Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் பிரதமர் வேகம்!

Posted: 20 Sep 2017 08:08 AM PDT

மத்திய அரசால் அறிமுகம் செய்யப்படும் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை, பிரதமர், நரேந்திர மோடிநேரடியாக கண்காணித்து, விரைவுபடுத்தி வருகிறார். வரும், 2022க்குள், புதிய இந்தியாவை உருவாக்கும்நோக்கில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை துரிதப்படுத்த, ஒவ்வொரு மாதத்தின் கடைசி வாரபுதன் கிழமையும், சிறப்பு ஆய்வுகளையும் நடத்தி வருகிறார்.

கடந்த, 2014ல், பா.ஜ., தலைமையில், தே.ஜ., கூட்டணி அரசு அமைந்தது முதல், டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, துாய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்மார்ட் நகரங்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங் களை, பிரதமர், மோடிஅறிமுகப்படுத்தி ...

காவிரி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted: 20 Sep 2017 10:19 AM PDT

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

காவிரி நதி நீரைப் பங்கிடுவது தொடர்பான விவகாரத்தில், காவிரி நடுவர் மன்றம், 2007ல், தன் இறுதி தீர்ப்பை அளித்தது. இதை எதிர்த்து, தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தன. இந்த வழக்குகளில் நீண்ட நாட்களாக வாதங்கள் நடந்த நிலையில், தினசரிவிசாரித்து, விரைந்து தீர்ப்பு அளிப்பதாக, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள்,அமிதவ ராய், டி.ஒய். சந்திரசூட் அமர்வு ...

ரூ.389 கோடி கால்வாயில் உடைப்பு; திறப்பு விழாவை ரத்து செய்தார் நிதிஷ்

Posted: 20 Sep 2017 10:24 AM PDT

பாட்னா: பீஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாசன வசதிக்காக, 389 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கால்வாயின் ஒரு பகுதி சரிந்து விழுந்து, ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.இதையடுத்து, நேற்று நடப்பதாக இருந்த திறப்பு விழாவை, பீஹார்முதல்வர், நிதிஷ்குமார் ரத்து செய்தார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துஉள்ளது.இங்குள்ள பகல்பூர் மாவட்டத்தில், கங்கைநதியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை திருப்பி விடும் கால்வாய் திட்டம்செயல்படுத்தப்பட்டது.பீஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநில விவசாயத்துக்கு பாசன ...

அடுத்த மாதம் 25ம் தேதி, 'ஸ்பெக்ட்ரம்' வழக்கில் தீர்ப்பு

Posted: 20 Sep 2017 10:28 AM PDT

தேசிய அரசியலில், பெரும் புயலை கிளப்பிய, '2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், அடுத்த மாதம், 25ல், தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

மத்தியில், 2004 -- -09ல் காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சி நடந்தபோது, மன்மோகன் சிங்,பிரதமராக இருந்தார். அப்போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், பெரும் முறைகேடு நிகழ்ந்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை குழு, தன் அறிக்கையில், இந்த முறைகேடு காரணமாக, அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டியது.
குற்றச்சாட்டு:
இது, நிர்வாக ரீதியிலான முறைகேடு ...

'பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும்'

Posted: 20 Sep 2017 10:34 AM PDT

புதுடில்லி: பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில், கூடுதல் நடவடிக்கை கள் மேற்கொள்வது குறித்து, மத்திய அரசு தீவிர பரிசீலனையில் ஈடுபட்டுள்ளதாக, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

ஜூனுடன் முடிந்த காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில், 5.7 சதவீதமாக குறைந்துள்ளது. இதையடுத்து, நிதித்துறை இணை அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன், மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்நிலையில், நிருபர்களிடம் நேற்று, அருண் ஜெட்லி கூறியதாவது: சில்லரை விலை அடிப் படையிலான, ...

'விசேஷம் ஒன்றுமில்லை' ஸ்டாலின் கைவிரிப்பு

Posted: 20 Sep 2017 10:37 AM PDT

தினகரன் அணியை சேர்ந்த, 18 எம்.எல்.ஏ.,க் களை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவுக்கு, தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில், சென்னை, அறிவாலயத்தில், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கேள்வி:
முன்னாள் அமைச்சர்கள், துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, சாத்துார் ராமச்சந்திரன், மைதீன்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனை முடிந்து வெளியே வந்த ஸ்டாலினிடம், நீதிமன்ற உத்தரவு குறித்து, பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க முயன்றனர். ஆனால், ஸ்டாலின், 'விசேஷம்
...

'டிசம்பருக்குள் இடைத்தேர்தல்'

Posted: 20 Sep 2017 10:40 AM PDT

தமிழகத்தில், ஒரே நாளில் இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற, ஜெ., 2016 டிச., 5ல், மறைந்தார். அதை தொடர்ந்து காலியான, அந்த தொகுதிக்கு, ஏப்., 12ல், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு அதிகளவில், பணப் பட்டுவாடா செய்யப்பட்டதால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது.தேர்தல் நடத்த உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ரமேஷ் என்பவர், பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம், 'டிச., 31க்குள் இடை தேர்தல் தேதியை, தேர்தல் கமிஷன் அறிவிக்கும்' என,நம்புவதாகக் கூறி, வழக்கை ...

பகல் கனவு பலிக்காது: பழனிசாமி திட்டவட்டம்

Posted: 20 Sep 2017 11:12 AM PDT

நாகப்பட்டினம்:''மக்கள் மன்றத்திற்கு வராமலே, சிலர் மனக்கோட்டை கட்டுகின்றனர்; அது, மணல் கோட்டையாக மாறும்,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.

நாகையில் நேற்று நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், அவர் பேசியதாவது: நல்ல திட்டங்களை அ.தி.மு.க., அரசு செயல் படுத்தி வருகிறது. சிலர், மக்கள் மன்றத்திற்கு வராமலே, மனக்கோட்டை கட்டுகின்றனர். அது,மணல் கோட்டையாக மாறும்.கண்களை மூடி, பகல் கனவு காண்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பகல் கனவு ஆபத்தை தரும். தானும் கெட்டு, தன்னை நம்பியவர்களையும் சிலர் கெடுத்துக்கொண்டிருக்கின்றனர். யாரை குறிப்பிடுகிறேன் என, ...

'பாரிஸ் ஒப்பந்தத்தை விட அதிகமாக செயல்படுவோம்': ஐ.நா.,வில் சுஷ்மா

Posted: 20 Sep 2017 12:44 PM PDT

நியூயார்க்: ''சுற்றுச்சூழலை பாதுகாக்க, பாரிஸ் ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்டும் செயல்படுவோம்,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ், ஐ.நா., சபையில் தெரிவித்தார்.
ஐ.நா., சபை கூட்டம், அமெரிக்காவின், நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற, வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:
பருவநிலை மாறுபாடு பிரச்னையை சமாளிக்க, பாரிஸ் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. சுற்றுச்சூழலை பாதுகாக்க, அந்த ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்டும் செயல்படுவோம். இதில், பா.ஜ., அரசு உறுதியாக உள்ளது. இந்த பூமியை ...

எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம்...மறுப்பு

Posted: 20 Sep 2017 01:12 PM PDT

சென்னை:சசிகலா ஆதரவு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதியிழப்பு செய்து, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம், நேற்று மறுத்து விட்டது. இவ்வழக்கில், சபாநாயகர் தனபால், முதல்வர் பழனிசாமி,அரசு கொறடா ஆகியோர், பதிலளிக்க உத்தரவிட்டு, இறுதி விசாரணையை, அக்., 4க்கு, உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை, சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தவும், 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கானஅறிவிப்பை வெளியிடவும், தடை விதித்துள்ளது.

முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை, 'வாபஸ்' பெறுவதாக, கவர்னரை ...

'ஸ்டிரைக்' ஆசிரியருக்கு சம்பளம் 'கட்'

Posted: 20 Sep 2017 01:51 PM PDT

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது, அரசு பணியாளர் நடத்தை விதிகளில் நடவடிக்கை எடுக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். செப்., 7 - 15 வரை, காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்தனர். அதனால், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முடங்கின.
இந்நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, பணிக்கு வராத நாட்களுக் கான சம்பள பிடித்தம் செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.மேலும், பணிக்கு ...

விவசாயிகளின் வருவாய் உயர்த்த திட்டம் : தமிழகத்திற்கு முக்கியத்துவம்

Posted: 20 Sep 2017 02:37 PM PDT

விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக அதிகரிக்கும் திட்டத்தில், தமிழகத்தையும், மத்திய அரசு சேர்த்துள்ளது. வறட்சி, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை காரணங்களால், நாடு முழுவதும் வேளாண் தொழில் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர்.
கடன் பிரச்னை, மகசூல் குறைவு உள்ளிட்ட காரணங்களால், விவசாயிகள் தற்கொலை செய்வது, அதிர்ச்சியில் இறக்கும் சம்பவங்கள், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.
இதற்கு தீர்வு காணும் வகையில், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக அதிகரிக்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதன்படி, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™