Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஓலைச் சுவடி முதல்….

Posted: 06 Jul 2017 09:48 AM PDT

புத்தகத்தின் உருவுக்கு ஓலைச் சுவடியே முதல் என்றேன். ஒவ்வொரு முதலிலும் ஒரு முடிவுண்டென்றார். ஓலைமுதல் பதிவுத் தொடக்கம் என்றேன். ஓலை எண்ண அலையின் முடிவு என்றார். எண்ணத்தின் பதிவு முடிவாகது என்றேன். பதிவின் விளைவு புது எண்ணமே என்றார். இரு எண்ணங்களும் வேறாகாது என்றேன். ஒரு குரளுக்கு பல உரை ஏன் என்றார். உணர்வின் கருவி திரிக்காது என்றேன். உணரக் கருவி தேவை இல்லை என்றார். மரம் கேட்க வேண்டாததால் காதில்லை என்றேன். கொடி படர கண் தேவைஇல்லை என்றார். கருவி வர கலை ஒடுங்குமோ !

குழந்தைகள் கதை: நிலாவைச் சாப்பிடுவது யார்?

Posted: 06 Jul 2017 07:45 AM PDT

அடர்ந்த காடு. காட்டு விலங்குகளின் தலைவனாக இருந்தது ஓநாய். அன்று மாலை சூரியன் மறைந்தது. வானத்தைப் பார்த்து ஊளையிட்டு, விலங்குகளை அழைத்தது. ஓநாயின் குரலைக் கேட்டுப் பதறிப்போன விலங்குகள், அதன் இருப்பிடம் நோக்கி ஓடிவந்தன. யானை, முயல், மான், நரி, சிறுத்தை, வரிக்குதிரை, புலி, காட்டெருது, குரங்கு, முள்ளம்பன்றி, ஒட்டகச்சிவிங்கி என்று அனைத்தும் ஒன்று திரண்டிருந்தன. நீண்ட நாட்களாகவே ஓநாய்க்கு ஒரு சந்தேகம். அதைத் தீர்த்துக் கொள்வதற்கே இந்தக் கூட்டம். "நண்பர்களே, வானத்திலிருந்து யாரோ ...

வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது

Posted: 06 Jul 2017 07:40 AM PDT

படம் – ரிக்ஷா மாமா பாடியவர்கள்: எஸ்,பி,பி & ஜானகிஇசை- இளையராசாவருடம்- 1992 எண்ணம் எனும் ஏட்டில் நான் பாடும் பாட்டில் நீ வாழ்கிறாய் நித்தம் வரும் மூச்சில் - ஜய்யே கொஞ்ச இருங்க கொஞ்ச இருங்க என்னங்க பாடுறீங்க அப்படி இல்ல நான் பாடுறேன் பாருங்க - வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது இது அன்பின் வேதம் அதை நாளும் ஓதும் இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காத்தே  - வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது ஆமாம் கல்வடியும் பூக்கள் காற்றோடு ...

புதுமண தம்பதிகளுக்கு காண்டம் பரிசு

Posted: 06 Jul 2017 07:38 AM PDT

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில், குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை  ஒட்டி, புதுமண தம்பதிகளுக்கு காண்டம் அடங்கிய பரிசு  தொகுப்பை வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு, 'மிஷன் பரிவார் விகாஷ்' என, பெயரிடப்பட்டுள்ளது.  உலக மக்கள் தொகை தினமான, ஜூலை, 11ம் தேதி இந்த திட்டம்  துவக்கப்பட உள்ளது. இது குறித்து திட்டத்தின் மேலாளர் அவினாஷ் சக்சேனா கூறியவதாது: புது மண தம்பதிகளுக்கு திருமண வாழ்க்கையின் பொறுப்பை  உணர்த்தும் வகையில் இந்த திட்டம் துவக்கப்பட உள்ளது. பரிசு பெட்டியில், ...

கர்நாடகாவில் தாலி குறித்த வதந்தி

Posted: 06 Jul 2017 07:37 AM PDT

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில், தாலியில் பவள மணி இருந்தால் கணவருக்கு ஆகாது என்ற வதந்தி பரவி, பெண்களிடம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. ஆறு மாவட்டங்கள் கர்நாடகாவில் கொப்பல், சித்ரதுர்கா, பல்லாரி, தேவங்கரே, ராய்ச்சூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களிலும், ஆந்திராவின் சில எல்லை மாவட்டங்களிலும், கடந்த செவ்வாய்கிழமை இரவு ஒரு வதந்தி பரவியது. பெண்கள் அணிந்திருக்கும் தாலியில் பவள மணி இருந்தால், புதன்கிழமை அன்று கணவர் இறந்து விடுவார்கள் என்ற தவறான தகவல் வேகமாக பரவியது. இதனால் பீதியடைந்த பெண்கள் ...

108 அடி விஸ்வரூபம்

Posted: 06 Jul 2017 07:34 AM PDT

திருவண்ணாமலை வந்தவாசிக்கு அருகில் உள்ள கொரக்கோட்டை கிராமத்தில் இருக்கும் குன்றிற்குத் தெரியாது தான், விஸ்வரூப பெருமாள் ஆகப்பாகிறோம் என்று! ஏழு தலை கொண்ட பாம்புக்கு நடுவே பதினொரு முகங்களுடனும், 22 கரங்களுடனும் பக்தர்களை அருள்பாலிக்க விஸ்வரூப பெருமாள் எழுந்தருள இருக்கிறார். ஸ்தல புராணம் போல சிலை பராணமும் நம்மை வியப்பில் ஆழ்த்தின. கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூருவில் இருக்கிறது ரிஜிபுரா நகரம். இப்பகுதி மக்களால் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு ஏக்கர் பரப்பளவில் கோதண்டராம சுவாமி ...

மன்னர் கொண்டு வந்த காட்டுவாசிப் பெண்கள்...!!

Posted: 06 Jul 2017 12:49 AM PDT

கிரிமினல் வழக்குகள் இருப்பதால் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது: நாராயணசாமி

Posted: 05 Jul 2017 09:16 PM PDT

புதுச்சேரி, நியமன எம்.எல்.ஏ.க்களாக பா.ஜ.க.வைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் நிருபர்கள் கருத்துகேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:- மத்திய அரசு மாநில அரசின் பரிந்துரையில்லாமலேயே 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்துள்ளது. அவர்களுக்கு கவர்னர் கிரண்பெடி ரகசியமாக பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். நியமன சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள சாமிநாதன் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ...

பெண் குழந்தைக்கு பெயர் ஜிஎஸ்டி

Posted: 05 Jul 2017 09:12 PM PDT

சத்தீஸ்கர் மாவட்டம் கோரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜகதீஷ் பிரசாத். இவருக்கு ஜிஎஸ்டி அமலான ஜூலை 1-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதுபற்றி பிரசாத் கூறியதாவது: ஜூலை 1-ம் தேதி இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்தது. வரிப்புரட்சிக்கு வித்திட்ட ஜூலை 1-ம் தேதி எனது மகள் பிறந்தார். அந்த நாளை என்னால் மறக்கமுடியாது. அதனால் நானும் என் மனைவியும் சேர்ந்து எனது மகளுக்கு ஜிஎஸ்டி என பெயர்சூட்டியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இதை கேள்விப்பட்ட ராஜஸ்தான் முதல்வர் ...

பெரும்பாக்கத்தில் ரூ.14 கோடியில் புதிய பேருந்து முனையம், பணிமனை: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

Posted: 05 Jul 2017 09:11 PM PDT

பெரும்பாக்கத்தில் ரூ.14 கோடியே 25 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு போக்குவரத்துக்கழக பேருந்து முனையம் மற்றும் பணிமனையை முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார். இதுகுறித்து நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு சட்டப்பேரவையில் 110-ம் விதியின் கீழ் போக்குவரத்துக்கழக பேருந்து சேவையை தொய்வின்றி வழங்க பணிமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கம், கோயம்புத்தூர் ...

மாஜி துணை முதல்வரின் ரூ. 300 கோடி பினாமி சொத்துகள் பறிமுதல்: வருமானவரி அதிரடி

Posted: 05 Jul 2017 07:16 PM PDT

மும்பை: மகாராஷ்டிராவில் முன்னாள் துணை முதல்வரின் ரூ. 300 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர் .மகாராஷ்டிராவில் முந்தைய காங்., தேசியவாத காங். ஆட்சியின் போது துணை முதல்வராக இருந்தவர் சாஜஜன் புஜ்பால். இவர் தேசியவாத காங்.கட்சி மூத்த தலைவர். இவர் மீது பல்வேறு பண மோசடி மற்றும் ஊழல் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சாஜஜன் புஜ்பால், இவரது மகன் பங்கஜ் புஜ்பால், மருமகன், சமீர் புஜ்பால் உள்ளிட்டோர் பெயர்களில் உள்ள வணிக வளாகங்கள், மற்றும் கோல்கட்டா, ...

எல்லை பிரச்னையில் தவறான தகவலை பரப்புகிறது இந்தியா: சீனா புலம்பல்

Posted: 05 Jul 2017 07:13 PM PDT

பெய்ஜிங்: எல்லை பிரச்னையில், இந்தியா தவறான தகவலை பரப்பி வருகிறது என சீனா குற்றம்சாட்டியள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜென் ஷூவாங் கூறியதாவது: சர்வதேச சட்டங்களையும் விதிகளையும் இந்தியா மீறியுள்ளது. மற்றொரு நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி உள்ளே சென்று தான் உருவாக்கிய பஞ்சசீல கொள்கையை இந்தியா மீறியுள்ளது. இந்திய வீரர்கள் எல்லை தாண்டி வந்தது பெரிய பிரச்னை. இந்திய ராணுவம் தொடர்ந்து சீன பகுதிக்குள் உள்ளது. இது பிரச்னையை இன்னும் சிக்கலாக்கியள்ளது. நிலைமை ...

ஆன்லைன் ரயில் டிக்கெட்: செப்டம்பர் வரை சேவை வரி ரத்து

Posted: 05 Jul 2017 07:11 PM PDT

புதுடில்லி: ரயில் டிக்கெட் ஆன் லைனில் புக் செய்தால் சேவை வரியை செப்டம்பர் வரை ரத்து செய்துள்ளது. ரயில் பயணிகளிடம் மின்னனு பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் ரயி்ல் டிக்கெட்களுக்கான சேவை வரியை ஜுன் 30ம் தேதி வரை ஐ.ஆர்.சி.டி.சி., ரத்து செய்திருந்தது. இந்நிலையில் சேவை வரி ரத்து உத்தரவை வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. சேவை வரி தளர்வால் ஆண்டிற்கு ரூ 500 கோடி வரை வருமானம் பாதிக்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது - ------------------------------------ தினமலர்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™