Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'ஆதார் தொடர்பான வழக்குகளை அரசியலமைப்பு அமர்வு விசாரிக்கும்'

Posted: 07 Jul 2017 09:01 AM PDT

புதுடில்லி:'பல்வேறு சமூக நல திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆதாரை கட்டாயமாக்கு வது தொடர்பான வழக்குகளை, அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.

சமையல் காஸ், ரேஷன் உட்பட பல்வேறு அரசு நலத் திட்ட பலன்கள்,மானியங்கள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை கட்டாயமாக்கி, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில், ஆதார் எண்ணை கட்டாய மாக்கக் கூடாது என, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே பல உத்தரவுகளை பிறப் பித்துள்ளது.இந்த நிலையில், மதிய உணவு உட்பட பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு, ஆதார் எண்ணை ...

ஆன்லைனில் ரயில்வே தேர்வு 319 கோடி பேப்பர்கள் மிச்சம்

Posted: 07 Jul 2017 09:04 AM PDT

புதுடில்லி:பல்வேறு பதவிகளுக்கான தேர்வை, ஆன்லைனில் ரயில்வே நடத்தியதன் மூலம், 319 கோடி பேப்பர்கள் மிச்சமானதாக, தெரிவிக் கப்பட்டுள்ளது.

இது பற்றி இந்திய ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரயில்வே பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வ தற்கு, எழுத்து தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இதனால், 'ஏ 4' அளவுடைய பல கோடி பேப்பர் கள் செலவாகி வந்தன. ரயில்வே அமைச்சராக சுரேஷ் பிரபு பொறுப்பேற்றபின், சுற்றுச்சூழல்பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ரயில்வே பணிகளுக்கான தேர்வை, ஆன்லைனிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டது. உதவி ...

ஜி - 20 மாநாட்டில் பாக்.,கிற்கு எதிராக மோடி... ஆவேசம்!

Posted: 07 Jul 2017 09:50 AM PDT

ஹம்பர்க்:''பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகள் வலுவில்லாமல் உள்ளன,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ் சாட்டியுள்ளார். மேலும், ''அரசியல் காரணங் களுக்காக சில நாடுகள் பயங்கரவாதத்தை துாண்டி விடுகின்றன,'' என, பாகிஸ்தானுக்கு எதிராக ஆவேசமாக பேசினார்.

மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி உள்ள, 20 நாடுகளின் கூட்டமைப்பான, ஜி - 20 நாடுகளின் கூட்டம், ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில், நேற்று, பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:பயங்கரவாதம் ...

லாலு பிரசாத், உறவினர்கள் வீடுகளில் சி.பி.ஐ., 'ரெய்டு '

Posted: 07 Jul 2017 10:08 AM PDT

பாட்னா:ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வரு மான, லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்த போது, ஓட்டல்களுக்கு உரிமம்வழங்கியதில், முறைகேடு செய்ததாக, அவர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.

உரிமம் வழங்கியதற்கு கைமாறாக, 3 ஏக்கர் நிலத்தை அவரும், அவரது குடும்பத்தினரும் வளைத்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.இந்த முறைகேடு தொடர்பாக, லாலு, அவரது மகனும், பீஹார் துணை முதல்வருமான, தேஜஸ்வியின் வீடுகள் உள்ளிட்ட, 12 இடங்க ளில், நேற்று அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள், அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.பீஹாரில், முதல்வர் ...

குற்றங்களின் எண்ணிக்கையை மறைக்கிறீங்க! அரசு மீது ஸ்டாலின் பாய்ச்சல்

Posted: 07 Jul 2017 10:12 AM PDT

சென்னை:''குற்றங்களின் எண்ணிக்கையை குறைத்து, தேசிய குற்ற ஆவண காப்பகத்திற்கு, தமிழக அரசு புள்ளிவிபரங்கள் தருகிறது,'' என, சட்டசபையில், நேற்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

சட்டசபையில், நேற்று காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், ஸ்டாலின் பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில் தான், மூன்று போலீஸ் கமிஷன்கள் அமைக்கப்பட்டன. அவை அளித்த, 133 பரிந்துரைகளில், 113 ஏற்றுக் கொள்ளப்பட் டன.அப்போது,முதல்வராக இருந்த கருணாநிதி, அத்திட்டங்களை அமல்படுத்து வதற்கு, 4.6 கோடி ரூபாய் ஒதுக்கினார். அதன் மூலம், காவல் துறை நவீனமாக்கப்பட் டதை, முன்னாள் ...

அரசியலுக்கு கமல்: ரசிகர்கள் அழைப்பு

Posted: 07 Jul 2017 10:30 AM PDT

'தமிழகத்தை துாய்மைப்படுத்த வர வேண்டும்' என, நடிகர் கமலுக்கு அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தன் மனதில் பட்ட விமர்சனங்களை, வெளிப் படையாகக் கூறும் நடிகர் கமல், சமீபகாலமாக மத்திய, மாநில அரசுகளை, கடுமையாக விமர் சித்து வருகிறார். தியேட்டர் உரிமையாளர் கள், 'ஸ்டிரைக்' குறித்து கருத்து தெரிவித்த அவர், 'அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்' என, வலியுறுத்தினார். மேலும், ஊழலில், தமிழகம் பீஹாரை முந்தி விட்டது' என்றும் குறிப்பிட்டிருந் தார். இதற்கு, தமிழக அமைச்சர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.இந்நிலையில், கமலின் ரசிகர்கள், அவரை அரசியலுக்கு ...

ஜி.எஸ்.டி.,யால் மருந்துகள் விலை உயராது உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் உறுதி

Posted: 07 Jul 2017 10:38 AM PDT

சென்னை:''சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்ததால், 80 சதவீத மருந்துகளின் விலை உயராது,'' என, மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின், தமிழக தலைவர் ஜெயசீலன் கூறினார்.

இந்திய மருத்து உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், தென்னிந்திய மருந்து கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், சென்னை வர்த்தக மையத்தில், நேற்று துவங்கியது. கருத்தரங்கை, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில், 64 அரங்குகள் அமைக்கப்பட்டு, மருந்து வகைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து, விளக்கம்அளிக்கப்பட்டது.இதுதொடர்பாக, மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத் ...

சினிமா கட்டணம்: வருகிறது 'செக்'

Posted: 07 Jul 2017 10:45 AM PDT

தமிழகத்தில், வரி விலக்கு பெற்ற படத்திற்கு கூட, அதிக கட்டண வசூல் செய்வதும், வாகன நிறுத்தம், தின்பண்டம் என, அனைத்திற்கும் மும்மடங்கு விலை நிர்ணயிப்பதுமாக இருந்த தியேட்டர்களுக்கு, ஜி.எஸ்.டி., வைத்த, 'செக்' தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜி.எஸ்.டி., மற்றும் கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, நான்கு நாட்களாக நடந்த போராட்டத்தில், 1,127 தியேட்டர்கள் மூடப் பட்டன. இதனால், ஒரு நாளுக்கு, 22 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆனாலும், இறுதி வரை, அரசு செவி சாய்க்கவில்லை. இதனால், வேறு வழியில்லாமல், தியேட்டர்கள், நேற்று முதல் திறக்கப்பட்டன. ...

மணல் விற்பனையில் மேலும் சீர்திருத்தம் முதல்வர் பழனிசாமி தகவல்

Posted: 07 Jul 2017 10:54 AM PDT

சென்னை:''புதிய மணல் குவாரி கள் திறக்கவும், 'ஆன்லைன்' வாயிலாக, மணல் விற்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இன்னும் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளதால், இனி மணல் திருட்டு இருக்காது,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சட்டசபையில், அவர் கூறியதாவது:மணல் கொள்ளையை தடுப்பதற்காக, மணல் விற்பனையை, அரசே ஏற்று நடத்துகிறது. தற்போது, 23 குவாரிகள் செயல்படுகின்றன. மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுக்கப் படுகிறது. ஆற்றில் மணல் அள்ள, சாலை வசதி இல்லை. தனியார் மணல் எடுத்த போது, ஆற்றங்கரையில் உள்ள, பட்டா நில உரிமையாளர் களிடம் பேசி, அவ்வழியே பாதை ...

குஜராத்:பள்ளி, மருத்துவமனைக்கு 3 கி.மீ. தண்ணீரில் பயணம்

Posted: 07 Jul 2017 12:09 PM PDT

ஆமதாபாத்:குஜராத் மாநிலத்தின் ஒரு பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள், பள்ளியில் படிக்க 3 கி.மீ. தூரம் தண்ணீரில் நடந்து சென்று வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள தபோய் பகுதியில் அமைந்துள்ள கிராமம் பிரதாபுரா. இங்கு 200க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதில் பழங்குடியின மக்களே அதிகம் இருக்கின்றனர்.
இங்குள்ள மக்கள் பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்ற முக்கிய இடங்களுக்கு செல்ல குறைந்தது 3 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். இதன் அருகில் உள்ள பகோடர் கிராமத்தை இணைக்க சாலை வசதி உண்டு. ஆனால் அந்த ...

பெட்ரோல், டீசல் விலை இன்று(ஜூலை 8) எவ்வளவு?

Posted: 07 Jul 2017 01:38 PM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.86 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.91 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை 8) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல், விலையை விட 14 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.65.86 காசுகளும், நேற்றைய டீசல் விலையை விட 26 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.56.91 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜூலை-8) காலை 6 மணி முதல் அமலுக்கு ...

பயங்கரவாதி புர்கான் வானி நினைவு தினம்; காஷ்மீரில் வரலாறு காணாத பாதுகாப்பு

Posted: 07 Jul 2017 01:47 PM PDT

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதி புர்கான் வானி நினைவு தினத்தையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அமர்நாத் யாத்திரையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி புர்கான் வானி,22 பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் சுட்டு்க்கொல்லப்பட்டார். இதன் எதிரொலியாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 90 பேர் கொல்லப்பட்டனர். 1300 பேர் காயமடைந்தனர்.பக்கத்து நாடான பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெ ரீப், புர்கான் வானி காஷ்மீர் விடுதலைக்காக ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™