Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


போக்குவரத்து திட்டங்களை தீவிரப்படுத்த மத்திய அரசு வேகம்!

Posted: 10 Sep 2017 08:44 AM PDT

புதுடில்லி: நாடு முழுவதும் போக்குவரத்து தேவை அதிகரித்து வருவதால், சாலை மற்றும் விமான போக்குவரத்தை இணைக்கவும், நீர் வழித்தடங்களை போக்குவரத்திற்கு பயன்படுத்தவும், மத்திய அரசு வேகம் காட்டி வருகிறது. குறிப்பிட்ட சில திட்டங்களை, இந்த ஆண்டிற்குள் துவக்கவும், மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

நாடு முழுவதும், வாகன பெருக்கம் அதிகரித்து வருவதாலும், போக்குவரத்து தேவை உயர்ந்து வருவதாலும், பெரும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கும் அதேசமயம், சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், அவை அமைந்து இருப்பதை, மத்திய அரசு உறுதி ...

பாதுகாப்பு படைக்கு கூடுதல் அதிகாரம்

Posted: 10 Sep 2017 08:56 AM PDT

புதுடில்லி:தேசிய பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை போன்றவற்றுக்கு, மர்ம விமானங்களை சுட்டுதள்ளும், கூடுதல் அதிகாரம் வழங்கப்பட உள்ளது.பயங்கரவாத தாக்குதலை தடுக்கும் பொருட்டு, உள்நாட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும், படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடர்பாக, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இதுதொடர்பாக, தேசிய பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை உள்ளிட்டவற்றுடன், மத்திய உள்துறை அமைச்சகம், சமீபத்தில் ஆலோசனை நடத்தியது. இதில், விமானப்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது, ஆளில்லா விமானம் உள்ளிட்டவை பறந்தால், அவற்றை ...

'செல்லாத நோட்டு எண்ண இயந்திரம் பயன்படுத்தவில்லை'

Posted: 10 Sep 2017 09:00 AM PDT

புதுடில்லி : 'செல்லாது என அறிவிக்கப்பட்ட, 500 - 1,000 ரூபாய் நோட்டுக்களை எண்ணுவதற்காக, இயந்திரம் பயன்படுத்தப்பட வில்லை' என,ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

பழைய, 500 -- 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, 2016, நவ., 8ல் வெளியானது; கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்க, இந்த நடவடிக்கையை அமல்படுத்தியதாக மத்திய அரசு தெரிவித்தது. பழைய நோட்டுகளை வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய, அவகாசம் வழங்கப்பட்டது. செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 15.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் திரும்ப வந்துள்ளதாக, ரிசர்வ் வங்கிசமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், ...

செக்ஸ் சாமியார் பாதுகாப்பு விவகாரம்: ஹரியானா - பஞ்சாப் மோதல்

Posted: 10 Sep 2017 09:01 AM PDT

சண்டிகர்:'தேரா சச்சா சவுதா' அமைப்பின், சர்ச்சைக்குரிய சாமியார், குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு, 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கிய விவகாரத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களிடையே மோதல் எழுந்துள்ளது.

ஹரியானாவில், முதல்வர், மனோகர் லால் கட்டார் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள, சிர்சா நகரில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமையகம் உள்ளது. இதன் தலைவரான, குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு, இரண்டு பெண் துறவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சமீபத்தில், 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ரோதக் சிறையில், அவர் ...

தினகரன் மீது 4 எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி

Posted: 10 Sep 2017 09:54 AM PDT

தி.மு.க., மேலிடத்துடன், தினகரன் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதை ஏற்க முடியாது எனக்கூறி, ஓரிரு நாட்களில், மேலும் நான்கு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிசாமி அணியில் ஐக்கியமாக உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கியிருந்த, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., ஜக்கையன்,
முதல்வர் பழனிசாமி அணியில் ஐக்கியமானார். 'தி.மு.க., வுக்கு ஆதரவாக, தினகரன் செயல்படுகிறார்' என, அவர் குற்றம் சாட்டினார். இது, தினகரன் அணியில் உள்ள, எம்.எல்.ஏ.,க்களை
சிந்திக்க வைத்துள்ளது.
அதற்கேற்றபடி, கொங்கு மண்டல முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர், 'தி.மு.க., ...

கைதாகிறார் ஜெயந்தி நடராஜன்?

Posted: 10 Sep 2017 09:56 AM PDT

சென்னை : வனத்துறை நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதில் நடந்த, முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தமிழகத்தை சேர்ந்த, ஜெயந்தி நடராஜன், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக, 28 மாதங்கள் பதவி வகித்தார்.
அப்போது, ஜார்கண்ட் மாநிலம், சிங்பும் மாவட்டத்தில், வனத்துறைக்கு சொந்தமான
நிலத்தை, தனியார் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளார். அவருக்கு முன், துறையின் அமைச்சராக இருந்த ...

அமெரிக்காவை தாக்கியது, 'இர்மா'; 50 லட்சம் பேர் தவிப்பு; மின்சாரம் துண்டிப்பு

Posted: 10 Sep 2017 10:47 AM PDT

வாஷிங்டன்: அமெரிக்காவை மிரட்டி வந்த, 'இர்மா' புயல், புளோரிடா மாகாண கடலோர பகுதியில், நேற்று கரையை கடந்தது; அப்போது, மணிக்கு, 210 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், பெருத்த சேதம் ஏற்பட்டது; புயல் பாதிப்பால், 50 லட்சம் பேர் தவித்து வருகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை, கடந்த மாத இறுதியில், 'ஹார்வே' புயல் தாக்கியது. இதில், மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான, ஹூஸ்டன், சின்னாபின்னமானது.

கரையை கடந்தது:இந்நிலையில்,
அட்லாண்டிக் பெருங்கடலில், கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், மிக சக்தி வாய்ந்த சூறாவளி உருவானது. இதற்கு, 'இர்மா' என பெயர் ...

போராட்டத்தை கைவிடாத ஊழியர்கள் மீது பாய்கிறது... 'எஸ்மா?'

Posted: 10 Sep 2017 10:54 AM PDT

போராட்டத்தை கைவிடாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது, 'எஸ்மா'சட்டப்படி, நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

'வேலை நிறுத்தம் என்பது அடிப்படை உரிமையல்ல; அதை, ஆயுதமாக பயன்படுத்த கூடாது' என்ற, உச்ச நீதிமன்ற உத்தரவை புறக்கணிப்பதால், 14 ஆண்டுகளுக்குப் பின், இந்த சட்டத்தை கையில் எடுக்கும் நிலைக்கு, அரசு தள்ளப்பட்டுள்ளது. தடையை மீறுவோர் கைது செய்யப்படுவர் என்றும், போலீசார் எச்சரித்துள்ளனர்.'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ...

சட்டசபையை கூட்ட ஸ்டாலின் ஒரு வாரம் கெடு

Posted: 10 Sep 2017 10:57 AM PDT

சென்னை: ''ஒரு வாரத்திற்குள், சட்டசபையை கூட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடுவோம் என, கவர்னரிடம் தெரிவித்துள்ளோம்,'' என்று, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

'முதல்வர் பழனிசாமி அரசுக்கு, பெரும்பான்மை இல்லாததால், சட்டசபையை கூட்டி, பலத்தை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையுடன், நேற்று மாலை, கவர்னர் வித்யாசாகர் ராவை, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்தார். அவருடன், தி.மு.க., முதன்மை செயலர், துரைமுருகன் மற்றும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், காங்., சட்டசபை ...

பதிலடியை துவங்கியது தமிழக பா.ஜ., அதிரடியாக களம் இறங்கிய தலைவர்கள்!

Posted: 10 Sep 2017 11:00 AM PDT

திருச்சி:'நீட்' தேர்வை எதிர்க்க, அனிதா தற்கொலையை கையில் எடுத்துள்ள தமிழக எதிர்க்கட்சிகளுக்கு, தகுந்த பதிலடி கொடுக்கும் பணியில், பா.ஜ., தலைவர்கள் தீவிரமாகி உள்ளனர்.

'நீட்' தேர்வு எழுதி, குறைந்த மதிப்பெண் எடுத்த அரியலுார் மாணவி அனிதாவின் தற்கொலை, தமிழக அரசியலில், சுனாமியாக சுழன்றடிக்க துவங்கியுள்ளது. ஏற்கனவே, மாநில அரசியலில், அ.தி.மு.க.,வுடன் நேரடி மோதலிலும், மத்தியில் ஆட்சி செய்யும், பா.ஜ., வுடன் அரசல், புரசலாக உரசிக் கொண்டிருந்த பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க., அனிதாவின் தற்கொலை விவகாரத்தை, கையில் எடுத்துள்ளது.எதிர்க்கட்சி வரிசையில்உள்ள, ...

ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்

Posted: 10 Sep 2017 01:01 PM PDT

புதுடில்லி : 'வரும், 2018, பிப்ரவரிக்குள், 'சிம் கார்டு'டன், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், சிம் செயல் இழக்கும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில், 'லோக் நிதி பவுண்டேஷன்' என்ற தொண்டு நிறுவனம், தாக்கல் செய்த, பொது நல மனுவில், 'சிம் கார்டுகளை, பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். இதை தடுக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், கிரிமினல்கள், போலி பெயர்களில், 'சிம் கார்டு' வாங்கி, தவறாக பயன்படுத்தி ...

கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்

Posted: 10 Sep 2017 02:07 PM PDT

பனாஜி : இந்திய கடற்படையின் ஆறு வீராங்கனையர் உலகம் சுற்றும் பயணத்தை நேற்று(செப்.,10) துவக்கினர்.
கோவா தலைநகர் பனாஜியில் உள்ள இந்திய கடற்படை தளத்திலிருந்து கடற்படை வீராங்கனையர் ஆறு பேர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ்.வி., தாரிணி' கப்பலில் உலகம் சுற்றும் பயணத்தை நேற்று துவக்கினர்.
எளிதில் கிடைக்காது:
இந்த பயணத்தை துவக்கி வைத்து ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்திய வரலாற்றில் இது ஒரு சிறப்பான நாள்; இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஐந்தாண்டுக்கு ஒரு முறையோ, 10 ஆண்டுக்கு ஒரு முறையோ ...

ஓய்வு பெறுகிறார் ராம்ஜெத் மலானி!

Posted: 10 Sep 2017 02:44 PM PDT

புதுடில்லி : பிரபல சட்ட நிபுணர், ராம்ஜெத் மலானி, வழக்கறிஞர் தொழிலில் இருந்து, ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பாராட்டு விழா:
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லியில், இந்திய பார் கவுன்சில் சார்பில், உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ராவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், மூத்த வழக்கறிஞர், ராம்ஜெத் மலானி, 94, பங்கேற்றார்.
ஓய்வு பெற முடிவு:
விழாவில், ராம்ஜெத் மலானி பேசியதாவது: வழக்கறிஞர் தொழிலில், 70 ஆண்டுகள் ...

பத்திரிகையாளர் கவுரி கொலை வழக்கில் துப்பு: அமைச்சர் தகவல்

Posted: 10 Sep 2017 03:47 PM PDT

பெங்களூரு : கர்நாடகாவில், பெண் பத்திரிகையாளர், கவுரி லங்கேஷ் கொலையில், துப்பு கிடைத்துள்ளதாக, அம்மாநில உள்துறை அமைச்சர், ராமலிங்க ரெட்டி கூறியுள்ளார்.

சுட்டுக் கொலை:
கர்நாடகா தலைநகர் பெங்களூரில் பிரபல பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், தன் வீட்டு வாசலில், சில தினங்களுக்கு முன், மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக, துப்பு கிடைத்துள்ளதாக, அம்மாநில, உள்துறை அமைச்சர், ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
துப்பு:
இதுகுறித்து அவர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™