Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'டிமிக்கி' ஆசிரியர்களுக்கு கடிவாளம்: அமலுக்கு வருகிறது டிஜிட்டல் பதிவு

Posted: 13 Sep 2017 07:36 AM PDT

அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பணிக்கு வராமல், பாடம் நடத்தாமல், சம்பளம் வாங்குவதை தடுக்க, 'டிஜிட்டல்' விபர பதிவு அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், நான்கு லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், அரசு சம்பளத்தில், ஒரு லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
ஒழுங்கு நடவடிக்கை :
இவர்களுக்கு, தினசரி வருகைப் பதிவு, செயல் திறன், பணிமூப்பு, கல்வித் தகுதி, நடத்தை போன்றவற்றை கணக்கிட்டு, சலுகைகளும், விருதுகளும் வழங்கபடுகின்றன.இதில், பெரும்பாலான ஆசிரியர்கள், பள்ளிக்கு ஒழுங்காக வராமல் இருந்தாலும், பதிவேட்டில் ...

நாடு முழுவதும் நீர் வழி போக்குவரத்தை செயல்படுத்த...ஆலோசனை!

Posted: 13 Sep 2017 09:21 AM PDT

நதிகளை இணைத்து, தேசிய நீர் வழி போக்குவரத்து திட்டத்தை அமல்படுத்த, சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து, மத்திய நீர்வளத்துறை அமைச்சர், நிதின் கட்கரி, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடலில் வீணாக கலக்கும் வெள்ள நீரை சேமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும், 30 நதிகளை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை, 5.5 லட்சம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பதினைந்தாயிரம் கி.மீ., நீள, கால்வாய் கட்டமைப்புகளை அமைத்து, அவற்றின் ...

சசிகலாவுக்கு சலுகை தொடர்கிறது: தகவலறியும் சட்டத்தில் அம்பலம்

Posted: 13 Sep 2017 09:44 AM PDT

பெங்களூரு: 'சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் வாபஸ் பெறப்படவில்லை' என, தகவல்அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

பல மாற்றங்கள் :
கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலாவுக்கு, சிறப்பு வசதி அளிக்க பட்டதாகவும், சலுகை அளிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதனால், கர்நாடக சிறை துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இதற்கிடையில், சிறையிலுள்ள சசிகலா தொடர்பாக பல கேள்விகளை கேட்டு, வக்கீல் நரசிம்மமூர்த்தி, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், மனு தாக்கல் ...

ஜப்பான் பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு; 'மோடி ஜாக்கெட்' அணிந்து அபே அசத்தல்

Posted: 13 Sep 2017 10:33 AM PDT

காந்தி நகர்:இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர், ஷின்சு அபேவுக்கு, வரவேற்பு பேரணி நடத்தியும், விமான நிலையத்துக்கு நேரில்சென்று கட்டியணைத்தும், மிகச் சிறந்த வரவேற்பை, பிரதமர் நரேந்திர மோடி அளித்தார்.

பதில் மரியாதையாக, அபே, 'மோடி ஜாக்கெட்' அணிந்தும், அவரது மனைவி, சல்வார் அணிந்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அசத்தினர்.இந்தியா - ஜப்பான் இடையேயான உறவு, மிகவும் வலுவாக உள்ளது. மோடி பிரதமராக பதவியேற்ற பின், ஜப்பான் பிரதமர் ஷின்சு அபே, நான்காவது முறையாக, நம் நாட்டுக்கு வந்துள்ளார். இருவரும் இதுவரை, 10 முறை நேரில் சந்தித்து ...

'ஜன் தன்' திட்டத்தில் 30 கோடி வங்கி கணக்குகள்

Posted: 13 Sep 2017 10:38 AM PDT

புதுடில்லி:நாடு முழுவதும், 'ஜன் தன்' திட்டத்தில், 30 கோடி குடும்பங்களுக்கு, வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

டில்லியில் நேற்று நடந்த, நிதி திட்டம் தொடர்பான கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி பேசியதாவது:நாடு முழுவதும், ஜன்தன் திட்டம், மூன்று ஆண்டுக்கு முன் துவங்க பட்டது. இந்த திட்டத்தில், 30 கோடி குடும்பத்தினருக்கு, வங்கி கணக்குகள் துவங்க பட்டுள்ளன.இந்த திட்டம் துவங்குவதற்கு முன், நாடு முழுவதும், 42 சதவீத குடும்பத்தினருக்கு, வங்கி கணக்குகள் ...

நெருக்கடி அதிகரிப்பு: அணி மாற வாய்ப்பு

Posted: 13 Sep 2017 10:41 AM PDT

அ.தி.மு.க., பொதுக்குழு வெற்றிகரமாக முடிந்து, கட்சி முழுமையாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வசம் வந்துள்ளது. இது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களிடம், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினகரன் அணியில், 21 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். புதுச்சேரியில் தங்கியிருந்த அவர்கள், தற்போது, கர்நாடக மாநிலம், மைசூரு அடுத்த கூர்க், சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், 'கட்சியில் தினகரன் கை ஓங்கும்; முக்கிய பதவிகளைப் பெறலாம்' என, நம்பினர்.'மேலும், பலஎம்.எல்.ஏ.,க்கள், 'ஸ்லீப்பர் செல்' எனப்படும், ரகசிய பிரிவாக உள்ளனர். அவர்கள், முதல்வருக்கு ...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

Posted: 13 Sep 2017 10:49 AM PDT

சென்னை:போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போராட்டத்தால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து, இழப்பீடு வழங்க வேண்டியது வரும் என்றும், அதற்கு நிவாரணம் கேட்டு, நீதிமன்றத்திற்கு வர முடியாது என்றும் கண்டித்துள்ளது. மேலும், போராட்டம் தொடர்பாக, 12 கேள்விகள் எழுப்பி, அதற்கு விளக்கம் தரவும், அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர், ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவில், 'மாணவி அனிதாவின் மரணம், பள்ளி செல்லும் இளைய ...

அடுத்த கட்டம் இரட்டை இலை: பழனி - பன்னீர் கூட்டணி ஆயத்தம்

Posted: 13 Sep 2017 10:54 AM PDT

பொதுக்குழுவை கூட்டி, அனைவருடைய ஒப்புதலோடு, கட்சியில் இருந்து சசிகலாவை காலி செய்த சூட்டோடு, அடுத்த கட்டமாக, அ.தி.மு.க., கட்சி பெயரை, இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளை, முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் மேற்கொண்டுஉள்ளனர்.

ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரு அணிகளாக பிளவுபட்டது. சென்னை, ஆர்.கே.நகர் இடைதேர்தலில், இரு அணிகளும், இரட்டை இலை சின்னத்தை கோரின. அதனால், தேர்தல் கமிஷன்,அந்த சின்னத்தை முடக்கியது. அ.தி.மு.க., என்ற பெயரை பயன்படுத்தவும், தடை விதித்தது.பிளவுபட்ட அணிகளுக்கு, 'அ.தி.மு.க., - அம்மா, அ.தி.மு.க., - புரட்சித் தலைவி' என, ...

ஓசூரில் விமான சேவை துவங்குமா? கர்நாடகா முட்டுக்கட்டையால் இழுபறி

Posted: 13 Sep 2017 10:59 AM PDT

ஓசூர்:'ஓசூரில், விமான சேவை துவங்கப்படும்' என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கர்நாடகா அரசு முட்டுக்கட்டை போடுவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகம் - கர்நாடகா எல்லையில் உள்ள, ஓசூரில் இருந்து சென்னைக்கு, 'உதான்' திட்டத்தில், புதிய விமான சேவையை துவங்க, மத்திய அரசு திட்டமிட்டது. 'செப்டம்பரில் விமான சேவை துவங்கும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது.ஓசூரில் விமான நிலையம் இல்லாததால், ஓசூர் அடுத்த சின்ன பேலகொண்டப்பள்ளியில் உள்ள, 'தால்' என்ற தனியார் விமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் இருந்து, சென்னைக்கு விமானம் இயக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, ...

கங்கையில் குப்பை போடுவோரை புகைப்படம் எடுத்து அனுப்பினால் பரிசு

Posted: 13 Sep 2017 12:08 PM PDT

ருத்ரபிரயாகை: கங்கை நதியை துாய்மையாக்கும் திட்டத்தின் கீழ், நதியில் குப்பை போடுபவர்களை புகைப்படம் எடுத்து அனுப்புவோருக்கு பரிசு வழங்க, உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாகை நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நடவடிக்கை:
உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ருத்ரபிரயாகையில், புனித கங்கை நதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில், குப்பை போடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், ருத்ரபிரயாகை நகர நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. ...

லாலுவின் மூத்த மகன் மீதும் வழக்கு

Posted: 13 Sep 2017 01:51 PM PDT

பாட்னா: தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், சொத்து விபரங்களை மறைத்ததாக, லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன், தேஜ் பிரதாப் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
லஞ்ச வழக்கு:
பீஹாரில், முதல்வர், நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வே துறை ஓட்டல்களை குத்தகைக்கு வழங்கியதில், லஞ்சம் பெற்றதாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
வழக்கில் இளைய மகன்:
இந்த ...

‛என் குரலை ஒடுக்க முடியாது': சிதம்பரம்

Posted: 13 Sep 2017 02:55 PM PDT

சென்னை: 'என் மகன் கார்த்தி மீது, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறுவதால், என் குரலை ஒடுக்க முடியாது' என, முன்னாள் மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் கூறியுள்ளார்.

சிதம்பரம் மகன் கார்த்தி மீது, சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதையடுத்து, கார்த்தி, வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. 'கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் எதுவும், வெளிநாடுகளில் இல்லை; சி.பி.ஐ., விரும்பினால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம்' என, கார்த்தி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™