Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு

Posted: 01 Sep 2017 03:46 PM PDT

ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு சென்னை: வாகனம் ஓட்டும்போது அந்த வாகனத்தை ஓட்டுபவர்கள் ஒரிஜினல் லைசென்சை வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் வண்டியில் செல்லும்போது தங்கள் கையில் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன்படி, இன்று முதல் அந்த உத்தரவு அமலுக்கு வந்தது.   ஆனால், வாகன ஓட்டிகள் மற்றும் சமூகஆர்வலர்கள் இந்த உத்தரவுக்கு ...

முதுகு வலிக்கு மருந்து- பெரியவா தரும் health tips

Posted: 01 Sep 2017 03:04 PM PDT

முதுகு வலிக்கு மருந்து- பெரியவா தரும் health tips பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு, ரொம்ப கஷ்டப்பட்டு எழுந்தார் ஒரு பக்தர்! நடு முதுகுத்தண்டில் தாங்க முடியாத வலி! "நடு முதுகுல... பயங்கர வலி பெரியவா..! அத்தனை வகை... வைத்யமும் பாத்தாச்சு! ஒண்ணும் கேக்கல! பணம் கரைஞ்சதுதான் மிச்சம்! வலி போகல!...பெரியவாதான் இத.. ஸொஸ்தப்படுத்தணும்" முகத்தில் வேதனை தெரிந்தது. " முன்னெல்லாம்.....செக்குல ஆட்டின நல்லெண்ணெய் தேச்சு, கொஞ்சம் ஊறி, வெந்நீர்ல... சீக்காயோ, அரப்போ தேச்சு குளிப்பா!. இப்போ ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (198)

Posted: 01 Sep 2017 07:59 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !

Posted: 01 Sep 2017 07:27 AM PDT

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி இது தான் : 1 கிலோ சிகைக்காய் 100 கிராம் வெந்தயம் 1/4 கிலோ பயத்தம் பருப்பு ( பாசிப்பயறு கூட போடலாம் , அதாவது தோலுடன் கூட போடலாம் ) 100 கிராம் காய்ந்த நெல்லி(கொட்டை எடுக்கவும் ) 100 கிராம் கார்போக அரிசி 100 கிராம் பூவந்திக் கொட்டை ( கொட்டைஎடுக்கவும் ) வெட்டி வேர்,ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, இலை, பெருமாளுக்கு சார்தின ரோஜா பூக்கள், தவனம், மரிக்கொழுந்து போன்றவற்றை காயவைத்து மில்லில் அரைக்கலாம். தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, சிகைக்காய் ...

நீலத் திமிங்கலம்

Posted: 01 Sep 2017 07:27 AM PDT

செல்போனில் ஆடியே செத்துவிட்டான் பெற்றமகன் ....பொல்லாத ஆட்டத்தில் போய்விட்டான் - நல்லாய் ! தமியனாய் நிற்கின்றேன் தண்டனையோ நீலத் ....திமிங்கலத்தால் வந்த வினை . அடியொன்று தந்துவிடு தப்பில்லை ! ஆனாலும் ...ஆன்ராய்டு போன்மட்டும் கொடுக்காதே மகனுக்கு துடிப்பான வயதினிலே துள்ளும் பருவத்தில் ,,,தூங்காமல் இரவினிலே தேர்வுக்குப் படிப்பதுபோல் நடித்திடுவான் நம்பாதே ! நாளும் வாட்சப்பில் ...நங்கைகள் பலருடனே நட்பில் இருந்திடுவான் ! இடிபோன்ற செய்தி ஒருநாள் வந்திடுமே ! ... இவனுடன் அவளோ ? அவளுடன் ...

தமிழ் மரபு என்றால் என்ன? கேட்க-படிக்க

Posted: 01 Sep 2017 07:18 AM PDT

தமிழ் மரபு என்றால் என்ன? கேட்க-படிக்க அமெரிக்கா, வட கரோலினா, சார்லட் நகரில் இருந்து பழமைபேசி பேசிய பேச்சு, அமெரிக்க வானொலியில் இரண்டாம் திகதி ஒலிபரப்பப்பட்டது.நீண்ட காணொளிப்பதிவு என்பதால் - இணையத் தொடர்பு வேகம் குறைவாக இருப்பவர்கள் உலாவி பாக்கெட் மூலம் இணயத் தொடர்பு இல்லாத நிலையிலும் கேட்கலாம்/படிக்கலாம். ஒலி வடிவில்லாமல் படிக்க விரும்புபவர்கள் - கீழே கிளிக் செய்து படிக்கலாம். மரபு-1 மரபு-2 நன்றி- அமெரிக்க வானொலி.

கைவிடுதல் - கவிதை

Posted: 01 Sep 2017 06:29 AM PDT

உன்னைக் கைவிட வேண்டுமென்றால் உன்னைப் பற்றிய இல்லாத ஓர் அவதூறை நம்பியாக வேண்டும் உன் தரப்பு நியாயத்தை சகட்டுமேனிக்கு ஏளனப்படுத்த வேண்டும் இன்னும் கீழ்த்தரமாய் இறங்கி சில அத்தியாயங்கள் படைக்க வேண்டும் என் மீதான நம்பகத்தன்மையை உன்னிடமிருந்து வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் உன்னைக் கைவிடுதல் என்பது அத்தனை எளிதான ஒன்றல்ல ஆயினும் நான் உன்னிடமும் நீ என்னிடமும் மாயையைப் போலாகும் வரை விடுவதாயில்லை கைவிடுதல் எனும் ஓர் அத்தியாயத்தை. - ------------------------   - கோ.பகவான் நன்றி- ...

விநோத செய்திகள்

Posted: 01 Sep 2017 06:26 AM PDT

- - விஐபி சேர்! - விழாக்களில் விஐபிகளுக்கு சேர் ஓகே. ஆனால், பைக்கிலுமா? யெஸ். தாய்லாந்தில் ஒருவர் தன் பைக் பின் சீட்டில் விஐபி சேரை பொருத்தியதோடு அதில் தன் செல்ல நாயையும் உட்காரவைத்து விர்ரென பறந்து செல்லும் வீடியோ பலருக்கும் செம கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறது. நாயின் மனதைரியம்தான் வீடியோவின் பெருமையே. - --------------------------------------

முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி)

Posted: 01 Sep 2017 06:20 AM PDT

முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) 'அவள் வந்த பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம்!' – சொல்கிறோம் ! இதிலுள்ள , 'பிற்பாடு' நோக்கத் தக்கது! 'பிற்பாடு' இருக்கிறதே , இதுபோல 'முற்பாடு' என ஒன்று இருக்கிறதா? இருக்கிறது ! பதிற்றுப்பத்து என்ற சங்க இலக்கியத்திற்குப் பழைய உரை ஒன்று உள்ளது ! அதில், "வியன்றானை யென்றது பகைவர் நாட்டு எல்லையின் முற்பாடு சென்றுவிட்ட தூசிப் பெரும்படையை" என எழுதியுள்ளார் (பதிற்.33:5, பழைய உரை)! இதற்குத் தனது அடிக்குறிப்பில் , உ.வே.சா. , "முற்பாடு – முன்னே; பிற்பாடு ...

வேண்டும் - கவிதை

Posted: 01 Sep 2017 04:07 AM PDT


இன்று இந்தியா கிரிக்கெட்
விளையாடுவதால்
மழை வரக்கூடாது என
வேண்டிக்கொண்டிருக்கிறான்.
பட்டணத்தில் படிக்கும்
தன் மகனின் பீஸ் கட்டவாவது
மழை வராதா?
நட்டு வச்ச மிளகாய் செடி காய்கிறதென
வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்
விவசாயி.
=
================================
- எஸ்.சேக் சிக்கந்தர்

நன்றி- குங்குமம்
----------

இந்திய வம்சாவளி ஜெ.ஒய்.பிள்ளை சிங்கப்பூர் ஆக்டிங் ஜனாதிபதியாக நியமனம்

Posted: 01 Sep 2017 03:47 AM PDT

- சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து கடந்த 1965-ம் ஆண்டு சிங்கப்பூர் தனியாக பிரிந்தது. புதிதாக உருவான சிங்கப்பூர் அரசில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெ.ஒய்.பிள்ளை (வயது 83) அரசு பணியில் சேர்ந்தார். சிங்கப்பூர் அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு முதல் ஜெ.ஒய்.பிள்ளை ஜனாதிபதியின்  முதன்மை ஆலோசகராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் சிங்கப்பூர் ஜனாதிபதி டோனி டான் கெங் யாமு பதவிகாலம் முடிவடைந்த நிலையில் சிங்கப்பூர் ஆக்டிங் கவர்னராக இந்தியா ...

மனித முக விநாயகர்!

Posted: 01 Sep 2017 03:40 AM PDT

- விநாயகர் என்றாலே, யானை முகத்தோனாகத் தான், தரிசித்துள்ளோம். அவரை மனித முகத்துடன் தரிசிக்க, திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோவிலுக்கு தான் செல்ல வேண்டும். பார்வதி தேவி, தன் உடலில் இருந்து ஆண் குழந்தை ஒன்றை உருவாக்கி, அதற்கு, 'விக்னேஷ்வரன்' என்று பெயரிட்டாள். ஒரு நாள், மனித முகத்துடன் இருந்த விக்னேஷ்வரரை அழைத்து, தன் இருப்பிடத்திற்குள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்தாள். விக்னேஷ்வரன் வாசலில் காவலுக்கு இருந்த போது அங்கு வந்தார், சிவன். அவரை, ...

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை கிடையாது!

Posted: 01 Sep 2017 03:31 AM PDT

இந்தியாவில் இருக்கும் அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. வங்கிக் கணக்கு ஆரம்பிப்பது தொடக்கி, சத்துணவு பெறுவதுவரை ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஆதார் உரிமம் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 182 நாள்களாவது இந்தியாவில் குடியிருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்கப்படுகிறது. இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள், ஆதார் அட்டை பெற எந்த நிபந்தனையும் தேவையில்லை. 'வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், ஆதார் அட்டை பெற ...

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை

Posted: 01 Sep 2017 12:23 AM PDT

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
நண்பர்களே பகிருங்கள்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™