Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தி.மு.க., மீது பாய தயாராகிறது பா.ஜ., அமித் ஷா வருகைக்கு பின் யுத்தம் ஆரம்பம்

Posted: 12 Aug 2017 06:25 AM PDT

அ.தி.மு.க., பிளவு பட்டு கிடப்பதால், தி.மு.க., வை எதிர்ப்பதிலும், விமர்சிப்பதிலும், தன் கவனத்தை, பா.ஜ., திசை திருப்பி உள்ளது.

தமிழகத்தில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், பா.ஜ., பினாமியாக, அ.தி.மு.க., மாறி விட்டதாக, எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அதற்கேற்ப, ஓ.பன்னீர்செல்வத்தை மிஞ்சும் அளவுக்கு, பிரதமர் மோடியை, மூச்சுக்கு ஒரு முறை சந்தித்து, முதல்வர் பழனிசாமி அதீத இணக்கம் காட்டுகிறார்.அ.தி.மு.க.,வை வசப் படுத்தி விட்டதாக கருதும், பா.ஜ., சமீபகால மாக, தி.மு.க.,வை நோக்கி, பாய துவங்கி உள்ளது. தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கும், பா.ஜ., தலைவர்களுக்கும் இடையே அதிகரித் துள்ள ...

உ.பி.,யில் குழந்தைகள் பலி விவகாரம் விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு

Posted: 12 Aug 2017 07:29 AM PDT

கோரக்பூர், : உ.பி.,யில், அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த, 30 குழந்தைகள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த சம்ப வம் குறித்து, விரிவான விசாரணை நடத்த, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

'குழந்தைகள் இறப்புக்கு, மாநில அரசின் அலட் சியமே காரணம்' என, குற்றஞ்சாட்டியுள்ள, எதிர்க் கட்சிகள், முதல்வர்,ஆதித்யநாத் மற்றும் சுகாதார அமைச்சர், சித்தார்த்நாத், உடனடியாக பதவி விலக வேண்டும் என, வலியுறுத்தியுள் ளன.உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். கோரக்பூர் மாவட்டத்தில், மூளை வீக்க நோய் பாதிப்புக் குள்ளான, பல குழந்தைகள், ...

தேர்தல் கமிஷன் அளித்த பதிலால் அ.தி.மு.க., அணிகள் கடும் குழப்பம்

Posted: 12 Aug 2017 09:26 AM PDT

தேர்தல் கமிஷன் அளித்துள்ள பதில், அ.தி. மு.க., தொண்டர்களிடம், பல்வேறு குழப் பத்தை ஏற்படுத்தி உள்ளது.ஜெ., மறைந்த பின், அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக் கப் பட்டார். அப்போது, அ.தி.மு.க., பிளவுபடா மல் இருந்தது.

ஜன., 25ல் நடந்த, தேசிய வாக்காளர் தின விழாவிற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் என்ற முறையில், சசிகலாவிற்கு, தேர்தல் கமிஷன் அழைப்பு அனுப்பியது.பிப்ரவரி மாதம், பன்னீர் செல்வம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சசிகலாவுக்கு எதிராக, போர்க்கொடிதுாக்கினார். அதன் தொடர்ச்சியாக, பன்னீர் அணி, சசிகலா அணி என, பிளவு ஏற்பட்டது. சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன், தன் ...

 இந்தியா - சீனா படைகள் குவிப்பால்... பதற்றம்!  எல்லையில் கண்காணிப்பு அதிகரிப்பு

Posted: 12 Aug 2017 09:44 AM PDT

புதுடில்லி,:சிக்கம் மாநிலம், டோக்லாம் பகுதி யில், சீனாவை தொடர்ந்து, நம் வீரர்களும் கூடுதலாக குவிக்கப்பட்டு வருவதால், மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. சீன படைகளின் நடமாட்டத்தை, நம் வீரர்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், எத்த கைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயா ராக உள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தியா -- சீனா எல்லையில், டோக்லாம் பகுதியில், சாலை அமைக்கும் பணியில், சீன ராணுவம் முயன்றது; அதை, நம் படைகள் தடுத்து நிறுத்தின. இதையடுத்து, அங்கு, இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டதால் பதற் றம் ஏற்பட்டது. அதே நிலை நீடித்து வந்தாலும், பின், ...

பெங்களூரில் அமித் ஷா கட்சியை பலப்படுத்த திட்டம்

Posted: 12 Aug 2017 09:57 AM PDT

பெங்களூரு, :''கர்நாடகாவில், ஊழல்வாத, காங்., ஆட்சியை அகற்றி, மக்கள் நலன் காக் கும், பா.ஜ., ஆட்சி அமைய, கட்சித் தலைவர் கள், தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

ஊழலற்ற ஆட்சி
கர்நாடகாவில், பா.ஜ.,வை வலுப்படுத்தும் வகையிலும், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் வெற்றி பெற்று, மாநிலத்தில், பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைக்கும் திட்டத்து டனும்,கட்சியின் தேசிய தலைவர்,அமித் ஷா, மூன்று நாள் பயணமாக, நேற்று பெங்களூரு வந்தார்.பெங்களூரில், கட்சியின் முக்கிய நிர்வாகி களை சந்தித்து பேசும் அவர், மத தலைவர்கள், ...

'ரேஷன் உணவு பொருட்களை விட்டுக்கொடு' மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு

Posted: 12 Aug 2017 10:13 AM PDT

ரேஷனில் வழங்கும் பொருட்களை, விருப்பத் தின் அடிப்படையில், அரசுக்கு விட்டு கொடுக்கு மாறு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.

குறைந்த விலைதமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் ஆகியவை, குறைந்த விலையிலும் விற்கப்படு கின்றன.இவற்றுக்காக,தமிழக அரசு ஆண்டுக்கு, 5,500 கோடி ரூபாய் செலவு செய்கிறது.அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என, வசதி படைத்த பலர், அரிசி ரேஷன் கார்டு வைத்துள்ளனர். தற்போது, அவர்களின் கார்டுகள், 'முன்னுரிமை அல்லா தது' என்ற பிரிவில் ...

காங்., கூட்டணியில் நிதிஷை தொடர்ந்து சரத் பவாரும்...ஓட்டம்!  

Posted: 12 Aug 2017 10:45 AM PDT

புதுடில்லி:காங்., தலைவர் சோனியா தலைமையில் நடந்த கூட்டத்தை, தேசியவாத காங்., புறக்கணித்தது; இதனால், காங்., கூட்டணியில் இருந்து, நிதிஷை தொடர்ந்து, சரத் பவாரும் வெளியேற முடிவு செய்துள்ள தாக கூறப்படுகிறது. நட்பு கட்சிகள் ஒவ்வொன் றாக வெளியேறி வருவதால், காங்., தலைவர் சோனியா, கடும் விரக்தி அடைந்துள்ள நிலை யில், மற்றவர்களை தக்க வைத்துக் கொள்ள, துணைத் தலைவர் ராகுல் முயன்று வருகிறார்.

பார்லி., தேர்தல், 2019ல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன், பா.ஜ.,வுக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் முயற்சியில், காங்., ஈடுபட்டுள்ளது.காங்கிரசின் ...

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு சசி குடும்பம் நெருக்கடி தினகரன் பொதுக்கூட்டத்திற்கு வந்தே ஆக வேண்டும்!

Posted: 12 Aug 2017 10:48 AM PDT

மதுரை மாவட்டம், மேலூரில், நாளை, தினகரன் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு வந்தே ஆக வேண்டும் என, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, சசிகலா குடும்பத்தினர், கடும் நெருக்கடி கொடுத்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் எம்.எல். ஏ.,க்களில் பெரும்பாலானோர், சசிகலா குடும் பத்தினர் உதவியுடன், 'சீட்' பெற்று வெற்றி பெற்றவர்கள். ஜெ., மறைவுக்கு பின், பன்னீர் அணி, சசிகலா அணி என, அ.தி.மு.க., பிளவு பட்ட போது, 122 பேர், சசிகலா பின்னால் அணிவகுத்தனர்.மூன்றாக பிளவுசசிகலா கூறியபடி, முதல்வராக பழனிசாமியை தேர்வு செய்தனர்.
தற்போது,சசிகலா ...

முதல்வருக்கு இதுகூட தெரியவில்லை! ஸ்டாலின் கிண்டல்

Posted: 12 Aug 2017 11:00 AM PDT

சென்னை, ''இந்த அரசு மீது, நாங்கள் இதுவரை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வில்லை. கவர்னர் உத்தரவின்படி, சட்டசபை யில் நம்பிக்கை ஓட்டெடுப்பு தான் நடந்தது. இதை கூட, முதல்வர் தெரிந்து கொள்ள வில்லை என்பது, வெட்கபட வேண்டிய ஒன்று,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:அ.தி.மு.க., அணிகளுக்கு இடையில் நடக்கும் சண்டைக்குள், நாங்கள் நுழைய விரும்ப வில்லை.இன்னொரு வீட்டில் நடக்கும் தகராறு களை வேடிக்கை பார்க்கவோ, அவற்றில் தலை யிடவோ, நாங்கள் விரும்பவில்லை. அ.தி. மு.க., பிளவுக்கு, பா.ஜ., காரணமா, இல்லையா என்பது குறித்து, ...

தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு தனி இணையதளம் கோரி வழக்கு

Posted: 12 Aug 2017 12:26 PM PDT

சென்னை: அரசு துறைகளின் தகவல்களை, தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பெறும் வகையில், இணையதளத்தை ஏற்படுத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
திருச்சியைச் சேர்ந்த, முகமது காதர் மீரான் என்பவர் தாக்கல் செய்த மனு:தகவல் பெறும் உரிமை சட்டத்தில், அரசின் தகவல்களை பெற, மஹாராஷ்டிர அரசு, இணையதளத்தை ஏற்படுத்தி உள்ளது.'ஆன்லைன்'இதே போல், இணையதளத்தை ஏற்படுத்த, நிதி உதவி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்குவது குறித்து, மத்திய ...

வீடுகளில், 'ஸ்மார்ட் மீட்டரிங்' திட்டம் தொடர் அலட்சியத்தில் மின் வாரியம்

Posted: 12 Aug 2017 01:18 PM PDT

வீடுகளில், 'ஸ்மார்ட் மீட்டரிங்' எனப்படும், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில், மின் வாரியம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.

மானியம்
வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிட, தமிழ்நாடு மின் வாரியம், மீட்டர் பொருத்தி உள்ளது. அதில், பதிவாகியுள்ள மின் பயன்பாட்டு அளவை, மின் ஊழியர்கள் குறிப்பெடுத்துச் சென்று, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்வர்.
வீடுகளில், 500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தினால், தமிழக அரசு மானியம் வழங்குகிறது. அதற்கு மேல் எனில், முழு கட்டணம் செலுத்த ...

குழந்தைகளுக்கு 'டெங்கு': அமைச்சர் ஒப்புதல்

Posted: 12 Aug 2017 02:09 PM PDT

சென்னை: ''சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நான்கு குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
காய்ச்சல் காரணமாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார். பின், அவர் கூறுகையில் ''தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு இரு தினங்களில் வெளியிடப்படும். எழும்பூர் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 90 ...

தற்கொலை முயற்சி உண்மையா? ஓவியாவுக்கு போலீஸ் 'சம்மன்!'

Posted: 12 Aug 2017 02:54 PM PDT

சென்னை: 'நடிகை ஓவியா, 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்காக தங்கி இருந்த போது, தற்கொலைக்கு முயன்றாரா என்பது குறித்து, அவர் விளக்கம் அளிக்க வேண்டும்' என, போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.
தனியார், 'டிவி'யில், 'பிக் பாஸ்' என்ற நிகழ்ச்சி, ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சிக்காக, சென்னை, நசரத்பேட்டை பகுதியில், வீடு போன்ற பிரமாண்ட, 'செட்' போடப்பட்டு உள்ளது. அதில், பாடலாசிரியர் சிநேகன், நடிகையர் ஓவியா, காயத்ரி ரகுராம், நடிகர்கள், வையாபுரி, கணேஷ் வெங்கட்ராம், மாடலிங் வாலிபர் ஆரவ் உள்ளிட்டோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
சில தினங்களுக்கு முன், ஓவியாவை ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™