Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பிரிக்ஸ் மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிராக... தீர்மானம்! பாகிஸ்தானுக்கு தலைவர்கள் கடும் எச்சரிக்கை

Posted: 04 Sep 2017 08:49 AM PDT

ஜியாமென், 'பயங்கரவாதத்தை ஆதரிக்கும், ஊக்குவிக்கும், துாண்டிவிடும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, சீனாவில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும், லஸ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்புகளின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது, இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகள் இணைந்த, பிரிக்ஸ் அமைப்பின் கூட்டம், சீனாவின் ஜியாமெனில் நடக்கிறது. இதுவரை நடந்த, எட்டு கூட்டங்களில், பயங்கரவாதம் குறித்த ...

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5,000 ரூபாய் அபராதம்

Posted: 04 Sep 2017 09:46 AM PDT

புதுடில்லி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ந்துள்ள அவதுாறு வழக்கில், தாமதமாக பதிலளித்த, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டில்லி உயர் நீதிமன்றம், 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
ரூ.10 கோடி
மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, டில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த போது ஊழல் செய்ததாக, அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார்.இதையடுத்து, 10 கோடிரூபாய் கேட்டு, கெஜ்ரிவாலுக்கு எதிராக, அருண் ஜெட்லி அவதுாறு ...

தேர்தலில் யார் போட்டியிடலாம்? சுப்ரீம் கோர்ட் விரைவில் முக்கிய முடிவு

Posted: 04 Sep 2017 09:50 AM PDT

கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்ப ட்டோரை, எந்த நிலையில், தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது, என்பது தொடர்பான வழக்கை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றுவது குறித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மூன்று நீதிபதிகள் அமர்வு கிரிமினல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோர், தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது தொடர்பான வழக்குகளை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான , மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின் அல்லது குற்றச்சாட்டு பதிவு ...

'பெரா' வழக்கில் 'டிமிக்கி' கொடுக்கும் தினகரனுக்கு..சூடு!

Posted: 04 Sep 2017 10:14 AM PDT

புதுடில்லி: 'பெரா' வழக்கில், 'டிமிக்கி' கொடுக்கும் தினகரனுக்கு, உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது;மூன்று மாதத்தில், வழக்கை முடிக்க நீதிபதிகள் கெடு விதித்தனர். 'வழக்கை இழுத்தடிக்க, இது போன்ற மனுக்களை தாக்கல் செய்தால், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, நீதிபதிகள் எச்சரித்தனர்.

சசிகலாவின் அக்கா மகன் தினகரன், 1996ல், பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில், சட்ட விரோதமாக, பல கோடி ரூபாய் முதலீடு செய்தது தொடர்பாக, அமலாக்கத் துறை, இரு வழக்குகளை பதிவு செய்தது.
மனு தாக்கல்
இவை, சென்னை, எழும்பூர் பொருளாதார ...

நவ., 17க்குள் உள்ளாட்சி தேர்தல்: உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 04 Sep 2017 10:25 AM PDT

சென்னை, தமிழகத்தில், நவம்பர், 17-க்குள், உள்ளாட்சி தேர்தலை முடிக்கவும், அதற்கான அறிவிப்பாணையை, வரும், 18க்குள் வெளியிடவும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், 2016 அக்டோபரில், உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
தி.மு.க. வழக்கு
ஆனால், 'உள்ளாட்சி அமைப்புகளில், பழங்குடியினருக்கு முறையான ஒதுக்கீடு வழங்கவில்லை' எனக்கூறி, உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடந்தார்.அதை விசாரித்த, உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், 'பழங்குடியினருக்கான ஒதுக்கீடு செல்லும்; தேர்தல் ...

மாணவர்கள் போராட்டத்தை ஒழுங்குபடுத்துங்க! எஸ்.பி.,க்களுக்கு போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவு

Posted: 04 Sep 2017 10:34 AM PDT

'நீட் தேர்வுக்கு எதிராக, மாணவர்கள் போராட்டம் வலுத்து வருவதால், அதை, ஒழுங்குப்படுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும்' என, மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

'நீட்' தேர்வுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த, அரியலுார் மாணவி அனிதா, சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.அதனால், 'நீட்' தேர்வுக்கு எதிராக, மாநிலம் முழுவதும், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், போராட்டங்கள் நடப்பதால், சென்னை உட்பட, பல மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ...

திருச்சியில் 8 ம் தேதி பொதுக்கூட்டம் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

Posted: 04 Sep 2017 10:46 AM PDT

சென்னை, 'நீட்' தேர்விலிருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்காத, மத்திய அரசை கண்டித்து, திருச்சியில், வரும், 8ம் தேதி, பொதுக்கூட்டம் நடத்துவது என, அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை அறிவாலயத்தில், அனைத்து கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் தலைமை வகித்தார்.
மத்திய,மாநில அரசுகளே காரணம்
தமிழக காங்., தலைவர், திருநாவுக்கரசர், இந்திய கம்யூ., மாநில செயலர், முத்தரசன், விடுதலை சிறுத்தைகள்கட்சி தலைவர், திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர், ...

காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு அ.தி.மு.க., வலை 6 பேரிடம் அமைச்சர்கள் ரகசிய பேச்சு

Posted: 04 Sep 2017 10:51 AM PDT

தமிழக காங்கிரசில் உள்ள, எட்டு எம்.எல்.ஏ.,க்களில், ஆறு பேரை இழுக்கும் முயற்சியில், அமைச்சர்கள் சிலர் ரகசியமாக ஈடுபட்டு உள்ளனர். இந்த முயற்சி வெற்றி பெற்றால், சட்டசபையில், முதல்வர் பழனிசாமி ஆதரவு, காங்., அணி உதயமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.அதில், அவர் பேசுகையில், 'சட்டசபையில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், முதல்வர் பழனிசாமிக்கு, 83 எம்.எல்.ஏ.,க்கள் தான் ஆதரவு தெரிவிப்பர்; எதிராக, 150 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு அளிப்பர்' ...

கறுப்பு பணம் சிக்கியதா? ரிசர்வ் வங்கிக்கு தெரியாதாம்

Posted: 04 Sep 2017 11:07 AM PDT

புதுடில்லி,செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், கறுப்புப் பணம் எவ்வளவு சிக்கியது; எவ்வளவு கறுப்புப் பணம் வெள்ளையானது, என்ற பார்லி., குழுவின் கேள்விகளுக்கு, 'தெரியாது' என, ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

'டிபாசிட்' செய்வதற்கு அவகாசம்புழக்கத்தில் இருந்த, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, கடந்தாண்டு நவம்பரில் அறிவிக்கப்பட்டது. கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த அறிவிப்புக்குப் பின், செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில், 'டிபாசிட்'செய்வதற்கு அவகாசம் அளிக்கப்பட்டது. ...

சுங்கச்சாவடிகளுக்கு மூடுவிழா? மத்திய அரசு பரிசீலனை

Posted: 04 Sep 2017 01:29 PM PDT

'நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை இழுத்து மூடுவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது' என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ், தமிழகத்தில், 45 இடங்கள் உட்பட, நாடு முழுவதும், 434 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில், வாகனங்களின் வகைக்கு ஏற்ப, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி, கார் வைத்திருப்போர், சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் போது, சுங்கக் கட்டணமாக மட்டும், 1,500 ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டியுள்ளது. நாடு முழுவதும், இதே நிலை உள்ளதால், பலரும் அவதிக்கு உள்ளாகின்றனர். ...

ரோஹிங்யா விவகாரம் : மத்திய அரசு கைவிரிப்பு

Posted: 04 Sep 2017 02:12 PM PDT

புதுடில்லி: ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரத்தில் மத்திய அரசின் அறிவுரை பெற்றே கருத்து கூற முடியும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு ஆசிய நாடான, மியான்மரின் ரக்கைன் மாகாணத்தில் வசிக்கும் ரோஹிங்யா இன முஸ்லிம்கள் மீது, அந்நாட்டு ராணுவம், வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அவர்கள், அங்கிருந்து தப்பி, மேற்குவங்கம் உட்பட நாட்டின் பல பகுதிகளில், தஞ்சமடைந்து வருகின்றனர்.
ரோஹிங்யா முஸ்லிம்கள், 40 ஆயிரம் பேர், சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக கூறி, அவர்களை வெளியேற்ற மத்திய அரசு, நடவடிக்கை எடுத்து வருவதாக ...

உறுப்பு தானம் செய்ய கட்டுப்பாடுகள் தளர்வு

Posted: 04 Sep 2017 02:41 PM PDT

கோல்கட்டா: உடல் உறுப்பு தானம் செய்வதற்கான, நெருங்கிய உறவினர்கள் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாற்று பெற்றோர், மாற்று உடன்பிறந்தோரும் நெருங்கிய உறவினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு, நாட்டில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. உயிருக்கு போராடும் ஒருவருக்கு தேவையான, சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை, அவருடைய நெருங்கிய உறவினர் மட்டுமே தானமாக அளிக்க முடியும். பெற்றோர், குழந்தைகள், கணவன் அல்லது மனைவி, உடன் பிறந்தோர் ஆகியோர் மட்டுமே நெருங்கிய உறவினர்களாக ...

வருகிறது வடகிழக்கு பருவமழை: பேரிடரை தடுக்க அதிகாரிகள், 'அலர்ட்'

Posted: 04 Sep 2017 03:27 PM PDT

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், பழைய ஆபத்தான கட்டடங்களில் வசிப்பவர்களை வெளியேற்ற, அவற்றின் உரிமையாளர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தடுப்பு நடவடிக்கை:
தற்போது, தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அக்., இரண்டாவது வாரத்தில், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. இந்த பருவத்தில், மழை பொழிவு அதிகம் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, உறுதியற்ற கட்டடங்கள் இடிந்து விழும் வாய்ப்புகள் உள்ளன. 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கட்டடங்கள்; முறையான ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™