Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மின்சார வாகனங்கள் தயாரிக்க நிறுவனங்கள்... சுறுசுறு!

Posted: 12 Sep 2017 09:06 AM PDT

புதுடில்லி: 'வரும், 2030க்குள் நாடு முழுவதும், மின்சார வாகனங்களை மட்டுமே இயக்க வேண்டும்' என்ற மத்திய அரசின் திட்டத்துக்கு, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. இது தொடர்பாக, புதிய ஆட்டோமொபைல் கொள்கையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் இறக்குமதியை குறைக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும், மின்சாரத்தால் இயங்கும் பேட்டரி வாகனங்களை இயக்குவதற்கு, மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. வரும், 2030ம் ஆண்டுக்குள், மின்சாரத்தை பயன்படுத்தும் வாகனங்களை மட்டுமே ...

அகிலேஷ், ஸ்டாலின் இல்லையா? வாாிசு அரசியல் குறித்து ராகுல் கேள்வி

Posted: 12 Sep 2017 09:18 AM PDT

வாஷிங்டன்: ''வாரிசுகள் பதவிக்கு வருவது, ஒரு பிரச்னைதான். அதே நேரத்தில், அதை தவிர்க்க முடியாது; பல்வேறு நாடுகளில் இதுதான் நடக்கிறது,'' என, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், கலிபோர்னியா பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்; அவர் கூறியதாவது: அரசியல் மட்டுமல்ல, பல்வேறு துறைகளிலும் வாரிசுகள் பதவிக்கு வருவது, ஒரு பிரச்னையாகவே உள்ளது. அதே நேரத்தில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இதுதான் நடக்கிறது.
நடிகர் அமிதாப் பச்சனின் மகன் ...

குடகு, 'ரிசார்ட்'டில் போலீஸ் ஆய்வு: தினகரன் ஆதரவு, 'மாஜி' ஓட்டம்

Posted: 12 Sep 2017 10:17 AM PDT

குடகு: முன்னாள் அமைச்சர் பழனியப்பனை தேடி, குடகு ரிசார்ட்டுக்கு, தமிழக போலீசார் வருவதையறிந்த அவர், தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினகரன் அணி, எம்.எல்.ஏ.,க்கள், கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள, 'பேடிங்க்டன்' ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பங்கேற்கவில்லை :
சென்னையில், நேற்று நடந்த அ.தி.மு.க., பொது குழு, செயற்குழுவில் இவர்கள் பங்கேற்க வில்லை. நேற்று பகல், 1 மணியளவில், கோவை பதிவெண் உடைய வாகனத்தில், தமிழக போலீசார், ரிசார்ட்டுக்கு வந்தனர். கோவை ரூரல், டி.எஸ்.பி., வேல்முருகன் தலைமையில், 25 போலீசார், ...

நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரி ஸ்டாலின் வழக்கு

Posted: 12 Sep 2017 10:18 AM PDT

சென்னை: பெரும்பான்மையை நிரூபிக்க, ஆளும் கட்சிக்கு அழைப்பு விடுக்க,கவர்னருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதி மன்றத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் மனு தாக்கல் செய்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தில், ஸ்டாலின் தாக்கல் செய்த மனு: தமிழக சட்டசபையில், தற்போது, 233 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு, 117 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருக்க வேண்டும். தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு, 98 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள்,21பேர், அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.அதனால், சபாநாயகர் ...

கவர்னர் மீது மரியாதை குறைகிறது: தினகரன் கடுப்பு

Posted: 12 Sep 2017 10:20 AM PDT

மதுரை: ''கவர்னர் மீதான மரியாதை குறைந்து கொண்டே வருகிறது,''என, தினகரன் தெரிவித்தார்.

மதுரையில், நேற்று அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தை கூட்டும் அதிகாரம் எனக்கும், சசிகலாவுக்கும் மட்டுமே உள்ளது. இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லுமா என்பது, நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே தெரிய வரும்.இருக்கிற வரை, கட்சி பதவி மற்றும் ஆட்சியில் இருக்க வேண்டும் என, நினைக்கின்றனர். ஆட்சி தொடர்ந்தால், கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதாலேயே, முதல்வரை மாற்ற முயற்சிக்கிறோம். இந்தஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் வேலையை துவங்கி ...

ஆமதாபாத் - மும்பை, 'புல்லட்' ரயில் நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்

Posted: 12 Sep 2017 10:34 AM PDT

ஆமதாபாத்: ஆமதாபாத் - மும்பை இடையே, அதிவேக, 'புல்லட்' ரயில் இயக்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆமதாபாத்தில் நாளை நடக்கிறது.

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணிஆட்சி அமைந்த பின், தாக்கல் செய்யப்பட்ட, முதல் ரயில்வே பட்ஜெட்டில், 'நாட்டில், அதிவேக புல்லட் ரயில் இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.அதில், குஜராத் மாநிலம், ஆமதாபாத்திலிருந்து, மஹாராஷ்டிர மாநிலம், மும்பை வரை, முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில், ரயில்வே ...

அ.தி.மு.க.,வில் சசிகலாவின் பொதுச்செயலர் பதவி பறிப்பு!

Posted: 12 Sep 2017 10:46 AM PDT

சென்னை: ஒட்டுமொத்த கட்சி தொண்டர்களும் ஆவலுடன் எதிர்பார்த்தபடி, அ.தி.மு.க., பொதுக்குழுவில், சசிகலாவின் பொதுச்செயலர் பதவியை பறித்து, அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், கட்சியில் சசிகலா செய்த நியமனம் எதுவும் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், தினகரன் பதவியும் பறிபோனது. கட்சியை வழிநடத்த, முதல்வர் பழனிசாமிக்கும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும், முழு அதிகாரம் வழங்கப்பட்டது. ஒன்றுபட்ட, அ.தி.மு.க.,வாக மீண்டும் இயங்கவும், இழந்த இரட்டை இலை சின்னத்தை மீட்கவும், பொதுக்குழுவில் சபதம் ஏற்றனர்.

அ.தி.மு.க.,வில், இரு அணிகளாக செயல்பட்ட, முதல்வர் ...

2 லட்சம் ஆசிரியர்களுக்கு 'மெமோ!'

Posted: 12 Sep 2017 10:49 AM PDT

'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பின் போராட்டத்தில் பங்கேற்றுள்ள, இரண்டு லட்சம் ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு, 'மெமோ' கொடுக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார் பில், செப்., 7 முதல், கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதனால், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணிக்கு செல்லவில்லை; அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளில் பணிகள் முடங்கி உள்ளன. பல பள்ளிகளில், காலாண்டு தேர்வை நடத்தவும், ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்றுள்ள ...

ஓராயிரம் தினகரன் வந்தாலும் ஒன்றும் முடியாது!

Posted: 12 Sep 2017 10:57 AM PDT

''ஒரு தினகரன் அல்ல; ஓராயிரம் தினகரன் வந்தாலும், அ.தி.மு.க.,வை அசைக்க முடியாது,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.

அ.தி.மு.க., பொதுக் குழுவில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது: பொதுக்குழு நடை பெறாது என, சிலர் எதிர்பார்த்தனர். நீதிமன்றம், நமக்கு நீதி வழங்கியது; நமக்கு கிடைத்த முதல் வெற்றி. எம்.ஜி.ஆர்., மறைந்த போது, உடைந்த கட்சியை ஜெ., மீண்டும் இணைத்து, ஆட்சியை பிடித்தார். அவர் மறைந்ததும், கட்சியை அழித்து விடலாம்; ஆட்சியை கவிழ்த்து விடலாம் என, நினைத்தனர். தி.மு.க., எவ்வளவோ பிரச்னைகளை துாண்டியது. அதை எல்லாம், உங்கள் ஆதரவால் தவிடுபொடியாக்கி ...

தனியார் பள்ளி ஆசிரியருக்கு தகுதி தேர்வில் விலக்கு?

Posted: 12 Sep 2017 01:10 PM PDT

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல், தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிவோருக்கு, மத்திய அரசு புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. 2019க்குள் படிப்பை முடிக்கவும், கெடு விதிக்கப் பட்டுள்ளது.

அவகாசம் : மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, பள்ளி ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தச் சட்டப்படி, தனியார் பள்ளி ஆசிரியர் கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற, 2009ல், ஐந்து ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது; அது, 2014ல் முடிந்தது. பின் மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு, அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், ...

ஒரு மாதத்தில் 1.12 லட்சம் பேர் : '108' ஆம்புலன்ஸ் சேவையில் பயன்

Posted: 12 Sep 2017 02:01 PM PDT

சென்னை: தமிழகத்தில், '108' ஆம்புலன்ஸ் சேவையில் அதிகபட்சமாக, ஆகஸ்டில், 1.12 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.

தமிழக அரசின், சுகாதாரத் திட்டத்தின் கீழ், அவசர கால, '108' ஆம்புலன்ஸ் சேவை செயல்பாட்டில் உள்ளது. இதில், 923 ஆம்புலன்சுகள் உள்ளன. சேவையில், அதிகபட்சமாக, இந்தாண்டு ஆகஸ்டில், 1.12 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.
இது குறித்து, சேவை மைய விழிப்புணர்வு மேலாளர், பிரபுதாஸ் கூறியதாவது:அரசின், '108' சேவைக்காக, மூன்று மாதங்களில், 41 புதிய ஆம்புலன்சுகள் வாங்கப்பட்டு உள்ளன; 64 ஆம்புலன்சுகளில், நவீன சிகிச்சைக்கு வசதியாக, செயற்கை சுவாச கருவி ...

போக்குவரத்து துறை உத்தரவுக்கு ஐகோர்ட் தடை : 'லைசென்ஸ்' இல்லாமலும் வாகனம் வாங்கலாம்

Posted: 12 Sep 2017 02:47 PM PDT

சென்னை: 'ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களின் வாகனங்களை, பதிவு செய்யக் கூடாது' என, போக்குவரத்து துறை ஆணையர் பிறப்பித்த சுற்றறிக்கைக்கு, சென்னை உயர் நீதிமன்றம், தடை விதித்துள்ளது.
'ஆட்டோமொபைல் டீலர்' சங்கங்களின் சம்மேளனம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு:
விற்பனையாளரிடம் இருந்து வாகனங்கள் வாங்கிய பின், அதை பதிவு செய்ய வேண்டும்; அவ்வாறு பதிவு செய்யும்போது, வாகனம் வாங்கியவருக்கு, அதை ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதனால், வாகனத்தை வாங்கியவர், ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற, அவசியம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™