Tamil News | Online Tamil News |
- மொபைலில் ஐ.எம்.இ.ஐ., எண்ணை திருத்தினால் 3 ஆண்டு சிறை தண்டனை
- ஜெயலலிதா அறிவித்தும் வராத தொழில் கொள்கை!
- கண்டிப்பு! சக ஊழியர்களை வீட்டு வேலை வாங்காதீங்க.. ரயில்வே அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு
- ஜெ., மரணம் குறித்து விசாரணை: நீதிபதி பெயரை அறிவித்தது அரசு
- ஊழலுக்கு எதிராக சமரசம் கிடையாது; பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் மோடி உறுதி
- ஏர்செல் - மேக்சிஸ் முறைகேட்டில் கார்த்தி சிதம்பரம்... கைது?
- இரட்டை இலை சின்ன வழக்கில் புதிய பிரமாண பத்திரம்: முதல்வர் தரப்பு ஏற்பாடு
- பன்னீர் அணி 'மாஜி' எம்.பி., மனு; பழனிசாமி முயற்சிக்கு முட்டுக்கட்டை
- 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யுங்க! உயர்நீதிமன்றத்தில் தி.மு.க., வழக்கு
- தடையின்றி ஏ.டி.எம்.,ல் பணம்: ரிசர்வ் வங்கி உத்தரவு
- தேவைபட்டால் பாக்.மீது மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல்: ராணுவ தளபதி எச்சரிக்கை
- சமையல், 'காஸ்' சிலிண்டர் மானியம் சரியாக வருவதில்லை: மக்கள் புகார்
| மொபைலில் ஐ.எம்.இ.ஐ., எண்ணை திருத்தினால் 3 ஆண்டு சிறை தண்டனை Posted: 25 Sep 2017 07:56 AM PDT புதுடில்லி: மொபைல் போனில் உள்ள, ஐ.எம்.இ.ஐ., என்னும் சர்வதேச மொபைல் போன் அடையாள எண்ணை திருத்துபவர் களுக்கு, அபராதத்துடன், மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஒவ்வொரு மொபைல் போனுக்கும் தனிப்பட்ட, 15 இலக்க அடையாள எண் தரப்பட்டுள்ளது. மொபைல் போன் தொலைந்து போனால், அதை கண்டுபிடிக்கவும், உடனடியாக அதன் இயக்கத்தை நிறுத்துவதற்கும் இந்த எண் உதவுகிறது.புதிதாக மொபைல் போன் வாங்குவோர், மொபைல் போனில் உள்ள,ஐ.எம்.இ.ஐ., எண் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.மூன்று ஆண்டுகள் சிறை சமீபகாலமாக, மொபைல் போன் ... |
| ஜெயலலிதா அறிவித்தும் வராத தொழில் கொள்கை! Posted: 25 Sep 2017 08:06 AM PDT விமான உதிரிபாக தொழில் கொள்கை வெளியிட தாமதமாவதால், தமிழகம் முதலீடுகளை இழந்து வருவதாக, அத்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, வல்லம் - வடகால் சிப்காட் பூங்காவில், 250 ஏக்கரில், விமான உதிரிபாக தொழில் பூங்கா துவங்குவது குறித்து, 2015ல், ஜெ., அறிவிப்பு வெளியிட்டார்.இன்னும் வெளியிடப்படவில்லை அங்கு, 'தமிழக அரசு சார்பில், 350 கோடி ரூபாயில், விமான வடிவமைப்பு பொறியியல் மையம்அமைக்கப்படும்; விமான உதிரிபாக தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், பிரத்யேக தொழில் கொள்கை ... |
| கண்டிப்பு! சக ஊழியர்களை வீட்டு வேலை வாங்காதீங்க.. ரயில்வே அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு Posted: 25 Sep 2017 09:24 AM PDT 'ரயில்வே அதிகாரிகள், 'கேங் மேன்' உள்ளிட்ட, 'டி' பிரிவு ஊழியர்களை, வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தக் கூடாது' என, மத்திய அரசு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரயில் விபத்துகளை தடுக்கும் வகையில், ரயில் பாதை பாதுகாப்பு பணியை, 'டி' பிரிவு ஊழியர்கள் செய்வதை உறுதி செய்யவும், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.துாய்மை மற்றும் பயணியரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து, ரயில்வே துறை, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.ரயில் பாதைகளை மேம்படுத்துவது, சிக்னல் முறையில் மாற்றம் செய்வது போன்றவை மூலம், ரயில்களின் வேகத்தை உயர்த்துவதுடன், ... |
| ஜெ., மரணம் குறித்து விசாரணை: நீதிபதி பெயரை அறிவித்தது அரசு Posted: 25 Sep 2017 09:48 AM PDT ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைத்து, நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது. முதல்வராக இருந்த ஜெ., உடல் நலக்குறைவு காரணமாக, 2016 செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்; டிச., 5 இரவு இறந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, அவர் தொடர்பான புகைப்படம் எதுவும், அரசு தரப்பிலோ, மருத்துவமனை தரப்பிலோ வெளியிடப்படவில்லை. அவருடன், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர்.ஜெ.,யின் கைரேகை ஆனால், ... |
| ஊழலுக்கு எதிராக சமரசம் கிடையாது; பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் மோடி உறுதி Posted: 25 Sep 2017 10:00 AM PDT புதுடில்லி: ''ஊழலுக்கு எதிரான என் போராட்டம் தொடரும்; இதில், சமரசத்திற்கே இடமில்லை. ஊழல் செய்தவர்கள் தப்பிக்க முடியாது,'' என, பிரதமர், நரேந்திர மோடி நேற்று கூறினார்.பா.ஜ.,வின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம், டில்லியில், நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில், மூத்த நிர்வாகிகளுடன், கட்சித் தலைவர், அமித் ஷா ஆலோசனை நடத்தினார். இரண்டாம் நாளான நேற்று, பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த, அரசு எடுத்த முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில், பிரதமர், நரேந்திர மோடி பேசியதாவது:ஊழலுக்கு எதிரான, என் ... |
| ஏர்செல் - மேக்சிஸ் முறைகேட்டில் கார்த்தி சிதம்பரம்... கைது? Posted: 25 Sep 2017 10:20 AM PDT புதுடில்லி: 'ஏர்செல் - மேக்சிஸ்' முறைகேட்டில், கார்த்தி சிதம்பரம், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, தெரிகிறது. அதற்கு முன்னோட்டமாக, அவரின், 1.16 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கி, அமலாக்கத் துறை உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பான விசாரணையில், வங்கி கணக்குகளை, அவர் அவசரமாக கைமாற்றியதும் அம்பலமாகி உள்ளது. அமலாக்கத் துறையின் அதிரடி நடவடிக்கையில், மகன் சிக்கியுள்ளதால், 'மாஜி' நிதி அமைச்சர், சிதம்பரம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, சிதம்பரத்தின் மகன், கார்த்தி மீது, மே மாதம், சி.பி.ஐ., ஊழல் ... |
| இரட்டை இலை சின்ன வழக்கில் புதிய பிரமாண பத்திரம்: முதல்வர் தரப்பு ஏற்பாடு Posted: 25 Sep 2017 10:46 AM PDT இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம், புதிதாக பிரமாண பத்திரங்கள் பெற்று, வரும், 28ல் தாக்கல் செய்ய, முதல்வர் தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிளவால், இரட்டை இலை சின்னம் முடக்கப் பட்டது. அதை மீட்க, தேர்தல் கமிஷனில், ஏற்கனவே, லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இதை முடிவு செய்வதற்காக, அனைத்து தரப்பினரும், போதிய ஆவணங்களை, வரும், 29க்குள் தாக்கல் செய்யும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. பத்திரத்தில் ... |
| பன்னீர் அணி 'மாஜி' எம்.பி., மனு; பழனிசாமி முயற்சிக்கு முட்டுக்கட்டை Posted: 25 Sep 2017 10:50 AM PDT இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை முடிவு செய்யும் வழக்கில், கே.சி.பழனிசாமி மனு, முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், அவர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற, கேள்வி எழுந்துள்ளது. ஜெ., மறைந்த பின், அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி, சசிகலாவை பொதுச்செயலராக தேர்வு செய்தனர். இதை எதிர்த்து, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி, ஜனவரி, 6ல், தேர்தல் கமிஷனில் மனு செய்தார்.அந்த மனுவில், 'அ.தி.மு.க., சட்ட திட்ட விதிகளின்படி, பொதுச்செயலர், அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். பொதுக்குழு உறுப்பினர்களால், சசிகலா தேர்வு செய்யப்பட்டது ... |
| 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யுங்க! உயர்நீதிமன்றத்தில் தி.மு.க., வழக்கு Posted: 25 Sep 2017 11:00 AM PDT சென்னை: நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக ஓட்டளித்த, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட, ௧௧ எம்.எல்.ஏ.,க்களை தகுதியிழப்பு செய்யக் கோரி, சென்னை உயர் நீதி மன்றத்தில், தி.மு.க., மனு தாக்கல் செய்துள்ளது.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், கொறடாவுமான, ஆர்.சக்கரபாணி தாக்கல் செய்த மனு: முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். பிரதான எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில், ஓட்டெடுப்பு நடந்து, பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாரபட்ச ... |
| தடையின்றி ஏ.டி.எம்.,ல் பணம்: ரிசர்வ் வங்கி உத்தரவு Posted: 25 Sep 2017 12:49 PM PDT மதுரை: விடுமுறை நாட்களில் ஏ.டி.எம்.,களில் தடையின்றி பணம் கிடைக்க செய்யவேண்டுமென வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தேசிய, தனியார், கூட்டுறவு வங்கிகள் மூலம் 21 ஆயிரம் ஏ.டி.எம்., மையங்கள் செயல்படுகிறது. சரஸ்வதி பூஜை, காந்தி ஜெயந்திக்கு செப்., 29, அக்., 2 மற்றும் சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை. மாத சம்பளம் எடுத்தல், தீபாவளி ஆடை வாங்க ஏ.டி.எம்.,களை அதிகம் நாடும்போது பணதட்டுப்பாடு அதிகரிக்கும். இதை தவிர்க்க உரிய ஏற்பாடு செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. தேசிய வங்கியின் மண்டல அதிகாரி ஒருவர் கூறுகையில், ... |
| தேவைபட்டால் பாக்.மீது மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல்: ராணுவ தளபதி எச்சரிக்கை Posted: 25 Sep 2017 01:47 PM PDT புதுடில்லி: சர்ஜிக்கல் தாக்குதல் பாக்.கிற்கு ஒரு எச்சரிக்கை, தேவைப்பட்டால் மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்படும் என ராணுவ தலைமை தளபதி கூறினார்.கடந்த 2016-ம் ஆண்டு செப். 18-ல் காஷ்மீரின் உரி செக்டரில் ஜெய்ஷி முகமது பாக். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நமது ஜவான்கள் 19 பேர் வீரமரணம் அடைந்தனர். உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா அதே ஆண்டில் (2016) செப்டம்பர் 28-29-ம் தேதிகளில் நள்ளிரவில் பாக்.எல்லைக்குள் புகுந்து சர்ஜிக்கல் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி 40 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது.இந்நிலையில் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவ ... |
| சமையல், 'காஸ்' சிலிண்டர் மானியம் சரியாக வருவதில்லை: மக்கள் புகார் Posted: 25 Sep 2017 03:22 PM PDT
வீட்டு சமையல், 'காஸ்' சிலிண்டர் மானியம், முறையாக வருவதில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். மத்திய அரசு, ஆண்டுக்கு, 12 வீட்டு சமையல் காஸ் சிலிண்டருக்கு, மானியம் வழங்குகிறது. தமிழகம் உட்பட, நாடு முழுவதும், 2015 ஜன., முதல், காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதன்படி, வாடிக்கையாளர்கள், சந்தை விலையில், சிலிண்டர் வாங்க வேண்டும். பின், அதற்கான மானியத்தை, அவர்களின் வங்கிக் கணக்கில், எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தும். இந்நிலையில், தற்போது, பலரின் வங்கிக் கணக்கிற்கு, மானிய தொகை முறையாக வருவதில்லை என, புகார் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 26,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |