Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அரண்மனையில் ஒரு பாடல் !

Posted: 12 Sep 2017 10:01 AM PDT

அரண்மனையில் ஒரு பாடல் ! அவளுடைய கைக்குட்டை முழுதும் கண்ணீரால் நனைந்திருந்தது! அவளால் ஒரு கனவைக்கூடக் காண இயலவில்லை- நட்ட நடு இரவில்! அரண்மனையின் காலைப்பாடல் கேட்பதற்கு இன்னும் நேரம் இருக்கிறது ! அவளது ரோஜாக் கன்னங்கள் – அவை முதுமை அண்டாதவை ! ஆனால் – அவளது முதல் காதல் செத்துப்போய்விட்டது! அவளைச் சுற்றிலும் மண்டிய இருள் புகைமீது அவள் சாய்ந்தபடி உட்கார்ந்திருக்கிறாள்- வெளிச்ச விடிவு வரும் வரை ! ('Song of the Palace' – A Chinese poem by Bai Juyi ; ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் ...

அமைதியான இரவில் ஒரு சிந்தனைக் கீற்று!

Posted: 12 Sep 2017 08:28 AM PDT

அமைதியான இரவில் ஒரு சிந்தனைக் கீற்று!

எனது கட்டிலின் முன் பகுதியிலிருந்து-
நிலாவெளிச்சம் பிரதிபலித்தது- என்முன்னே!
அந்தப் பிரதிபலிப்பு  என்ன தரையில் உள்ள பனிப் படலம்தானா?
நான் நிமிர்ந்து அந்த ஒளிவிடும் நிலாவைப் பார்த்தேன்;
பிறகு கீழே பார்த்தேன் –
எனது ஊரை நினைக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவளாக!

(Thoughts in the Silent Night  பய Chinese poet Lǐbái; ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் – முனைவர் சு. சௌந்தரபாண்டியன்)

வாத்துக்கள் அதிகாலையில் முட்டையிடும் - பொ.அ.தகவல்

Posted: 12 Sep 2017 08:07 AM PDT

வஜ்ஜிரவல்லி

Posted: 12 Sep 2017 08:06 AM PDT

வஜ்ஜிரவல்லி வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார். உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு! #முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்...... கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்.... எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, ...

காலத்தில் - கவிதை

Posted: 12 Sep 2017 08:05 AM PDT

பெயரிட்டழைத்து தலைகுனிந்து தேடிய பின் நீ தோளுக்குமேலே உயர்ந்து நிற்பது, ஆடையகத்தில் சிறுமியுடையைத் தேர்ந்த பின் நீ என் ஆடையை அணிந்து சென்றது, - அம்மாவென்ற மழலைக் குரலொன்றில் திரும்பியபின் நீ கல்லூரிக்குச் சென்றிருப்பது, குழந்தைப்பாடல் ஒலிக்கச் செய்தபின் நீ எட் ஷீரனை விரும்பிக் கேட்பது, - பூனைக்குட்டியின் காணொளியைக் காண அழைத்தபின் நீ டிராகனுடன் வேற்றுக்கிரகம் பயணித்திருப்பது, - இப்படியே கரடிபொம்மையை பரிசளித்த பின், சாக்லேட்டை பகிர்ந்துகொள்ள விரும்பிய பின், உறக்கத்தில் ...

மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை)

Posted: 12 Sep 2017 08:03 AM PDT

மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) ஆறுமாதத்திற்குப் பிறகு சொந்த ஊருக்குச் சென்றான் மூர்த்தி. வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தான். "ஆயா! அந்தா கையில் கருக்கருவாளுடன் , சும்மாட்டுத் துணியைத் தோளில் தொங்கவிட்டபடி போறது யாரு? " – கேட்டான் மூர்த்தி( மதுரை இராமநாதபுரம் வட்டாரங்களில் அம்மாவை 'ஆயா' என்று கூப்பிடும் பழக்கம் உண்டு). "அது நம்ம பக்கத்து வீட்டுச் சுந்தரிதான்!" மூர்த்தியின் மனம் அவனது நரம்புகளைக் கிளறியது !- "சுந்தரியா அது?.. தீபாவளியின் போது துள்ளித் ...

சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்

Posted: 12 Sep 2017 07:26 AM PDT

சென்னை : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடியது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுகவில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் 2,140 பொதுக்குழு, 296 ...

வாய் பிளந்து காத்துக்கிடக்கும் நீலத்திமிங்கலங்கள்

Posted: 12 Sep 2017 07:24 AM PDT

வாய்பிளந்து காத்திருக்கும் நீலத்திமிங்கலங்கள் கொலுசு மின்னிதழில் நான் எழுதும் கட்டுரைத்தொடரான தேநீர் இடைவேளையில் இந்த மாதம் வெளியாகியிருக்கும் கட்டுரை ... தேநீர் இடைவேளை # 15 வாய்பிளந்து காத்திருக்கும் நீலத்திமிங்கலங்கள் செல்பேசியில் எனக்கே தெரியாத பல வேலைகள என் பையன் பார்க்கிறான். செல்ல அவன் கையில குடுத்தா அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு மேய்ஞ்சுடறான். என் பொண்ணுக்கு செல்லு குடுத்தா போதும் அழவே மாட்டா அமைதியா படுத்திருப்பா. இப்படியான பெருமையான தம்பட்டங்களை அடிக்கடி கேட்டிருக்கலாம். ...

கனவு பலன்

Posted: 11 Sep 2017 10:38 PM PDT

ஐயா என் கனவில் எங்கள் வீட்டீல் வளர்க்கும் காளை கன்றை வீட்டு நாய் கடித்து இறப்பது போல் வந்தது..

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Posted: 11 Sep 2017 08:36 PM PDT

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1 முகப்புரை குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் . ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை. திருவள்ளுவரைப்போலவே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™