Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கடவுளும் நானும்! - மரணம் ஏன் பயம் காட்டப்பட்டது?

Posted: 25 Sep 2017 03:07 PM PDT

உரையாடல் பகுதி-06 நான்: "வணக்கம் கடவுளே!" கடவுள்: "ஆமா... உன்னால் வணக்கம் சொல்லாமல் பேச முடியாதோ?" நான்: "பழகிப்போயிடுச்சு கடவுளே.." கடவுள்: "மனிதர்களுக்குள் அவ்வாறு சொல்லிக் கொள்வது உங்கள் பண்பைக் காட்டுகிறது. ஆனால், அதே பண்பை என்னிடமும் கடைபிடிப்பது நியாயமா மானிடா? உங்கள் பாணியில் சொல்லப் போனால், எனக்கென்று ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் அல்லவா? மனிதர்களையும் வணங்குகிறீர்கள்... என்னையும் வணங்குகிறீர்கள்... இது எனக்குப் புரியவில்லை!" நான்: "உங்களுக்கு இது மட்டும்தான் புரியவில்லை. ...

மாடு ஷூகர் பேஷண்டும்மா...!!

Posted: 25 Sep 2017 08:59 AM PDT

புன்னகை பக்கம் - தொடர் பதிவு

Posted: 25 Sep 2017 08:46 AM PDT

பல்சுவை - தொடர் பதிவு

Posted: 25 Sep 2017 08:34 AM PDT

நகைச்சுவை - படித்ததில் பிடித்தவை (தொடர் பதிவு)

Posted: 25 Sep 2017 08:31 AM PDT

வலிமையானவனாக மாறி விடுவாய்.

Posted: 25 Sep 2017 08:21 AM PDT

உன்னை வலிமையானவன் என நீ நினைத்தால், உண்மையில் வலிமையானவனாக மாறி விடுவாய். *மகத்தான செயல்களைச் செய்யவே கடவுள் உன்னை ப டைத்திருக்கிறார். *எந்தச் செயலில் ஈடுபட்டாலும் உடல், உள்ளம் இரண்டையும் அதில் அர்ப்பணித்து விடு. *மனதை சரியான வழியில் செலுத்தினால், உன்னைக் காப்பதோடு விடுதலைக்கும் வழிவகுக்கும். *நன்மையின் பக்கம் மனதை திருப்பினால், தீய எண்ணங்கள் உனக்குள் நுழைய முடியாது. - ------------------------------------- - விவேகானந்தர்

என்னை விட்டுவிடாதே பெண்ணே! (கென்யப் பாடல் )

Posted: 25 Sep 2017 08:20 AM PDT

என்னை விட்டுவிடாதே பெண்ணே! (கென்யப் பாடல் ) நான் காதலிக்க உன்னைத்தான் தேர்ந்தெடுத்துள்ளேன் ! பெண்ணே! வேறொரு பெண் எனக்குத் தேவை இல்லை! என்னை விட்டுவிடாதே! எனக்குப் பிழை செய்யாதே! பெண்ணே!- வேறொரு ஆணை நினையாதே! என் இதயம் மென்மையானது! நீதான் என்னைக் கட்டுப்படுத்துகிறாய் ! நான் கிறுக்கனைப் போல நடக்கிறேன் ! உன்னைக் காதலிப்பதை என்னால்- நிறுத்தமுடியாது ! உன் முகம் கொள்ளை அழகு! ஆஹா! அவ்வளவு அழகு! அழகானவள் நீ அழகானவள்! உனது சிரிப்பு – அது பூப்போன்றது!ஆஹா! நான் உன்னைப் பாதுகாக்க ...

சிங்கப்பூர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற தமிழர் உயிரிழப்பு

Posted: 25 Sep 2017 06:57 AM PDT

--- ஆசியன் பைட்டிங் சாம்பியன் ஷிப்   குத்துச்சண்டை போட்டி  நேற்று சிங்கபூரில்  நடைபெற்றுள்ளது. இப்போட்டியில் பிரபலமான வீரரான ஸ்டீவன் லிம் என்பவர்  பங்கேற்க இவரை எதிர்த்து தமிழரான பிரதீப் சுப்ரமணியன்  பங்கேற்றுள்ளார்.  போட்டி தொடங்கியதும் ஒருவரை ஒருவர்  தாக்கி கொண்டனர். அப்போது, பலத்த தாக்குதலுக்கு உள்ளான பிரதீப் மேடையிலேயே சரிந்து விழுந்துள்ளார்.  பிரதீப்பை மருத்துவமனையில் அனுமதித்தபோது மாரடைப்பு  மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதுக் குறித்து விளையாட்டு ...

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..

Posted: 25 Sep 2017 06:56 AM PDT

திரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர் :தேவி ஸ்ரீப்ரசாத் - -------------------------- கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்கள் மூடியே  வாழ்த்து பாடு - கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு  கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு இன்னும் வாழனும் நூறு ஆண்டு எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் - அழகே பூமியின் வாழ்க்கையை  அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்... கடவுள் தந்த அழகிய வாழ்வு  உலகம் முழுதும் அவனது வீடு  கண்கள் மூடியே ...

மழைத்துளி

Posted: 25 Sep 2017 06:55 AM PDT


மழைத்துளி

நான் அழையா
விருந்தாளி
மழைத்துளி
அதனை என் வீட்டுப் பாத்திரத்தில்
தூங்க வைப்பேன்
அது பாடும் தாலாட்டில்
உறங்காமல் நான் விழித்திருப்பேன்.

சுருதிகா - ஒரு பக்க கதை

Posted: 25 Sep 2017 06:53 AM PDT

கெடுத்தாளே! என்னைக் கெடுத்தாளே! (இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடல்)

Posted: 25 Sep 2017 06:53 AM PDT

கெடுத்தாளே! என்னைக் கெடுத்தாளே! (இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடல்) மாலுமிகளே ! காதை இப்படிக்கொடுங்கள்! நான் பாடுவதைக் கொஞ்சம் கேளுங்கள்! சீக்கிரம் என் பாட்டை முடித்துக்கொள்வேன் ! நான் கடலிலிருந்து ஊருக்குள் சென்றேன்! அப்போது இளம் பெண் ஒருத்தியைச் சந்தித்தேன் ! ஓ! நண்பர்களே! அவள்- என்னைப் பேரக் தெருவுக்கு அழைத்தாள்! அங்கு நடனமாடலாம் என்றாள்! எனக்கு நடனம் வராது என்றேன்! நான் விண்ட்சோர் நகருக்குப் போகவேண்டும் என்றேன் ! விண்ட்சோரில் நண்பர்களைப் பார்க்கணும் என்றேன் ! இரண்டு ஆண்டுகள் ...

டிச. 31ம் தேதிக்குள் தமிழகத்தில் மீண்டும் சுனாமி? - ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை

Posted: 25 Sep 2017 04:14 AM PDT

டிச. 31ம் தேதிக்குள் தமிழகத்தில் மீண்டும் சுனாமி? - ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை திங்கள், 25 செப்டம்பர் 2017 டிச. 31ம் தேதிக்குள் தமிழகத்தில் மீண்டும் சுனாமி? - ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை வருகிற டிச. 31ம் தேதிக்குள் இந்திய பெருங்கடலில் நில நடுக்கும் ஏற்பட்டு, சுனாமி தாக்கும் என ஒரு தனியார் ஆராய்ச்சி நிறுவனம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது. 2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட போது தமிழக கடலோர பகுதிகள் பெரும் சேதமடைந்தன. பல ஆயிரம் உயிர்கள் கடல் நீருக்கு பலியாகின. இந்நிலையில், கேரளாவில் ...

சிறிது இடைவெளி

Posted: 25 Sep 2017 03:58 AM PDT

சிறிது இடைவெளி

இன்னும் 10 /15 நாட்களுக்கு ,

வந்தாலும் வருவேன்
வராமலும் இருப்பேன்
வந்தாலும்
பார்த்தாலும் பார்ப்பேன்
மறுமொழி இட்டாலும் இடுவேன்
இடாமலும்  இருப்பேன்
மீண்டும் சந்திப்போம்
சிறிது இடைவெளிக்குப் பிறகு.

ரமணியன்

ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக வழக்கு

Posted: 25 Sep 2017 03:04 AM PDT

சென்னை :  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 பேர் மீது  நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக கொறடா சக்கரபாணி  சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் ஓபிஎஸ் உள்ளிட்ட  12 பேரை பதவிநீக்கம் செய்ய வேண்டும். நம்பிக்கை  ஓட்டெடுப்பின் போது முதல்வர் பழனிசாமிக்க எதிராக  ஓட்டளித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 12 பேரை தகுதி நீக்கம்  செய்ய வேண்டும்.  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  திமுக தாக்கல்  செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இவ்வழக்கு ...

எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் வீட்டில் ரூ.650 கோடி கணக்கில் வராத பணம்

Posted: 25 Sep 2017 03:01 AM PDT

பெங்களூரு :  கர்நாடக முன்னாள் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின்  மருமகனும், தொழிலதிபருமான சித்தார்த்தின் வீடு மற்றும்  அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வாரம்  அதிரடி சோதனை நடத்தினர்.  இதன் தொடர்ச்சியாக நேற்றும் (செப்.,24) சோதனை நடைபெற்றது. மொத்தம் 4 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில்  வராத ரூ.650 கோடிக்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சித்தார்த்திற்கு சொந்தமான  ஐடி நிறுவனம், சுற்றுலா நிறுவனம் உள்ளிட்ட இடங்களில்  நடத்தப்பட்ட ...

மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை

Posted: 24 Sep 2017 11:27 PM PDT

புதுடெல்லி, மொபைல் போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றினால்  3 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும் என்று  மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.  ஒவ்வொரு மொபைல் போனுக்கும் 15 இலக்கங்கள்  கொண்ட தனிப்பட்ட ஐஎம்இஐ(IMEI)  அடையாள எண்  இருக்கும்.   இது பேட்டரியை பொருத்தும் இடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.  இந்த அடையாள எண், சிம் கார்டு ஸ்லாட் உடன் தொடர்புடையது.  ஒரே மொபைல் போனில் இரண்டு சிம் கார்டுகளை  பயன்படுத்தினால் அந்த மொபைல் போன் இரண்டு  ஐஎம்இஐ எண்களைக் கொண்டிருக்கும்.  இந்த ...

சிஏஜி தலைவராக ராஜிவ் மெகரிஷி நியமனம்: ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

Posted: 24 Sep 2017 11:15 PM PDT

புதுடெல்லி, இந்தியாவின் மிக முக்கியமான தன்னாட்சி அந்தஸ்து  பெற்ற மத்திய கணக்கு மற்றும் தணிக்கை (சி.ஏ.ஜி)  அமைப்பானது அரசால் கொண்டுவரப்படும் அனைத்து  திட்டங்களுக்குமான வரவு மற்றும் செலவுகளை  சரிபார்க்கிறது.  இந்த கணக்கு அறிக்கையை பாராளுமன்றம் மற்றும்  அந்தந்த மாநில சட்டசபைகளில் தாக்கல் செய்கிறது. இந்த அமைப்பின்  தலைவராக உள்ள சஷிகாந்த  சர்மாவின் பதவிக்காலம்  23-ம் தேதியுடன் நிறைவடைந்தது.  இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சக செயலாளராக  இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற ராஜீவ் மெகரிஷி  சி.ஏ.ஜி.யின் ...

மயிலாடுதுறை மகா புஷ்கரம்

Posted: 24 Sep 2017 07:59 PM PDT

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா ? என்று அந்தக்கால சோழநாட்டு" பெருசுகள் " சொல்லும் போதெல்லாம் எதை நினைத்து இப்படிப் பெருமைப் பட்டுக்கொள்கிறார்கள் என்று நினைப்பதுண்டு . இப்போதுதான் புரிந்தது அவர்களின் இத்தனைப் பெருமையெல்லாம் இன்றுடன்(24/9/17)முடிவடையும் மஹா புஷ்கரம் குறித்தே இருக்கலாமோ என்று . 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாயூரத்தில் நடைபெறும் மகா புஷ்கரம் இந்த ஆண்டும் நடைபெற்றது . எங்கெல்லாம் கோலாகலமும் , குதூகலமும் ,கொண்டாட்டமும் நிகழ்கிறதோ அங்கேயெல்லாம் தவறாமல் செல்வது என் வழக்கம் .அப்போதுதானே அத்தகைய ...

திருநங்கைகள்

Posted: 24 Sep 2017 07:35 PM PDT


திருநங்கைகள்

கடவுள் எழுதிய
பிழையான
கவிதைகள்
திருநங்கைகள்

அலசல்: எது பெண்களுக்கான படம்?

Posted: 24 Sep 2017 07:14 PM PDT

----- அண்மையில் வெளியாகியுள்ள 'மகளிர் மட்டும்' திரைப்படம், குடும்ப வாழ்க்கையின் அழுத்தத்தில் சிக்கிய நடுத்தர வயதுப் பெண்கள் தங்கள் இளமைக் கால நட்பைப் புதுப்பித்துக்கொள்ளும் கதையை மையமாகக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் இந்த அம்சம் ஓர் இடத்தைப் பிடிப்பதற்கே இத்தனை காலம் ஆகியிருக்கிறது. அதேநேரம், கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களை மையமாகக் கொண்ட படங்களும் பெண்களின் பிரச்சினைகளைப் பேசும் படங்களும் தமிழ் சினிமாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக இளம் இயக்குநர்கள் ...

'சங்கமித்ரா' அப்டேட்: ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி ஒப்பந்தம்

Posted: 24 Sep 2017 06:50 PM PDT

--- 'சங்கமித்ரா' படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புடன் தயாரிப்பில் இருக்கும் படம் 'சங்கமித்ரா'. கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, இப்படத்திலிருந்து விலகினார் ஸ்ருதிஹாசன். இதனால், 'சங்கமித்ரா' படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. இறுதியாக 'எம்.எஸ்.தோனி' படத்தில் நடித்த திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டு ...

’இந்தியப் பெருங்கடலை உலுக்கப் போகும் நிலநடுக்கம்?’ - கேரள நிறுவனம் பிரதமருக்கு கடிதம்

Posted: 24 Sep 2017 06:40 PM PDT

ஆசிய நாடுகளின் கடல் எல்லைகளையே மாற்றும் அளவுக்கு மிகப்பெரிய நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலில் ஏற்படப் போவதாக கேரளாவைச் சேர்ந்த பாபு கலயில் என்பவர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் - அந்த கடிதத்தில், ' இந்தியப் பெருங்கடலில் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பெரும் நிலநடுக்கம் ஒன்று ஏற்படப் போகிறது. வலிமையான அந்த நிலநடுக்கத்தால் ஆசியக் கண்டத்தின் கடற்கரைகள் அனைத்தும் பெரிய அளவில் பாதிக்கப்படும். இதனால் கடல் எல்லைகளே மாறும். இந்த நிலநடுக்கத்தால் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ...

ஆஸ்திரேலியாவில் விநாயகர் இறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரம் இந்துக்கள் கண்டன பேரணி

Posted: 24 Sep 2017 06:02 PM PDT

சிட்னி, இந்து கடவுளான விநாயகர் உள்பட பல மத கடவுள்கள் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரம் ஆஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டது. இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தன. இந்த விளம்பரத்தை தடை செய்ய வலியுறுத்தி ஆஸ்திரேலியாவில் உள்ள 'ஏ.எஸ்.பி.' நிறுவனத்தில் ஏராளமான புகார்கள் குவிந்தன. அதன் மீது விசாரணை நடத்திய இந்த நிறுவனம் விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரத்தை தடை செய்ய முடியாது என மறுத்து விட்டது. இந்தநிலையில் ...

ஆண்கள் ஸ்டேடியத்தில் பெண்களுக்கு அனுமதி

Posted: 24 Sep 2017 05:52 PM PDT

ரியாத்: வளைகுடா நாடான, சவுதி அரேபியாவில், விளையாட்டு அரங்கில், பெண்கள் முதல்முறையாக அனுமதிக்கப்பட்டனர். பழமைவாத சித்தாந்ததை பின்பற்றும் சவுதி அரேபியாவில், ஆண்கள் கூடும் சில இடங்களில் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆண்களுக்கான விளையாட்டு அரங்கில், முதல்முறையாக பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். மன்னாராட்சி அமைந்த நாளை நினைவு படுத்தும் வகையில், தலைநகர், ரியாத்தில் உள்ள, மன்னர் பஹத் சர்வதேச விளையாட்டு அரங்கில், நேற்றுமுன்தினம் விழா நடந்தது. இதை காண்பதற்கு, பெண்கள் ...

குன்னூரில் துவங்கியது துரியன் பழம் சீசன்

Posted: 24 Sep 2017 05:50 PM PDT

குன்னூரில் துவங்கியது துரியன் பழம் சீசன் குன்னுார்: குன்னுார் பர்லியாரில் துரியன் பழ சீசன், இந்தாண்டு காலதாமதமாக துவங்கியுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுார் பர்லியார் அரசு தோட்டக் கலை பண்ணையில், 33 துரியன் பழமரங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் பிப்., மற்றும் மார்ச் மாதங்களில், முதல் சீசனும், ஆகஸ்ட், செப்., மாதங்களில், இரண்டாவது சீசனும் துவங்கும். தற்போது, 200க்கும் மேற்பட்ட காய்கள், மரங்களில் உள்ளன. ஓரிரு வாரங்களில் பழுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இங்குள்ள தனியார் தோட்டங்களில், தற்போது, ...

திருச்சி: மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் தீ விபத்து

Posted: 24 Sep 2017 05:49 PM PDT

திருச்சி:
மயிலாடுதுறையில் இருந்து மைசூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின்
இன்ஜினில் தீ பிடித்தது. திருவெறும்பூர் அருகே வரும் போது ரயில்
இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
ஈடுபட்டனர்.

மாற்று இன்ஜின் மூலம் ரயிலை இயக்க ரயில்வே அதிகாரிகள்
நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
-
------------------------------
தினமலர்

புதுமை!

Posted: 24 Sep 2017 04:34 PM PDT

புதுமை! . மைக்ரோ ஏ.டி.எம்.,முடன் தபால்காரரைகளமிறக்க திட்டம் :வீட்டுக்கு வீடு வங்கி சேவையை எளிதாக்குகிறது தபால் துறை :வரும், 2018, மார்ச் முதல், பல்வேறு நிதி பரிவர்த்தனைகளை, தபால்காரர் எடுத்து வரும், நவீன சாதனம் மூலம் நிறைவேற்றும் வகையில், புதிய திட்டத்தை அமல்படுத்த, தபால் துறை முடிவு செய்துள்ளது. இந்திய தபால் துறை, 'பேமென்ட் பேங்க்' எனப்படும், வங்கி சேவையை நடத்தி வருகிறது. ரிசர்வ் வங்கி அனுமதியுடன் நடத்தப்படும், இந்த சேவையில், வாடிக்கையாளர்கள், அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் வரை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™