Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'மொபைல் ஆப்' வழியே ரூ.3 கோடி வசூல்

Posted: 09 Aug 2017 08:05 AM PDT

மின் வாரியத்தின், 'மொபைல் ஆப்' எனப்படும், 'மொபைல் அப்ளிகேஷன்' சேவை வாயிலாக, மூன்று கோடி ரூபாய் மின் கட்டணம் வசூலாகிஉள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம், மின் கட்டண மையம், தபால் நிலையம், குறிப்பிட்ட சில வங்கிகள், இணையதளம் மூலம், மின் கட்டணத்தை செலுத்தும் வசதியை ஏற்படுத்தி உள்ளது. மின் வாரியம் பெயரில், போலி, 'மொபைல் ஆப்'கள் புழக்கத்தில் உள்ளன. அதில், பலரும் கட்டணத்தை செலுத்தி, ஏமாந்தனர். இதையடுத்து, அதிகாரபூர்வ மின் வாரிய,'மொபைல் ஆப்' சேவையை, மின் துறை அமைச்சர் தங்கமணி, ஜூலை, 12ல் துவக்கி வைத்தார். இதுவரை அந்த, 'அப்ளிகேஷன்' வாயிலாக, 18 ஆயிரத்து, 300 பேர், 2.83 கோடி ...

புது கட்சி துவக்குகிறார் சரத் யாதவ்? : பீஹார் அரசியலில் மீண்டும் திருப்பம்

Posted: 09 Aug 2017 08:17 AM PDT

பாட்னா: பீஹாரில், ஆளுங்கட்சியாக உள்ள, ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர், சரத் யாதவ், புதிய கட்சி துவங்குவது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

பீஹாரில், முதல்வர், நிதிஷ் குமார் தலைமை யில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.,வுக்கு எதிராக, தீவிர அரசியல் நடத்தி வந்த, நிதிஷ் குமார், சமீபத் தில், அந்த கட்சியுடன் இணைந்து, ஆட்சி அமைத்தது, அம்மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.பா.ஜ.,வுடன், நிதிஷ் கைகோர்த்தது, ஐக்கிய ஜனதா தளம் நிறுவன தலைவர்களில் ஒருவ ரான, சரத் யாதவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள் தீர்ப்புக்கு ...

ஊழலற்ற நாட்டை உருவாக்கும் திட்டத்துக்கு மோடி...அழைப்பு!

Posted: 09 Aug 2017 08:46 AM PDT

புதுடில்லி:''நாட்டின் சுதந்திரத்துக்கு, வெள்ளை யனே வெளியேறு இயக்கம் வித்திட்டதுபோல், வறுமை, ஊழல், இல்லாத நாட்டை உருவாக் கும், 'செய்வோம், செய்து காட்டுவோம்' என்ற புதிய இயக்கத்துக்கு, அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின், 75வது ஆண்டையொட்டி, பார்லிமென்டில் நேற்று சிறப்பு விவாதம் நடந்தது. லோக்சபா வில் நடந்த விவாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:நம் நாடு, 1947ல் சுதந்திரம் பெற்றது. அதற்கு, வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தை, 1942ல், மஹாத்மா காந்தி துவக்கினார். 'செய் அல்லது ...

தமிழுக்கு அங்கீகாரம் எங்கே? : தம்பிதுரை திடீர் ஆவேசம்!

Posted: 09 Aug 2017 08:50 AM PDT

புதுடில்லி: நாட்டின் அனைத்து மொழிகளை யும், தேசிய மொழிகளாகவும், அலுவல் மொழி களாகவும் அங்கீகரிக்கும்படி, லோக்சபாவில் நேற்று, அ.தி.மு.க., மூத்த தலைவரும், லோக் சபா துணை சபாநாயகருமான, தம்பிதுரை வலியுறுத்தினார்.

லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தில் பங்கேற்ற, துணை சபாநாயகர், தம்பிதுரை பேசியதாவது: நாடு, சுதந்திரம் பெற, அனைத்து மொழிகளைச் சேர்ந்த மக்களும் போராடியுள் ளனர். குறிப்பிட்ட ஒரு மொழிக்கு மட்டும் முன்னுரிமை தருவதற்கு பதில், அனைத்து மொழி களையும் சமமாக நடத்துவது, பார்லிமென் டின் கடமை. நாட்டின் அனைத்து மொழிகளையும், பிராந்திய மொழிகளாக மட்டும் ...

எதிரி படை களை சமாளிக்க ராணுவம் தயார்: ஜெட்லி உறுதி

Posted: 09 Aug 2017 08:51 AM PDT

புதுடில்லி: ''எதிரிகளின் சவால்களை எதிர் கொள்ளும் வகையில், நம் ராணுவத்தின் பலம் அதிகரித்துள்ளது,''என, ராஜ்யசபாவில், ராணுவ அமைச்சர், அருண் ஜெட்லி பேசினார்.

ராஜ்யசபாவில் நேற்று நடந்த சிறப்பு விவாதத் தில்,அவர் பேசியதாவது:நாட்டின் பாதுகாப்பில், எந்தவித சமரசமும் செய்ய முடியாது. 1962ல், சீனாவுடன் நடந்த போர், நமக்கு சிறந்த பாட மாக அமைந்தது. ராணுவ தேவையில்,நாடு தன்னிறைவு அடைய வேண்டும். ஆயுதங் களுக் காக, வேறெந்த நாட்டையும் நம்பியிருக்கும் சூழல் இருக்கக் கூடாது என் பதை உணர்ந்து, அதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளன. எல்லையை காக்கும் ...

அரசு கேபிள் 'டிவி' உரிமம் ஒரு வாரத்தில் ரத்தாகிறது?

Posted: 09 Aug 2017 10:02 AM PDT

தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், 'டிஜிட்டல்' முறையில், ஒளிபரப்பை துவங்கு வதற்கு, மத்திய அரசு விதித்த கெடு முடிய, இன்னும் ஒரு வாரமே உள்ளது.

தமிழக அரசு, பல ஆண்டுகளாக போராடிய பின், 2017, மே மாதம்,கேபிள், 'டிவி' சேவையை, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வழங்குவதற் கான உரிமத்தை, தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, 'டிராய்' வழங்கியது. அப்போது, இரண்டு மாதத்திற்கு, அதாவது, ஜூலை, 17க்குள், அதை வழங்கும்படி உத்தரவிட்டது.அதைத் தொடர்ந்து, டிஜிட்டல் ஒளி பரப்புக்கு தேவையான, 'செட் - டாப்பாக்ஸ்'களை கொள்முதல் செய்ய, அரசு கேபிள் நிறுவனம், டெண்டர் கோரியது. அந்த டெண்டரை இறுதி ...

முதல்வருக்கு வரவேற்பு: தினகரன் அணி அதிர்ச்சி

Posted: 09 Aug 2017 10:14 AM PDT

விழுப்புரம் சென்ற, முதல்வர் பழனிசாமிக்கு, வழிநெடுகிலும், கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தது, தினகரன் அணியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அ.தி.மு.க., சசிகலா அணியானது, முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் அணி என, பிளவு பட்டுள்ளது. கட்சியினரிடம் தனக்குள்ள செல் வாக்கை நிரூபிக்க, சுற்றுப்பயணம் செல்லப் போவதாக,தினகரன் அறிவித்துள்ளார். மேலும், தன்னிச்சையாக புதிய நிர்வாகிகள் பட்டியலை யும் வெளியிட்டார். இந்நிலையில், விழுப்புரத்தில் நேற்று நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்க, முதல்வர் பழனிசாமி, காரில் சென்றார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ...

சரவெடி காவிரி நதிநீர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அடுக்கடுக்காக கேள்வி

Posted: 09 Aug 2017 10:19 AM PDT

காவிரி நதிநீர் வழக்கு விசாரணையின்போது, 'நீர் சேகரிப்பில் கவனம் செலுத்தாதது ஏன்' என, தமிழக அரசைக் கண்டித்துள்ள உச்ச நீதி மன்றம், அடுக்கடுக்காக, சரவெடி கேள்விகளை எழுப்பியுள்ளது. 'நதிநீர் பங்கீடு தொடர்பான விபரங்கள் குறித்து விளக்குவதற்கு, வல்லுனர் குழுவை அழைத்து வர வேண்டும்' என, தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காவிரி நதிநீரைப் பங்கிடுவது தொடர்பாக, காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.இந்த வழக்குகளை, ...

சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து நீக்க முடிவு? முதல்வர் பழனிசாமி அடுத்த 'மூவ்'

Posted: 09 Aug 2017 10:39 AM PDT

முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், இன்று டில்லி செல்வதால், இரு அணிகள் இணைப்பு பேச்சில் நீடிக்கும் இழுபறி, முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு, தொண்டர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

அதற்கு வசதியாக, சசிகலா மற்றும் தினகரனை, கட்சியில் இருந்து நீக்க, முதல்வர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க., பழனிசாமி அணியும், பன்னீர் அணியும் இணைய வேண்டும் என, பா.ஜ., மேலிடம் அறிவுறுத்தியது. அதை ஏற்று பேச்சு நடத்த, இரு தரப்பிலும் குழு ...

உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த உத்தரவு

Posted: 09 Aug 2017 01:41 PM PDT

புதுடில்லி: உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தும்படி, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 'நாடு முழுவதும், வறட்சியால் பாதிக்கப்பட்ட, 10 மாநிலங்களில், தகுந்த நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும்; நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி, தாமதம் செய்யக்கூடாது' என, கூறியிருந்தது.
இந்த உத்தரவுகளை அமல்படுத்தப்படுவது குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மதன் பி.லோகுர், என்.வி.ரமணா அடங்கிய அமர்வு, கண்காணித்து வருகிறது. ...

பா.ஜ.,வே வெளியேறு இயக்கம்; மம்தா பானர்ஜி துவக்கினார்

Posted: 09 Aug 2017 03:20 PM PDT

மிட்னாபூர்: வரும், 2019ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் வகையில், 'பா.ஜ.,வே வெளியேறு' என்ற இயக்கத்தை துவக்கியுள்ளதாக, திரிணமுல் காங்.,கை சேர்ந்த, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்டத்தின்போது, ஆங்கிலேயரை விரட்ட, 'வெள்ளையனே வெளியேறு' போராட்ட இயக்கம் துவக்கப்பட்டது. இதன், 75வது தினம், நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.
அச்சுறுத்தல் :
இதையொட்டி, மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 'பா.ஜ.,வே வெளியேறு' என்ற ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™