Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எட்டு மாதங்களில் ரத்தான லைசென்ஸ்கள் எண்ணிக்கை... 1.௦4 லட்சம் !  

Posted: 30 Sep 2017 06:32 AM PDT

தமிழகத்தில்,நடப்பாண்டில், ஆக., வரையிலான எட்டு மாதங்களில், 1.௦4 லட்சம் ஓட்டுனர்களின் லைசென்ஸ்களை ரத்து செய்யும்படி, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு, போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.

தமிழகத்தில், வாகனங்களின் பெருக்கத்தால், சாலை விதிமீறல்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அத்துடன், விபத்துக்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. எனவே, சாலை விதிமீறல்களை தடுக்கும் நடவடிக்கைகளில், போக்குவரத்து போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கடும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
ரத்து செய்ய பரிந்துரை
ஆகஸ்ட் வரையிலான எட்டு ...

தகவல் தொழில்நுட்ப அணியை தயார்படுத்துகிறது தி.மு.க.,

Posted: 30 Sep 2017 06:39 AM PDT

தேர்தல் வெற்றிக்கு, தகவல் தொழில்நுட்பம் பெரிதும் உதவியாக இருப்பதால், தகவல் தொழில்நுட்ப அணியை, தேர்தலுக்கு முன் வலுப்படுத்த, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.

அதற்காக, மாவட்ட அளவிலும், சட்டசபை தொகுதி அளவிலும், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.அனைத்து துறைகளிலும், தகவல் தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்கிறது. அரசியல் கட்சிகளின் வெற்றிக்கும், தகவல் தொழில்நுட்பம் முக்கியமானதாக மாறி உள்ளது. இதை முன்னதாகவே உணர்ந்த ஜெயலலிதா, முதன் முதலாக, அ.தி.மு.க.,வில், தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்கினார்.அந்த அணி உருவாக்கப்பட்ட ...

ஆமை வேக செயல்பாடு: அதிருப்தியில் ஆளும் கட்சி

Posted: 30 Sep 2017 06:41 AM PDT

கட்சியும், ஆட்சியும் செயல்பாடில்லாமல் இருப்பதும், அமைச்சர்கள் மெத்தனமாக செயல்படுவதும், அ.தி.மு.க., தொண்டர்களிடம், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

நடவடிக்கை
ஜெ., மறைவுக்கு பின், புயலில் சிக்கிய கப்பல் போல், அ.தி.மு.க., திணறி வருகிறது. பிளவு பட்ட அணிகள் இணைந்தால், பிரச்னைகள் சரியாகி விடும் எனக்கருதி, இரு அணிகளின் மூத்த நிர்வாகிகள், இணைப்புக்கான நடவடிக்கை எடுத்தனர்.இரு அணிகள் இணைந்த பின்னும், பிரச்னை தீரவில்லை. இரு அணிகளும் இணையாது என்ற நம்பிக்கையில், 'இணைந்தால், நான் ஒதுங்கிக் கொள்கிறேன்' எனக் கூறிய தினகரன், தற்போது, தனி அணியாக ...

ஜெ., மரணம் குறித்து நீதி விசாரணை சந்தேக வலையில் சசிகலா குடும்பம்

Posted: 30 Sep 2017 06:44 AM PDT

ஜெ., மரணம் தொடர்பாக, அடுத்தடுத்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுவது, சசிகலா குடும்பத்தினருக்கு, சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர், ஜெ., 2016 செப்., 22ல், உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்; அங்கு, சிகிச்சை பலனின்றி, டிச., 5ல் இறந்தார். அவரது மறைவு தொடர்பாக, பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.இது குறித்து விசாரணை நடத்த, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில் கமிஷன் அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. ஜெ., மருத்துவமனையில் சேர வேண்டிய சூழ்நிலைக்கான காரணம், மருத்துவமனையில் நடந்த ...

சாலை விபத்தை தவிர்ப்பதில் போக்குவரத்து துறை திணறல்!  எட்டு மாதங்களில் 11 ஆயிரம் பேர் பலி

Posted: 30 Sep 2017 07:08 AM PDT

தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்தாலும், சாலை விபத்துகளும், உயிர் இழப்புக்களும் குறைவதாக இல்லை. எட்டு மாதங்களில் நிகழ்ந்த, 44 ஆயிரத்து, 722 விபத்துகளில், 11 ஆயிரத்து, 327 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

'நாட்டிலேயே, தமிழகத்தில் தான் அதிக சாலை விபத்துகளும், உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன; இதை தடுக்க, அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தின், சாலை பாதுகாப்புக்குழு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, சில வழிமுறை களையும் அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில், சாலை விபத்துகள் மற்றும் அதனால், ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க, தமிழக அரசு அதிரடி ...

ரயில் பால விபத்தில் இறந்தோர் நெற்றியில் எண் எழுதியதால்...சர்ச்சை! மருத்துவமனை நிர்வாகம் அவமானப்படுத்தியதாக குமுறல்

Posted: 30 Sep 2017 09:06 AM PDT

மும்பை, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், ரயில் நடை பால விபத்தில் பலியான, 22 பேர் சடலங்களின் நெற்றியில், ஒன்று, இரண்டு என, வரிசை எண்ணை எழுதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களை, மருத்துவமனை நிர்வாகம் அவமானப்படுத்தி விட்டதாக கூறி, மும்பை மக்கள், சமூக வலைதளங்களில், கொந்தளிப்பை வெளியிட்டுள்ளனர்.

மஹாராஷ்டிராவில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநிலத் தலைநகர், மும்பையில் நாட்டிலேயே, அதிக அளவு, புறநகர் ரயில் போக்குவரத்து பயன்படுத்தப் படுகிறது.இங்குள்ள புறநகர் பகுதியான, எல்பின்ஸ்டோன் ரோடு ...

புரோஹித்!தமிழக கவர்னராக நியமனம்

Posted: 30 Sep 2017 09:49 AM PDT

தமிழகத்தின் புதிய கவர்னராக, பன்வாரிலால் புரோஹித், 77, நியமிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து, குழப்பம் நிறைந்த, தமிழக அரசியல் சூழலில், புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. ஓராண்டுக்குப் பின், மாநிலத்தில், முழு நேர கவர்னர் பொறுப்பேற்க உள்ளதால், கொந்தளித்த கட்சிகள் எல்லாம், 'கப்சிப்' ஆகியுள்ளன.

ஆட்சி கவிழ்ப்பு முயற்சி, அரசுக்கு எதிராக போர்க்கொடி, 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் என, சவால்கள் வரிசைகட்டி காத்திருப்பதால், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது.தமிழக கவர்னராக இருந்த ரோசையாவின் பதவிக்காலம், 2016 ஆகஸ்ட்டில் ...

இது மைனாரிட்டி ஆட்சியா: முதல்வர் ஆவேசம்

Posted: 30 Sep 2017 10:17 AM PDT

சேலம், ''ஜெயலலிதாவின் வழியே நடக்கும் இந்த ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது,'' என, சேலத்தில் நேற்று நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டுவிழாவில், முதல்வர் பழனிசாமி பேசினார்.

விழாவில் பழனிசாமி பேசியதாவது:
சேலம், கருப்பூரை சேர்ந்த தனபால் சபாநாயகராகவும், எலச்சிபாளையத்தை சேர்ந்த நான், முதல்வராகவும், தமிழகத்தின் மிக பெரிய பதவிகளை வகிக்கும் பெருமையை, சேலம் பெற்றுள்ளது. அ.தி.மு.க.,வின் கோட்டையாக உள்ள சேலம் மாவட்டத்தில், எவனாலும் நுழைய முடியாது.மத்திய அரசுடன் இணக்கமாக செல்வது குற்றமா. எம்.ஜி.ஆர்., ஆட்சியில் எப்போதுமே, மத்திய அரசுடன் விரோத போக்கை ...

வருமான வரி வளையத்திற்குள் 1.25 கோடி பேரை சேர்க்க இலக்கு

Posted: 30 Sep 2017 10:32 AM PDT

புதுடில்லி:நடப்பு நிதியாண்டான, 2017 - 2018ல், புதிதாக, 1.25 கோடி பேரை, வருமான வரி வளையத்திற்குள் கொண்டு வர, வருமான வரித்துறை திட்டமிட்டுஉள்ளது. இதன் ஒரு பகுதியாக, பல ஆண்டுகளாக, வருமான வரி செலுத்தாத வரி ஏய்ப்பாளர்களை கண்டறியும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

கறுப்புப் பண ஒழிப்பிற்காக, மத்திய அரசு, 2016, நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை வெளியிட்டது. அதை தொடர்ந்து, வங்கிகளில், ஏராளமானோர் பணம் செலுத்தினர்.நீண்ட காலமாக பரிவர்த்தனை இல்லாமல் இருந்த கணக்குகளில் கூட, பணபரிவர்த்தனை அதிகரித்தது.இதுகுறித்து, வரித்துறை ஆய்வு செய்தபோது, வரி செலுத்தாத பலர், ...

கதர் ஆடை திட்டம் அறிவிக்குமா அரசு?

Posted: 30 Sep 2017 12:16 PM PDT

மத்திய அரசின் பரிந்துரைப்படி, அரசு ஊழியர்கள், வாரத்தில் ஒரு நாள், கதர் ஆடை அணியும் திட்டத்தை, காந்தி ஜெயந்தி அன்றாவது, தமிழக அரசு அறிவிக்குமா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாடு முழுவதும், கதர் பயன்பாட்டை அதிகரிக்க, மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 'தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கதர் சீருடைகள் வழங்க வேண்டும்; அரசு ஊழியர்கள், வாரத்தில் ஒரு நாள், கதர் ஆடை அணிய வேண்டும்' என, கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதை, தமிழக அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.
இது குறித்து ...

இந்திய உறவில் புது அத்தியாயம் சீன தூதர் லூ நம்பிக்கை

Posted: 30 Sep 2017 01:21 PM PDT

புதுடில்லி: ''இந்தியாவுடனான உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்துவோம்,'' என, சீன துாதர், லுா ஹோஹி கூறினார்.
பதற்றம்
சிக்கிம் மாநிலத்தில், இந்தியா -- சீனா- - பூடான் நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில், சீன ராணுவம் சமீபத்தில், அத்துமீறி சாலை அமைத்தது. இதற்கு, இந்தியாவும், பூடானும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
பின், அங்கு, சீனா, வீரர்களை குவித்தது; நம் ராணுவமும் அங்கு குவிக்கப்பட்டது. இதனால், பெரும் பதற்றம் நிலவியது.மோதலை முடிவுக்கு கொண்டு வர, இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சு நடத்தி, படைகள் ...

'மேன்ஷனாக' மாறிய வகுப்பறைகள்

Posted: 30 Sep 2017 02:09 PM PDT

புதுடில்லி: பள்ளி வகுப்பறையை, காவலாளி, இரவில் வாடகைக்கு கொடுத்துள்ளது, துணை முதல்வரின் சோதனையில் அம்பலமானது.
டில்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. கல்யாண்புரியில், மாநகராட்சி பள்ளி ஒன்றில், வகுப்பறைகள், இரவில் வாடகைக்கு விடப்படுவதாக, துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான, மனீஷ் சிசோடியாவுக்கு புகார் வந்தது.அந்த பள்ளிக்கு, சிசோடியா திடீரென சென்றார்.
அப்போது, வகுப்பறை ஒன்றில், ஆண்கள் அணியும் சட்டைகள், பேன்ட்கள் காயப் போடப்பட்டிருந்தன. விசாரணையில், பள்ளி வகுப்பறைகளை, வாட்ச்மேன், சில மாதங்களாக, ...

பழைய நோட்டுக்கு பதில் புதுசு சரத்குமாருக்கு ஐகோர்ட் யோசனை

Posted: 30 Sep 2017 03:47 PM PDT

சென்னை: தேர்தலின் போது, கைப்பற்றப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை, புதிய நோட்டுகளாக மாற்றி தர, உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி, நடிகர் சரத்
குமாருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
9 லட்சம் ரூபாய்தமிழக சட்டசபை தேர்தலின் போது, திருச்செந்துார்
தொகுதியில், ச.ம.க., தலைவர், நடிகர் சரத்குமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில், அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.
தேர்தல் செலவுக்காக, சரத்குமார், ஒன்பது லட்சம் ரூபாயை, காரில் வைத்திருந்த போது, தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர். அதை, திருச்செந்துார் அரசு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™