Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இந்தியாவில் உலகத்தர பல்கலை: நெறிமுறைகள் தயார்

Posted: 07 Aug 2017 07:15 AM PDT

'இன்ஸ்டிடியூஷன் ஆப் எமினென்ஸ்' என்ற பெயரில், உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கான, நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அடுத்த, 10 ஆண்டு களுக்குள், உலகின் தலைச் சிறந்த, 500 பல்கலைகள் பட்டியலில், நம் நாட்டின் கல்வி நிறுவனங்களும் இடம்பெறும் வகையில், மேன்மைமிகுந்த கல்வி நிறுவனங்கள் என்ற திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வந்து படிக்கும் வகையில், இந்தக் கல்வி நிறுவனங்களின் தரத்தை நிர்ணயிப்பதற்கான நெறிமுறைகளை வகுக்கும்படி, மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
சம்பளம் நிர்ணயம்
அதன்படி, ...

தமிழகம் மின்சாரம் திருடுகிறதாம்! அவதூறு பரப்புகிறது கேரளா

Posted: 07 Aug 2017 09:05 AM PDT

திருவனந்தபுரம்: தேனி மாவட்டம், கம்ப மெட்டில் அமைக்கப்பட்டுள்ள, தமிழக போலீஸ் சோதனைச்சாவடிக்கு, கேரள பகுதியில் இருந்து மின்சாரம் திருடப்படுவதாக, அவதுாறு பரப்பப்பட்டு வருகிறது.

கம்ப மெட்டில், தமிழக - கேரள மாநிலங்களிடையே, எல்லை பிரச்னை உள்ளது. தமிழக பகுதியில், 500 மீ., வரை, கேரளா ஆக்கிரமித்துள்ளது. எல்லை கற்கள், கேரள வனத்துறையினரால் பல முறை அகற்றப்பட்டு உள்ளன. ஆக்கிரமிப்பு பகுதியில், கட்டுமான பணிகளும் நடக்கின்றன.
இந்நிலையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார்,சமீபத்தில் இந்த பகுதியில் ஆய்வு செய்தார்.
மலையாள நாளிதழ்கள்
...

சோனியா விசுவாசி அஹமது படேலின் வெற்றி கேள்விக்குறி!  குஜராத்தில் இன்று நடக்கிறது ராஜ்யசபா தேர்தல்

Posted: 07 Aug 2017 09:10 AM PDT

ஆமதாபாத்: பெரும் எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புக்கு இடையே, குஜராத்தில், மூன்று ராஜ்யசபா, எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், இன்று நடக்கிறது. சோனியாவின் விசுவாசியும், அவரது அரசியல் ஆலோசகருமான, அஹமது படேலின் வெற்றியை பறிப்பதற்கு, பா.ஜ., தீவிரம் காட்டுவதால், காங்கிரஸ் கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர்.

குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இம்மாநில சட்டசபை, 182 எம்.எல்.ஏ.,க்கள் உடையது. ஆளும், பா.ஜ.,வுக்கு, 121 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான, காங்.,கிற்கு, 57 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர்; இதில், ஆறு பேர், சமீபத்தில், கட்சியை ...

மற்ற அணி எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வரின் தூதுக்குழு சமரச பேச்சு

Posted: 07 Aug 2017 09:16 AM PDT

'தி.மு.க., நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தால், பன்னீர்செல்வம், தினகரன் அணி, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரிக்கக் கூடாது' என, அவர்களிடம், முதல்வர் பழனிசாமி தரப்பில், நான்கு துாதர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சட்டசபையில், ஆக., 20க்கு பின், முதல்வர் பழனிசாமி அரசு மீது, பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரபூர்வமாக சுமத்தி, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து, ஆட்சியை கவிழ்க்கும் வியூகத்தை, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வகுத்துள்ளார்.அவரது திட்டத்தை முறிடிக்க, முதல்வர் பழனிசாமி தரப்பு, தீவிர மாக ஈடுபட்டுள்ளது. இதற்காக, நான்கு பேர் துாதுக் குழுவை, முதல்வர் ...

'நீட்'தேர்வு விவகாரம் ஒரு வாரத்தில் முடிவு தெரியும் : சுருதி மாறும் தமிழக அரசு

Posted: 07 Aug 2017 09:52 AM PDT

''நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமா, கிடைக்காதா என, இந்த வாரத்திற்குள் முடிவு தெரிந்து விடும்,'' என, தமிழக சுகாதாரத்துறை செயலாளர், ராதாகிருஷ்ணன், கூறினார்.
மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்விலிருந்து, தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்துவதற்காக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அடிக்கடி டில்லி வந்து செல்கிறார்.
தனி ஆர்வம்
நேற்று, மீண்டும் அவர் டில்லி வந்தார்.வட மாநிலங்களில் பிரசித்தி பெற்ற, ரக் ஷா பந்தன் பண்டிகை, நேற்று கொண்டாடப்பட்டதால், ...

அ.தி.மு.க., பிரமாண பத்திரத்தில் சசி, தினகரன் பெயரை நீக்க திட்டம்!

Posted: 07 Aug 2017 10:07 AM PDT

தேர்தல் கமிஷனில், சசிகலா, தினகரன் பெயருடன், ஏற்கனவே தாக்கல் செய்த, அ.தி.மு.க.,வினரின் பிரமாண பத்திரங்களுக்கு மாற்றாக, இருவரின் பெயரும் இல்லாத,
புதிய பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்வது குறித்து, முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.
இதன் மூலம், அரசுக்கு, மன்னார்குடி சொந்தங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தவிர்க்க, அமைச்சர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அத்துடன், பன்னீர் அணியுடனான இணைப்பு நிச்சயம் என்றும், முதல்வர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.,வில், சசிகலா அணி மற்றும் பன்னீர் அணியினர், ...

சம்மனுக்கு ஆஜராகி இருந்தால் பிரச்னை இல்லை: சிதம்பரம் மகன் கார்த்திக்கிற்கு மத்திய அரசு பதில்

Posted: 07 Aug 2017 10:25 AM PDT

சென்னை: 'சி.பி.ஐ., அனுப்பிய சம்மனுக்கு, கார்த்தி ஆஜராகி இருந்தால், தேடப்படும் நபர் என்ற சுற்றறிக்கை வந்துஇருக்காது' என, சென்னை உயர் நீதி மன்றத்தில், மத்திய அரசு வழக்கறிஞர் வாதாடினார்.

மும்பையை சேர்ந்த, 'ஐ.என்.எக்ஸ்., மீடியா' என்ற நிறுவனம், அன்னிய முதலீடு பெற, அன்னிய முதலீட்டு வளர்ச்சி வாரியத்தின் ஒப்புதல் வாங்கித்தர, தன் செல்வாக்கை பயன்படுத்தியதாக, முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது, குற்றம் சாட்டப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகும்படி, கார்த்திக்கு, சி.பி.ஐ., தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
ரத்து செய்யக் கோரி
அதை ...

பாடத்திட்டம் தயாரிப்பில் புதுமை 'முதல்வன்' பட ஸ்டைலில் பெட்டி

Posted: 07 Aug 2017 11:53 AM PDT

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டம் குறித்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், கருத்து கேட்க, 'முதல்வன்' பட ஸ்டைலில், கருத்து அறியும் பெட்டி, பள்ளிகளில் வைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், 14 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. கல்வியாளர்களும், ஆசிரியர்களும், பாடத்திட்டத்தை மாற்ற, அரசை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பள்ளிக் கல்வி அமைச்சராக, செங்கோட்டையன், செயலராக உதயசந்திரன் மற்றும் இயக்குனராக இளங்கோவன் பதவியேற்றதும், பள்ளிக் கல்வியில் அதிரடி மாற்றங்கள் துவங்கின.கருத்துக் கேட்பு கூட்டம்இதன்படி, 'ஒன்றாம் வகுப்பு ...

இன்றைய(ஆக.,8) விலை: பெட்ரோல் ரூ.69.13; டீசல் ரூ.59.71

Posted: 07 Aug 2017 12:16 PM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.69.13 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.71 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,8) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 10 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.69.13 காசுகளாகவும், டீசல் விலை 12 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.59.71 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,8) காலை 6 மணி முதல் அமலுக்கு ...

வருமான வரி தாக்கல் உயர்வுக்கு காரணம் என்ன

Posted: 07 Aug 2017 12:29 PM PDT

புதுடில்லி, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2016 -17 நிதியாண்டில்வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 25 சதவீதம் உயர்ந்துள்ளது.

'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புதான் இதற்கு காரணம்' என, மத்திய அரசு கூறியுள்ளது.கடந்த, 2016 - 17 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஆக., 5ல் முடிந்தது. கணக்கு தாக்கல் தொடர்பாக, மத்திய நிதியமைச்சம் வெளியிட்டுள்ள செய்தி யில்கூறியுள்ளதாவது:
2.82 கோடி பேர்,
கடந்த, 2016 - 17 நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான, ஆக., 5வரை, 2.82 கோடி பேர், கணக்கை தாக்கல் ...

உறியடி விழாவுக்கு கட்டுப்பாடு; மஹாராஷ்டிரா அரசு அறிவிப்பு

Posted: 07 Aug 2017 01:18 PM PDT

மும்பை: 'கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும், 'தஹி ஹண்டி' எனப்படும் உறியடித் திருவிழாவின்போது, ஒருவர் மீது ஒருவர் ஏறி, உறியை உடைப்பதற்கு உயர கட்டுப்பாடு ஏதும் இல்லை. அதே நேரத்தில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கு அனுமதி கிடையாது' என, மஹாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
உறியடித் திருவிழா:
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, மஹாராஷ்டிரா மாநிலத்தில், உறியடித் திருவிழா மிகவும் கோலாகலமாக நடக்கும். அப்போது, ஒருவர் மீது ஒருவர் ஏறி, உயரத்தில் இருக்கும் உறியை உடைக்க வேண்டும். இது தொடர்பான வழக்கில், மும்பை ...

'பைப்லைன்' அமைக்க வங்கதேச அரசுடன் பேச்சு

Posted: 07 Aug 2017 02:01 PM PDT

அகர்தலா: வங்கதேசத்தில் உள்ள, சிட்டகாங்கில் இருந்து, வட கிழக்கு மாநிலமான திரிபுராவுக்கு, இயற்கை எரிவாயு எடுத்துச் செல்லும், குழாய்கள் அமைப்பது தொடர்பாக, வங்கதேச அரசுடன் பேச்சு நடத்தி வருவதாக, பெட்ரோலிய அமைச்சர், தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான, திரிபுரா தலைநகர், அகர்தலா சென்றுள்ள, மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, தர்மேந்திர பிரதான், நிருபர்களிடம் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரியில் இருந்து, அண்டை நாடான, வங்கதேசத்தில் உள்ள பார்வதிபூருக்கு, டீசல் எடுத்துச் செல்ல, குழாய்கள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™