Tamil News | Online Tamil News |
- திரிணமுல் காங்.,குடன் கூட்டணிக்கு காங்கிரஸ்... திட்டம்! மேற்கு வங்கத்தில் பா.ஜ., வளர்ச்சியை தடுக்க முடிவு
- ரூ.5,912 கோடியில் மேகதாது அணை கட்ட திட்டம்
- தே.ஜ., கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம்..இணைப்பு! .மத்திய அமைச்சரவையில் இலாகா ஒதுக்க முடிவு
- பழனிசாமி - பன்னீர் அணிகள் இடையே இழுபறி
- ஜெ., உறவினர் தீபாவை முன்னிறுத்த மன்னார்குடி கும்பல்...திட்டம்... ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., அணிக்கு எதிராக 'கொம்பு சீவ' சதி
- பன்னீர் அணி கூட்டத்தில் 'மாஜி' மந்திரிகள் மோதல்
- கூடுதலாக 2,653 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மருத்துவ கவுன்சிலிடம் தமிழகம் கோரிக்கை
- ஜெ.,யின் போயஸ் வீட்டை அரசுடமையாக்கும் பணி... துவக்கம்
- பிற்படுத்தப்பட்ட மக்களை கவர திட்டம் தமிழகத்தில் அமித் ஷா மூன்று நாள் முகாம்
- அஹமது வெற்றியை எதிர்த்து பா.ஜ., வேட்பாளர் வழக்கு
- சுனந்தா புஷ்கர் வழக்கு போலீசாருக்கு கண்டனம்
- இன்றைய(ஆக.,20) விலை: பெட்ரோல் ரூ.70.85; டீசல் ரூ.60.08
- பவானி ஆற்றில் மேலும் 4 தடுப்பணைகள்! - மீண்டும் சீண்டுகிறது கேரளா; தமிழக விவசாயம் பாதிக்கும்
- ஜெ., இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது சட்டப்படி தவறு : ஸ்டாலின்
| Posted: 19 Aug 2017 07:22 AM PDT கோல்கட்டா, : மேற்கு வங்கத்தில், பா.ஜ., வளர்ச்சியை தடுக்கும் நோக்கில், ஆளும், திரிணமுல் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க, காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என, தெரிகிறது. மேற்கு வங்கத்தில், முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது.இங்கு, ஏழு நகராட்சிகளுக் கான உள்ளாட்சித் தேர்தல், 13ல் நடந்தது; அதில், ஏழு நகராட்சிகளிலும் திரிணமுல் காங்., வெற்றி பெற்றது.மொத்தமுள்ள, 148 வார்டுகளில், 140 இடங்க ளில், திரிணமுல் வென்றது. பா.ஜ., ஆறு வார்டு களில் வெற்றி பெற்றதுடன், இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ... |
| ரூ.5,912 கோடியில் மேகதாது அணை கட்ட திட்டம் Posted: 19 Aug 2017 08:20 AM PDT மேகதாதுவில், காவிரி யின் குறுக்கே, 5,912 கோடி ரூபாய் செலவில், அணை கட்ட, கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. அணை கட்டி முடிக்கப்பட்டால், காவிரி காணாமல் போவதுடன், மக்கள் உணவுக்கும், குடிநீருக்கும் அண்டை மாநிலங்களில் கையேந் தும் நிலை ஏற்படும்.மேற்குதொடர்ச்சி மலை யில் உற்பத்தியாகும் காவிரியாறு, கர்நாடகா வில், 320 கி.மீ., தமிழக - கர்நாடகா எல்லை யில், 64 கி.மீ., தமிழகத்தில், 416 கி.மீ., பாய்ந்து, கடலில் கலக்கிறது.கர்நாடகாவில், காவிரி, துணையாறுகளின் குறுக்கே, கபினி, கே.ஆர்.எஸ்., ஹேமாவதி, ஹேரங்கி உள்ளிட்ட பெரிய அணைகளும், ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய அணைகளும் ... |
| தே.ஜ., கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம்..இணைப்பு! .மத்திய அமைச்சரவையில் இலாகா ஒதுக்க முடிவு Posted: 19 Aug 2017 08:37 AM PDT பாட்னா, பீஹாரில், முதல்வர், நிதிஷ் குமார் தலைமையிலான, ஆளும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி, மத்தியில் ஆளும், பா.ஜ., தலை மையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில், நான்கு ஆண்டுக்கு பின், மீண்டும் சேரவுள்ளது. பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு, இரண்டு இலாகாக்கள் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. கடந்த, 2014ல், நடந்த லோக் சபா தேர்தலில், பா.ஜ., சார்பில், பிரதமர் வேட் பாளராக, நரேந்திர மோடி அறிவிக்கப் பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., தலைமை யிலான, தே.ஜ., கூட்டணியில் இருந்து, ஐக்கிய ஜனதா தளம் விலகியது; அந்த தேர்தலில், தே.ஜ., கூட்டணி அமோக ... |
| பழனிசாமி - பன்னீர் அணிகள் இடையே இழுபறி Posted: 19 Aug 2017 09:16 AM PDT அ.தி.மு.க., அணிகள் இணைப்புக்கு பின், கட்சியை வழிநடத்த அமைக்கப் படும், வழி காட்டுதல் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை மற்றும் குழுவின் தலைவருக்கான அதிகா ரத்தை, முடிவு செய்வதில், இழுபறி நீடித்து வருகிறது. முதல்வர் பழனிசாமி அணியினர், பன்னீர் அணியுடன் இணைந்து செயல்பட முடிவு செய் துள்ளனர். அணிகள் இணைப்பு குறித்து முடிவு செய்வதற்காக, பன்னீர் அணி நிர்வாகிகள் கூட்டம், நேற்று முன்தினம் மாலை, சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, பன்னீர் செல்வம் வீட்டில் நடந்தது.கூட்டத்தில், முதலில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க் கள் மற்றும் மூத்த நிர்வாகிகளிடம், கருத்து கேட்கப்பட்டது. ... |
| Posted: 19 Aug 2017 09:19 AM PDT அ.தி.மு.க.,வில் இருந்து, தங்கள் குடும்பத்தை ஒதுக்கி விட்டு, பழனிசாமி - பன்னீர் அணிகள் இணைய முடிவு செய்துள்ளதற்கு, 'செக்' வைக் கும் விதமாக, ஜெ., அண்ணன் மகள் தீபாவை, தங்கள் பக்கம் இழுக்க, தினகரன் அணியினர் திட்டமிட்டுள்ளனர். அவரை, இரு அணிகளுக்கும் எதிராக செயல் பட வைக்கவும், கொம்பு சீவி விடவும், மன்னார் குடி சொந்தங்கள் முடிவு செய்துள்ளன. ஜெயல லிதாவுக்கும், தீபாவுக்கும் இடையே உள்ள ரத்த சம்பந்தத்தை அடிப்படையாக வைத்து, தங்களுக்கு கட்டுப்படாத அணிகளை ஒடுக்க, திரைமறைவு வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.ஜெயலலிதா இருந்த வரை, சசிகலா குடும்பத் தினர், ... |
| பன்னீர் அணி கூட்டத்தில் 'மாஜி' மந்திரிகள் மோதல் Posted: 19 Aug 2017 09:57 AM PDT அ.தி.மு.க., - பன்னீர் அணி ஆலோசனைக் கூட் டத்தில்,முன்னாள் அமைச்சர்கள் இடையே, மோதல் ஏற்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.,அணிகள் இணைப்பு குறித்து, முடிவு செய்வதற்காக, பன்னீர் அணி நிர்வாகி கள் கூட் டம், நேற்று முன்தினம், சென்னையில், முன் னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டில் நடந் தது. கூட்டத்தில், அனைத்து நிர் வாகிகளின் கருத்துக்களையும், பன்னீர் செல்வம் கேட்ட றிந்தார்.முன்னாள்அமைச்சரும்,தற்போதைய,எம்.எல்.ஏ.,வுமான பாண்டியராஜன் பேசுகையில், 'நான் அமைச்சர் பதவிக்காக, இணைப்பில் ஆர்வம் காட்டு வதாக, சிலர் குற்றம் சாட்டுகின்றனர். எனக்கு பதவி ... |
| கூடுதலாக 2,653 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மருத்துவ கவுன்சிலிடம் தமிழகம் கோரிக்கை Posted: 19 Aug 2017 10:19 AM PDT சென்னை, 'அரசு மருத்துவ கல்லுாரிகளில், 2,653 கூடுதல் இடங்களில், மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வேண்டும்' என, இந்திய மருத் துவ கவுன்சிலான, எம்.சி.ஐ.,யிடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில், 'நீட்' தேர்வு குழப்பத்தால், எம்.பி. பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையை நடத்த முடியவில்லை. 'நீட்' தேர்வில் இருந்து, இந்தாண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கும், தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு, மத்திய அமைச்சகங்கள் அனுமதி கொடுத்துள்ளன. இதற்கிடையில், 'நீட்' தேர்வை ஆதரிக்கும் மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், 22ம் தேதி வரை, மாணவர் சேர்க்கை நடத்த உச்சநீதிமன்றம் தடை ... |
| ஜெ.,யின் போயஸ் வீட்டை அரசுடமையாக்கும் பணி... துவக்கம் Posted: 19 Aug 2017 10:55 AM PDT ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை, அரசுடமையாக்கும் பணியை, தமிழக அரசு துவக்கியுள்ளது. தாசில்தார் தலைமையில், நேற்று வருவாய் துறையினர், வீட்டையும், நிலத்தையும் அள விட்டனர். சட்ட பிரச்னை ஏற்படும் முன், இழப் பீடு விஷயத்தில், அரசு முந்திக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.சென்னை,போயஸ்கார்டன் பகுதியில்,மறைந்த முதல்வர், ஜெ., வசித்த, 'வேதா நிலையம்' வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டில், ஜெ., இருந்த போது பணியாற்றிய ஊழியர்கள் தங்கியுள்ள னர். சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் வீடு உள்ளது.அவர்களிடமிருந்து வீட்டை மீட்டு, நினைவிடமாக மாற்ற வேண்டும் என, ... |
| பிற்படுத்தப்பட்ட மக்களை கவர திட்டம் தமிழகத்தில் அமித் ஷா மூன்று நாள் முகாம் Posted: 19 Aug 2017 11:01 AM PDT தமிழகத்தில், கட்சியை வலுப்படுத்தும் நோக் கில், பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பிரதிநிதி களை சந்தித்து பேச, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா திட்ட மிட்டுள்ளார். அப்பிரிவை சேர்ந்த, ஆயிரம் பேர் பங்கேற்கும் கூட்டத்தில், அவர் பேசுகிறார். மக்களை கவர திட்டம் ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில், ஏப்ர லில் நடந்த, பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத் தில், இமயம் முதல் குமரி வரை பயணம் செய்து, கட்சியை வலுப்படுத்தப் போவதாக, அமித் ஷா அறிவித்தார். தமிழகத்தில், முதல் பயணம் துவங்குவதாக இருந்தது. அதை மாற்றி, ஏப்., 29ல், காஷ்மீரில் இருந்து தன் பயணத்தை, ... |
| அஹமது வெற்றியை எதிர்த்து பா.ஜ., வேட்பாளர் வழக்கு Posted: 19 Aug 2017 11:49 AM PDT ஆமதாபாத்: குஜராத்தில், சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், காங்., வேட்பாளர் அஹமது படேல், வெற்றி பெற்றதை எதிர்த்து, பா.ஜ., வேட்பாளர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு, சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் வெற்றி பெற்றனர். மூன்றாவது இடத்துக்கு நடந்த தேர்தலில், காங்., தலைவர் சோனியாவின், அரசியல் ஆலோசகர் அஹமது படேல், வெற்றி பெற்றதாக, ... |
| சுனந்தா புஷ்கர் வழக்கு போலீசாருக்கு கண்டனம் Posted: 19 Aug 2017 01:17 PM PDT
புதுடில்லி, : சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்த ஓட்டல் அறைக்கு வைக்கப்பட்ட, 'சீலை' அகற்றுவதில் தாமதம் செய்வதற்காக, டில்லி போலீசாருக்கு, நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மன்மோகன் சிங் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசில், மத்திய அமைச்சராக இருந்தவர், சசி தரூர். இவரது இவரது இரண்டாவது மனைவி சுனந்தா புஷ்கர், 2014ல், டில்லியில், ஐந்து நட்சத்திர ஓட்டலின் அறையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை, டில்லி, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று நடந்தது. அப்போது, சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்த ஓட்டலின் சார்பில் ... |
| இன்றைய(ஆக.,20) விலை: பெட்ரோல் ரூ.70.85; டீசல் ரூ.60.08 Posted: 19 Aug 2017 02:13 PM PDT
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.85காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.08 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,20) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை விபரம்: எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 2 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.70.85 காசுகளாகவும், டீசல் விலை 12 பைசா குறைந்து, லிட்டருக்கு ரூ.60.08 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,20) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. ... |
| பவானி ஆற்றில் மேலும் 4 தடுப்பணைகள்! - மீண்டும் சீண்டுகிறது கேரளா; தமிழக விவசாயம் பாதிக்கும் Posted: 19 Aug 2017 03:02 PM PDT
பெ.நா.பாளையம்: கேரள, பவானி ஆற்றில், தேக்குவட்டை, மஞ்சக்கண்டியை அடுத்து பாடவயல் என்ற இடத்தில், கேரள அரசு, புதிய தடுப்பணையை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.நான்கு மாதங்களுக்கு முன், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தேக்குவட்டை, மஞ்சக்கண்டி ஆகிய இரு இடங்களில், ஐந்து அடி உயரம், 300 அடி அகலத்தில், இரண்டு தடுப்பணைகளை, கேரள அரசின், சிறு பாசனத்துறை கட்டி முடித்தது. இவை தவிர, மேலும், நான்கு இடங்களில் தடுப்பணைகளை கட்டும் பணிகளை, கேரள அரசு துவங்கியுள்ளது. இப்பகுதியில், கட்டுமானப் பணிக்குஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளன.கேரள பவானி ஆற்றில், ஆறு ... |
| ஜெ., இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது சட்டப்படி தவறு : ஸ்டாலின் Posted: 19 Aug 2017 03:43 PM PDT சென்னை: ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது சட்டப்படி தவறு என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். லண்டனில் இருந்து இன்று அதிகாலை சென்னை திரும்பிய தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். பேட்டியின் போது அவர் : ‛‛ஜெயலலிதா இல்லை நினைவிடமாக மாற்றுவது சட்டப்படி தவறு. ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ விசாரணை கோரிய ஓ.பி.எஸ்., தன் நிலைப்பாடை மாற்றியது ஏன்?. டெல்லியின் கதை, திரைக்கதை, வசனத்திற்கேற்ப ஓ.பி.எஸ்., மற்றும் ஈ.பி.எஸ்., நடித்து கொண்டிருக்கின்றனர். '' என கூறினார். ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 20,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |