Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'தேர்தல் கமிஷனர் நியமனத்துக்கு சட்டம் கொண்டு வராதது ஏன்?'

Posted: 05 Jul 2017 08:47 AM PDT

புதுடில்லி: 'அரசியலமைப்பு சட்டத்தில் கூறியுள்ளபடி, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர் நியமனத்துக்கான சட்டம் கொண்டு வராதது ஏன்?' என, மத்திய அரசை, சுப்ரீம் கோர்ட் கேள்வி கேட்டுள்ளது.

தேர்தல் கமிஷன் நியமனங்கள் தொடர்பாக தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கை நேற்று , விசாரித்த, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் நீதிபதி, டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர்ஜெனரல், ரஞ்சித் குமாரிடம் எழுப்பிய கேள்விகள்:தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனத்துக்கு தனி சட்டம் கொண்டு வர ...

‛2022ல் புதிய இந்தியா'; மோடியின் அதிரடி திட்டங்கள்

Posted: 05 Jul 2017 10:50 AM PDT

டெல்அவிவ்: ‛2022ம் ஆண்டிற்குள் இந்தியாவில் அனைவருக்கும் வீடுகள், தண்ணீர், மின்சாரம் கிடைக்கும்' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
அரசு முறைப்பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவை சந்தித்தார். பின்னர் இரு நாடுகளிடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து டெல் அவிவ் நகரில் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இந்நிகழ்ச்சியில் 5 ஆயிரம் இந்தியர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்புமிக்க நிகழ்வு:
விழாவில் இஸ்ரேல் பிரதமர் நேதன் யாஹூ பேசியதாவது: ‛நமஸ்தே'.. ...

இரட்டை இலை துளிருமா? எதிர்பார்ப்பு அதிகரிப்பு

Posted: 05 Jul 2017 08:51 AM PDT

தலைமை தேர்தல் கமிஷனராக, அச்சல் குமார் ஜோதி பதவியேற்கவுள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க.,வில் அதிகரித்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரண்டாக பிரிந்ததால்,அந்த கட்சியின் இரட்டை இலை சின்னத்தை, தேர்தல் கமிஷன் முடக்கி வைத்தது. அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா பொறுப்பேற்றது செல்லாது என்ற புகார் காரணமாகவும், அந்த கட்சியில் கடும் குழப்பம் நிலவி வருகிறது.இந்நிலையில், இந்த விவகாரத்தைஆரம்பம் முதலே கையாண்டு, தீர்ப்பை வழங்கும் இடத்தில் இருந்து வந்தவர், தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி. ...

புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் தமிழகத்திற்கு புதிய கவர்னர் நியமனம்

Posted: 05 Jul 2017 08:54 AM PDT

புதுடில்லி: தமிழகம், ம.பி., உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு, இம்மாத இறுதிக்குள், நிரந்தர கவர்னர்களை நியமிக்கும் பணியில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

ம.பி., தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில், நீண்ட காலமாக கவர்னர் பதவி காலியாக உள்ளது.மற்ற மாநில கவர்னர்கள், கூடுதலாகஇந்த மாநிலங்களின் பொறுப்புகளை கவனித்து வருகின் றனர். இதனால், மாநில அரசின் வழக்கமான பணிகள்பாதிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக, மஹாராஷ்டிர கவர்னர் வித்யாசாகர் ராவும், ம.பி., பொறுப்பு கவர்னராக, குஜராத் கவர்னர், ஓ.பி.கோஹ்லியும் உள்ளனர். இந்நிலையில், ஜனாதிபதி ...

பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேச அளவில் ஒப்பந்தம்!

Posted: 05 Jul 2017 09:06 AM PDT

ஜெரூசலேம்: 'பயங்கரவாதத்தை ஒடுக்கும் வகையில், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும், அவர்களுக்கு ஆதரவு அளிப்போர், புகலிடம் அளிப்போருக்கு எதிராகவும் நட வடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான ஒப்பந்தம் செய்ய வேண்டும்' என, இந்தியா, இஸ்ரேல் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

மத்திய தரைக்கடல் நாடான இஸ்ரேலுடனான துாதரக உறவின், 25வது ஆண்டையொட்டி, இஸ்ரேலுக்கு வரும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு அழைப்பு விடுத்திருந்தார். அதை யேற்று, மூன்று நாள் பயணமாக, ...

தமிழக சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்குமா?

Posted: 05 Jul 2017 09:59 AM PDT

புதுடில்லி: முதல்வர் பழனிசாமி அரசு நடத்திய நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது என,அறி விக்கக் கோரியும், புதிதாக ரகசிய ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது.

இவ்வழக்கு, வரும், 11ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அ.தி.மு.க., வில் ஏற்பட்ட பிரச்னைகளால், முதல்வர் பதவியில் ...

கவர்னருடன் மோதும் மம்தா; மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு

Posted: 05 Jul 2017 10:05 AM PDT

கோல்கட்டா: 'மேற்கு வங்க கவர்னர், கே.என். திரிபாதி, அரசியல் சாசன அடிப்படையில், அனைத்து எல்லைகளையும் மீறி செயல்படு கிறார். கவர்னர் மாளிகை, பா.ஜ., கட்சி அலுவலகமாக செயல்பட முடியாது' என, திரிணமுல் காங்., கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இதனால், மேற்கு வங்க கவர்னருக்கும், மாநில அரசுக்கும் மோதல் முற்றியுள்ளது.

மிரட்டுகிறார்
மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்., தலை வர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். கவர்னர், கே.என்.திரிபாதிக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், பல்வேறு விவகாரங் களில், மோதல் வெடித்து வருகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ...

பொய் தகவல் பரப்புவதாக இந்தியா மீது சீனா அபாண்டம்

Posted: 05 Jul 2017 10:09 AM PDT

பீஜிங்:'சிக்கிமில், சிக்கன்ஸ்நெக் பகுதிக்கு அருகே சீன வீரர்கள் சாலை அமைத்து வருவதாக, மக்களிடையே, இந்தியா, பொய் தகவல்களை பரப்பி வருகிறது' என, சீனா குற்றஞ்சாட்டி உள்ளது.

இந்தியாவின் சிக்கிம் மாநில எல்லையில், சீனா, சாலை அமைத்து வருவதாகவும், அதனால், வடகிழக்கு மாநிலங்களை சென்ற டையும் சாலைகள் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சீன வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர், ஜெனரல் ஷுவாங், பீஜிங்கில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த, 1890ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தப்படி, சிக்கிம் ...

தினகரன் திட்டத்துக்கு சசிகலா தடை!

Posted: 05 Jul 2017 10:15 AM PDT

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, அவரது உறவினர்கள் தினகரன், வெங்கடேஷ் மற்றும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி வேல், கே.வி.ராமலிங்கம், ஜக்கையன், முத்தையா, தங்கதுரை ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரு கிறது. இந்த மனு தள்ளுபடியானால் அவரது சிறைத் தண்டனை ரத்தாக வாய்ப்பில்லை. எனவே சசிகலாவின் சீராய்வு மனு மீதான தீர்ப்பு மற்றும் ஜெ., மரணம் தொடர்பாக நீதி விசாரணை கோரிய வழக்கு முடிவுக்கு பின், இரு அணிகளின் இணைப்பு முயற்சி, மீண்டும் ...

காவிரி: சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு

Posted: 05 Jul 2017 10:34 AM PDT

புதுடில்லி:'காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி, தமிழகத்துக்கு உரிய பங்கைத் தரும்படி, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு முறையிட்டு ள்ளது. முறையான மனுவை தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி, ஜூன் மாதத்தில், 22.5 டி.எம்.சி., தண்ணீரை, தமிழ கத்துக்கு கர்நாடக அரசு திறந்து விடவேண்டும். ஆனால், கடந்த, 25 நாட்களில், 16.58 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே வந்துள்ளது.தமிழகத்துக்கு உரிய பங்கை தரும்படி, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு,நேற்று கோரிக்கை ...

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பதவியுயர்வு பெற உடற்தகுதி கட்டாயம்

Posted: 05 Jul 2017 12:37 PM PDT

புதுடில்லி: ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதிவி உயர்வு பெற உடற்தகுதியை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்கள், சி.ஆர்.பி.எப்., போலீசார், ஆகியோருக்கு பணி காலத்தில் உடற் தகுதி கட்டாயமாக்கப்பட்டு விதிமுறைகள் கடுமையாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் போலீஸ் உயர்திகாரிகள் பணியில் இருக்கும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பணியில் சேரும் போது மட்டும் உடற்தகுதி விதிமுறைகள் கட்டாயப்படுத்தப்படுகிறது. பணி காலத்தில் உடற்தகுதியில் கடுமையான விதிமுறைகளை கடைபிடிக்கப்பட ...

மாஜி துணை முதல்வரின் ரூ. 300 கோடி பினாமி சொத்துகள் பறிமுதல்: வருமானவரி அதிரடி

Posted: 05 Jul 2017 01:50 PM PDT

மும்பை: மகாராஷ்டிராவில் முன்னாள் துணை முதல்வரின் ரூ. 300 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.மகாராஷ்டிராவில் முந்தைய காங்., தேசியவாத காங்.ஆட்சியின் போது துணை முதல்வராக இருந்தவர் சாஜஜன் புஜ்பால். இவர் தேசியவாத காங்.கட்சி மூத்த தலைவர். இவர் மீது பல்வேறு பண மோசடி மற்றும் ஊழல் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சாஜஜன் புஜ்பால், இவரது மகன் பங்கஜ் புஜ்பால், மருமகன், சமீர் புஜ்பால் உள்ளிட்டோர் பெயர்களில் உள்ள வணிக வளாகங்கள், மற்றும் கோல்கட்டா, மும்பை ஆகிய பெரு நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்தது ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™