Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்

Posted: 19 Sep 2017 07:46 AM PDT

கவுஹாத்தி: 'இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு, அரசு வேலை, சலுகை கிடையாது' என்ற புதிய சட்டத்திற்கு, அசாம் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அசாம் மாநிலத்தில், முதல்வர் சர்பானந்தா சோனவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 2001ல், மாநிலத்தில், 2.66 கோடியாகஇருந்த மக்கள் தொகை, 2011ல், 3.12 கோடியாக உயர்ந்தது. பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப் படுத்த, மாநில அரசு நடவடிக்கை எடுத்து ,
வருகிறது.இதன்படிஇரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்களுக்கு அரசு பணி, சலுகைகளை பெறுவதில் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக, மாநில அரசு ...

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்... கேள்வி!

Posted: 19 Sep 2017 08:54 AM PDT

புதுடில்லி:'காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, அரசிதழில் வெளியிடப்பட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தாமதம் செய்வது ஏன்?' என, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம், நேற்று கேள்வி எழுப்பியது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக அரசுகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இறுதி விசாரணை நடத்தி வருகிறது.மாநிலங்கள் தரப்பு வாதம் ஏற்கனவே நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய ...

புதிய பிரமாண பத்திரங்களுடன் சட்ட அமைச்சர் டில்லி பயணம்

Posted: 19 Sep 2017 09:00 AM PDT

சசிகலா நீக்கம், ஒருங்கிணைப்பாளர்களுக்கு அதிகாரம் மாற்றம் உள்ளிட்ட, பொதுக்குழு தீர்மானங்களுக்கு, தேர்தல் கமிஷன் ஒப்புதல் பெறவும், கட்சியின் பெயர், கொடி, சின்னம் கோரி, புதிய பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யவும், தமிழக சட்ட அமைச்சர், சண்முகம், இன்று டில்லி செல்கிறார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரண்டாக உடைந்ததும், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
தீர்மானம் :
தேர்தல் கமிஷனில், தாங்கள் தான் உண்மையான, அ.தி.மு.க., என, பன்னீர் அணி சார்பில், லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதே போல, முதல்வர் பழனிசாமி ...

வட கொரியா - பாக்., அணு ஆயுத தொடர்பு : விசாரணை நடத்த சுஷ்மா வலியுறுத்தல்

Posted: 19 Sep 2017 09:46 AM PDT

நியூயார்க்: 'வட கொரியா - பாக்., இடையேயான, அணு ஆயுத தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தி உள்ளார்.

ஐ.நா., பொதுசபை கூட்டத்தில்பங்கேற்பதற்காக, வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான,சுஷ்மா சுவராஜ், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு வந்துள்ளார்.இங்கு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர், ரெக்ஸ் டில்லர்ஸன் மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர், டாரோ ஹோனோ ஆகியோரை சந்தித்து பேசினார்.அப்போது, கிழக்காசிய நாடுகளில் ஒன்றான, வட கொரியா அத்துமீறி ஏவுகணை சோதனை நடத்தி வருவது பற்றி அவர்கள் ...

எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கு விசாரணை...இன்று

Posted: 19 Sep 2017 09:56 AM PDT

சென்னை:கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், சசி ஆதரவு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், ௧௮ பேரை, தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள், இன்று நீதிபதி எம்.துரைசாமி முன், விசாரணைக்கு வருகின்றன.

இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்றம், என்ன தீர்ப்பு கூறுமோ என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, கவர்னரை சந்தித்து, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்,19 பேர், கடிதங்கள் அளித்தனர். இதையடுத்து, அரசு கொறடா அளித்த புகாரில், 19 ...

கோர்ட் தீர்ப்புக்கு பின் ராஜினாமா முடிவு! அடுத்தகட்டம் குறித்து ஸ்டாலின் அறிவிப்பு

Posted: 19 Sep 2017 10:37 AM PDT

சென்னை:''கூண்டோடு ராஜினாமா செய்யும் முடிவை, நீதிமன்றம் தீர்ப்புக்கு பின் தெரிவிப்போம். அதுவரை, 'சஸ்பென்ஸ்' நீடிக்கட்டும்,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.

தினகரன் அணியின், 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சூழ்நிலையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனைக் கூட்டம், சென்னை, அறிவாலயத்தில், ஸ்டாலின் தலைமையில், நேற்று நடந்தது.அக்கூட்டத்தில், அரசு விழாவை அரசியல் மேடையாக்கும் குதிரை பேர அரசுக்கும், தலைமைச் செயலர். டி.ஜி.பி., ஆகியோருக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கவர்னர், முதல்வர், சபாநாயகரின் ஜனநாயக விரோத நடவடிக்கை களுக்கு, ...

'சசி குடும்பத்தின் தில்லாலங்கடி வேலைகளை போட்டுடைப்போம்!' எகிறும் தினகரனுக்கு அமைச்சர்கள் எச்சரிக்கை

Posted: 19 Sep 2017 10:41 AM PDT

சென்னை:ஜெ., பெயரையும், பதவியையும் பயன் படுத்தி, சசிகலா குடும்பத்தினர் செய்த தில்லாலங்கடி வேலைகள் குறித்த பட்டியல் தயாராகி வருகிறது.

'கட்சியிலும், ஆட்சியிலும் குழப்பம் ஏற்படுத்தி வரும் தினகரன், பொய் செய்தி பரப்புவதை நிறுத்தா விட்டால், பழைய ரகசியங்களை எல்லாம் போட்டு உடைப்போம்' என, அமைச்சர்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.ஜெயலலிதா இருந்த போது, அவருக்கு நெருக்க மானவர்கள் என்ற பந்தாவுடன், சசிகலா குடும் பத்தினர் வலம் வந்தனர். கட்சியிலும், ஆட்சி யிலும், அதிகார வட்டமாக செயல்பட்டனர். அதன் காரணமாக, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தனர். ...

'நீட்' குறித்து விழிப்புணர்வு: கோர்ட் உத்தரவு

Posted: 19 Sep 2017 10:45 AM PDT

சென்னை:'நீட் தேர்வு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து, மாணவர்களுக்கு, ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மருத்துவ படிப்பில், இடம் கிடைக்காத மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், உளவியல் ஆலோசனை வழங்கும்படி, தமிழக அரசுக்கு, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில நாட்களில், மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அரசு முறையாக ஆலோசனை வழங்கி இருந்தால், இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம் எனக் கூறிய நீதிபதி, அரசு எடுத்த ...

சசியின் போலி நிறுவனங்கள் முடக்கம்

Posted: 19 Sep 2017 10:47 AM PDT

சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலாவின் நிறுவனங்கள் உட்பட, தமிழகத்தை சேர்ந்த, 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களின் பதிவை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

சட்டவிரோத பண பரிவர்த்தனை, வரி ஏய்ப்பு, கறுப்பு பண பதுக்கல்போன்ற நடவடிக்கை களில், 2.93 லட்சம் போலி நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதை, மத்திய கம்பெனிவிவகார அமைச்சகம்கண்டு பிடித்தது.அவற்றின் பதிவை ரத்து செய்த அமைச்சகம், வங்கி கணக்குகளை இயக்க, கட்டுப்பாடு விதித்துள்ளது. அத்துடன், 1.65 லட்சம் போலி நிறுவனங்களின் இயக்குனர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.நிறுவனங்கள் பதிவு நீக்கத்தில், 24 ஆயிரத்து, 48 ...

1.5 லட்சம், 'லேப் - டாப்' : மாணவர்களுக்கு தயார்

Posted: 19 Sep 2017 11:44 AM PDT

தமிழகத்தில், மாணவர்களுக்கு இலவசமாக வழங்க, 1.5 லட்சம், 'லேப் - டாப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.
தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்கப்படுகிறது. 2011 முதல் இதுவரை, 35 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கொள்முதல் சிக்கல் காரணமாக, 2016 - 17ல், வழங்கப்படாததால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, 'டெண்டர்' தொடர்பான சிக்கல்கள் தீர்ந்ததால், 'லேப் - டாப்' கொள்முதல் துவங்கி உள்ளது.
இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 2016 - 17ம் கல்வியாண்டில் தர ...

மெக்சிக்கோவில் சக்தி வாய்ந்த பூகம்பம்; 49 பேர் பலி

Posted: 19 Sep 2017 11:55 AM PDT

மெக்சிக்கோ: மெக்சிகோவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த பூகம்பத்தில் 49 பேர் பலியாயினர்.மெக்சிக்கோவில் இன்று சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த பூகம்பத்தில் கட்டடங்கள் பயங்கரமாக குழுங்கின. 27 கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. 49 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பூகம்பம் காரணாமாக கேஸ் லைன் கசிய வாய்ப்புள்ளதால், நெருப்பை உண்டாக்கும் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களை மீட்பு குழுவினர் எச்சரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து ...

அரசு பள்ளிகளுக்கு 'நீட்' பயிற்சி புத்தகம்

Posted: 19 Sep 2017 12:55 PM PDT

'நீட்' நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, மத்திய அரசின் நிதி உதவியில், 3,000 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, சிறப்பு பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
அரசு பள்ளிகளில், உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், மாணவர்களுக்கான வசதிகளை செய்து தரவும், மத்திய அரசு சார்பில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, ஆண்டுதோறும், பல ஆயிரம் கோடி ரூபாய் வரை, மாநில அரசுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில், அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், நுாலகங்கள் மேம்பாடு மற்றும் புத்தகங்கள் வாங்க, ஒவ்வொரு பள்ளிக்கும், ...

ஒசாமா பின்லேடன் மகன் அல் - குவைதா தலைவன்?

Posted: 19 Sep 2017 02:02 PM PDT

பாரிஸ்: அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவனாக, ஒசாமா பின்லேடனின் மகன், ஹம்சா, பொறுப்பேற்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவில், 2001 செப்., 11ல் நடந்த தாக்குதலை நடத்திய, அல் - குவைதா அமைப்பின் தலைவனாக இருந்த, ஒசாமா பின்லேடன், 2011ல், அமெரிக்கப் படைகளால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டான். ஒசாமாவின் மூன்றாவது மனைவி மூலம் பிறந்த ஹம்சா, 28, தந்தை வழியில் நவீன ஆயுதங்கள் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றில் பயிற்சி பெற்றவன்.
ஒசாமாவின், 20 குழந்தைகளில், 15வதாக பிறந்த ஹம்சா, அல் - குவைதா அமைப்பின் அடுத்தத் தலைவனாக பொறுப்பேற்க உள்ளதாக ...

தமிழக ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.5,000 கோடியை தாண்டியது

Posted: 19 Sep 2017 02:48 PM PDT

ஜி.எஸ்.டி., அமலான பின், தமிழகத்திற்கு வரி வருவாய் குறையவில்லை. ஜூலை மாத வருவாய், 5,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
தமிழகத்தில், 2016 - 17ம் நிதியாண்டில், வணிக வரித்துறை, 67 ஆயிரத்து, 576 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. தற்போது, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்துள்ளது. அதனால், தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என, கருதப்பட்டது.
எதிர்பார்ப்பு:
இதற்கிடையே, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, 'ஜூலை இறுதியில், ஜி.எஸ்.டி., வாயிலாக, மத்திய, மாநில அரசுகளுக்கு, 92 ஆயிரத்து, 263 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.'அது, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™