டிபாசிட்' செய் யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது; 'பினாமி' வங்கி கணக்குகளில், கறுப்பு பணம் முதலீடு செய்யப்பட்டதா என, விசாரணை நடைபெறுகிறது.

பழைய,500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது என்ற அறிவிப்பு, 2016, நவ., 8ல் வெளியா னது; கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்க, இந்த நடவடிக்கையை மேற்கொண்ட தாக மத்தியஅரசு தெரிவித்தது.பழையநோட்டுகளை,வங்கிகளில் டிபாசிட் செய்ய, அவகாசம் வழங்கப் பட்டது.அந்த சமயத்தில், நாட்டில் ...

திருப்பூர் மாவட்டத்தை குளிர்வித்த கனமழை; நொய்யலில் வெள்ளப்பெருக்கு

Posted: 05 Sep 2017 11:00 AM PDT

திருப்பூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் பெய்த கனமழையால், குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன; நொய்யல் ஆற்றில், ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால், கடும் வறட்சி ஏற்பட்டது. இந்தாண்டு துவக்கத்திலும், போதிய மழை பெய் யாததால் விவசாயிகள் கவலையடைந்தனர். ஜூனில் துவங்கிய தென் மேற்கு பருவமழை யும், முதல் இரண்டு மாதங்கள் ஏமாற்றியது. எனினும், கடந்த மாத இறுதியில், ஓரளவு மழை பெய்து, 73.45 மி.மீ., என, இயல்பான அளவை விட, கூடுதலாக பதிவானது.கடந்த சில நாட்களாகவே, திருப்பூர் மாவட்டத் தில் ...

குதிரை பேரம் அதிகமாகும்: எச்சரிக்கிறார் ஸ்டாலின்

Posted: 05 Sep 2017 11:07 AM PDT

சென்னை: ''முதல்வர் பழனிசாமிக்கு, 109 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு மட்டுமே உள்ளதால், உடனே, சட்டசபையை கூட்டி, பெரும்பான் மையை நிரூபிக்கும்படி, கவர்னர் உத்தரவிட வேண்டும். இல்லையென்றால், குதிரை பேரம் அதிகமாகும்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை அறிவாலயத்தில், அவர் அளித்த பேட்டி:உரிமை குழுவை சந்தித்து, தி.மு.க., - எம்.எல். ஏ.,க்கள் கடிதம் அளித்துள்ளனர். பெரும்பான் மையை இழந்துள்ள ஆட்சிக்கு, உரிமை குழுவை கூட்டி விவாதிக்கும் தகுதி இல்லை. இருந்தாலும், எங்கள் கடமையை முறையாக செய்ய வேண்டும் என்பதால், 21 எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், சட்டசபை செயலர் ...

உட்கட்சி விவகாரத்தில் கவர்னர் தலையிட முடியாது; உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் வாதம்

Posted: 05 Sep 2017 11:10 AM PDT

சென்னை: 'அரசுக்கு எதிராக, எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் அளிக்கவில்லை; உட்கட்சி விவகாரத் தில், கவர்னர் தலையிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண் தெரிவித்தார்.

அ.தி.மு.க.,வில், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க் கள், ௧௯ பேர், கவர்னரை சந்தித்து, முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என, தனித் தனியே கடிதங்கள் அளித்தனர். இதை அடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க, சட்ட சபையை கூட்டும்படி, கவர்னருக்கு உத்தர விட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வக்கீல் புகழேந்தி மனு தாக்கல் செய்தார்.மனு, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, ...

உலகுக்கு முன்னுதாரணமாக இருப்போம்! நட்புக்கரம் நீட்டிய மோடி, ஜின்பிங் உறுதி

Posted: 05 Sep 2017 11:15 AM PDT

ஜியாமென்: 'எல்லையில், எதிர்காலத்தில் எந்தப் பிரச்னைகளும் ஏற்படாமல் இரு தரப்பும் ஒற்றுமையுடன் செயல்படுவோம். ஒற்றுமையுடன், ஒருவரை, ஒருவர் மதித்து நடப்பதால், அண்டை நாடுகளுக்கு இடையே அமைதியான நட்புறவு நிலவும்; இதற்கு முன்னுதாரணமாக இருப் போம்' என, சீன அதிபர், ஜி ஜின்பிங், பிரதமர், நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளனர்.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப் பிரிக்கா நாடுகள் இணைந்த, பிரிக்ஸ் கூட்ட மைப்பின் மாநாடு, சீனாவின் ஜியாமெனில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர், நரேந்திர மோடி சீனா சென்றார். டோக்லாம் எல்லைப் பிரச்னையில், இந்தியா - சீனா ...

லாலு மகளின் பண்ணை வீடு முடக்கம்

Posted: 05 Sep 2017 12:34 PM PDT

புதுடில்லி: ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத் யாதவ் மகள், மிசா பார்திக்கு சொந்தமான, டில்லி பண்ணை வீட்டை, சட்ட விரோத பண பரிமாற்ற புகாரின் கீழ், அமலாக்க துறையினர் நேற்று முடக்கினர்.

ஆதாயம்:
பீஹார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரீய ஜனதா தளம் தலைவருமான, லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் வழக்கு, உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளார். லாலு, ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வேயின் துணை நிறுவனமான, ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு சொந்தமான ஓட்டல்களை, தனியாருக்கு ஒதுக்கீடு செய்து, பல கோடி ரூபாய் ஆதாயம் அடைந்ததாக, புகார் எழுந்தது. அந்த ...

தமிழிசைக்கு கொலை மிரட்டல்

Posted: 05 Sep 2017 01:57 PM PDT

சென்னை : தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, மொபைல் போனில் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள லோகையா காலனியில், தமிழக, பா.ஜ., தலைவர்தமிழிசை சவுந்தராஜன் வசிக்கிறார். சில நாட்களாக, அவரை மொபைல் போனில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள் சிலர், அநாகரிகமாகபேசுவதோடு, கொலை மிரட்டலும் விடுத்து உள்ளனர்.
இது குறித்து, தமிழிசையின் வழக்கறிஞர் தங்க மணி, நேற்று விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த போலீசார்,புகாரில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் போன் எண்கள் ...

போதை சோதனையை தவிர்த்த 132 விமானிகள் மீது நடவடிக்கை

Posted: 05 Sep 2017 02:29 PM PDT

புதுடில்லி: விமானம் புறப்படும் முன்னும், இறங்கிய பின்னும், மது அருந்தியுள்ளனரா என்பதை அறியும் சோதனையை, தொடர்ந்து தவிர்த்து வரும், 'ஏர் இந்தியா' நிறுவனத்தின், 132 விமானிகள், 434 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

மூச்சு பரிசோதனை :
விமானிகள் மற்றும் ஊழியர்களுக்கு, மது அருந்தும் பழக்கம் இருந்தால், அவர்கள், விமானம் புறப்படுவதற்கு, 12 மணி நேரத்துக்கு முன் வரை, குடித்திருக்க கூடாது, என, டி.ஜி.சி.ஏ., எனப்படும், விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. விமானம் ...

'ராகிங்' புகார் பெட்டி: கல்லூரிகளில் கட்டாயம்

Posted: 05 Sep 2017 03:10 PM PDT

'ராகிங்கை தடுக்க, அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளில், புகார் பெட்டி வைக்க வேண்டும்' என, பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.

நாடு முழுவதும், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இன்ஜினியரிங், மருத்துவம், ஆர்க்கிடெக்ட் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை முழுமையாக முடிந்துள்ளது. நேற்று முதல், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கி உள்ளன.
இந்நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும், 'ராகிங்' பிரச்னைகள் ஏற்படும் என்பதால், ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™