Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


திமிர்! ஊடுருவல் பற்றி தெரியாது என்கிறது சீனா

Posted: 16 Aug 2017 08:33 AM PDT

பீஜிங்: ஜம்மு - காஷ்மீரில் உள்ள எல்லையில், லடாக் பகுதிக்குள் சீன ராணுவம் நுழைய முயன்றதை, நம் வீரர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால், 'எங்கள் வீரர்கள், எல்லையை தாண்டி நுழைய முயன்றது தொடர்பாக, எதுவும் தெரி யாது. இந்த விஷயத்தில், இந்திய அரசு பொறுப் புடன் செயல்பட வேண்டும்' என, திமிராக பதில் அளித்துள்ளது, சீனா.

இந்தியா - சீனா இடையே, ஜம்மு - காஷ்மீரில் துவங்கி, அருணாச்சல பிரதேசம் வரை, 3,499 கி.மீ., நீள எல்லை பகுதி உள்ளது; இதில், சிக்கிம் மாநிலத்தில் மட்டும், 220 கி.மீ., எல்லை பகுதி உள்ளது. சிக்கிம் எல்லையையொட்டி, இந்தியா - சீனா - பூட்டான் இடையேயுள்ள, டோக்லாம் பகுதியில், சாலை ...

செயற்கை உணவு குழாய் மாற்றம்; கருணாநிதிக்கு மீண்டும் சிகிச்சை

Posted: 16 Aug 2017 09:45 AM PDT

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று காலை, சென்னை, ஆழ்வார்பேட்டை யில் உள்ள, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு உணவு செலுத்துவதற்கான பழைய குழாய் அகற்றப் பட்டு, புதிய குழாய் பொருத்தப்பட்ட பின், வீடு திரும்பினார்.

ஏழு மாதங்களுக்கு முன், கருணாநிதிக்கு, இரு முறை உடல்நலக் குறைவு ஏற்பட்டு, காவேரிமருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். சிகிச்சை முடிந்து, கோபாலபுரம் வீட்டுக்கு திரும்பிய பின்னரும், அவருக்கு, டாக்டர் கள் குழு ,தொடர் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், நேற்று காலை, 6:30 மணிக்கு, கருணாநிதி, காவேரி ...

ரஜினியின் 'ஆஸ்ரம்' பள்ளிக்கு பூட்டு மாணவ மாணவியர் அலைக்கழிப்பு

Posted: 16 Aug 2017 09:51 AM PDT

சென்னை:வாடகை பாக்கி மற்றும் இட பிரச்னை காரணமாக, நடிகர் ரஜினி மனைவி நடத்தும், 'ஆஸ்ரம்' பள்ளிக்கு பூட்டு போடப் பட்டது.

சென்னை, கிண்டியில், வெங்கடேஸ்வரலு என்பவருக்கு சொந்தமான இடத்தில், ரஜினி மனைவி லதா, ஆஸ்ரம் மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்தி வருகிறார். இங்கு, 300க்கும் மேற்பட்ட, மாணவ மாணவியர் படிக்கின்றனர். அறங்காவலராக, ரஜினி உள்ளார்.பள்ளி இடம் தொடர்பாக, கடந்த ஆண்டு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதில், சமரச மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வாடகை நிலுவைத் தொகை, மாத வாடகை மற்றும் காலி செய்வது தொடர்பாக, சமரச தீர்வு காண போவதாக ...

சசி காலில் விழுந்த மந்திரிகள் படம்; தினகரன் அணி திடீர் வெளியீடு

Posted: 16 Aug 2017 09:55 AM PDT

சசிகலா குடும்பத்திற்கு எதிராக, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செயல்படத் துவங்கி உள்ளதால், ஆத்திரமடைந்துள்ள தினகரன் ஆதரவாளர்கள், முதல்வர் மற்றும் அமைச்சர் கள், சசிகலா காலில் விழும் படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

மோதல்
தினகரன் ஆதரவாளர்கள், கடந்த மாதம் வரை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரதுஅணியில் உள்ளவர்களை, கடுமையாக தாக்கி, சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டனர்.முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களை புகழ்ந்தனர்.அவர்களின் அறிவிப்பு களை, உடனுக்குடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டு, ...

தமிழக உள்ளாட்சித் தேர்தல்: சுப்ரீம் கோர்ட் கருத்து

Posted: 16 Aug 2017 10:18 AM PDT

'வார்டுகள் சீரமைப்பு பணிகளுக்காக, உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டிய அவசிய மில்லை' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2001 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே தேர்தலை நடத்தும் வகையில், 2016ல், தமிழக அரசு, சட்டத்தில் திருத்தம் செய்தது.' கடந்த, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை விபரங்கள், மாநில அரசுக்கு, 2013ல் கிடைத்துள்ளன. அதனால், 2011 மக்கள் தொகையின் அடிப்படை யில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்' என, தி.மு.க., சார்பில்,சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள், ஜே. சலமேஸ்வர், எஸ்.ஏ. ...

'நீட்' அவசர சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

Posted: 16 Aug 2017 10:27 AM PDT

'நீட்' தேர்விலிருந்து, தமிழகத்துக்கு ஓராண் டுக்கு விலக்கு கோரும் அவசர சட்டத்துக்கு, மத்திய சட்ட அமைச்சகம், நேற்று ஒப்புதல் அளித்தது; இருப்பினும், இதனால் எதிர்பார்க் கும் பலன் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான, பொது நுழைவுத் தேர்வான, 'நீட்'டிலிருந்து, தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கும்படி, தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தி வந்தது; இதற்கு, மத்திய அரசு செவி சாய்க்காததால், இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமாவது விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தப்பட்டது.இதன்பின், இரண்டு ஆண்டு என்பது, ஓராண் டாக மாறியது. அப்போதும், ...

'சீன வீரர்கள் ஆயிரம் பேர் ஊடுருவல்'

Posted: 16 Aug 2017 11:09 AM PDT

பெங்களூரு:"இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் ஆயிரம் பேர் ஊடுருவிள்ளனர்; இது தெரிந்தும், பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருக்கிறார்," என, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. நேற்று, பெங்களூருக்கு வந்த, காங்., துணை தலைவர் ராகுல், காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய தாவது: ஒவ்வொரு ஆண்டும், இரண்டுகோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவதாக, பிரதமர் மோடி கூறினார். ஆனால், அதைப் பற்றி, இப்போது எதுவும் அவர் பேசுவது இல்லை. சீன ராணுவ வீரர்கள், ஆயிரம் ...

தன் பக்கம் சேராத அ.தி.மு.க., அமைச்சர்களுக்கு தினகரன்...மிரட்டல்

Posted: 16 Aug 2017 11:20 AM PDT

அ.தி.மு.க., அமைச்சர்கள் அனைவரும், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக இருப்ப தால்,கடும் கோபமடைந்துள்ள தினகரன், அவர்களை மிரட்டத் துவங்கி உள்ளார். 'என் பக்கம் சேராவிட்டால், நான் சொல்வதை கேட்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுப்பேன்' என்றும், 'சர்ச்சை படங்களை வெளியிடுவேன்' என்றும், அமைச்சர்களை அச்சுறுத்த ஆரம்பித் துள்ளார். அமைச்சர்களிடையே, தனக்கு ஆதரவு வட்டத்தை ஏற்படுத்தி, முதல்வர் பழனிசாமியை பயமுறுத்தவும், தினகரன் திட்டமிட்டுள்ளார்.

அ.தி.மு.க.,வில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தலையீடு இல்லாமல், சுதந்திர மாக செயல்பட, முதல்வர் பழனிசாமி முடிவு ...

பெங்களூரில், 'இந்திரா உணவகம்' 5 ரூபாய்க்கு சூடான டிபன் ரெடி

Posted: 16 Aug 2017 11:30 AM PDT

பெங்களூரு: தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகம் போல், காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கர்நாடக மாநிலம் பெங்களூரில், இந்திரா உண வகத்தை, அந்த கட்சியின் துணைத் தலைவர் ராகுல், நேற்று திறந்து வைத்தார்.

கர்நாடக மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் உள்ள ஏழைகளுக்கு,மாதந் தோறும், 'அன்ன பாக்யா' திட்டத்தின் கீழ்,7 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. சுதந்திர தின விழாவில் பேசிய, முதல்வர் சித்த ராமையா, 'ஏழை மக்களின் பசியைப் போக்க, 100 கோடி ரூபாய் செலவில், மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும்' என்றார்.இதையடுத்து, பெங்களூரில் ...

புதிய மெட்ரோ ரயில் கொள்கை; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 16 Aug 2017 12:18 PM PDT

புதுடில்லி : மெட்ரோ ரயில் சேவை தொடர்பான புதிய கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்தது.
புதிய கொள்கை:
மெட்ரோ ரயில் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: நம் நாட்டில், தற்போது, டில்லி, பெங்களூரு, கோல்கட்டா, சென்னை, கொச்சி, மும்பை, ஜெய்ப்பூர், குர்கான் ஆகிய நகரங்களில், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஐதராபாத், நாக்பூர், ஆமதாபாத், புனே, லக்னோ ஆகிய நகரங்களில், மெட்ரோ ரயில் பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே செயல்பட்டு வரும் நகரங்களில், அதை விரிவுபடுத்தும் பணிகளும் நடக்கின்றன.இதனால், மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக, ...

உறியடி திருவிழாவில் 2 பேர் பலி; 117 பேர் காயம்

Posted: 16 Aug 2017 01:17 PM PDT

மும்பை : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, மஹாராஷ்டிராவில் நடந்த, 'தஹி ஹண்டி' எனப்படும், உறியடி நிகழ்ச்சிகளில், இருவர் இறந்தனர்; 117 பேர் காயம் அடைந்தனர்.
உறியடி:
மஹாராஷ்டிராவில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடக்கும், தயிர் பானை உடைக்கும் உறியடி நிகழ்ச்சி, மிகவும் பிரபலம். கிருஷ்ண ஜெயந்தி விழா, சமீபத்தில், நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மஹாராஷ்டிராவின் பல இடங்களில், நேற்று, உறியடி நிகழ்ச்சி நடந்தது. மனித கோபுரங்கள் அமைத்து, தயிர் பானைகள் உடைக்கப்பட்டன.
இருவர் பலி:
பல்ஹார் மாவட்டத்தில், உறியடி ...

செல்போன்களில் பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய அரசு அச்சம்

Posted: 16 Aug 2017 02:21 PM PDT

புதுடில்லி: சீனாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் செல்போன்களில் பயன்பாட்டாளர்களின் தகவல்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த அச்சத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சமீபகாலமாக ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகமாகி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்டர் போன்களில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் குறித்த பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கமளிக்க மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியா சீனாவிடையே நடக்கும் டோக்லாம் விவகாரத்தால் சீனாவில் இருந்து இறக்குமதி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™