Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்."

Posted: 13 Aug 2017 10:06 AM PDT

-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." "வறட்சியால் ,மழையின்மையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டணத்தில்-நாலு நாள் தொடர்ந்து கொட்டிய மழை 1941-42ல் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுசரிக்க தங்களோட ஊரில் பெரியவா தங்கப்போறர் என்று தெரிஞ்சதும் நாகப்பட்டணத்துக்காராளுக்கெல்லாம் பரமானந்தமாயிடுத்து.அதுக்குக் காரணம் வறட்சி. பூமி வறண்டு நிலமெல்லாம் வெடிச்சிருந்தது. குளமெல்லாம் வத்தி மைதானம் மாதிரி ஆகியிருந்தது. பஞ்சமும்,வறட்சியும் நிலவின விஷயம் பெரியவாளுக்கு தெரியவந்தாலும் தன்னோட திட்டத்தை மாத்திக்காம அங்கேதான் ...

தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!

Posted: 13 Aug 2017 09:49 AM PDT

தலைவர் மேடையில் உட்கார சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்களாமே… – ஆமா…தலைவர் போதையில விழாம இருக்கிறதுக்காக 'பெல்ட்' வச்ச நாற்காலி போட்டிருக்காங்க! – சிவ கிருபானந்தன் – ——————— – தலைவர் காசு கொடுத்து பட்டம் வாங்கின விஷயம் எப்படி வெளியில தெரிஞ்சது? – டாக்டர் பட்டம் கொடுக்கும்போது, இன்னும் ரசீது தரலைன்னு சொன்னாரே! – அஜீத் – ——————————————- நன்றி- வாரமலர்

தரமணி - நவீன அவள் அப்படித்தான் !

Posted: 13 Aug 2017 09:48 AM PDT

காட்சி மொழியின் உதவியுடன் என்னவெல்லாம் பேச முடியும் என்பதை தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல தமிழ் திரையுலகிற்கும் சேர்த்தே செய்து காட்டியிருக்கிறார் , இயக்குநர் ராம். வயது வந்த அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். நாம் எந்த அளவிற்கு போலியான கற்பிதங்களை உருவாக்கி வைத்து கொண்டு உளண்டு கொண்டிருக்கிறோம் என்பதை தெளிவாக காட்சிப்படுத்தி இருக்கிறார். ஒரு நாகரிக சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். திரைப்படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை அரசியல் ...

தலை கீழாக நின்றாலும் மாறமாட்டேன்

Posted: 13 Aug 2017 09:47 AM PDT

தலை கீழாக நின்றாலும் மாறமாட்டேன் கைகேகி கேட்ட வரம் தசரதன் கெஞ்சிய விதம் தலை கீழாக நின்றாலும் மாறமாட்டேன் என்ற கைகேகி . வரைந்த படமும் அப்பிடியே. தலை கீழாக பார்த்தாலும் அப்பிடியே ஸ்ரீ வட்டாடி பாப்பையா 1904 இல் வரைந்த படம். நன்றி க்ரிஷ்ணாம்மா /BHEL குரூப் ரமணியன்

துளிப்பாக்கள்…

Posted: 13 Aug 2017 09:45 AM PDT

சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி

Posted: 13 Aug 2017 09:43 AM PDT

திரைப்படம்: சபாஷ் மீனா பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: கு.ம. பாலசுப்பிரமணியம் இசை: டி.ஜி. லிங்கப்பா ஆண்டு: 1958 – —————————————– – சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி – எந்தன் சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி – எந்தன் சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி – எந்தன் சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி முத்துச் சரங்களைப் போல் முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி சித்திரம் பேசுதடி – எந்தன் சிந்தை மயங்குதடி ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(454)

Posted: 13 Aug 2017 09:13 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

ஒன்றை மட்டும் பார், இரண்டிருக்காது…!!

Posted: 13 Aug 2017 12:57 AM PDT

– சிற்பத்தைப் பார் – கல் இருக்காது உயிரைப் பார் – உடல் இருக்காது அன்பைப் பார் – அந்நியம் இருக்காது தொடர்பைப் பார் – துவந்தம் இருக்காது – காரணம் பார் – காரியம் இருக்காது! (சிற்பத்தைக் காணும்போது சிற்பம் செய்தல் என்ற காரியம் நினைவுக்கு வராது போயிற்று!) – நிலைத்திருப்பதைப் பார்- நிகழ்விருக்காது! ஒன்றை மட்டும் பார், இரண்டிருக்காது…!! – ——————————— இசைஞானி இளையராசா

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!

Posted: 13 Aug 2017 12:56 AM PDT

வயலின் வாசிக்கிறவர் தொடையில எதுக்கு 'பேடு' வச்சிருக்கிறார்? – பாகவதர் உணர்ச்சி வசப்பட்டு அவரோட தொடையில அடிச்சிடுறாராம். வலிக்காம இருக்கவாம்! – வி.சகிதா முருகன் – ————————————- – அந்தப் பல் டாக்டர் எப்படி? – அவரு பல்லை பிடுங்கிறாரோ இல்லையோ நல்லா ஃபீசை பிடுங்குவாரு…! – வி.சாரதி டேச்சு – ————————————- – என் மனைவி எது சொன்னாலும் நான் கேட்டுப்பேன், நீ எப்படி? – உன்னை மாதிரியெல்லாம் பொண்டாட்டி பேச்சைக் கேட்கிறது எனக்குப் பிடிக்காது, என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!! – எஸ்.பழனியப்பன் – ———————————–

மீசைய முறுக்கு – விமர்சனம்

Posted: 13 Aug 2017 12:54 AM PDT

கதையின் கரு: சினிமா இசையமைப்பாளராக ஆசைப்படும் ஒரு இளைஞர். ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு சின்ன வயதில் இருந்தே இசை மீது ஆர்வம். பள்ளி–கல்லூரிகளில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நண்பர்களின் பாராட்டுகளை சம்பாதிக்கிறார். என்றாவது ஒருநாள் தன் திறமைக்கு மரியாதை கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், அவருக்கு காதல் வருகிறது. அவருடைய காதலி, ஆத்மிகா. இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசிக்கிறார்கள். கல்லூரியில் படித்துக் கொண்டே இசையமைப்பாளர் ஆக முயற்சிக்கிறார், ...

தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!

Posted: 13 Aug 2017 12:50 AM PDT

– தலைவர் ரொம்ப கோபமா இருக்காரா…எப்படி? – நாங்க ஆட்சிக்கு வந்தால், சி.பி.ஐ.அதிகாரிகள் வீட்டில்  சோதனை போடுவோம்னு சொல்றாரே! – அ.பேச்சியப்பன் – ————————————– நன்றி- வாரமலர்

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!

Posted: 13 Aug 2017 12:42 AM PDT

திசைகள் எட்டும் அரும்பாய் இருந்த அன்னை பாரதம் அனைத்து துறையிலும் கரும்பாய் இனிப்பதை களிக்கும் திருநாள் இந்த திருநாள்! – எல்லா வளர்ச்சிக்கும் இதயமாய் இருக்கிற கல்வியில் தேசம் கலங்கரை விளக்காக காட்சி தரும் திருநாள் இந்த திருநாள்! – ஏவுகணைகளை ஏவி களித்து வான மண்டலத்தையே வியக்க வைத்த அலாவுதீன் அற்புத விளக்காம் அறிவியல் துறையில் அதிசயம் நிகழ்த்தும் ஆற்றல் போற்றும் ஆனந்த திருநாள் இந்த திருநாள்! – குடும்ப விளக்காம் பெண் விடுதலையை பேச்சாய் இல்லாமல் உயிர்மூச்சாய் உணர்ந்து போற்ற உதவிய ...

நாயுடன் சேர்ந்த நரி!

Posted: 13 Aug 2017 12:41 AM PDT

'நரி காட்டில் வாழ்வதால், அது, நாய்களை போல், மனிதர்களுடன் நட்புடன் இருக்காது…' என்று சொல்வதுண்டு. ஆனால், இது பொய் என்று நிரூபித்துள்ளது, நரி ஒன்று! கேரள மாநிலம், திரிச்சூரில் நெல்சன் என்பவர் வீட்டில், 'லாப்ரடார்' இன நாய் ஒன்று இருக்கிறது. இவரது வீடு, காட்டுப் பகுதியை ஒட்டி இருப்பதால், நரி ஒன்று இவர் வீட்டு அருகில் குட்டி போட்டது. இதை பார்த்த நாய் குரைக்க, நரி, அதன் குட்டிகளை தூக்கிக் கொண்டு ஓட, ஒரு குட்டியை தவற விட்டு விட்டது. நாய், அந்த நரிக்குட்டியை கவ்வி, வீட்டுக்குள் எடுத்துச் செல்ல, ...

அமெரிக்காவில் சமையல்-French Baguette உப்புமா!

Posted: 12 Aug 2017 10:32 PM PDT


64 அடி உயர கோதண்டராமர் சிலை வடிக்க பிரம்மாண்ட கல் இன்று பெங்களூரு பயணம்

Posted: 12 Aug 2017 10:31 PM PDT

வந்தவாசி: வந்தவாசி அருகே, ஒரே கல்லில், 64 அடி உயர விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை மற்றும் ஆதிசேஷன் சிலைகள் செய்ய, கல் வெட்டும் பணி முடிந்துள்ளது. இந்த கற்கள், நாளை, பெங்களூரு செல்கின்றன. கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில், கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலில், மூலவர் கோதண்டராம சுவாமி, வீர ஆஞ்சநேயர், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், வராகர், அய்யப்பன், அஷ்டலட்சுமி, தட்சிணாமூர்த்தி, நவக்கிரகம் உள்ளிட்ட சன்னதிகள் ...

விவசாயம் வீழ்ந்து போச்சு

Posted: 12 Aug 2017 10:29 PM PDT

விவசாயம் வீழ்ந்து போச்சு எங்க பொழப்பும் காய்ந்து போச்சு ஐநா சபை நீயும் கூட்டி ஐயநாரே காப்பாத்து விவசாயம் வீழ்ந்து போச்சு எங்க குடும்பம் சாய்ந்து போச்சு ஐநா சபை நீயும் கூட்டி ஐயநாரே காப்பாத்து கரிசல் காட்டு நிலமும் கூட வெடிச்சே போச்சி சோளக்கொல்லை  பொம்ம இப்போ ஒடைஞ்சே போச்சி விவசாயி விடியலத்தான் தேடி தேடி ஒடிவந்தான் அது கிடைக்காம படையலுக்கு உசுர விட்டான் தண்ணியத்தான் தேடி தேடி ஓடி வந்தோம் நாங்க அது கெடைக்காம விவசாயம் காஞ்சி போச்சி தாங்க வெளிநாட்டுகாரன் தண்ணிய விக்க பார்த்து ...

சீனாவில்தொடர் மழை: 360 விமானங்கள் ரத்து

Posted: 12 Aug 2017 10:12 PM PDT

பீஜிங்: சீனா தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை பெய்து வருவதால் இன்று (ஆக.,12) 360 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவில் தலைநகர் பீஜிங்கில் இன்று இடி மின்னலுடன் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. தலைநகரை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மலைப்பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மழை பெய்வதால் நிலச் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. ...

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook

Posted: 12 Aug 2017 08:14 PM PDT

ரோந்த பிர்ய்நே எழுதிய தே சீக்ரட் புத்தகத்தின் தமிழாக்கம் ஈகரை உறவுகளுக்காக...

The Secret Tamil Ebook




தரவிறக்கம் செய்ய

சுதந்திர தின அணிவகுப்பு ஆந்திர போலீசார் பங்கேற்பு

Posted: 12 Aug 2017 06:24 PM PDT

சென்னை, தமிழக அரசு சார்பில், ஆக., 15ல் நடைபெற உள்ள, சுதந்திர தின விழா அணிவகுப்பில், முதன் முறையாக, நல்லெண்ண அடிப்படையில், ஆந்திரப் போலீசார் பங்கேற்க உள்ளனர். நேற்று நடந்த ஒத்திகை அணிவகுப்பில், அவர்கள் பங்கேற்றனர். தமிழகப் போலீசார், 54 பேர், ஆந்திராவில் நடைபெறும், சுதந்திர தின விழா அணிவகுப்பில் பங்கேற்க சென்றுள்ளனர். சென்னையில், கோட்டை கொத்தளம் முன், நேற்று காலை, சுதந்திர தின விழா ஒத்திகை நடந்தது. ஆந்திரப் போலீசார், இரண்டு பிரிவாக, அணிவகுத்து வந்தனர். - -------------------------------- தினமலர்

தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு தனி இணையதளம் கோரி வழக்கு

Posted: 12 Aug 2017 06:21 PM PDT

சென்னை: அரசு துறைகளின் தகவல்களை, தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பெறும் வகையில், இணையதளத்தை ஏற்படுத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது. திருச்சியைச் சேர்ந்த, முகமது காதர் மீரான் என்பவர் தாக்கல் செய்த மனு:தகவல் பெறும் உரிமை சட்டத்தில், அரசின் தகவல்களை பெற, மஹாராஷ்டிர அரசு, இணையதளத்தை ஏற்படுத்தி உள்ளது. 'ஆன்லைன்'இதே போல், இணையதளத்தை ஏற்படுத்த, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™