Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எல்லையில் வாலாட்டும் சீனாவுக்கு பிரதமர் மோடி... சவால்!

Posted: 15 Aug 2017 08:36 AM PDT

புதுடில்லி: ''நாட்டின் எல்லையை பாதுகாக்க, எந்த சவாலையும் எதிர்கொள்ள, நம் படைகள் எப்போதும் தயாராக உள்ளன. நாட்டின் பாது காப்புக்கே, இந்த அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தின விழாவில் உரையாற்றினார். எல்லையில் வாலாட்டும் சீனாவுக்கு, சவால் விடும் வகையில், பிரதமரின் உரை அமைந்திருந்தது.

சுதந்திர தினத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பிரதமர் மோடி, நேற்று உரையாற்றி னார். பல்வேறு அம்சங்கள் குறித்தும், பிரச்னைகள் குறித்தும், தன் பேச்சில் அவர் குறிப்பிட்டார். இந்தியா - சீனா எல்லையில், ...

'நர்சிங் ஹோம்'களுக்கு வரித்துறை கிடுக்கிப்பிடி

Posted: 15 Aug 2017 08:56 AM PDT

தமிழகம், புதுச்சேரியில் உள்ள தனியார், 'நர்சிங் ஹோம்'கள், வருமான வரித்துறை, 'கிடுக்கிப்பிடி'யில் சிக்குகின்றன.

நம் நாட்டில், அரசு மருத்துவமனைகள் போது மான அளவுக்கு இல்லாததால், புற்றீசல் போல் தனியார், 'நர்சிங் ஹோம்'களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.சமீபத்தில், லோக்சபாவில் தாக்கல் செய்யப் பட்ட கணக்கு தணிக்கை அறிக்கையில்,'பெரும் பாலான,தனியார்,'நர்சிங் ஹோம்'கள், வருமான வரித்துறையின்கண்காணிப்பிற்கு வரவில்லை' என, சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. மேலும், 2011 - 2013 வரை, 1,500க்கும் குறைவான, 'நர்சிங் ஹோம்' களே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளன; அதன் ...

தினகரன் ஒரு வாரம் கெடு

Posted: 15 Aug 2017 09:58 AM PDT

'அ.தி.மு.க., துணைப் பொதுச்செயலராக, தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது என, முதல்வர் பழனிசாமி அணி நிறைவேற்றிய தீர்மானத்தை, ஒரு வாரத்தில் ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், முதல்வர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப் படும்' என, தினகரன் அணி மிரட்டல் விடுத்துள் ளதாக தெரிகிறது.

இது குறித்து, தினகரன் ஆதரவாளர்கள் கூறிய தாவது: மதுரை, மேலுாரில், தினகரன் அணியி னர், நேற்று முன்தினம் நடத்திய பொதுக்கூட் டத்தில், 20 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்கவிருந்த, மூன்று எம்.எல்.ஏ.,க்களை கடத்தி விட்டனர். மேலும்,கருணாஸ், ...

'நீட்' தேர்வு இழுபறி; இப்போதைக்கு முடிவுறாது!

Posted: 15 Aug 2017 10:02 AM PDT

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வான, 'நீட்'டில் இருந்து விலக்கு கோரும், அவசர சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ வழக்கு தொடர்வதற் கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அவசர சட்டத்தால், மாநில பாடத் திட்டத்தில் படித்து, நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள் பாதிக் கப்படும் சூழல் உள்ளதால், அவர்கள் தரப்பில், நீதிமன்றத்தை அணுக உள்ளனர்.நீட் தேர்வுக்கு, 2016 - 17ம் ஆண்டில் மட்டும், தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்க, தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து ...

தரமற்ற மின் உபகரணங்கள் 'கவனிப்பால்' தமிழகம் தள்ளாட்டம்!

Posted: 15 Aug 2017 10:07 AM PDT

தரமற்ற உபகரணங்கள் சப்ளை செய்வதை தடுக்க, மின் வாரியம், தன் கிடங்குகளில் ஆய்வுக் கூடங்கள் அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு, ஊழியர்களிடம் எழுந்துள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம், தனியார் நிறுவனங் களிடம் இருந்து, டிரான்ஸ்பார்மர், மீட்டர், மின் கம்பி, கேபிள் உள்ளிட்ட உபகரணங்களை, 'டெண்டர்' மூலம் வாங்குகிறது. டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள், மாதிரி உபகரணங் களை வழங்குகின்றன. அவற்றை, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள, மத்திய மின்சார ஆராய்ச்சி மையத் திற்கு அனுப்பி,மின் வாரியம் சோதனை செய்கிறது. அங்கு, தரம் உறுதியானதும், நிறுவனங் களுக்கு, 'ஆர்டர்' வழங்க ...

பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு... மைனாரிட்டி?

Posted: 15 Aug 2017 10:19 AM PDT

அ.தி.மு.க., மூன்று அணிகளாக பிளவுபட்டு, எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டம் பிடித்ததால், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, 'மைனா ரிட்டி' அரசாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 20 எம். எல்.ஏ.,க்கள் ஆதரிக்கும் தினகரன், பழனிசாமி ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தால்,பன்னீர் அணி கை கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பன்னீர் அணி, எம்.எல்.ஏ.,க்களுடன் சேர்த்து, இந்த அரசுக்கு, 115 பேர் ஆதரவு மட்டுமே இருப் பதால், மெஜாரிட்டியை இழப்பது உறுதியாகி உள்ளது.தமிழகத்தில் மொத்தம், 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. சட்ட சபையில், தற்போது, 233 ...

எம்.ஜி.ஆர்., விழாவா... தினகரன் விழாவா? கொதிக்கும் 'உண்மை தொண்டர்கள்'

Posted: 15 Aug 2017 10:40 AM PDT

மதுரை:மதுரை மாவட்டம், மேலுாரில் நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, ஜெயலலிதா வால் கட்சியில் இருந்து, நீக்கப்பட்ட தினகரன் புகழ்பாடும் விழாவாக மாறி விட்டதாக, அ.தி.மு.க., தொண்டர்கள் ஆதங்கப்பட்டனர்.

அதிக, எம்.பி.,க்களை வைத்துள்ள, அ.தி.மு.க., -லோக்சபாவில், மூன்றாவது பெரிய கட்சி. ஜெயலலிதா மறைவிற்கு பின், பன்னீர் செல் வம், பழனிசாமி, தினகரன் அணிகளாக பிரிந்து கிடக்கிறது. கட்சியை கைப்பற்ற, காய் நகர்த் திய சசிகலா,சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். இதனால், அவரால் துணை பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட தினகரன், கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைக்க முயற்சித்து ...

'வளம் மிக்க மாநிலமாக்குவோம்' முதல்வர் பழனிசாமி சூளுரை

Posted: 15 Aug 2017 10:43 AM PDT

சென்னை:''அனைத்து துறைகளிலும் வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தோடு, தடைகளை தகர்த் தெறிந்து, மக்களுக்கு சேவை ஆற்றுவதையே இலக்காகக் கொண்டு, உழைத்து வருகிறோம். தமிழகத்தை வளம் மிக்க மாநிலமாக்குவோம்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில் நேற்று, சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. காலை, 8:18 மணிக்கு, முதல்வர் பழனிசாமி, கோட்டை கொத்தளத்தில், தேசியக் கொடி ஏற்றினார். விழாவில், அவர் பேசியதாவது:தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள், இந்திய விடு தலைக்காக, எண்ணற்ற தியாகங்களை செய்துள்ள னர். மன்னர் ஆட்சி போய், ...

'ஒழுக்கம் இல்லாதவர் கமல்!' அமைச்சர் சாடல்

Posted: 15 Aug 2017 10:45 AM PDT

மத்திய, மாநில அரசுகளை, தொடர்ந்து விமர் சித்து வரும் நடிகர் கமல், நேற்று, முதல்வர் பழனிசாமியை நேரடியாக சாடியுள்ளார்.

'ஊழலுக்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாமா?' என, கேள்வி எழுப்பி உள்ளார்.'டுவிட்டர்' பக்கத்தில், கமல் கூறியுள்ளதாவது:தமிழகத்தில் நிறைய குற்றங்கள் நடக்கின்றன. ஒரு மாநிலத்தில் ஊழல், துயர சம்பவங்கள் நடந்தால், அதற்கு பொறுப்பேற்று, முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில், அவ்வாறு ஏராளமான குற்றங்கள் நடந்தும், முதல்வர்ஏன் இன்னும் ராஜினாமா செய்ய வில்லை அவ்வாறு எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடாதது ஏன்...என் ...

கொடியேற்றிய போது திடீரென தடுமாறிய முதல்வர்

Posted: 15 Aug 2017 01:55 PM PDT

புவனேஸ்வர்,: சுதந்திர தின விழாவில் பங்கேற்ற, ஒடிசா முதல்வர், நவீன் பட்நாயக்கிற்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.ஒடிசாவில், பிஜு ஜனதா தளம் தலைவர், நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். சுதந்திர தினத்தையொட்டி, புவனேஸ்வரில், மஹாத்மா காந்தி மார்க்கில் நடந்த விழாவில், நவீன் பட்நாயக் பங்கேற்றார். தேசியக் கொடி ஏற்றி பேசிய போது, அவருக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.இருப்பினும், தடுமாறியபடி, தன் உரையை அவர் முடித்தார். அந்த நிலையிலும், தனக்கு அளிக்கப்பட்ட மரியாதையை ஏற்ற அவர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகளை வழங்கி ...

இன்றைய(ஆக.,16) விலை: பெட்ரோல் ரூ.70.59; டீசல் ரூ.60.38

Posted: 15 Aug 2017 03:02 PM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.59 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.38 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,16) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 6 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.70.59 காசுகளாகவும், டீசல் விலை 6 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.60.38 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,16) காலை 6 மணி முதல் அமலுக்கு ...

சுதந்திர தின விழாவில் பங்கேற்று திரும்பிய சிறுமி பலாத்காரம்

Posted: 15 Aug 2017 03:35 PM PDT

சண்டிகர்: சண்டிகரில், சுதந்திர தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய, 12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள, பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பொது தலைநகரான சண்டிகரில், சுதந்திர தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய, 12 வயது சிறுமி, நேற்று பட்டப்பகலில், பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார்.
சண்டிகரில் உள்ள பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்று திரும்பிய, 8ம் வகுப்பு படிக்கும், 12 வயது மாணவியை, ஒருவன் திடீரென ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™