Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


புதிய இந்தியா திட்டத்துக்கு ஒத்துழைக்க மாநில அரசுகள் தயார்!

Posted: 13 Aug 2017 08:17 AM PDT

புதுடில்லி:'வறுமை, ஊழல் இல்லாத, புதிய இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும்' என்ற பிரதமரின் கோரிக்கையின் அடிப்படையில் சுதந்திர தின விழாவில், அதை பிரபலப்படுத்த விரிவான ஏற்பாடு செய்யும்படி, மத்திய அரசு கூறியிருந் தது. இதற்கு, மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கும் மேற்கு வங் கத்தை தவிர, மற்ற மாநிலங்கள் ஒத்துழைப்ப தாக அறிவித்துள்ளன.

'வறுமை, ஊழல், துாய்மை ஆகிய பிரச்னை களுக்கு தீர்வு காணும் வகையில், புதிய இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதி மொழி ஏற்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலை ...

14 மாநில ஆதரவு எங்களுக்கே! சரத் யாதவ் அணி உறுதி

Posted: 13 Aug 2017 08:20 AM PDT

லக்னோ:ஐக்கிய ஜனதா தளம்கட்சியின், 14 மாநில பிரிவுகளின் ஆதரவு தங்களுக்கு இருப்ப தாக, அந்த கட்சியின் அதிருப்தி தலைவர், சரத் யாதவ் தலைமையிலான அணி கூறியுள்ளது.

பீஹாரில், முதல்வர், நிதிஷ் குமார் தலைமை யில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், லாலு பிரசாத் யாதவ் தலைமையி லான, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட் டணியை முறித்த, நிதிஷ் குமார், பா.ஜ.,வுடன் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைத்தது, அந்த கட்சியின் மூத்த தலைவர், சரத் யாதவுக்கு பிடிக்கவில்லை.பீஹாரில், சட்டசபைத் தேர்தலின் போது உருவான, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்., ...

'நீட்' தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு... ஓராண்டு

Posted: 13 Aug 2017 09:03 AM PDT

சென்னை:தமிழக அரசின் விடாப்பிடியான முயற்சியால், மருத்துவ மாணவர் சேர்க்கை யில், 'நீட்' தேர்வில் இருந்து, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், விலக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு, அவசர சட்டத்தை இயற்றுவதால், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிரச்னை, முடிவுக்கு வருகிறது. இதனால், 17ம் தேதி முதல், பிளஸ் 2 தேர்வு முடிவு அடிப்படை யில், மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி. எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, 'நீட்' தகுதி தேர்வு கட்டாயம் ...

சிறையில் இருந்து சசிகலா கண்ணீர் கடிதம்

Posted: 13 Aug 2017 09:05 AM PDT

'அ.தி.மு.க., என்ற இரும்புக்கோட்டையில், விரிசல் விழுந்து விடக்கூடாது. முன்பை விட, உறுதியாக செயல்பட்டு கட்சியையும், தமிழகத் தையும் காக்க வேண்டும்' என, சிறையில் இருந்தபடி, முன்னாள் முதல்வர், ஜெ.,யின் தோழி சசிகலா, தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, தொண் டர்களுக்கு எழுதியுள்ள, கண்ணீர் கடிதம்: ஜெய லலிதா நம்மோடு இருந்தால்,நாம் எவ்வாறு உணர்வோமோ, அந்த உணர்வோடு தொண்டர்கள் கட்சியில், தாயின்பரிவை, பாதுகாப்பை தொடர்ந்து இனியும் உணரலாம். நம் கண் முன், ஜெ., காட்டிய லட்சிய பாதை, விரிந்து கிடக்கிறது. அதில், அ.தி.மு.க., என்ற, இந்த ...

அயோத்தி நிலத்தை விட்டுத் தருவோம்; முஸ்லிம் தலைவர் அமைதி பேச்சு

Posted: 13 Aug 2017 09:10 AM PDT

மும்பை:'அயோத்தி நில சர்ச்சையில் அமைதி யான தீர்வு காணப்பட வேண்டும். வழக்கில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும், நிலத்தை விட்டுத் தருவதற்கு முன் வர வேண்டும்' என, முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய துணைத் தலைவர் கூறியுள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையி லான, பா.ஜ., அரசு அமைந்துள்ள உத்தர பிரதே சத்தில் உள்ள அயோத்தியில் ராமர் ஜென்ம பூமி - பாபர் மசூதி தொடர்பான பிரச்னை உள்ளது. இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், தற்போது நடந்து வருகிறது.சமீபத்தில் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த, ஷியா முஸ்லிம் வக்ப் வாரியம், 'சர்ச்சைக் குரிய இடத்தில் ...

தினகரனின் பொதுக்கூட்டம் கடைசி நேரத்தில் ரத்தாகிறதா

Posted: 13 Aug 2017 10:23 AM PDT

மன்னார்குடியில் தினகரன், திவாகரன் ஆதரவாளர்கள் நடத்த இருந்த பொதுக்கூட்டங் கள், கடைசி நேரத்தில் ரத்தானது போல, மதுரை, மேலுாரில், இன்று தினகரன் பங்கேற் கும் பொதுக்கூட்டமும் ரத்தாகலாம் என, கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

தினகரன் அணி சார்பில், மதுரை மேலுாரில், எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் நுாற்றாண்டு விழா பொதுக்கூட்டம்,இன்று நடக்கிறது.இந்த பொதுக் கூட்டத்தில், ஏராளமான தொண்டர்களை பங்கேற்க வைத்து, கட்சியை தன் தலைமை யில் வழி நடத்திச் செல்ல, தினகரன் திட்ட மிட்டுள்ளார். மேலுார் தொகுதியில், குறிப்பிட்ட இரு சமுதாயத்தினர் மத்தியில், அரசியல் அங்கீகாரம் கிடைப்பது ...

மோடியை சந்திக்கிறார் பன்னீர்

Posted: 13 Aug 2017 10:38 AM PDT

பிரதமர் மோடியை, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் இன்று சந்தித்து பேசுகிறார்.

துணை ஜனாதிபதி பதவி யேற்பு விழாவில் பங்கேற்க, அ.தி.மு.க.,வின் இரு வேறு அணித் தலைவர்களாகச் செயல்படும், முதல்வர் பழனிசாமியும், பன்னீர்செல்வமும், 11ல் டில்லி சென்றனர். டில்லியில், பிரதமர் மோடியை, முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசினார். , அப்போது, இணைப்பு குறித்த முக்கிய பேச்சுநடத்தப் பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமியை சந்தித்த பின், பன்னீர் செல்வத்தை சந்திக்க, பிரதமர் மோடி நேரம் ஒதுக்கவில்லை. இதனால், பன்னீர்செல்வம் மஹாராஷ்டிர மாநிலம், புனே சென்று, ஷீரடி சாய் பாபா ...

6 முக்கிய சட்டங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல்

Posted: 13 Aug 2017 10:48 AM PDT

புதுடில்லி:ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், பதவியேற்ற மூன்று வாரங்களில், ஆறு முக்கிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

ராம்நாத் கோவிந்த், ஜூலை, 25ல், ஜனாதிபதி யாக பதவியேற்றார்.பார்லிமென்டில், சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட, முக்கியத்துவம் வாய்ந்த ஆறு சட்டதிருத்தங்களுக்கு, அவர் ஒப்புதல் அளித்துள்ளார். கடற்பகுதிகளில் நடக்கும் குற்றங்களுக்காக கைது செய்யப்படுவோர் தொடர் பான வழக்குகளை விசாரிப்பதற்கான, அதிகார வரம்பை நீட்டிக்கும் சட்டதிருத்தம், அவற்றில் முக்கியமானது.இதைத்தவிர, 127 ஆண்டு பழமை யான, காலனி ஆதிக்க கோர்ட்டுகளின் அட்மிரல் சட்டம், 156 ...

வாக்காளர் பட்டியலில் பெயர்; ஆர்வம் காட்டாத என்.ஆர்.ஐ.,

Posted: 13 Aug 2017 11:16 AM PDT

புதுடில்லி: என்.ஆர்.ஐ., என ஆங்கிலத்தில் சுருக் கமாக அழைக்கப்படும்,வெளிநாடு வாழ் இந்தியர்கள், வாக்காளர் பட்டியலில், தங்கள் பெயர்களை, 'ஆன்லைனில்' பதிவு செய்ய, தேர்தல் ஆணையம் வசதி அளித்த போதிலும், 24 ஆயிரம் பேர் மட்டுமே, இதுவரை பதிவு செய்து உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியாத வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டில் இருந்தபடியே, தேர்தல் ஆணைய இணைய தளத்தில், 'ஆன்லைனில்' பதிவு செய்து கொள்ள லாம்.இதன்படி, வேறு நாடுகளில் குடியு ரிமை பெறாத, வெளிநாடு வாழ் இந்தியர்கள், வாக் காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியும்; இந்தியா வில் அவர்களது ...

இன்றைய(ஆக.,14) விலை: பெட்ரோல் ரூ.70.40; டீசல் ரூ.60.27

Posted: 13 Aug 2017 12:28 PM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.40 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.27 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,14) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 21 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.70.40 காசுகளாகவும், டீசல் விலை 1 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.60.27 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,14) காலை 6 மணி முதல் அமலுக்கு ...

வாடகை தாய் சட்டம்; பார்லி., குழு அதிருப்தி

Posted: 13 Aug 2017 01:04 PM PDT

புதுடில்லி: 'திருமணமாகி ஐந்து ஆண்டுக்கு பின்பே, வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடியும் என்பதை, ஓராண்டாக மாற்ற வேண்டும்' என, பார்லிமென்ட் குழு கூறியுள்ளது.
பல்வேறு காரணங்களால் குழந்தைப் பேறு இல்லாதவர்கள், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்பது வர்த்தகமயமாகி உள்ளது. அதனால், இதில், பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில், வாடகைத் தாய் கட்டுப்பாட்டு மசோதா, பார்லிமென்ட்டில் நிறைவேறியது. இந்த மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலைக் குழு, பல்வேறு தரப்பினருடன் ஆய்வு, ஆலோசனை ...

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை

Posted: 13 Aug 2017 02:27 PM PDT

புதுடில்லி : அண்டை நாடான சீனாவில் உள்ள விமான நிலையத்தில், விமான நிறுவன ஊழியர்களால், இந்தியப் பயணியர் அவமதிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடக்கிறது.
இந்தியா - சீனா இடையே, டோக்லாம் எல்லைப் பிரச்னையால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், சீன விமான ஊழியர்களால், இந்திய பயணியர் அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அமெரிக்காவில் செயல்படும், பஞ்சாப் சங்கத்தின் செயல் இயக்குனர், சத்னாம் சிங் சாசல், வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது: ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™