Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'நீட்' விவகாரத்திற்கு தீர்வு உண்டா? அரசின் தலையீட்டால் குழப்பம்

Posted: 11 Aug 2017 09:47 AM PDT

'நீட்' தேர்வு விவகாரத்தில், தமிழக அரசின் தவறான அணுகுமுறையால், மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு, முறையாக கிடைக்க வேண்டிய வாய்ப்பும் பறிக்கப்பட்டு உள்ளதாக, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் தெரிவித்துள் ளனர்.

தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை சமாளிக்க, 'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரும், அவசர சட்டத்தை இயற்றிய தமிழக அரசு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியது; இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.இதனிடையே, 'நீட் தேர்வு மதிப்பெண்படி மட்டுமே, மாணவர் சேர்க்கை நடக்கும்; அதில், தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சத வீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்' என, ஜூலையில், ...

எந்த சூழலையும் சந்திக்க ராணுவ வீரர்கள்...தயார்!

Posted: 11 Aug 2017 09:53 AM PDT

புதுடில்லி:சிக்கிம் மாநில எல்லையில் வாலாட்டி வரும் சீன ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ''எந்த நெருக்கடியான சூழ்நிலையையும் சந்திக்க, நம் படைகள் தயாராக உள்ளன,'' என, ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபாவில் தெரிவித்தார்.

இந்தியா - சீனா எல்லையில், டோகோலாம் பகுதியில், சாலை அமைக்கும் பணியில் சீன ராணுவம் முயன்றது; அதை நம் படைகள் தடுத்து நிறுத்தின. இதையடுத்து, டோகோலாம் பகுதியில், இரு நாட்டுப் படைகளும் குவிக்கப் பட்டுள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
அவநம்பிக்கை வேண்டாம்
லோக்சபாவில், இது தொடர்பான பிரச்னை மற்றும் ...

ராமஜென்ம பூமி - மசூதி வழக்கில் டிச., 5 முதல் இறுதி விசாரணை

Posted: 11 Aug 2017 09:57 AM PDT

புதுடில்லி:'அயோத்தி ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்குகளில், இறுதி விசாரணை, டிச., 5ல் துவங்கும்' என, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந் துள்ளது. இங்குள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, 1992, டிச., 6ல் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த, அலகாபாத் உயர்நீதிமன்றம், 2010ல் தீர்ப்பு அளித்தது. சர்ச்சைக் குரிய, 2.77 ஏக்கர் நிலத்தை, சன்னி முஸ்லிம் வக்ப் வாரியம், நிர் மோகி அகாரா அமைப்பு மற்றும் ராம் லாலா அமைப்பு ஆகியவைபிரித்துக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு ...

7.5 சதவீத வளர்ச்சி சாத்தியமில்லை: பொருளாதார ஆய்வறிக்கை தகவல்

Posted: 11 Aug 2017 10:23 AM PDT

புதுடில்லி:'ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2016 - 17ம் நிதியாண் டில், 7.5 சதவீதத்தை எட்டுவதற்கு சாத்திய மில்லை' என, பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டின் போது, பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படும். முந்தைய நிதியாண்டின் பொருளாதார செயல்பாடுகள் குறித்து இந்த ஆய்வறிக்கை யில் தெரிவிக்கப்படும்.அதன்படி, 2017 - 18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, இந்தாண்டு, ஜனவரியில் தாக்கல் செய்த போது, 2016 - 17ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பார்லி.,யில் தாக்கல்
அதில், 6.75 முதல், 7.5 ...

நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்டாலின் மிரட்டல்

Posted: 11 Aug 2017 10:41 AM PDT

சென்னை:''தேவைப்பட்டால், தமிழக அரசுக்கு எதிராக, மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில், நேற்று நடந்தது. கூட்டம் முடிந்ததும்,ஸ்டாலின் அளித்த பேட்டி: முதல்வர் பழனிசாமி அணி, பன்னீர் செல்வம் அணி, தினகரன் அணி என, அ.தி.மு.க., பிரிந்த திலிருந்து, தமிழகத்தில், அசாதாரண சூழல் நிலவுகிறது. இப்படிப்பட்ட நிலையில், தமிழக மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் தொடர்ந்து ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய அசாதாரண சூழலில், தேவைப்பட் டால், ...

ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க...! 'கெடு' விதிக்கிறார் தினகரன்

Posted: 11 Aug 2017 10:47 AM PDT

தஞ்சாவூர்:''ஒரு வாரம் பொறுத்திருங்கள், பல்வேறு முடிவுகள் தெரியவரும்,'' என, சசிகலாவின் உறவினர் தினகரன் கூறினார்.

தஞ்சையில், நேற்று அவர் அளித்த பேட்டி:அ.தி.மு.க.,வில், சில நண்பர்கள், பயம், சுயநலம் காரணமாக, 'சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும்' என சொல்கின்றனர். போலீசார் அனுமதி மறுத்தாலும், மேலுாரில் கூட்டம் நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள். தேர்தல் கமிஷன் உத்தரவை மீறி, தீர்மானம் வெளியிட்டுள்ளனர். தேர்தல் கமிஷனில் புகார் அளித்தால், கையெழுத்திட்டவர்களின் பதவி பறிபோகும். சசிகலா அறிவித்த பொருளாளர் பதவி செல்லும் போது, துணை பொது செயலர் பதவி ...

தேர்தல் கமிஷனில் பன்னீர் அணி புதிய மனு

Posted: 11 Aug 2017 10:51 AM PDT

முதல்வர் பழனிசாமி அணியின் சார்பில், தினகரனுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர் மானங்களை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, தேர்தல் கமிஷனிடம், புதிய மனுவை, பன்னீர் செல்வம் அணியினர், நேற்று தாக்கல் செய்தனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறை வுக்குப் பின், அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிளவை அடுத்து, கட்சியின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. இதை மீட்கும் முயற் சியில், சசிகலா தப்பினரும், முன்னாள் முதல் வர் பன்னீர் தரப்பினரும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளனர். இரு அணிகள் சார்பிலும், தேர்தல் கமிஷனில், பிரமாண பத்திரங்கள் தாக்கல் ...

அரசுக்கு எதிராக பூச்சாண்டி காட்டும் தினகரன்... '420'

Posted: 11 Aug 2017 11:07 AM PDT

''அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, பூச்சாண்டி காட்டும் தினகரன் தான், '420' எனப்படும், மோசடி பேர்வழி. ஸ்டாலின், நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வந்தால், நாங்கள் சந்திக்க தயார்,'' என, டில்லியில், நேற்று, முதல்வர் பழனிசாமி அதிரடி பேட்டி அளித்தார். மேலும், அ.தி.மு.க., அணிகள் இணையும் என, நம்பிக்கை தெரிவித்த அவர், பிரதமரை சந்தித்து, 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தினார்.

சென்னை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத் தில், நேற்று முன்தினம், முதல்வர் பழனிசாமி தலைமையில், அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்ற, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், ...

கலெக்டர் பணிக்காக, 39 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் காத்திருப்பு! அமைச்சர்கள் ஆதரவில் அசையாத ஆட்சியர்கள்-

Posted: 11 Aug 2017 11:14 AM PDT

கோவை:தமிழகத்தைச் சேர்ந்த, 21 அதிகாரி களுக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து தரப்பட்டுள்ள தால், கலெக்டர் பணிக்காக காத்திருக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் எண்ணிக்கை, 39 ஆக உயர்ந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டிலும், ஐ.ஏ.எஸ்., பணியில் ஏற்படும் காலியிடத்தைப் பொறுத்து, அந்தந்த மாநிலங்களில் இருந்து, மாநில அரசால் பரிந் துரை செய்யப்படும் அதிகாரிகளுக்கு, மத்திய அரசால் ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து அளிக்கப் படுகிறது.
ஜனாதிபதி ஒப்புதல்
இதன்படி, ஓராண்டில், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்துக்கு தகுதி பெறுவோர்க்கு, அதற்கு அடுத்த ஆண்டு ஆக., 15க்குள், இந்த அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்; அல்லது அந்த ஆண்டு ...

இன்றைய(ஆக.,12) விலை: பெட்ரோல் ரூ.69.92; டீசல் ரூ.60.16

Posted: 11 Aug 2017 11:37 AM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.69.92 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.16 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,12) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 24 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.69.92 காசுகளாகவும், டீசல் விலை 18 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.60.16 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,12) காலை 6 மணி முதல் அமலுக்கு ...

அதிக கட்டணம் வசூல்: ஆம்னி பஸ்கள் குறித்து அமைச்சர் ஆய்வு

Posted: 11 Aug 2017 12:54 PM PDT

சென்னை:வருகிற 14-ந் தேதி கிருஷ்ண ஜெயந்தி மற்றும் 15-ந் தேதி சுதந்திர தின விடுமுறை என்பதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை சேர்த்து 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் உள்பட பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று கிளம்பினார்கள்.
11 ஆம்னி பஸ்கள் நிறுத்தம்
இதனை பயன்படுத்தி பல ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ...

அசாமில் காந்தி சிலை அகற்ற முடிவு: சமூக ஆர்வலர்கள் கண்டனம்

Posted: 11 Aug 2017 02:41 PM PDT

புதுடில்லி:அசாம் மாநிலத்தில் மகாத்மா காந்தியின் சிலையை அகற்றும் கவுகாத்தி நிர்வாகத்தின் முடிவுக்கு அம்மாநில கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அசாம் மாநிலம் கவுகாத்தி மாவட்டத்தில் உள்ள சரினியா மலையில் காந்தி மண்டப தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ராம்கிந்தார் வடிவமைத்த மகாத்மா காந்தியின் சிலையை அங்கிருந்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. துணை கமிஷனர் தலைமையில் கடந்த திங்கட்கிழமை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.சிலை காந்தியின் உருவத்தை போன்று இல்லை என்பதால் அகற்றப் போவதாக கூறி கவுகாத்தி மாவட்ட நிர்வாக இந்த ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™