Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


‘மாங்கல்யம் தந்துனானேந...’

Posted: 05 Sep 2017 02:48 PM PDT

'மாங்கல்யம் தந்துனானேந...' 'மாங்கல்யம் தந்துனானேந...' என்ற மந்திரம் ஓதிதான் தாலி கட்ட வேண்டுமா? - மந்திரம் என்பது வேறு, சம்பாஷணை என்பது வேறு. சமஸ்கிருத மொழியில் உச்சரிக்கப்படும் அனைத்து சம்பாஷணைகளையும் நாம் மந்திரங்கள் என்று புரிந்துகொண்டிருக்கிறோம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த வரிகள் மந்திரம் அல்ல, அது ஒரு ஆசிர்வாத வசனம். மணமகன், மணமகளை அதாவது தனக்கு மனைவியாகப்போகிறவளுக்கு மாங்கல்யக் கயிற்றினைக் கட்டி தனக்கு பந்தமாக்கிக் கொள்ளும்போது சொல்லும் உறுதிமொழி இது. "மாங்கல்யம் ...

அகம்திறந்து சொல்லிவிடடி!

Posted: 05 Sep 2017 09:58 AM PDT

இனியவளே உன் அகத்தில் இடம் கொடுத்து விட்டு  -என்னை ஆழ்கடலில் கிடத்தினாலும் நான்  ஆழியையும் பிழந்து வருவேனடி - என் அன்பே உன்னோடு வாழ்வதற்காக! ஆயிரம் ஆசையோடும்   அழகான காதலோடும் -என்  அன்பே உனக்காக -நானெடுப்பேனடி   ஆயிரம் ஜென்மங்கள்! ஆதவனின் ஒளிபட்டு சொளிக்கும் -உன் அழகான முகத்தைகாண -எனக்கு ஆயிரம் கண்கள் வேண்டி - நான்  அருந்தவம் செய்வேனடி! ஆருயுரே சொல்லிவிடு - உன்  அகம்திறந்து ஒருவார்த்தை -நாம் ஆனந்தமாய் வாழ்ந்திடலாம் -இந்த  அகிலமே புகழும்படி!!                          ...

உங்களுக்கான சுக்கிர யோகம் எப்படி..? - ராசி வாரியாக ஒரு ஜோதிட அலசல்

Posted: 05 Sep 2017 09:37 AM PDT

உங்களுக்கான சுக்கிர யோகம் எப்படி..? - ராசி வாரியாக ஒரு ஜோதிட அலசல் ஒருவருடைய ஜாதகத்தில் களத்திரகாரகனான சுக்கிர யோகம் வலுப்பெற்று இருக்கவேண்டும். அப்போதுதான் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒருவருடைய வாழ்க்கையில் அனைத்து விதமான யோகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்றால், அவருடைய ஜனன கால ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெற்று இருக்கவேண்டும். திருமணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் போது பத்து விதமான பொருத்தங்களையும் பார்ப்பதுபோல், களத்திரகாரகனான சுக்கிரன், புத்திரகாரகனான ...

ஆசிரியம் என்னும் ஆச்சர்யம்! - இன்று ஆசிரியர் தினம்

Posted: 05 Sep 2017 08:27 AM PDT

உயிரினை உலகிற்கு படைக்கும் அன்னை முதல் அதிசயம். சான்றோனாக்கி உலகிற்கு அர்ப்பணிக்கும் தந்தை இரண்டாம் அதிசயம். - உலகை ஆளஉருவாக்கும் பள்ளிச்சாலையில், சொல்லாலும், எழுத்தாலும் என்றும் நம்முன் நிற்கும்ஆச்சர்யமும், அதிசயமும்தான் ஆசிரியர்கள். - தோள்மீதும், மடிமீதும் தவழ்ந்த குழந்தைக்கு, புதிய அவதாரம் எடுக்கும் பெற்றோர்கள்-ஆசிரியர்கள். வசப்படாத வார்த்தைகளை ஒழுங்குபடுத்தி, அகப்படாத எழுதுகோலினை கைகளில் அழகு படுத்தி, மிரண்டு பார்க்கும் உலகினை எளிதாய்ப் புரியவைத்த அற்புதங்கள் ஆசிரியர்கள். ...

இயற்கை அன்னையே!

Posted: 05 Sep 2017 06:59 AM PDT

''இயற்கை அன்னையே'" - இந்த உலகத்தை ஈன்ற தாயே - நீ இந்த   உலகிற்கு என்னதான் சொல்ல நினைக்கிறாய்! ஆக்குவதும் நானே அழிப்பதும் நானே - என்று ஆணவப்படுகிறாயா இல்லை- இவ்வுலகத்தோர் ஆடும் ஆட்டத்தை அடக்க பார்க்கிறாயா! விளங்கவில்லை எமக்கு - நீ விளையாடும் விளையாட்டின் நோக்கம்! உன்னோடு போட்டி போட- இந்த உலகத்தில் யாரும் இல்லை என்றிருந்தும் - நீ யாரோடு போட்டி போட்டு கொண்டு - நீ இவ்வாறு எங்களை ஆட்டி படைக்கின்றாய்! உனக்கோ பல உருவம் ஆயினும் - நீ அவ்வப்போது எடுக்கின்றாய் விஸ்வரூபம் வேண்டாமம்மா ...

மார்கழி மாதத்தின் மலரும் நினைவுகள் ....

Posted: 05 Sep 2017 06:58 AM PDT

காலை நேர வேளையிலே
கார் இருளோ மறையையிலே
வான் மதியோ ஓடிவந்து
வாசல் தெளித்து கோலமிட
வீதி வழி தேவதையாய்  - என்
வீட்டிற்குள் நீ வந்து
காலைநேர தென்றலாய் - என்
கனவுகளை கலைத்துவிட்டாய் ........
                                                                     
                                                       க.சரவணன்

அவளின் கண்ணீர் முத்துக்கள்!!

Posted: 05 Sep 2017 06:57 AM PDT

இரவு உறக்கம் என்னை தழுவ நினைத்து-கண் இமைகளிடம் ஆணையிட்டு - என் இரு விழிகளையும் திரையிட்டு மறைக்கும் இந்த ஏகாந்தவேளையில்...... என்னவளே - உன்  இனிமையான நினைவுகளுடன் இரவின் தாக்கத்தில் எனைமறந்து  உறக்கத்தில் ஆழ்ந்த போது.... நீயும் நானும் நிலவின் மடியில்  நீண்ட நேரம் உரையாடிய போது - உன்  நீளவிழி பார்வையினால் என்னை  நீபார்த்த சில துளிகளின் நினைவும் .... தூரப்பயணம் சென்று -நான்  திரும்பிய அந்நாளில் - நீ தூரமாகவே நின்று என் மீது  தொடுத்த கோபக்கனை பார்வையும் .... விளையாட்டாய் ...

ஒருமுறையேனும் வந்துவிட்டு போ!!!

Posted: 05 Sep 2017 06:56 AM PDT

வெண்ணிலவொன்று பூமிக்கு வந்து  வீதிஉலா செல்வது போல் - நீ வெள்ளை தாவனியில் - என்  வீதிவழி செல்லும்போது - என்  உள்ளமது உன்னை என்னி - இந்த  உலகத்தையும் கூட மறந்து - வானில்  உயரபறக்கும் சிட்டுக்குருவி போல்  ஒய்யாரமாய் பறக்குதடி! உலா போகும் நிலாவே உனக்காக - என் உள்ளத்தில் குடிலமைத்து  உன் வருகை நோக்கி காத்திருக்கிறேன் - நீ ஒருமுறையேனும் வந்துவிட்டு போ! க.சரவணன்

இரவின் நிழல்

Posted: 05 Sep 2017 06:53 AM PDT

"மனம் என்ற புழிதியில் விழிந்த விதையை இந்த வருடமே அறுவடை செய்ய என் புத்தாண்டு வாழ்த்துகள் " "2015 என்ற விடைத்தாளுக்கு எழுத வேண்டும் வினா.......? மதிப்பெண் 2016" "லட்சியம் என்பது அனைவருக்கும் தெரியம் படி தோன்றி மறையும் சூரியன் இல்லை உயிர் வழியம் வரை கூடவே இருக்க வேண்டும் காற்றை போல .." "பச்சை பலகையில் ஒரு கவிதை சூரியன் வந்தான் திருடி சென்றான் ." "சாய்ந்து இருக்கும் பூவில் பனித்துளி பார்க்கும் பொழுது அழகு என்று சொன்னால் அது மனிதன் ...

மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

Posted: 05 Sep 2017 06:52 AM PDT

புதுக்கோட்டை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தைத் தூண்டியதாகக் கூறி, பெரியார் பல்கலைக்கழக இதழியல் துறை மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டார். அவர் போராட்டத்திற்கு இளைஞர்களை அழைக்கும் விதமாக அவர் தன் நண்பர்களுடன் துண்டுப் பிரசுரம் விநியோகித்தார் என்பதற்காக அவர் மீது  குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனை ரத்துசெய்யக்கோரி அவரது தந்தை சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி வளர்மதி ...

29 பீர் கண்ணாடி கோப்பைகளை தூக்கிக்கொண்டு நடந்து உலக சாதனை

Posted: 05 Sep 2017 06:51 AM PDT

- ஜெர்மனியை சேரந்த ஆலிவர் ஸ்ட்ரூம்பேல் பீர் நிரப்பப்பட்ட 29 கண்ணாடி கோப்பைகளை தூக்கிக்கொண்டு 40 மீட்டர் நடந்து சாதனை படைத்துள்ளார். ஆலிவர் தனது முந்தைய உலக சாதனையையே தற்போது முறியடித்துள்ளார். ஆலிவர் ஸ்ட்ரூம்பேல் மொத்தம் 31 கோப்பைகளை ஏந்திச் சென்றார். ஆனால் 2 கோப்பைகள் விழுந்து விடாதால் அவரது சாதனை 29 கோப்பைகளானது. இது குறித்து  ஆலிவர் ஸ்ட்ரூம்பேல் கூறும் போது முதலில்  நான் 27 கோப்பைகளை தான் சுமக்க எண்ணினேன். பின்னர் 31 கோப்பைகளை சுமந்தேன். அதிர்ஷ்டவசமாக அது 29 கோப்பைகளாகி ...

புதிய கருத்தடை மருந்துகள் அறிமுகம்

Posted: 05 Sep 2017 06:48 AM PDT

புதுடெல்லி அந்தரா எனும் ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்தும், சஹாயா எனும் மாத்திரையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.  இவை இலவசமாக மருத்துவக் கல்லூரிகளிலும், மாவட்ட மருத்துவமனைகளிலும் கிடைக்கும். இப்போது மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, ஹரியானா, மேற்கு வங்கம், ஒடிஷா, டெல்லி மற்றும் கோவாவில் கிடைக்கும். இவை பாதுகாப்பானவை மற்றும் அதிகளவில் பலனளிப்பவை என்றும் கூறப்படுகிறது. அந்தரா மூன்று மாதங்களுக்கு பலன் தரும். சஹாயா ஒரு வாரத்திற்கு பலன் ...

எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வு என்னாச்சு?

Posted: 05 Sep 2017 06:41 AM PDT

- 'எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம், ஜூலை முதல், 1.05 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி, சட்டசபையில் அறிவித்து, இரண்டு மாதங்களாகியும், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு, தற்போது, மாத சம்பளமாக, 55 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இது, 1.05 லட்சம் ரூபாயாக, உயர்த்தப்படும்; முன்னாள் எம்.எல்.ஏ., ஓய்வூதியம், 12 ஆயிரம் ரூபாயில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியம், 10 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. ...

சுங்கச்சாவடிகளுக்கு மூடுவிழா? மத்திய அரசு பரிசீலனை

Posted: 05 Sep 2017 06:37 AM PDT

'நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை இழுத்து மூடுவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது' என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ், தமிழகத்தில், 45 இடங்கள் உட்பட, நாடு முழுவதும், 434 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில், வாகனங்களின் வகைக்கு ஏற்ப, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி, கார் வைத்திருப்போர், சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் போது, சுங்கக் கட்டணமாக மட்டும், 1,500 ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டியுள்ளது. நாடு ...

\அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? ஐகோர்ட்டில் விவாதம்

Posted: 05 Sep 2017 06:34 AM PDT

சென்னை: தமிழக அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் முதல்வர் தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசின் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார். முதுகில் சவாரி: - இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, முதல்வர் சார்பில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், தமிழக அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. கட்சி பிளவுபட்டு 3ல் 2 பங்கு எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே பெரும்பான்மையை ...

கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!

Posted: 05 Sep 2017 05:41 AM PDT



மின்சாரம் இல்லாதபோது
ஃப்ரிஜில் இருக்கிற பொருள்களுக்கு
குளிர்விட்டு போயிடுது…!!

சம்சாரம் இல்லாதபோது
வீட்டில் இருக்கிற கணவனுக்கு
குளிர்விட்டு போயிடுது,,!

-----------------------

அவ புருசன் தான் என் கனவுல வந்தானே..!

Posted: 05 Sep 2017 05:39 AM PDT

கணவன்: நேத்து ராத்திரி ஒரு அழகான பொண்ணு  என் கனவுல வந்தா மனைவி: தனியா வந்துருப்பாளே கணவன்: அது உனக்கு எப்படி தெரியும் மனைவி: அவ புருசன் தான் என் கனவுல வந்தானே -இனி பேசுவ ____________________________ கணவன் :  எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங், மனைவி : அப்படியா எங்க இருக்கிங்க..? கணவன் : "Zoo"ல இருக்கேன்..ma மனைவி : ____________________________ மனைவி:உங்களை பார்க்காமலே கல்யாணத்துக்கு OK சொன்னேன். நான் தான் தியாகி…!! - கணவர்: உன்னை பார்த்த பின்னாலும், கல்யாணத்துக்கு ...

புவியில் எப்படி வாழவேண்டும் என்பதை நாம் அறியோம்!

Posted: 05 Sep 2017 05:38 AM PDT

காற்றில் பறவைகளைப்போல் பறப்பதற்கும், தண்ணீரில் மீன்களைப்போல் நீந்துவதற்கும் நாம் கற்றிருக்கிறோம். – ஆனால் புவியில் எப்படி வாழவேண்டும் என்பதை நாம் அறியோம்! – மார்க்ஸிம் கார்க்கி – ——————————————- – சலிப்பு, சோம்பல் மிகுந்த மூளையை அல்லது ஆன்மிக உணர்வும் உற்சாகமும் இல்லாத வேலையினால் முடமாக்கப்பட்ட மூஉளையை ஆட்கொள்ளும் வெறுமை உணர்ச்சி, அயர்வு ஆகியவற்றினின்றும் தப்ப, தீய பண்பு ஒரு புகலிடமாக விளங்குகிறது. – -வில்லியம் ஆர்ச்சர் – —————————————– – உயர்வு நம்மையெல்லாம் கவருகிறது. ஆனால் ...

நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் என்ன வேறுபாடு?

Posted: 05 Sep 2017 05:37 AM PDT

நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் என்ன வேறுபாடு?

வினா : "நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் என்ன வேறுபாடு?"

விடை : "காட்டுப் பசுவைப் பிடித்துவந்து வீட்டில் வளர்ப்பது நாகரிகம்!; அந்தப் பசுவுக்கு நெற்றியில் ஒரு பொட்டு வைப்பது பண்பாடு !"

இன்றைக்கு யார் தேவை?

Posted: 05 Sep 2017 05:31 AM PDT

இன்றைக்கு யார் தேவை?

"தேனின் மருத்துவ குணங்களைச் சொல்லும் அறிஞர்கள் இன்று நமக்குத் தேவை இல்லை!"

"பிறகு?"

"கலப்படமற்ற, சுத்தமான, அசல் தேனை எல்லாக் கடைகளிலும் கிடைக்கச் செய்யும் ஆளே இன்று தேவை ! "

மனித முக விநாயகர்!

Posted: 05 Sep 2017 02:32 AM PDT

- விநாயகர் என்றாலே, யானை முகத்தோனாகத் தான், தரிசித்துள்ளோம். அவரை மனித முகத்துடன் தரிசிக்க, திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோவிலுக்கு தான் செல்ல வேண்டும். பார்வதி தேவி, தன் உடலில் இருந்து ஆண் குழந்தை ஒன்றை உருவாக்கி, அதற்கு, 'விக்னேஷ்வரன்' என்று பெயரிட்டாள். ஒரு நாள், மனித முகத்துடன் இருந்த விக்னேஷ்வரரை அழைத்து, தன் இருப்பிடத்திற்குள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்தாள். விக்னேஷ்வரன் வாசலில் காவலுக்கு இருந்த போது அங்கு வந்தார், சிவன். அவரை, அன்னையின் ...

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை

Posted: 05 Sep 2017 01:38 AM PDT

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
நண்பர்களே பகிருங்கள்

SELF

Posted: 05 Sep 2017 01:31 AM PDT

பெயர்:                                               த.அனுசுயா துர்கை சொந்த ஊர்:                                     தென்காசி ஆண்/பெண்:                                    பெண் ஈகரையை அறிந்த விதம்:            தேடல் பொழுதுபோக்கு:                            அலுவலக பனிக்கு  உதவுதல்                                                                மற்றும் புக் ரீடிங் தொழில்:                                           இல்லை மேலும் என்னைப் பற்றி:

50 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ கல்லூரியில் இடம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக மாணவி வழக்கு

Posted: 04 Sep 2017 08:17 PM PDT

புதுடெல்லி, நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவ கல்லூரியில் சேர்க்கை கிடைக்காத தமிழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர், தனக்கு மருத்துவ கல்லூரியில் 50 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை வழங்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு வருகிற 11–ந் தேதி விசாரணைக்கு வருகிறது. தமிழக மருத்துவ கல்லூரிகளில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவி திருமா மகள் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், தமிழக அரசு கடைப்பிடிக்கும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™