Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழகம் உட்பட 5 மாநில தேர்தலில் கட்சிகளின் செலவு ரூ.573 கோடி

Posted: 06 Jul 2017 09:10 AM PDT

புதுடில்லி:தமிழகம் உட்பட, ஐந்து மாநில சட்டசபைக்கு, 2016ல் நடந்த தேர்தலின்போது, தேசிய மற்றும் மாநில கட்சிகள், 355 கோடி ரூபாய் நன்கொடைகள் உள்ளிட்டவை மூலம் கிடைத்ததாக கூறியுள்ளன; அதே நேரத்தில், 573 கோடி ரூபாயை செலவிட்டுள்ளன.

தமிழகம், அசாம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கு, 2016ல் தேர்தல் நடந்தது. இதில், தமிழகத்தில், அ.தி.மு.க., அசாமில் பா.ஜ., கேரளாவில் இடது ஜனநாயக கூட்டணி, புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி, மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிகள் வெற்றி பெற்றன.இந்தத் தேர்தல் தொடர்பான, கட்சிகளின் வரவு, செலவு குறித்து, ஜனநாயக ...

'விவசாயிகள் தற்கொலை பிரச்னைக்கு ஒரு நாளில் தீர்வு காண முடியாது'

Posted: 06 Jul 2017 09:23 AM PDT

புதுடில்லி: 'விவசாயிகள் தற்கொலை பிரச்னை க்கு ஒரே நாளில் தீர்வு காண முடியாது என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்கிறோம்' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் பிரச்னை தொடர்பாக,ஒரு அரசு சாரா அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.
பல திட்டங்கள்
இந்த வழக்கு, தலைமை நீதிபதி, ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான, சமீபத்தில் அட்டர்னி ஜெனரலாக பதவிஏற்றுள்ள கே.கே.வேணுகோபால், தன் வாதத்தின் போது கூறியதாவது:விவசாயிகள் ...

திருப்பதி லட்டு, தரிசன டிக்கெட் விலை உயரும்? தேவஸ்தானத்திற்கு ரூ.420 கோடி இழப்பாம்!

Posted: 06 Jul 2017 09:28 AM PDT

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில், 420 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், லட்டு பிரசாதம் மற்றும் தரிசன டிக்கெட் விலை உயர வாய்ப்புஉள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருமலை, திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு பட்ஜெட், 2,500 கோடி ரூபாய்க்கும் மேல். ஒவ்வொரு ஆண்டும் வருவாய் உயர் வுக்கு தக்கபடி, தேவஸ்தானத்தின் பட்ஜெட் தொகையும் உயர்வடையும்.
உண்டியல்
அதனால், தேவஸ்தானத்திற்கு இதுவரை எந்த நிலையிலும் வருவாய் இழப்பு ஏற்பட்டது இல்லை.இந்நிலையில், கடந்த ஆண்டு, மத்திய அரசு அறிவித்த பணமதிப்பு இழப்பு திட்டம் ...

டி.ஜி.பி., பணி நீட்டிப்பு ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

Posted: 06 Jul 2017 10:09 AM PDT

மதுரை: தமிழக, டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திர னுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டு உள்ளது. இவற்றுடன், 'குட்கா' வியாபாரி களிடம் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக, வருமான வரித்துறை பறிமுதல் செய்த ஆவ ணங்கள், லஞ்ச புகார் விசாரணை அறிக்கை ஆகிய வற்றை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

தமிழக, டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரனின் பணிக் காலம், ஜூன் 30ல் முடிவுற்றது. அவருக்கு, ஜூலை 1 முதல், 2019 வரை, பணி நீட்டிப்பு வழங்கி, தமிழக தலைமைச் செயலர் ஜூன் 30ல் உத்தரவிட்டார்.
சோதனை
சென்னை போலீஸ் ...

டெல் அவிவ் - பெங்களூரு - சிலிக்கான் வேலி முக்கோண இணைப்பு சாத்தியமா

Posted: 06 Jul 2017 10:13 AM PDT

டெல் அவிவ்: தகவல் தொழிற்நுட்பத் துறை யில்,உலகில் முன்னணியில் உள்ள,இந்தியா வின் பெங்களூரு, அமெரிக்காவின் சிலிக்கான் வேலி, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரங்கள் ஒருங்கிணைந்து செயலாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்படுகின்றன.

தகவல் தொழிற்நுட்ப துறையின் வளர்ச்சியில், இந்தியாவின் பெங்களூரு, அமெரிக்காவின் சிலிக்கான் வேலி, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரங்கள் முன்னிலையில் உள்ளன. மூன்று நகரங்களும்,இந்தத் துறையில் போட்டி போட்டு வளர்ச்சி அடைந்து வருகின்றன. மூன்று நாடுகளுக்கும் இடையே, தனித்தனியாக இரு தரப்பு உறவுகள் சிறப்பாக உள்ளன. இந்நிலையில், இந்த ...

தினகரனுக்கு எம்.எல்.ஏ.,க்கள் மிரட்டல்

Posted: 06 Jul 2017 10:16 AM PDT

ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களுடன், தினகரன், நேற்று அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, அமைச்சர் பதவி கேட்டு, அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் மூவர், தினகரனுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

அ.தி.மு.க.,வில், ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல்வர் பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி என, மூன்று அணிக ளாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் செயல்படு கின்றனர். ஜனாதிபதி தேர்தலில், மூன்று அணி களும், பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.ஜனாதிபதி தேர்தல், சட்டசபை தொடர் முடிந்த பின், மாவட்ட சுற்றுபயணம் சென்று, கட்சியை ...

இனி கொசுறு, ஓசிக்கு இடமில்லை ஜி.எஸ்.டி.,யால் தரமே நிரந்தரமாகும்!

Posted: 06 Jul 2017 10:21 AM PDT

மத்திய அரசின், ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், வியாபாரிகள், நுகர்வோருக்கு வழங்கி வந்த, இலவசங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளது. போட்டியை சமாளிக்க, தரமான பொருட்களை தயாரிக்க வேண்டிய நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சோப்பு, எண்ணெய், மாவு வகைகள் உட்பட அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் நிறு வனங்கள்,விற்பனையை அதிகரிக்க, வியாபாரி களுக்கு விலையில்,குறிப்பிட்ட சதவீதம் தள்ளு படி, எண்ணிக்கையின் அடிப்படையில் இல வசங் களையும் வழங்கின. குறிப்பாக, 12 சோப்புக்கு ஒரு சோப்பு,12 சாம்புக்கு ஒரு ...

கோடநாட்டில் என்ன தான் நடக்குது? சட்டசபையில் தி.மு.க., கேள்வி

Posted: 06 Jul 2017 10:28 AM PDT

சென்னை:''கோடநாடு பங்களாவில் வேலை செய்த, ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். முன் னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஊழியர்க ளுக்கே, இந்த கதி என்றால், மற்றவர்களின் நிலை என்னாகும்,'' என, சட்டசபையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., அதிர்ச்சிதெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:
தி.மு.க., - ஜெ.அன்பழகன்: நீலகிரி மாவட்டம், கோடநாடு பங்களாவில் வேலை செய்த டிரை வர், விபத்தில் சிக்குகிறார்; அவரது மனைவி மற்றும்குழந்தை விபத்தில் உயிரிழக்கின் றனர்.அதில் தொடர்புடைய, ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். முன்னாள் முதல்வரின் ஊழியர்களுக்கே, இந்த நிலை என்றால், மற்றவர்கள் ...

அ.தி.மு.க., ஆட்சியில் கொலைகள் குறைவு; முதல்வர் பழனிசாமி தகவல்

Posted: 06 Jul 2017 10:40 AM PDT

சென்னை:''சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு, தமிழகம், அமைதி பூங்காவாக திகழ்கிறது,'' என,முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சட்டம் - ஒழுங்குசட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - துரைமுருகன்: காவலர் பதக்கம் வழங்கும் விழா, நடத்தப்படாமல் உள்ளது. 20 ஆயிரம்காவலர் பணியிடம் காலியாக உள்ளது. 1985ல்,ஐ.பி.எஸ்.,தேர்ச்சி பெற்றோருக்கு, பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது.சட்டம் - ஒழுங்கு மோசமாக உள்ளது. கடந்த ஆண்டு, சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயி லில், சினிமா பாணியில் பணம் கொள்ளை அடிக்கப் பட்டது; இதுவரை
கண்டுபிடிக்கப்பட வில்லை. கோவையில், பா.ஜ., ...

'77 ஆயிரம் போலீஸ் இன்னும் தேவை!'

Posted: 06 Jul 2017 11:47 AM PDT

சென்னை : ''தமிழகத்தில், தற்போது போலீஸ் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இன்னும், 77 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ.,
ஜெ.அன்பழகன் கூறினார்.
இது தொடர்பாக, சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - ஜெ.அன்பழகன்: தமிழக காவல் துறையில், 20 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. 1.23 லட்சம் பேர் பணிபுரிவதாக, கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதில், போலீசார் எத்தனை பேர் என கூற வேண்டும்.
முதல்வர் பழனிசாமி: அதிகாரிகள், போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரையும் சேர்த்து தான், அந்த ...

ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி; விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

Posted: 06 Jul 2017 12:12 PM PDT

ஹம்பர்க்: ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார். அவருக்கு ஹம்பர்க் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் இன்று(ஜூலை 7) ஜி-20 மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில் மூன்று நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக இஸ்ரேல் சென்ற பிரதமர் ...

கோஹ்லி, கார்த்திக் அசத்தல்; கோப்பையை கைபற்றியது இந்தியா

Posted: 06 Jul 2017 01:51 PM PDT

கிங்ஸ்டன் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், கோஹ்லியின் அசத்தல் சதம் கைகொடுக்க, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி தொடரில் 2-1 என முன்னிலை வகித்தது. இரு அணிகள் மோதிய ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நேற்று ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன், சபினா பார்க் மைதானத்தில் நடந்தது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரின் ...

ஜனாதிபதி தேர்தல்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

Posted: 06 Jul 2017 03:09 PM PDT

புதுடில்லி: 'ஜனாதிபதி தேர்தலில், யாருக்கு ஓட்டளிக்க வேண்டுமென, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, சம்பந்தப்பட்ட கட்சிகள் உத்தரவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல், வரும், 17ல் நடக்கிறது. இதில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில், ராம்நாத் கோவிந்தும், காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். ஜனாதிபதி தேர்தலில், எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் மட்டுமே ஓட்டளிக்க தகுதி பெற்றவர்கள். ஓட்டுச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™