Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உ.பி.,அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை:30 குழந்தைகள் பலி

Posted: 12 Aug 2017 04:05 PM PDT

லக்னோ : உ.பி.,மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 30குழந்தைகள் உயரிழந்தன. உ.பி., மாநிலம் கோரக்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவ மனையில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களில் சுமார் 30 குழந்தைகள் உயிரழந்தன. இது குறித்து மாவட்ட நீதிபதி தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்கி குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காததே குழந்தைகள் உயிரிழப்புக்கு ...

பல லட்சம் பேர் டவுன்லோடு செய்யும் சராஹா: புது டிரெண்ட் நல்லதா, கெட்டதா?

Posted: 12 Aug 2017 12:29 PM PDT

பல லட்சம் பேர் டவுன்லோடு செய்யும் சராஹா: புது டிரெண்ட் நல்லதா, கெட்டதா? எகிப்து மற்றும் சவுதி அரேபியாவைத் தொடர்ந்து இந்தியாவில் மிக வேகமாக டிரெண்ட் ஆகிவரும் சராஹா செயலி என்றால் என்ன, இதில் என்னென்ன அம்சங்கள் வழங்கப்படுகிறது என்பதை தொடர்ந்து பார்ப்போம். பேஸ்புக், ட்விட்டர் என எங்கு சென்றாலும் நம் கண்களில் ஒருமுறையேனும் தென்படும் சராஹா அப்டேட் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக டிரெண்ட் ஆகி வருகிறது.  கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல லட்சம் பேர் டவுன்லோடு செய்து பயன்படுத்தும் சராஹா செயலி முதற்கட்டமாக ...

சிறிது நேரம் மகிழ்வுடன்

Posted: 12 Aug 2017 09:02 AM PDT

சிறிது நேரம் மகிழ்வுடன் ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- *ஏம்பா பாடியை நாலு நாளா போட்டு* *வைச்சிருக்கீங்களே யாரும் வெளிநாட்ல இருந்துவரணுமா* *அட* *நீங்கவேற ஆதார்கார்ட காணல தேடிக்கிட்டு இருக்கோம்* ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- சுட்டது ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Posted: 12 Aug 2017 08:02 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நடந்த நிகழ்ச்சி.

Posted: 12 Aug 2017 07:18 AM PDT

ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நடந்த நிகழ்ச்சி.நன்றி-தmerica TV

யானைகள் போற்றுதும் !

Posted: 12 Aug 2017 06:57 AM PDT

யானைகள் போற்றுதும் ! இன்று உலக யானைகள் தினமாம் ! தனது வலிமையறியாது மனிதனுக்கு அடங்கி நடக்கும் சாத்வீக உணவின் வலிமைக்கு சான்று யானைகள் . தமிழர் வாழ்வில் பின்னிப்பிணைந்து உள்ள செல்லப்பிராணி .சங்க இலக்கியத்தில் தான் யானைகளைப்பற்றி எத்தனை சான்றுகள் யானைகள் அதிகம் வாழ்ந்த மலை யானை மலை என்று அழைத்து மகிழ்ந்தனர் ஆசிய யானைகளில் மூன்று துணை வகைகள் உள்ளன: E. m. indicus இந்தியாவில் வாழும் உள்ளினம் E. m. maximus --இலங்கையில் வாழும் உள்ளினம் E. m. sumatranus = சுமத்ராவில் வாழும் ...

கும்கி யானைகள் பற்றிய நூற்றாண்டைத் தாண்டிய சுவாரஸ்ய தகவல்கள்!

Posted: 12 Aug 2017 05:43 AM PDT

- "விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அட்டகாசம் செய்த காட்டு யானைகள், கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்.."  இதுபோன்ற செய்திகளை அடிக்கடி செய்தித்தாள்களில் பார்க்கலாம். அது என்ன கும்கி யானை? காட்டு யானைகளை விரட்டத் தேவையான பயிற்சிகள் அளிக்கப் பட்ட யானையின் பெயர் தான் 'கும்கி'. அவ்வளவுதானா கும்கியின் அடையாளம்? நிச்சயமில்லை. கும்கியின் வரலாறு மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியான நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து துவங்குகிறது. 1910 ஆம் ஆண்டு ஊட்டியில், ...

ராம்கிந்தார் வடிவமைத்த மகாத்மா காந்தியின் சிலையை அங்கிருந்து அகற்ற முடிவு

Posted: 12 Aug 2017 05:39 AM PDT

புதுடில்லி :அசாம் மாநிலத்தில் மகாத்மா காந்தியின் சிலையை அகற்றும் கவுகாத்தி நிர்வாகத்தின் முடிவுக்கு அம்மாநில கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். அசாம் மாநிலம் கவுகாத்தி மாவட்டத்தில் உள்ள சரினியா மலையில் காந்தி மண்டப தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ராம்கிந்தார் வடிவமைத்த மகாத்மா காந்தியின் சிலையை அங்கிருந்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. துணை கமிஷனர் தலைமையில் கடந்த திங்கட்கிழமை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சிலை காந்தியின் உருவத்தை போன்று இல்லை ...

ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை

Posted: 12 Aug 2017 05:37 AM PDT

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இந்த வருடம் அக்டோபர் 2ல் காந்தி ஜெயந்திக்கு  விடுமுறை அளிக்கப்படவில்லை. மாநில உயர் கல்வி அமைச்சர் கிரன் மகேஸ்வரி கூறுகையில்,  அக்டோபர் 2ம் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இதனால் விடுமுறை வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். காந்திய படிப்புகளுக்கான இந்திய கவுன்சில் தலைவர் என்.ராதாகிருஷ்ணன், மகாத்மா பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை வேலை நாளாக அறிவிக்க வேண்டும் என மாநிலத்தில் ...

உலக தடகள போட்டி ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவிந்தர்சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி

Posted: 12 Aug 2017 05:35 AM PDT

லண்டன், 16-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான 'டிரிபிள்ஜம்ப்' பந்தயத்தில் நடப்பு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான அமெரிக்காவின் கிறிஸ்டியன் டெய்லர் 17.68 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தக்க வைத்துக்கொண்டார். அத்துடன் உலக தடகள 'டிரிபிள்ஜம்ப்' பந்தயத்தில் 3 முறை தங்கப்பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். 200 மீட்டர் ஓட்டப்பந்தத்தில் துருக்கி வீரர் ரமில் ...

பாரதி - சிறுகதை

Posted: 12 Aug 2017 04:51 AM PDT

''ஜமுனா, இன்னிக்கு வர்ற வழியில ஒரு பைக்கும் காரும் மோதி பெரிய ஆக்ஸிடெண்ட், பைக்ல இருந்த பையனுக்கு தலையில பயங்கர அடி, ரோடெல்லாம் ஒரே ரத்தமா இருந்துச்சு. கடைசியா ஆம்புலன்ஸ் வந்து அந்தப் பையனை எடுத்திட்டுப் போய்ட்டாங்க, ஆளு உயிரோட இருக்கா இல்லையான்னு தெரியல. இதைப் பார்த்து அப்படியே பயந்துபோய் நின்னுட்டேன்''. ''அதனாலதான் இப்படி முகமெல்லாம் வேர்த்திருக்கா! இப்பெல்லாம் ரோட்ல ஆக்ஸிடெண்ட் ஆகலைனாத் தான் அதிசயம். ஸ்கூல் போற பசங்களுக்கு சின்ன வயசிலேயே பைக் வாங்கிக் கொடுத்தா, அவன் ரோட்ல கண்ட்ரோல் இல்லாம ...

சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்

Posted: 12 Aug 2017 04:47 AM PDT

- கொல்கத்தா பிரபலமான, சுவையான மீன் இனங்களான சிங்கி, மாகுர், டங்கரா, பாடா மற்றும் கோய் போன்றவை மழைக்காலங்களில் ஏரிகளிலும், ஆறுகளிலும் இனப்பெருக்கம் செய்ய அவற்றின் முட்டைகளை இடுவது வழக்கம். இவை வங்காள மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படுகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பல மீனவர் சட்டவிரோதமாக கொசுவலைகளை பயன்படுத்தி இந்த மீன் இனங்களை பிடிக்கின்றனர். இந்த முயற்சியில் அவர்கள் முட்டைகளை உடைத்து விடுகின்றனர். இதனால் மீன் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது. இது தவிர விவசாயிகள் ...

கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா

Posted: 12 Aug 2017 04:45 AM PDT

வாஷிங்டன் சூரிய மண்டலத்தின் வெளிப்புறத்தில்  முன்பு நினைத்ததை விட 7 மடங்கு மிகப்பேரிய வால் நட்சத்திரங்கள் உள்ளன அவை ஒரு நாள் பூமியை அழிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்து உள்ளனர். விண்வெளி ஆய்வியல் விஞ்ஞானிகள்  நாசாவின் விண்கலத்திலிருந்து வால் நட்சத்திரங்களை ஆய்வு செய்துவருகின்றனர். சூரிய மண்டலத்தில் தூரத்து பகுதிகளில் சில வால் நட்சத்திரங்கள் உள்ளன. இவைகள் சூரியனில் இருந்து 186 பில்லியன் மைல்கள் தூரங்களுக்கு அப்பால் உள்ளது. ஊர் கிளவுட் என்பது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய பகுதிகளிலிருக்கும் ...

இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு

Posted: 12 Aug 2017 04:25 AM PDT

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்கிரிஸ்டி பவல்  என்ற இஸ்லாமிய பெண் வசித்து வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு ஒரு விசாரணைக்காக அந்த இஸ்லாமிய பெண்ணை போலீசார் ஆங் பீச்  காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது, அவர் அணிந்திருந்த பர்தாவை நீக்குமாறு போலீசார் வலியுறுத்தியுள்ளனர். யாரும் மில்லாத இடத்தில்  பெண் போலிஸ் அதிகாரி ஒருவர் தான் தனது பர்தாவை நீக்க வேண்டும்' என அப்பெண் முறையிட்டுள்ளார். ஆனால், பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த ஒரு ஆண் போலீஸ் அதிகாரி அவருடைய பர்தாவை கட்டாயப்படுத்தி ...

இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்

Posted: 12 Aug 2017 04:23 AM PDT

புதுடெல்லி ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கவும், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களை ஒடுக்கவும் நம் ராணுவ வீரர்கள் இரவு பகலாக போராடிவருகின்றனர்.  இதனால் ஏற்படும் உயிர்சேதங்களை குறைக்கும் வகையில், பாதுகாப்பு பணிகளுக்காக எல்லையில்இந்தியா அதிஉயர்-தொழில்நுட்ப திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதற்காக ரோபோக்களை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டிருந்தது. இதையடுத்து ரோந்து பணிகள் மேற்கொள்வது, வெடிபொருட்களை கொண்டுசெல்வது உள்ளிட்ட பணிகளுக்காக மொத்தம் 544 ரோபோட்கள் ...

திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்

Posted: 12 Aug 2017 04:20 AM PDT

தேசிய விருது பெற்ற நடிகை வித்யா பாலன் வெள்ளிக்கிழமை மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து வித்யாபாலன் கூறியதாவது. மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினராக சேர்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் திறமைகளை சிறந்த ஒரு உறுப்பினர் என் பொறுப்புகளை நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறேன். நான் இந்த புதிய அனுபவத்தை எதிர்நோக்குகிறேன். இன்று நாம் வாழும் சமுதாயத்தின் சிக்கல்கள், உணர்திறன்கள், யதார்த்தங்களை எங்கள் சினிமாக்கள்  ...

கர்நாடக மாநில நெடுஞ்சாலை 13 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரிப்பு

Posted: 11 Aug 2017 07:54 PM PDT

கொள்ளேகால், கர்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாநில நெடுஞ்சாலைகள் ரூ.400 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த பா.ஜனதா ஆட்சி காலத்தில் வெறும் 4 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மட்டும் மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், காங்கிரஸ் அரசின் 4 ஆண்டு கால ஆட்சியில் அந்த சாலை 13 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. சாம்ராஜ்நகர் டவுன் புவனேஸ்வரி சர்க்கிளில் இருந்து ராமசமுத்திரா வரை உள்ள இருவழி சாலை 4 வழிச் சாலையாக மாற்றப்பட உள்ளது. ஆம்புலன்ஸ், அரசியல் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™