ஈகரை தமிழ் களஞ்சியம் |
- போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
- செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
- மாறுகை – கவிதை
- ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
- நான் விட்டுவிடமாட்டேன் !
- கண்ணம்மா – கவிதை
- காலம் கற்றுத் தந்த பாடம்…!
- வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
- அது ஒரு காதல் அலை…! – கவிதை
- மீன்கள்- கவிதை
- தாமதம் -- கவிதை
- நீ…நீயாக இரு….!
- தொடத் தொடத் தொல்காப்பியம்(460)
- இது வாட்ஸ் அப் கலக்கல்
- வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
- ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
- ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
- மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
- கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
- 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
- இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
- அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
- 2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )
- கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
- மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
- மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
- 2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
- மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
- நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
| போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை Posted: 20 Sep 2017 03:06 PM PDT புதுடெல்லி, ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து பெயரளவில் இயங்கிக்கொண்டு, எந்த வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடாமல், பெரும் நிதி பரிமாற்றங்களில் ஈடுபட்ட போலி நிறுவனங்களை அடையாளம் காணும் பணியில் மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை ஈடுபட்டது. இதில் நாடு முழுவதும் 2 லட்சம் போலி கம்பெனிகள் இருப்பதை கண்டறிந்து, அவற்றின் வங்கிக்கணக்கு களை மத்திய அரசு முடக்கி உள்ளது. அது ... |
| செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள் Posted: 20 Sep 2017 03:03 PM PDT செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள் சண்டிகர் : பாலியல் வழக்கில் சிக்கி, 30 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சாமியார் ராம் ரஹீம் சிங், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிர்சாவில் உள்ள தேரா ஷச்சா தலைமை ஆசிரமத்திற்குள் என்ன தான் நடக்கிறது என்பது பற்றி அரியானா போலீஸ் குழு விசாரணை நடத்தி வருகிறது. ஆசிரம தலைமையகத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் அடுத்தகட்டமாக அங்கு சோதனையும் நடத்தப்பட்டது. இதில் எரிக்கப்பட்ட நிலையில், 600 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ... |
| Posted: 20 Sep 2017 02:48 PM PDT - மாறு கை! மாறு கால் வாங்குவேன் என பழித்தீர்க்கும் எண்ணமுடையோர்கள் அன்பாய் மாறுகையில் அன்பாய் மாறிடும் உலகம்! – ——————– -கோ.பழநிவேல் சிறுதுளிகள்…தொகுப்பிலிருந்து |
| ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்) Posted: 20 Sep 2017 02:44 PM PDT ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்) உனக்கென்று ஒரு வழியை அமைத்தால், அந்த வழி உன் இதயத்தில் நிற்கிறது! உன்னால் முடிந்தால் நீ அதைத் தாங்கி நட! தாங்கி நட ; அதை நம்பி நட!- முழுதாய் நம்பி நட! உனக்குள் ஓடும் ஆறு , அந்த ஆறு – அது உன்னைப் பற்றியபடி ஓடும் ஆறு !; மெதுவாய் , மிக மெதுவாய் ஓடும் ஆறு ! எனக்குள் ஓர் ஆறு ஓடுகிறது !- அது உன்னைப் பிடித்தபடி ஓடுகிறது ! உனக்குள் ஆறு ஓடுகிறது;உன்னிடத்தில் ஓடுகிறது ! நான் உன்னுள் ஓடும் ஆற்றுக்கு வருவேனா?மாட்டேனா? என் இதயத்தை உன்னிடம் ... |
| Posted: 20 Sep 2017 09:04 AM PDT நான் விட்டுவிடமாட்டேன் ! என் தூக்கத்தைத் தொலைக்கும் அரக்கர்களோடு நான் பொருதியுள்ளேன்! நான் கடலுக்குச் சென்றேன்; அவள் என்னைக் கைவிட்டுவிட்டாள்! ஆனால் நான் எப்போதும் விடமாட்டேன்! விட்டுவிடமாட்டேன்! முடியாது! விடமாட்டேன் நான் விடமாட்டேன்! நீ என்னை வீழ்த்த நான் விடமாட்டேன்! நான் விழும்போதெல்லாம் மீண்டும் எழவே செய்வேன் ! ஆம்! நான் விடமாட்டேன் ! விடவே மாட்டேன் ! நீ என்னை வீழ்த்திவிட நான் விடவே மாட்டேன் ! நான் என் வழியை அடைவேன் ! என் இல்லத்தை அடைவேன்! நான் என் வழியை அடைவேன் ! ... |
| Posted: 20 Sep 2017 08:03 AM PDT - கவிஞர் தமிழ் ஒளி தமிழ் ஒளி கவிதைகள் – தொகுப்பிலிருந்து |
| Posted: 20 Sep 2017 07:37 AM PDT இறந்த பின்பும் ஒரே குழியில் புதைபட வேண்டும் என்றெல்லாம் பேசிக் கொண்டவர்கள் நாம்…. காலம் கற்றுத் தந்திருக்கிறது பார்த்தாயா? எது குறித்தும் பேசாமல் பிரிவதற்கு… – ————————- இளம்பிறை (முக நூலிலிருந்து) |
| வெட்டத்தான் தெரியும் கத்திக்கு…. Posted: 20 Sep 2017 07:35 AM PDT இன்று எனது பிறந்த நாள் செய்தித்தாள் போடும் சிறுவனைப் போல புதிய வயதொன்றை என் வாசலில் வீசிவிட்டும் போனது காலம் – கார்த்திக் திலகன் —————————— – எவ்வளவு அன்போடு அணைத்தாலும் கத்திக்குவெட்டத்தான் தெரியும். அதுபோல்தான் சில உறவுகளும் எவ்வளவு அன்பாக நாம் இருந்தாலும் காயப்படுத்தி விடுவார்கள் – அய்யப்பன் ஜானகிராமன் ——————————– – அவனைப் பிடித்து இவனைப் பிடித்து அதைப் புரட்டி இதைப் புரட்டி ஒரு வழியாய்… இந்த மாத தவணைகளை முடிப்பதற்குள் வந்துவிடுகிறது, அடுத்த மாதம்! – இரா.எட்வின் – ——————————– (முக ... |
| Posted: 20 Sep 2017 07:26 AM PDT அவன் ஒரு நந்தவனத்தையே அலசி ஒ்ரே ஒரு மலரைப் பறித்தான் அவனின் விரல்களால் பரிசிக்கப்படுவதற்காகவே….! – அவளும் கூட பூத்தாள்….! – அது ஒரு நிச்சயிக்கப்படாத நிர்ப்பந்தம் உச்சரிக்கப்படாத வேதம் உணர்வுகள் உருகி உயிரில் வார்க்கப்படாத வார்த்தைகள்…! – ஆம் அது ஒரு காதல் அலை…! – ———————————— -உதயன் மீட்கப்படாத மிச்சங்கள் – கவிதை தொகுப்பிலிருந்து |
| Posted: 20 Sep 2017 07:12 AM PDT ![]() |
| Posted: 20 Sep 2017 07:11 AM PDT தாமதம் உயர்வானது நம்மை அழிப்பதில் மதத்தை விடவும்! – ——————– -கோ.பழநிவேல் சிறுதுளிகள்…தொகுப்பிலிருந்து |
| Posted: 20 Sep 2017 07:10 AM PDT நீ . . .நீயாக இரு ! - தங்கம் விலை அதிகம்தான் . . . தகரம் மலிவு தான் . . . ஆனால் தகரத்தைக் கொண்டு செய்யவேண்டியதை தங்கம் கொண்டு செய்ய முடியாது . . . அதனால் தகரம் மட்டமில்லை . . . தங்கமும் உயர்ந்ததில்லை . . . எனவே நீ . . .நீயாக இரு ! - கங்கை நீர் புனிதம் தான் . . . அதனால் கிணற்று நீர் வீண் என்று அர்த்தமில்லை . . . தாகத்தில் தவிப்பவருக்கு கங்கையாயிருந்தால் என்ன ? கிணறாகயிருந்தால் என்ன ? நீ . . .நீயாக இரு ! - காகம் மயில் போல் அழகில்லை தான் . . . ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(460) Posted: 20 Sep 2017 06:38 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 20 Sep 2017 05:41 AM PDT நன்றி-தினமலர் - ![]() |
| வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…! Posted: 20 Sep 2017 02:28 AM PDT முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம். முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை ... |
| ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்… Posted: 20 Sep 2017 02:26 AM PDT ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்… – ஆதார் எண்ணுடன் சில ஆவணங்களை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த இணைப்பிற்கும் கால அவகாசத்தை நீடித்துள்ளது. – ஆதார் எண்ணுடன் இந்த ஆவணங்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இணைக்க பல வழிமுறைகளையும் அரசு செய்துள்ளது. ஆதாருடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்: # வங்கி கணக்குகள் # பான் கார்டு # வாக்காளர் அடையாள அட்டை # எல்பிஜி கேஸ் இணைப்பு # டிரைவிங் லைசென்ஸ் # மொபைல் எண் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க நெட் பேங்கிக் வசதி இருக்க ... |
| ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்! Posted: 20 Sep 2017 01:43 AM PDT ரிலையன்ஸ் ஜியோவின் இலவச மொபைலை விரைவில் பயன்படுத்த ஆவலோடு காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நிலையன்ஸ் ஜியோ ஆரம்பம் முதல் ஏராளமான சலுகைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஜியோபோன் என்ற இலவச மொபைல் வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்தது. அந்த இலவச மொபைலை பெற முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கு இருப்பு தொகையும் செலுத்த வேண்டும். 3 வருடங்கள் கழித்து இருப்பு தொகை திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜியோபோனை முன்பதிவு செய்து ... |
| மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி Posted: 20 Sep 2017 01:40 AM PDT பட்டதாரி மாற்றுதிரனாளிகள் தொழில் தொடங்குவதற்கான அரசின் உதவிகள் மற்றும் சலுகைகள் பற்றி விரிவாக அறியவேண்டும் எனில் எங்கே அணுக வேண்டும் |
| கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ். Posted: 20 Sep 2017 01:32 AM PDT - வற்றாத உற்சாகம்; பேச்சில் வேகம்; செயல்பாட்டில் விவேகம் கலந்த நிதானம் என்று கர்நாடக மாநிலத்தில் உழைத்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியான ஹரிசேகரனுக்கு அமெரிக்க கௌன்ஸலேட்டின் பாராட்டுக்குரிய சர்வதேச விருது கிடைத்திருப்பதில் பல சந்தோஷங்கள் காரணம், அவர் ஒரு தமிழர். - நான் கக்கனின் பேரன் என்பதே பெரும் பாக்கியம். என்னுடைய அப்பா பழனிமுத்து பெரம்பலூரில் முதல் எம்.எல்.ஏ., சுயேச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பஸ் உரிமையாளர். இருபத்தாறு வயசிலேயே எம்.எல்.ஏ., ஆனவர். இன்னமும் ... |
| 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு Posted: 20 Sep 2017 01:21 AM PDT சென்னை: முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்ததால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் செப்.,18 ம் தேதி உத்தரவிட்டார். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக சபாநாயகர் கூறி இருந்தார். சபாநாயகரின் இந்த உத்தரவிற்கு எதிராக 18 எம்.எல்.ஏ.,க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். காரசார வாதம் : இந்த வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி துரைசாமி முன்னிலையில் பகல் 12.10 மணியளவில் துவங்கியது. இதில் ... |
| இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது Posted: 20 Sep 2017 01:17 AM PDT -- பீகார் மாநிலம் பாகல்பூர் அருகே, பதேஸ்வரத்தான் கங்கை தடுப்பணைப் பணிகள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. அணை கட்டும் பணிகள் ரூ.389.1 கோடி செலவில் முடிக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டுக்குத் தயாராக இருந்தது. அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை கட்டும் பணி, கடந்த 1977-ம் ஆண்டு ரூ.13.88 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. அந்த அணையை, முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ... |
| அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண் Posted: 20 Sep 2017 01:14 AM PDT மும்பையின் விரார் பகுதியில் தெருவோரத்தில் பிரமிளா என்பவர் ஜூஸ் கடை வைத்து உள்ளார். ஆயுதபூஜை வருவதை முன்னிட்டு வசாய் - விரார் மாநகராட்சி அதிகாரி பிரபாகர் போயர் தலைமையில் இன்று காலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. பிரமிளாவின் கடையில் இருந்த ஐஸ்பெட்டி, பழங்கள் உள்ளிட்டவற்றை ஊழியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். பிரமிளா, 'தான் அபராதம் கட்டத் தயாராக இருப்பதாகவும் பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும்' அவர்களிடத்தில் கெஞ்சியுள்ளார். பிரமிளாவின் வேண்டுகோளை அதிகாரிகள் ஏற்காமல் ... |
| 2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் ) Posted: 19 Sep 2017 08:53 PM PDT "2 ஸ்டேட்ஸ்; தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ்'- என்ற 2009-இல் ஆங்கிலத்தில் வெளிவந்த நாவலின் தமிழ் வடிவம். இதன் கதை களம்-பஞ்சாபியான க்ரிஷ், தமிழ்ப் பெண் அனன்யா-இருவரும் ஐஐஎம் அகமதாபாதில் பயில்பவர்கள். இருவரும் நண்பர்கள். ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டு படிப்பதோடு, காதலையும் வளர்க்கின்றனர். திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகின்றனர். அனன்யாவுக்கு சென்னையில் வேலை கிடைக்கிறது. கிரிஷ் சிட்டி பேங்கில் வேலை கிடைத்தாலும் சொந்த ஊரான டில்லியை விடுத்து காதலிக்காக சென்னை வருகிறார். முன்னதாக, பட்டமளிப்பு விழா ... |
| கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது Posted: 19 Sep 2017 07:04 PM PDT - கொல்கத்தா, சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரைத் தொடர்ந்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறும் சினிமா படமாகிறது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த 34 வயதான ஜூலன் கோஸ்வாமி பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (164 ஆட்டத்தில் 195 விக்கெட்) வீழ்த்திய சாதனையாளர் ஆவார். சுசந்தா தாஸ் இயக்கும் இந்த படம் இந்தி மொழியில் தயாராகிறது. அவரது சொந்த ஊரான சக்தஹாவில் இருந்து உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய ... |
| மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு Posted: 19 Sep 2017 07:00 PM PDT மெக்சிகோ, மெக்சிகோ நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல அடுக்குமாடி கட்டிடங்கள் குலுங்கியது. இந்த நிலநடுகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. மெக்சிகோ நிலநடுக்கத்திற்கு அமெரிக்க அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார். ... |
| மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு Posted: 19 Sep 2017 05:59 PM PDT மங்களூரு: கர்நடாக மாநிலம் மங்களூருவில் இருந்து துபாய் புறப்பட்ட தனியார் விமானத்தில் செல்போன் வெடி குண்டு கண்டு பிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மங்களூரு விமான நிலையத்தில் பயணிகள் உடமைகள் பரிசோதனையின் போது இளைஞர் ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் வைத்திருந்த செல்போனை ஆய்வு செய்தபோது அதில் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இளைஞரை கைது செய்த பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அது போலி வெடிகுண்டுஎன உறுதி செய்யப்பட்டது. அதிகாரிகள் ... |
| 2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல் Posted: 19 Sep 2017 05:57 PM PDT கவுஹாத்தி: 'இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு, அரசு வேலை, சலுகை கிடையாது' என்ற புதிய சட்டத்திற்கு, அசாம் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அசாம் மாநிலத்தில், முதல்வர் சர்பானந்தா சோனவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 2001ல், மாநிலத்தில், 2.66 கோடியாகஇருந்த மக்கள் தொகை, 2011ல், 3.12 கோடியாக உயர்ந்தது. பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப் படுத்த, மாநில அரசு நடவடிக்கை எடுத்து , வருகிறது.இதன்படிஇரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்களுக்கு அரசு பணி, ... |
| மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு Posted: 19 Sep 2017 05:53 PM PDT புதுடில்லி: மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணத்தை டிராய் குறைத்து உள்ளது. இதன்படி மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணத்தை 14 காசுகளில் இருந்து 6 காசுகளாக குறைத்துள்ளது. இந்தகட்டண குறைப்பு வரும் அக்.,1-ம் தேதி முதlல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 2020 ஆண்டு முதல் அழைப்பு துண்டிப்பிற்கு கட்டணம் இல்லை எனவும் டிராய் தெரிவித்துள்ளது தினமலர் |
| நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Posted: 19 Sep 2017 05:51 PM PDT - புரட்டாசி, ஐப்பசி மாதங்களிலும், சித்திரை மாதத்திலும் நவராத்திரி கொண்டாடப்பட வேண்டும் என, இந்து சாஸ்திரம் கூறுகிறது. இவை முறையே, சரத் ருது, வசந்த ருது என்றழைக்கப்படுகின்றன. ஏன் இப்படி என்ற கேள்விக்கு, இந்த மாதங்கள், எமனின் கோரைப் பற்கள் என்றும், மனித குலம், கடுமையான நோய்களால் பீடிக்கப்படும் காலம் என்றும் பதில் வருகிறது. சண்டிகையை வழிபட்டால், நோய்களைத் தவிர்க்கலாம். சண்டிகை என்பவள் சாதாரணமானவள் அல்ல. 18 கைகளை உடையவள்; ஆயுதம் தரிப்பவள். மகா வீரியம் கொண்டவள். எப்பேற்பட்ட ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

