Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பனித்துகள் கொத்து!

Posted: 10 Sep 2017 10:20 AM PDT

பனித்துகள் கொத்து!

ஹெம்லாக் மரத்திலிருந்து-
அந்தக் காக்கை சிறிது பனித்துகளை என் மீது
போட்ட விதம்-
எனது இதயத்தை அசைத்து
ஒரு நல்ல மன நிலையைத் தந்தது!

அந்த மன நிலை-
அன்றையப் பொழுதின் மிச்ச நேரத்தை வருத்தத்தில் ஆழ்ந்துகிடக்காமல் என்னைக் காப்பாற்றியது !

(By Robert Frost ; தமிழில் மொழிபெயர்த்தவர்- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)

இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!-சுவாமி சுகபோதானந்தா

Posted: 10 Sep 2017 10:18 AM PDT

இந்த உலகில் ஏதாவது சாதனை நிகழ்த்த வேண்டுமானால் அது இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும். சுவாமி விவேகானந்தர்கூட, 'இந்த உலகை மாற்றியமைக்க 100 மனிதர்களைத் தாருங்கள் என்று கேட்காமல் 100 இளைஞர்களைத் தாருங்கள்' என்றுதான் கேட்டார். தமிழின் முதல் தர வரிசையிலிருக்கும் மனசே... ரிலாக்ஸ் ப்ளீஸ்!' புத்தகத்தின் மூலம் தமிழ் வாசக உலகைப் புரட்டிப் போட்ட சுவாமி சுகபோதானந்தா அந்த உண்மையை நன்கு உணர்ந்தவர். நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி, தடைகளைத் தகர்த்தெறிந்து, திக்கு திசை தெரியாமல் பாயும் காட்டற்று வெள்ளமான‌ இளைய ...

நாட்டு நடப்பு

Posted: 10 Sep 2017 10:11 AM PDT

நாட்டு நடப்பு


செய்தி :ராஜ்யசபா – ஓராண்டில், ரூ.50 லட்சத்துக்கு மேல் பயணம், படி என செலவழித்தவர்கள் எண்மர்.

சிபிஎம், சிபிஐ, திரிணாமுல், காங்கிரஸ், திமுக, சிபிஎம், காங்கிரஸ், காங்கிரஸ்.

அனைவரும் சோஷலிஸ சிக்யூலர் சிற்பிகள்.

.

அங்கே அப்படி.

இங்கே, மேடையில் ஏறிவிட்டால் – "கிராமத்து ஏழை மாணவன் என் செய்வான், ஐயகோ!"

நன்றி புலனம்

ரமணியன்

பூ

Posted: 10 Sep 2017 09:52 AM PDT

பூ நான் உங்களுக்கு ஒன்று சொல்லவேண்டும் ! அது- நான் நேற்றுப் பாதை ஓரத்தில் கண்ட சூரிய காந்திப் பூவைப்பற்றியது! அது வாடியிருந்தது! வளைந்திருந்தது ! ஆனால் – அழகாக இருந்தது ! அதனுடை  இந்த நிலை அதற்குத் தெரிந்தே – ஒரு சுய நினைவுடன் – அது இருக்கிறது ! நானும் அதைப்போலவே முதுமை அடைய விரும்புகிறேன் - எனது அழகை நான் எப்போதும் நினைவில் கொண்டவராக; மலர்ச்சி என்ற சொல்லை எப்போதும் நினைவில் கொண்டவராக;!  (BLOOM - By Anna Voelker; தமிழில் மொழிபெயர்த்தவர் – முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)

எனது விதிக்கு நானே தலைவன் !

Posted: 10 Sep 2017 09:01 AM PDTஎனது விதிக்கு நானே தலைவன் !

எனது பாதை எவ்வளவு மோசமானது என்பது முக்கியமில்லை!
எனக்காகக் காத்திருக்கும் தண்டனை பற்றியும் எனக்குக் கவலையில்லை!
எனது விதிக்கு நானே தலைவன் !
எனது ஆன்மாவுக்கு நானே அதிகாரி!
('INVICTUS' By W.E. Healey; தமிழில் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்)

ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்? - இந்தியாவின் முதன்மையான கல்விச் செயல்பாட்டாளர் அனில் சடகோபன் அவர்களின் நேர்காணல்

Posted: 10 Sep 2017 08:13 AM PDT

தமிழர்கள்தாம் அரசியல் ஆதாயங்களுக்காக மருத்துவ நுழைவுத்தேர்வை (NEET) எதிர்க்கிறார்கள் என்கிறீர்கள். அப்படியானால் இவர் ஏன் எதிர்க்கிறார்? இந்தியாவின் முக்கியமான கல்விச் செயல்பாட்டாளரான பேராசிரியர் அனில் சடகோபால்! தற்பொழுது இவர் இந்தியா முழுவதும் பயணித்து இந்தத் தேர்வு முறைக்கு எதிராகத் தீவிரமாக விழிப்புணர்த்தி வருகிறார். இவர் என்ன தமிழரா? தமிழ்நாட்டுக் கட்சிகளில் உறுப்பினரா? அரசியலாளரா? அல்லது, தமிழ்நாட்டு மக்கள் போராடுவதைப் பார்த்து அந்தத் தாக்கத்தால் (influence) தானும் போராடுகிறார் என ...

அம்மாவுக்கு…

Posted: 10 Sep 2017 07:51 AM PDT

- அம்மா நம் எல்லோருடைய வாழ்க்கையும் ஆயுட்காலம் சிறைபோல, நான் அழவில்லை இந்தக் கலங்கி வீங்கிய நதியைத் தாண்டி நான் உன்னிடம் வந்து சேருவேன் நீ விளக்கை அணைத்து விடாதே நான் வந்து சேரும் வரை நமது வீட்டை யாருக்கும் கொடுத்து விடாதே – ————– ஆஷாலதா (மலையாளம்)\ தமிழில் சுகுமாரன்

இவ்வுலகம் இன்பமானதோர் இடமில்லை...!

Posted: 10 Sep 2017 07:48 AM PDT

மான்விழி தரும் தெம்பு! (ஒருபக்கக் கதை)

Posted: 10 Sep 2017 01:31 AM PDT

மான்விழி தரும் தெம்பு! (ஒருபக்கக் கதை) பல வருடங்களாக நான் பல ஊர்களில் கவனித்துவந்துள்ளேன் ! சிறு வியாபாரிகள் , வேகாத வெயிலில் பாரத்தைச் சுமந்துகொண்டு தெருதெருவாகச் சுற்றுவார்கள் ! அவர்களிடம் உள்ள பொருள்களெல்லாம் விற்றுத் தீர்ந்தாலும் ஐநூறு ரூபாய் தேறாது! ஆனாலும் வியர்வை சிந்த அலைவார்கள்! 'பேரிக்கா ! பேரிக்கா!' ; 'கொய்யா! கொய்யா!' ; 'நொங்கு! நொங்கு!' ; 'மீனு மீனோய்!'; 'எளனி எளனீ !' – என்றெல்லாம் தெருத்தெருவாகக் கத்திக் கத்தி விற்பார்கள்! எனக்கு வியப்பாக இருக்கும்! எப்படி அயராமல் ...

கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு

Posted: 09 Sep 2017 11:40 PM PDT

திருவனந்தபுரம், : கேரளாவில், கோவிலுக்கு யானையை தானமாக வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விலங்குகள் நல அமைப்பு, போர்க்கொடி துாக்கி உள்ளது. கேரள மாநிலம், கொல்லம் அருகே, ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு, தனிநபர் ஒருவர், யானையை தானமாக வழங்க முடிவு செய்து உள்ளார்.இதற்காக, கோவில் வளாகத்தில், செப்., 12ல் நிகழ்ச்சி நடக்கிறது; திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர், கோபாலகிருஷ்ணனிடம், யானை தானம் வழங்கப்படுகிறது.இந்நிகழ்ச்சி, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நடப்பதாகக் கூறி, அம்மாநிலத்தைச் ...

பொறுமை… நம்பிக்கை!

Posted: 09 Sep 2017 11:31 PM PDT

-ஜூலை 19 - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் ஆரம்பம் ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்வின் தாரக மந்திரமாக  கொள்ள வேண்டியது, பொறுமை மற்றும் நம்பிக்கை!  இந்த இரண்டையும் கடைப்பிடித்தால், வாழ்வில் வெற்றி  உறுதி என, நமக்கு அறிவுறுத்தியவள், ஆண்டாள். கலியுகம் பிறந்த சமயம், லட்சுமி தாயாரிடம்,  'தேவி... கலியுகம் பிறந்து விட்டது; நாம் பூலோகம்  சென்றால் தான், நிலைமையை சரிப்படுத்த முடியும்.  நீயும் என்னோடு வா...' என்றார், திருமால்.  'சுவாமி... தங்களுடன் சீதையாகவும், ருக்மணியாகவும்  வந்து பட்ட பாடு ...

காதலுக்கு காக்கை கூட தூது போகுமே!

Posted: 09 Sep 2017 11:23 PM PDT

படம் : காதலன் பாடல் : காதலிக்கும் இசை : ஏ.ஆர்.ரஹ்மான் பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : உதித் நாராயணன், எஸ்.பி.பாலசுப்ரமணியம - ---------------------------------- - காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம் கூட தங்கம் தானே காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே மின்னும் பருவம் கூட பவளம் தானே - சிந்தும் வேர்வை, தீர்த்தம் ஆகும் சின்ன பார்வை மோட்ஷம் ஆகும் காதலின் சங்கீதமே ம்.. ஹும் பூமியின் பூபாளமே காதலின் சங்கீதமே ம்.. ஹும் பூமியின் பூபாளமே — காதலிக்கும் ...

சபதம் எடுப்போம்! -கவிதை

Posted: 09 Sep 2017 11:22 PM PDT

-- - பொய்க்காத பருவமழை பொய்த்துப் போனது மரங்களை வெட்டிச்சாய்த்த மனிதமற்ற மனிதர்களின் பொய்யான வாழ்வால் தான்! - அடிக்கடி பூகம்பமாய் பூமி பொங்குவதெல்லாம் அன்பில்லாமல் அதன் இதயம் வரை ஆயுதங்களால் தோண்டுவதால் தான்! - ஏரிகளும் குளங்களும் மனிதர்களின் குடியிருப்புக்குள் நுழைவதெல்லாம் தங்களின் குடியிருப்பை மனிதர் பறித்துக் கொண்ட தவிப்பில் தான்! - அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வப்போது தன் எதிர்ப்பை காட்டத்தானே செய்யும் இயற்கை! - ஆனாலும் தன்னைக் காப்பாற்று என்ற இயற்கையின் எதிர்க்கூச்சல் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (201)

Posted: 09 Sep 2017 11:04 PM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு

Posted: 09 Sep 2017 07:57 PM PDT

ஐதராபாத், - ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 21–வது கூட்டம் ஐதராபாத் நகரில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமையில் நேற்று நடந்தது. இதில் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த நிதி மந்திரிகள் மற்றும் மத்திய, மாநில அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் மாநில நிதி மந்திரிகள் பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை குறைக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அதை ஜி.எஸ்.டி. கவுன்சில் ஏற்றுக் கொண்டது. இதேபோல் வரி அதிகமாக விதிக்கப்படும் பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யவேண்டும் ...

பராசக்தி...(கவிதை)

Posted: 09 Sep 2017 07:51 PM PDT

பராசக்தி...(கவிதை)
-
பராசக்தி!
இன்றிருக்கும்
மக்கள் தொகைக்கு
காணி நிலமெல்லாம்
வேண்டாம்!
-
அது உன்னால்
இயலாத காரியம்
அனைவருக்கும்
உடுத்தக் காதியும்
பேதமில்லா சாதியும்
மதமில்லா மனிதமும்
கொடு போதும்!
-
--------------------
கோ.பழநிவேல்
சிறுதுளிகள்...(தொகுப்பிலிருந்து)


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™