Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள தமிழக அமைச்சர்கள்... குழப்பம்!

Posted: 29 Aug 2017 08:19 AM PDT

தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே அளித்த பிரமாண வாக்குமூலங்களை திரும்பப் பெறு வதா, வேண்டாமாஎன்பது குறித்து, டில்லியில் யாரிடம் யோசனை கேட்பது என்ற குழப்பத் தில், தமிழக அமைச்சர்கள் சிக்கியுள்ளனர்.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ளஉச்சகட்ட குழப்பத்தை அடுத்து, இரட்டை இலைச் சின்னத்தை யார் கைப்பற்றுவது என்பதில், அ.தி.மு.க.,வின் இரு அணியினரும், தேர்தல் ஆணையத்தின் கதவுகளை தட்ட துவங்கியுள்ளனர். தமிழகத் தில், அ.தி.மு.க., வில், தினமும் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்தாலும், தேர்தல் ஆணை யத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க., என்பது, இன்னும் இரண்டு அணிகளாகவே பார்க்கப்படுகிறது.சசிகலா ...

பாடம் கற்க வேண்டுமாம்!: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை

Posted: 29 Aug 2017 08:28 AM PDT

புதுடில்லி: 'டோக்லாம் எல்லையில் படைகளை திரும்ப பெற்றதன் மூலம், இந்தியா, பாடம் கற்க வேண்டும்' என, சீனா எச்சரித்துள்ளது.

டோக்லாம் எல்லைைய ஒட்டிய சீனப் பகுதி களில், தங்கள் நாட்டு ராணுவம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என்றும் தெரிவித்துள்ளது.வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் எல்லையில் அமைந்துள்ள டோக்லாம் பகுதியை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இதற்கு, நம் ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சீனா ராணுவ வீரர்களை, சாலை அமைக்க விடாமல், நம் வீரர்கள் விரட்டியடித்தனர். இதையடுத்து, ...

ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., தலைவர்கள் அடுத்த மாதம் ஆலோசிக்க திட்டம்

Posted: 29 Aug 2017 08:28 AM PDT

புதுடில்லி: ஆர்.எஸ்.எஸ்., தலைமையில், பா.ஜ., உள்ளிட்ட, அதன் துணை அமைப்புகளின் 3 நாள் ஆலோசனை கூட்டம், அடுத்த மாதம், உ.பி.,யில் உள்ள மதுராவில் துவங்குகிறது.

ஆர்.எஸ்.எஸ்.,சுடன் இணைந்து, அதன் கொள்கை சார்ந்த,பா.ஜ., விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட துணை அமைப்பு கள் இயங்கி வருகின்றன. இந்த அமைப்புகளின் மூன்று நாள் ஆலோசனை கூட்டம், உத்தர பிரதேச மாநிலம், மதுராவில், செப்.1ல் துவங்கு கிறது. ஆர்.எஸ்.எஸ்., தலைவர், மோகன் பாகவத், பொதுச் செயலர் பையாஜி ஜோஷி, பா.ஜ., தலைவர் அமித் ஷா, விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர், பிரவீண் தொகாடியா உள்ளிட்டோர், இந்த கூட்டத்தில் ...

'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் வெளி மாநில மாணவர்கள் சேரவில்லை'

Posted: 29 Aug 2017 08:46 AM PDT

சென்னை: ''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கையில் ஒருவர் கூட, வெளி மாநிலத்தை சேர்ந்தவர் இல்லை,'' என, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் கூறினார்.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில், கேரளாவைச் சேர்ந்த ஒன்பது பேர், இரண்டு இருப்பிட சான்றிதழ் சமர்ப்பித்து, மோசடி செய்துள்ளதாக, அரசு வழக்கறிஞர், அஜ்மத் அலி, கமிஷனர் அலுவலகத்தில் புகார் கூறி னார். அதேபோல், மருத்துவ மாணவர் சேர்க்கை யில், 1,000மாணவர்கள் போலி சான்றிதழ் வழங்கி உள்ள தாக, விக்னயா என்பவரும் புகார் அளித்துள் ...

இலவச, 'லேப் - டாப்' திட்டம் தமிழகத்தில் மீண்டும் துவக்கம்

Posted: 29 Aug 2017 08:57 AM PDT

தமிழகத்தில், நிறுத்தப்பட்டிருந்த இலவச, 'லேப் - டாப்' வழங்கும் திட்டம், மீண்டும் துவக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், 2011 முதல், அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் , பயிலும், மாணவ மாணவியருக்கு, இலவசமாக 'லேப் -- டாப்' வழங்கப்படுகிறது. 2016 வரை, 40 லட்சம், 'லேப் - டாப்'கள் வழங்கப்பட்டன. கடந்த, 2016ல், இந்த வினியோகம்,திடீரென நிறுத்தப்பட்ட தால், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட, மாணவ மாணவியர் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, இந்த பணி மீண்டும் துவக்கப்பட்டுஉள்ளது.இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது: டெண்டரில் பங்கேற்ற ...

போட்டி பொதுக்குழு: சசி குடும்பம் ஆலோசனை

Posted: 29 Aug 2017 09:56 AM PDT

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்திற்கு முன், புதிதாக நியமித்த நிர்வாகிகள் உதவியுடன், போட்டி பொதுக்குழுகூட்டத்தை நடத்துவது குறித்து, சசிகலா குடும்பத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.அ.தி.மு.க., அணிகள் இணைந்த பின், சசிகலா குடும்பத்தை, கட்சியை விட்டு நீக்க, முடிவு செய்துள்ளனர்.

நிர்வாகிகள் நியமனம் : இதற்காக, செப்., 12ல், சென்னையில், அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என, அதிகார பூர்வமாக அறிவித்து உள்ளனர்.இதற்கிடை யில், தனக்கு ஆதரவு அளிக்காத, கட்சி நிர்வாகி களை நீக்கி விட்டு, தங்கள் ஆதரவாளர் களை, புதிய நிர்வாகிகளாக, தினகரன் நியமித்து ...

தினகரன், 'ஸ்லீப்பர் செல்'லில் அமைச்சர் நடராஜன்? : சசிகலா புகழ்பாடும் மொபைல் பேச்சு அம்பலம்

Posted: 29 Aug 2017 10:04 AM PDT

திருச்சி: 'சசிகலாவை எல்லாம் பதவியை விட்டு எடுக்க மாட்டோம்' என, அமைச்சர் நடராஜன் மொபைல் போனில் பேசியது, 'லீக்' ஆகியுள்ளதால், அவர், தினகரனின், 'ஸ்லீப்பர் செல்'களில் ஒருவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்தவர், சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன். சமீபத்தில், தினகரனை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, இவரது மாவட்ட செயலர் பதவியை பறிப்பதாக, தினகரன் அறிவித்தார். இந்நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக மொபைல் போனில், தினகரன் ஆதரவாளருடன் நடராஜன் பேசியது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதன் விபரம்:
தினகரன் ஆதரவாளர்: சார் வணக்கம், ...

தினகரனுடன் இருப்பவர்களில் 11 பேருக்கு வலை

Posted: 29 Aug 2017 10:10 AM PDT

தினகரன் அணியை சேர்ந்த, 19 எம்.எல்.ஏ.,க்கள் மீது, கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, சபாநாயகர், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ள நிலையில், அவர்களில், 11 பேர், முதல்வர் பழனிசாமி விரித்த வலையில் விழுந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

அந்த, 11 பேரின் குடும்பத்தினருடன், மூத்த அமைச்சர் ஒருவர் நேரில் நடத்திய ரகசிய பேச்சில், இந்த உடன்பாடு உருவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் மீது மட்டும், கட்சித் தாவல் தடை சட்ட நடவடிக்கை கைவிடப்படலாம் என, அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவருக்கு அளித்து ...

ஒரிஜினல் லைசென்ஸ்:ஐகோர்ட் கண்டிப்பு!

Posted: 29 Aug 2017 10:19 AM PDT

சென்னை:'வாகனங்களை ஓட்டும்போது, 'ஒரிஜினல் லைசென்ஸ்' வைத்திருப்பதில், என்ன பிரச்னை உள்ளது?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 'அனைவரும் அசல் உரிமம் அவசியம் வைத்திருக்க வேண்டும்' எனவும், நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், 'வாகனங்கள் ஓட்டுபவர்கள், செப்., ௧ முதல், அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும்' என கூறிஇருந்தார்.
பட்டியலிடப்படவில்லை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி மனு தாக்கல் செய்தார். மனு, விசாரணைக்கு ...

வாக்காளர் விபரங்கள் தேசிய அளவில் இணைப்பு

Posted: 29 Aug 2017 12:32 PM PDT

சென்னை: வாக்காளர் பட்டியல் விபரங்கள், தேசிய அளவில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன.
இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு மாநிலத் திற்கும், தனித்தனியே வாக்காளர் பட்டியல் உள்ளது. இவை, மாநில அளவில் மட்டும், கம்ப்யூட்டர் வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.
ஒருங்கிணைப்பு :
இதனால், மாநிலத்திற்குள் ஒரு தொகுதியில் இருந்து ஒருவர், வேறு தொகுதிக்கு மாறும் போது, ஏற்கனவே இருந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து, அவர் பெயரை நீக்குவது எளிதாக இருந்தது. ஆனால், வாக்காளர், மாநிலம் விட்டு மாநிலம் ...

'டிஜிட்டல்' பண பரிவர்த்தனைக்கு மாறுங்க! : கல்லூரி, பல்கலைகளுக்கு மத்திய அரசு உத்தரவு

Posted: 29 Aug 2017 01:43 PM PDT

'அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், கல்வி கட்டணம் உட்பட, அனைத்து பணப் பரிவர்த்தனைகளிலும், 'டிஜிட்டல்' முறையை பின்பற்ற வேண்டும்' என, மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய மனிதவள அமைச்சக கட்டுப்பாட்டில் செயல்படும், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., சார்பில், அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
அதன் விபரம்:
  • அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும், பணப் பரிவர்த்தனையை, டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை, கட்டாயம் ...

டில்லியில் அரசியல் செய்ய தினகரன் திட்டம்

Posted: 29 Aug 2017 02:07 PM PDT

சென்னை:ஒரு வார காலமாகியும், கவர்னர் வித்யாசாகர் ராவ், தங்கள் தரப்பு கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தியில் இருக்கும் தினகரன், இது குறித்து, திவாகரனுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அவர் கொடுத்த யோசனையின் படி, விரைவில், தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் டில்லிக்கு அழைத்துச் செல்ல, தினகரன் திட்டமிட்டுள்ளார். அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரத்தை எடுத்துச் சொல்லி, கவர்னரை, தங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளனர்.புதுச்சேரியில் எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால், ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™