Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:

Posted: 09 Aug 2017 03:43 PM PDT

கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு: மருமகள் பக்கம் நின்று ரூ.4 கோடி ஜீவனாம்சம் வாங்கி கொடுத்த மாமியார் - கோபத்தில் கொந்தளித்த மகன் கர்நாடகாவில் விவகாரத்து வழக்கு ஒன்றில் மாமியார் ஒருவர் மருமகளின் பக்கம் நின்று, தன் மகனிடம் இருந்து ஜீவனாம்சமாக ரூ. 4.85 கோடி வாங்கி கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மறைந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் கஷ்யப்பானவரின் மகன் தேவானந்த். இவர் கடந்த 2011-ம் ஆண்டு தனது சகோதரியின் மகள் ரம்யாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் செய்து கொண்டார். ...

உடைந்த நிலாக்கள் - பா விஜய் மின்நூல் இருந்தால் பகிருங்களேன்

Posted: 09 Aug 2017 10:40 AM PDT

உடைந்த நிலாக்கள் - பா விஜய் மின்நூல் மூன்று பாகங்கள் மின்னூல் இருந்தால் பகிருங்களேன்.

இந்த புத்தகம் நூல் வடிவில் எங்கு கிடைக்கும்.

நன்றி

வேலன்:-செல்பேசி தகவல்களை பரிமாற்றிக்கொள்ள

Posted: 09 Aug 2017 09:51 AM PDT

மாறி வரும் காலத்திற்கு ஏற்ப நாம் நம்முடைய மொபைல்போன்களை மாற்றிக்கொண்டே வருகின்றோம். அவ்வாறு மாற்றும் சமயம் நம்மிடம் பழைய போனில் உள்ள தொடர்புகள்.புகைப்படங்கள்.வீடியோக்கள்.தகவல்கள் போன்றவற்றை ஒரு போனிலிருந்து மற்ற போனுக்கு மாற்றிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 35 எம்.பி கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இந்த தளம் :-http://velang.blogspot.com/2017/08/blog-post.html செல்லுங்கள். சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உஙக்ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நான்கு வித ...

2019ல் அரசியலை துறந்து இருப்பேன்: வெங்கையா நாயுடு

Posted: 09 Aug 2017 09:49 AM PDT

2019ல் அரசியலை துறந்து இருப்பேன்: வெங்கையா நாயுடு ஐதராபாத்: ''துணை ஜனாதிபதியாக ஆகாமல் இருந்து இருந்தால், 2019ம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இருப்பேன்,'' என, துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கையா நாயுடு கூறினார்.வெங்கையா நாயுடு பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும் பேசிய உரைகள் அடங்கிய புத்தகத்தின் தெலுங்கு பதிப்பு வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. அதில் வெங்கையா நாயுடு பேசியதாவது: சந்தர்ப்ப சூழ்நிலைகள் துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதால், நான் வலுக்கட்டாயமாக ...

கத்தார் செல்ல இனி விசா தேவையில்லை

Posted: 09 Aug 2017 09:41 AM PDT

கத்தார் செல்ல இனி விசா தேவையில்லை தோகா : கத்தார் நாட்டுக்கு செல்ல இந்தியர்கள் உள்ளிட்ட 80 நாட்டவர்கள் விசா எடுக்க தேவையில்லை என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் முகமது ரஷீத் அல் மஜ்ரோஹி அறிவித்துள்ளார். கத்தார் நாட்டிற்கு அண்டைநாடுகளுடனான உறவில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் வான்வழி போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு, விசா நடைமுறையை குறிப்பிட்ட நாடுகளுக்கு கத்தார் தளர்த்தியுள்ளது. 2.4 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கத்தார் நாட்டில், 90 சதவீத மக்கள் ...

விமானத்தில் வந்து செயின் பறிப்பு…

Posted: 09 Aug 2017 09:33 AM PDT

விமானத்தில் வந்து செயின் பறிப்பு… விமானத்தில் வந்து செயின் பறிப்பு… சொகுசான வாழ்க்கை… கைதானவர்கள் பின்னணி இதுதான்! சென்னை மாநகரில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள், அப்பகுதியினரை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது. இதனால் பெண்கள் தனியாக சாலையில் நடக்கவே தயங்கிய நிலை ஏற்பட்டது.  சாலை ஓரத்தில் நடத்து கொண்டிருக்கும் பெண்களிடம் திடீரென பைக்கில் வரும் ஆசாமிகள், கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களின் செயினைப் பறித்துச் செல்லும் சம்பவங்கள் வீடியோக்களில் வைரலாக வலம் வரத்தொடங்கின.  காவல்துறையினர் ...

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்

Posted: 09 Aug 2017 06:30 AM PDT

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1 முகப்புரை குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் . ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை. திருவள்ளுவரைப்போலவே ...

சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்

Posted: 09 Aug 2017 05:42 AM PDT

லண்டன் புரட்சிகர புதிய தொழில்நுட்பம், காயங்களைக் குணமாக்கி  அந்த உறுப்புகளை  மீண்டும் உருவாக்க முயல்கிறது. இந்த தொழில்நுட்பம்   திசு நானோமாற்றியமைத்தல் ( tissue nano transfection) டிஎன் டி  என அழைக்கப் படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் நானோசிப்பை  அழுத்துவதன் மூலம் வினாடிகளில் வேலை செய்கிறது. தமனிகள் மற்றும் இதயம் போன்ற உறுப்புகள் போன்ற சேதமடைந்த பகுதிகளை சரிசெய்ய உதவுகின்ற இயற்கை உயிரணு கட்டுமானக் கருவிகள்  அவற்றை மாற்றுவதற்கு  ஒரு சிறிய மின்சார தூண்டுதலால் தோல் செல்கள்  ...

பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்

Posted: 09 Aug 2017 05:39 AM PDT

புதுடெல்லி, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992–ம் ஆண்டு இடிக்கப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்தது. ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி விவகாரத்தில் இணைந்து ...

சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்

Posted: 09 Aug 2017 05:33 AM PDT

- கோல்ஹாபூர், - தேசிய கீதத்தினை மாற்று திறனாளிகளுக்காக சைகை மொழியில் உருவாக்கும் முயற்சிகளை மாற்று திறனாளிகளுக்காக இயங்கி வரும் அமைப்புகள் மேற் கொண்டன.  மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் உருவான சைகை மொழியிலான தேசிய கீதம் அடங்கிய வீடியோ கேசட் வெளியீட்டு விழா புதுடெல்லியில் நாளை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் அமிதாப் பச்சன் கலந்து கொண்டு கேசட்டை வெளியிடுகிறார்.  அவருடன் டெல்லியில் இயங்கி வரும் சேத்தனா மாற்று திறனாளி அமைப்பின் குழந்தைகள் ...

கூழாங்கற்கள்...!!

Posted: 09 Aug 2017 01:47 AM PDT

இரண்டு கவிதைகள்.

1.
குழிப்புண்கள்
*
மேம்பாலத்தைக்
கடக்கும் போதெல்லாம்
பாலாற்று நதியைப்
பார்க்கிறது கண்கள்.
மணல் வாரி வாரி
எடுத்துள்ளதால்
உடம்பெல்லாம்
குழிப்புண்கள்.
*
2.
கட்டணம்
*.
நகராட்சி கட்டணக்
கழிப்பிடத்தில்
இலவசமாக
சிறுநீர் கழிக்கிறது
நாய்.
ந.க.துறைவன்.
*

தமிழ்ப்பட பாடல் காணொளிகள் - தொடர் பதிவு

Posted: 08 Aug 2017 11:31 PM PDT

கங்கைக் கரைத் தோட்டம், கன்னிப் பெண்கள் கூட்டம்
--

-

‛வாய்மையே வென்றது': வெற்றி குறித்து அகமது படேல் கருத்து

Posted: 08 Aug 2017 11:21 PM PDT

- காந்திநகர்: ராஜ்யசபா தேர்தலில் பெற்ற வெற்றி குறித்து ‛வாய்மையே வென்றது' என காங்., கட்சியின் அகமது படேல் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: வாய்மையே வென்றது. இது பணபலம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிரான வெற்றி. எனக்கு ஓட்டளித்த 44 எம்.எல்.ஏ.,க்களுக்கும் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார். - ------------------------------------------

ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!

Posted: 08 Aug 2017 10:33 PM PDT

பெரம்பலூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு குட்டிக்கதை சொன்னார். - ''ஒருகாடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதைக் கண்ட விலங்குகளும் பறவைகளும் அங்கிருந்து ஓட்டம்பிடித்தன. ஆனால், ஒரு சிட்டுக்குருவி மட்டும் தனது சிறிய அலகால் தண்ணீரைக் கொண்டுவந்து ஊற்றித் தீயை அணைக்க முயற்சி செய்தது. - இதைக் கண்ட இறைவன், சிட்டுக்குருவியிடம்... 'உனது சிறிய அலகால் தண்ணீரைக் கொண்டுவந்து எப்படிக் காட்டுத்தீயை அணைக்க முடியும்' ...

தமிழகத்தில் ஒருவர் தான் டெங்குவால் இறந்தாராம்!

Posted: 08 Aug 2017 07:25 PM PDT

சென்னை: நாடு முழுவதும், 'டெங்கு' காய்ச்சலுக்கு, இந்தாண்டில், 46 பேர் இறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது; தமிழகத்தில் ஒருவர் மட்டும் உயிரிழந்தார் என்றும் கூறுகிறது. டெங்கு பாதிப்பு குறித்து, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தாண்டு, கேரள மாநிலத்தில், 13 ஆயிரத்து, 913 பேர் பாதிக்கப்பட்டு, 23 பேர் இறந்துள்ளனர். உத்தர பிரதேசம் மாநிலத்தில், 156 பேர் பாதிக்கப்பட்டதில், 15 பேர் இறந்துள்ளனர். மூன்றாம் இடத்தில் உள்ள கர்நாடகாவில், 4,186 பேர் பாதிக்கப்பட்டு, ஐந்து பேர் இறந்துள்ளனர். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™