Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


உள்ளாட்சி தேர்தல் வழக்கில் தமிழக அரசுக்கு 'நோட்டீஸ்!'

Posted: 01 Sep 2017 08:39 AM PDT

தமிழகத்தில், 15 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரும் வழக் கில், ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்கும் படி, தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் கமிஷ னுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15 நாட்களுக்குள்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்காததால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், 15 நாட்களுக் குள் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு பொதுநலன் வழக்கு அமைப்பின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு, நீதிபதிகள், ரஞ்சன் கோகோய், நவின் சின்ஹா அமர்வு முன் நேற்று ...

செல்லாத ரூபாய் நோட்டு திட்ட பலன் தொடரும்: மத்திய அரசு

Posted: 01 Sep 2017 08:43 AM PDT

புதுடில்லி :'செல்லாத நோட்டு அறிவிப்பால், ஏராளமான பலன்கள் கிடைத்துள்ளன. நீண்ட காலத்திற்கு, இந்த பலன்கள் தொடரும்' என, மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, 2016, நவ., 8ல் வெளியானது; கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்க, இந்த நடவடிக்கையை அமல்படுத்திய தாக மத்திய அரசு தெரிவித்தது. பழைய நோட்டுகளை வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய, அவகாசம் வழங்கப்பட்டது.அந்த சமயத் தில், நாட்டில் புழக்கத்தில் இருந்த நோட்டு களில், 99 சதவீதம், அதாவது, செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 15.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் திரும்ப ...

'ப்ளூ வேல்' விபரீதம்: நீதிமன்றம் முன்வந்து விசாரணை

Posted: 01 Sep 2017 08:55 AM PDT

மதுரை:'ப்ளூ வேல்' விளையாடிய, மதுரை மாணவர் விக்னேஷ் தற்கொலை விவகாரத்தை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

'ப்ளூ வேல்' விளையாட்டால், மதுரையில், கல்லுாரி மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வின் கவனத்திற்கு, வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கொண்டு வந்தார்.அவர் கூறுகையில், ''ப்ளூ வேல் விளையாட்டை தடை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்; நீதிமன்றம் தானாக முன்வந்து, பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும்,'' ...

எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்யச் சொன்ன தினகரனுக்கு'கெடு '

Posted: 01 Sep 2017 09:05 AM PDT

'ஆட்சியை கவிழ்க்க, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யுங்கள்' என, தினகரன்கூறியதற்கு, அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

'ராஜினாமா செய்தால், ஆட்சியும் போய் விடும்; எங்களுடைய பென்ஷனும் பறிபோய் விடும்' என, கொந்தளித்துள்ளனர். 'ராஜினாமா செய்யும் படி மிரட்டல் தொடர்ந்தால், அணி மாறி விடு வோம்' என்றும், அவர்கள் கொடி பிடிக்க துவங்கியுள்ளனர்.டில்லி, திஹார் சிறையிலிருந்து வெளியே வந்ததும், தினகரனை, 37 எம்.எல்.ஏ.,க்கள், சென்னையில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அ.தி.மு.க., அணிகள் இணைந்த பின், அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை குறைந்தது; 19 ...

அரியலூர் மாணவி தூக்கிட்டு தற்கொலை; 'நீட்' தேர்வால் தொலைந்தது டாக்டர் கனவு

Posted: 01 Sep 2017 09:27 AM PDT

பெரம்பலுார்: 'நீட்' தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்ததால், ப்ளஸ் 2வில் அதிக மதிப்பெண் எடுத்தும், சீட் கிடைக் காத விரக்தியில், அரியலுார் மாணவி அனிதா, துாக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார்.

விரக்தி
அரியலுார் மாவட்டம், செந்துறை அடுத்த குழுமூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் அனிதா, 17; தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை துாக்கும் தொழிலாளி. அனிதாவுக்கு, 6 வயது இருக்கும் போதே, நோய் வாய்ப்பட்ட தாய்ஆனந்தம், தரமான சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தார்.இதனால், அனிதாவுக்கு அப்போதே டாக்டராக வேண்டும் என்ற ...

போபர்ஸ் பீரங்கி வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு

Posted: 01 Sep 2017 10:57 AM PDT

புதுடில்லி: இந்திய ராணுவத்துக்கு போபர்ஸ் பீரங்கிகள் வாங்குவதில் நடந்த மோசடியில், ஐரோப்பாவில் செயல்படும் ஹிந்துஜா சகோ தரர்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்து, டில்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்க்கும் வழக்கை விசாரிக்க, உச்ச நீதிமன்றம் முன்வந்தது.

ஐரோப்பிய நாடான, ஸ்வீடனைச் சேர்ந்த போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 1,437 கோடி ரூபாய் செலவில், 400 பீரங்கிகள் வாங்க, 1986ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக, போபர்ஸ் நிறுவனம் தெரிவித்தது.அதையடுத்து, 1990ல், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரித்தது. போபர்ஸ் ...

வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் அதிரடியாக ரூ.74 உயர்ந்தது

Posted: 01 Sep 2017 11:04 AM PDT

சென்னையில், வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை, அதிரடியாக, 74 ரூபாய் உயர்ந்துள்ளது.

இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடு மற்றும் வணிக பயன்பாடு, சமையல் காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்கின்றன. சர்வதேசசந்தையில்,கச்சாஎண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, மேற்கண்ட சிலிண்டர் கள் விலை, ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைக்கப் படுகிறது.அதன்படி,சென்னையில், ஆகஸ்டில், வீட்டு சிலிண்டர் விலை, 533 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று இதன் விலை அதிரடியாக, 74 ரூபாய் உயர்ந்து, 607 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, வணிக ...

'ஒரிஜினல் லைசென்ஸ்' கட்டாயத்திற்கு தடை

Posted: 01 Sep 2017 11:18 AM PDT

சென்னை:'வாகன ஓட்டுனர்கள், அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை, வரும், 5ம் தேதி வரை அமல்படுத்தக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர், சுகுமார் தாக்கல் செய்த மனு:ஓட்டுனர்களின் உரிமங்கள், உரிமையாளர்கள் வசம் இருக்கும். வாகனங்கள் ஓட்டும்போது, உரிமத்தின் உண்மை நகல், ஓட்டுனர் வசம் இருக்கும்.
அதிகாரம் உள்ளது
வாகன உரிமம், பதிவு சான்றிதழ், காப்பீட்டு ஆவணங்கள், ஓட்டுனர் உரிமம் போலியானது என்றால், அவற்றை பறிமுதல் செய்ய, போலீசாருக்கோ அல்லது ...

பொதுக்குழுவுக்கு போனால் நடவடிக்கை அ.தி.மு.க.,வினருக்கு தினகரன் எச்சரிக்கை

Posted: 01 Sep 2017 11:23 AM PDT

சென்னை:'அ.தி.மு.க., சார்பில், செப்., 12ல் நடைபெற உள்ள, பொதுக்குழுவில் கலந்து கொள்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக் கப்படும்' என, தினகரன் எச்சரிக்கை விடுத்துள் ளார். அவரது அறிக்கை:

அ.தி.மு.க.,வையும், இரட்டை இலை சின்னத் தையும் முடக்கும் எண்ணத்தோடு, மதுசூதனன், பன்னீர்செல்வம், செம்மலை ஆகியோர், தேர்தல் கமிஷனில் மனு தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில், மார்ச், 22ல், இரட்டை இலை சின்னத்தை முடக்கி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
மீட்டெடுப்போம்
இவ்வழக்கை, சசிகலாவும், நானும் சட்டப்பூர் வமாக எதிர்கொண்டு வருகிறோம். அ.தி.மு.க., வையும், சின்னத்தையும், ...

'புளூ வேல்' மிரட்டல்: கணினிகளுக்கு பாதுகாப்பு

Posted: 01 Sep 2017 12:34 PM PDT

'புளூ வேல்' இணையதள விளையாட்டின் மிரட்டலை தொடர்ந்து, பள்ளி, கல்லுாரிகளில் கணினிகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்கள், இளைஞர்களை தற்கொலைக்கு துாண்டும், 'புளூ வேல்' இணையதள விளையாட்டை மாணவர்கள் விளையாடாமல் தடுக்க, பள்ளிகளில் கணினிகளை பாதுகாப்பாக இயக்குமாறு, பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார். ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்புகள், ஐ.சி.டி., என்ற கணினி வழி கல்வி மையங்கள் போன்றவற்றில், கணினிகளில், ஆன் - லைன் விளையாட்டுகளை, தொழில்நுட்ப ரீதியாக தடுக்க, பள்ளிகளுக்கு ...

போராட்டம் தொடரும்! ஜி.ஜே.எம்., அறிவிப்பு

Posted: 01 Sep 2017 01:51 PM PDT

டார்ஜிலிங், ''கூர்க்காலாந்து மாநிலம் கோரி நடந்து வரும் போராட்டம் தொடரும்,'' என, ஜி.ஜே.எம்., எனப்படும், கூர்க்காலாந்து ஜன மோர்ச்சா அமைப்பின் தலைவர், பிமல் குரங்க் அறிவித்துள்ளார். போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்த பினய் தமாங்க், கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.மேற்கு வங்கத்தில், முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மாநிலத்தில் டார்ஜிலிங் உள்ளிட்ட மலைப் பிரதேசங்கள் அடங்கிய, கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என, ஜி.ஜே.எம்., எனப்படும் கூர்க்காலாந்து ஜன மோர்ச்சா அமைப்பு, ஜூன், 15 ...

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழை

Posted: 01 Sep 2017 04:14 PM PDT

சென்னை: 'தமிழகத்தில், இன்னும் மூன்று நாட்களுக்கு, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் கூறியதாவது: தமிழகத்தின் நிலப்பகுதியில், வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி உள்ளதால், தமிழகத்தில், இன்னும் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம். வட மற்றும் தென் பகுதிகளில், கடலுக்கு அப்பால் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை, 8.30 மணியுடன் முடிந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™