Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இன்று ரொக்கம் நாளை கடன்

Posted: 19 Aug 2017 11:51 AM PDT

நல்ல உச்சி வெயில் . சாலைவழியே ஒரு வழிப்போக்கன் நடந்து சென்றுகொண்டிருந்தான் . கடுமையான பசி . கையில் இருபது ரூபாய்  வைத்திருந்தான் .பக்கத்தில் ஒரு ஹோட்டல் இருந்தது. அந்த ஹோட்டலுக்கு வெளியே ஒரு போர்டில் " இன்று ரொக்கம் ; நாளை கடன் " என்று எழுதியிருந்தது . வழிப்போக்கன் கடை முதலாளியிடம் சென்று , " ஐயா ! என்னிடம் இருபது ரூபாய் உள்ளது ; சாப்பாடு போடுங்கள் ; மீதிப்பணத்தை நாளை தருகிறேன்  " என்று சொன்னான் . அதற்கு ஹோட்டல் முதலாளி , போர்டைப் பார்த்தாயல்லவா ! இன்று சாப்பிடுவதாயிருந்தால் ரொக்கமாகக் ...

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....

Posted: 19 Aug 2017 06:13 AM PDT

நமது வீடுகளில் மாதாந்திர மளிகைப் பட்டியலில் எள் இருக்காது. வாசமிகு கரங்கள் உடைய பெண்கள் மட்டும் மிளகாய்ப் பொடி அரைக்கும்போது பிடி எள்ளை வறுத்து அள்ளிக் கொட்டி அரைப்பார்கள். எள் சேர்த்த மிளகாய்ப் பொடியின் மணமும் ருசியும் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. மிளகாய்ப் பொடிக்கு சகாயம் செய்யப் போகும்போதே அத்தனை ருசிக்கிற வஸ்துவை, தனியே ஒரு பட்சணமாக்கினால் சும்மாவா இருக்கும்! எள்ளுருண்டை என்பது இனிப்புகளில் தனி ரகம். எள்ளில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பதாலோ, அல்லது அதில் வைட்டமின் ...

என் அறிமுகம்

Posted: 19 Aug 2017 06:12 AM PDT

பெயர்:கவின் ஜீவானந்தம் சொந்த ஊர்:திருச்சி ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:கூகுள் வாயிலாக நூல்கள் தேடும் பொழுது... பொழுதுபோக்கு:செயற்கைக்கோள்களை பின் தொடர்வது தொழில்: இப்போதைக்கு எதுவும் இல்லை மேலும் என்னைப் பற்றி: இந்த தளத்தில் நீண்ட வருடங்களாக சுற்றி வருகிறேன் கமுக்கமாக வந்து நூல்களை திரட்டி செல்கிறேன் .ஒரு அறிமுகம் செய்து கொள்ளலாம் என்ற அவாவில் இதை பதிவிடுகிறேன். முன்பு நான் சமூக ஊடகங்களில் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுவந்தேன். சில நேரங்களில் ஊடகம் மக்களை இருபத்து ...

பூரானை அடிக்காதீர்கள்!

Posted: 19 Aug 2017 06:10 AM PDT

பூரானை அடிக்காதீர்கள்! ஒரு மனைவி தனது கள்ளக் காதலனை அடைவதற்காகத் தாலி கட்டிய கணவனைக் கொல்ல நினைத்தாள்! அவனின் சாப்பாட்டில் விஷம் கலந்தாள் ! கணவன் சாப்பிட அமர்ந்தான் ! அப்போது, கூரையிலிருந்து ஒரு பூரான் 'தொப்'பென்று சாப்பாட்டில் விழுந்தது ! கணவன் சாப்பிடாமல் , தப்பினான்! சாப்பாட்டைப், பிறகு நாய்க்குப் போட்டபோது அது செத்து விழவே கணவன் மனைவியின் சூழ்ச்சியை அறிய வந்தான் ! தன்னைக் காப்பாற்றியது ஒரு பூரான் என்று ஊரெல்லாம் சொன்னான்! அன்று முதல் , கும்பகோணம் வட்டாரத்தில் ,'பூரானைக் கொல்லக்கூடாது' ...

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)

Posted: 19 Aug 2017 06:04 AM PDT

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) மராட்டிய மாநிலத்தில் மாதரான் என்பது ஒரு மலைவாசஸ்தலம்!  அதில் ஒரு பள்ளி! அதில் புதிதாக ஆங்கில டீச்சர்- 35,40 வயதிருக்கும் -வந்து சேர்ந்தார். அவள் யாரோடும் பேசுவதில்லை; சிரிப்பதும் இல்லை! ஆள் கொள்ளை அழகு! அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? இல்லையா? யாருக்கும் தெரியாது! ஒரு நாள் கொட்டும் மழையில் ஒருவர் – வயது 40 இருக்கும்- வந்து அந்த டீச்சரைப் பார்த்தார்! மற்றவர்கள் தூரத்தில் நின்றபடி அதை வேடிக்கை பார்த்தனர்.  வந்தவன் , "நாம் எவ்வளவோ பழகினோம்! நான் வீட்டை எதிர்க்கத் ...

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?

Posted: 19 Aug 2017 04:43 AM PDT

--
-

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்

Posted: 19 Aug 2017 04:35 AM PDT

சென்னை:
மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள்
வரும் 22ம் தேதி போராட்டம் நடத்த உள்ளனர்.

வங்கிகளை தனியார் மயமாக்க முயற்சி நடப்பதாக
குற்றம்சாட்டி இந்த போராட்டம் நடக்க உள்ளதாக
தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

வராக்கடன் காரணமாக வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
போராட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள்
கலந்து கொள்வார்கள் எனவும் அறிவித்துள்ளன.
-
தினமலர்


கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்

Posted: 19 Aug 2017 04:33 AM PDT

ஊட்டி: கோடநாட்டில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து மாவட்ட எஸ்.பி., முரளி ரம்பா அளித்த பேட்டி: கோடநாட்டில், ரகசிய கண்காணிப்பு கேமரா கடந்த 2 மாதத்திற்கு முன் பொருத்தப்பட்டது. அங்கு, ஊழியர் தற்கொலை செய்து கொண்ட பிறகு கேமரா பொருத்தப் பட்டது. இங்கு காவலாளி கொலை சம்பவத்திற்கு பின் அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பே தற்போது தொடர்கிறது. இதற்கும், போயஸ் கார்டனில் போலீசார் குவிக்கப்பட்டதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். - ------------------------------------------ தினமலர்

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)

Posted: 19 Aug 2017 12:47 AM PDT

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை) அலுவலகத்திற்கு டீ சப்ளை செய்யும் பெண்மணி அவள் ! பழைய புடைவைதான்; பழைய ரவிக்கைதான் ; ஆனால் அதற்குள் ஒளிந்திருந்த அழகு  அலுவலர் ரவிக்கு மட்டும் தெரிந்தது ! அந்த அறையில் பலர் அவளிடம் டீ வாங்கிக் குடித்தார்கள் ; ஆனால் அவளது பேரழகு ரவியைச் சுண்டி இழுத்தது! சொல்வார்கள்- 'கவிஞன் கண்டாலே கவிதை; கண்பவர் கண்டாலே காதல்!' என்று ! ரவி விஷயத்தில் மிகச் சரி இது ! அவளிடம் டீய ரவி வாங்கும்போது அவளது அழகை நின்று நிதானித்து ரசித்து வாங்குவான்; பேச்சு எதுவும் பேசாமல் அவளது ...

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை

Posted: 19 Aug 2017 12:23 AM PDT

பவானிசாகர்: பவானிசாகர் அணை, 63 வது ஆண்டில், இன்று அடியெடுத்து வைக்கிறது. தமிழகத்தில், தஞ்சை டெல்டா பாசனத்துக்கு அடுத்தபடியாக, மிகப்பெரிய பாசனப்பரப்பும், தென் மாநிலங்களில், மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையையும் பெற்றது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள, பவானிசாகர் அணை. 19 மதகுகள் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில், 2.௦7 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அணையின் மொத்த உயரம், 120 அடி. ஆனால், சேறு, சகதி கழித்து, 105 அடி மட்டுமே கணக்கில் எடுத்துக் ...

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி

Posted: 18 Aug 2017 11:58 PM PDT

மைசூரு, உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா அடுத்த மாதம்(செப்டம்பர்) 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி ஊர்வலம் 30-ந் தேதி அன்று கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு தசரா விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்கட்டமாக 8 யானைகள் மைசூரு அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளன. இதில் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா யானையும் அடங்கும். இந்த நிலையில், நேற்று தசரா யானைகள் அனைத்திற்கும் எடை அளவு சரிபார்க்கப்பட்டன. மைசூரு சயாஜீராவ் ரோடு ...

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்

Posted: 18 Aug 2017 11:50 PM PDT

புதுடில்லி: "தேர்தல் வெற்றிக்காக எதையும் செய்வது, அரசியலில் சாதாரணம்," என, தேர்தல் கமிஷனர், ஓம் பிரகாஷ் ராவத் கூறியுள்ளார். பிரச்னை: சமீபத்தில், குஜராத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலின்போது, காங்கிரஸ் அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்கள் இருவர், தாங்கள் அளித்த ஓட்டு குறித்து, பா.ஜ., தலைவர்களிடம் காட்டியது பெரும் பிரச்னையானது. அவர்கள் ஓட்டு செல்லாது என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. சாதாரணம்: இந்நிலையில், டில்லியில் நேற்று, தேர்தல் கமிஷனர், ஓம் பிரகாஷ் ராவத், தற்போதைய அரசியல் ...

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்

Posted: 18 Aug 2017 05:55 PM PDT

சென்னை: தமிழகத்தில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வந்தது. அதனால், அணைகளிலும், ஏரிகளிலும், நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இந்நிலையில், 'இன்று முதல், மழை படிப்படியாக குறையும். இன்றும், நாளையும், வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில், லேசான மழையும் பெய்யும்' என, வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார். ------------------------------------- -தினமலர்

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்

Posted: 18 Aug 2017 05:54 PM PDT

புதுடில்லி: டோக்லாம் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த ஜப்பானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா, உண்மை நிலை தெரியாமல் கருத்து தெரிவிக்க கூடாது எனக் கூறியுள்ளது. கண்காணிப்பு: இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் கென்ஜி ஹிராமட்சு நிருபர்களிடம் கூறியதாவது: டோக்லாம் பகுதி சீனா மற்றும் பூடான் இடையேயான பிரச்னைக்கு உரியது என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். இதனை இரு நாடுகளும் புரிந்து கொண்டுள்ளன. அந்த பகுதியில் தற்போது உள்ள சூழ்நிலையை, எந்த ஒரு நாடும் தன்னிச்சையாக முடிவு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™