Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேச்சால் ராஜ்யசபாவில்...சர்ச்சை!

Posted: 26 Jul 2017 08:39 AM PDT

புதுடில்லி:''சுய விளம்பரத்துக்காக,ஒத்தி வைப்பு தீர்மானங்களை எதிர்க்கட்சிகள் கொண்டு வருகின்றன,''என, மத்திய நிதியமைச்சர்அருண் ஜெட்லி கூறியதால்ஏற்பட்ட அமளியால், ராஜ்ய சபா, மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.

பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. ராஜ்யசபாவில் நேற்று, கேள்வி நேரம் முடிந்ததும், ''சபை நடவடிக்கை களை ஒத்தி வைத்து, சிறப்பு பிரச்னையை எழுப்ப அனுமதிக்க வேண்டும்,'' என, காங்கிரசின், ஆனந்த் சர்மா கூறினார்.அதே போல், நடவடிக்கைகளை ஒத்தி வைத்து பேசுவதற்கு அனுமதிக் கோரி, மேலும் சில, எம்.பி.,க்களும், 'நோட்டீஸ்' கொடுத்திருந்தனர். ஆனால், ...

'தோவல் பயணத்தால் எல்லை பிரச்னை தீராது'

Posted: 26 Jul 2017 09:01 AM PDT

புதுடில்லி: இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை யில், சீன பத்திரிகைகள் தொடர்ந்து, இந்தியா வுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலை யில், 'இந்தப் பயணத்தால் ஒரு பயனும் இருக்காது' என, செய்தி வெளியிடப்பட்டுள்ளது.நம் நாட்டின் சிக்கிம் எல்லையில் உள்ள டோகோலாம் பகுதியை ஆக்கிரமிக்க, சீனா அரசு முயற்சித்து வருகிறது. இது தொடர்பாக, எல்லையில், ஒரு மாதத்துக்கு மேலாக பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலை யில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகள் அடங்கிய, ...

 பீஹார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ்குமார் ராஜினாமா!

Posted: 26 Jul 2017 09:20 AM PDT

பாட்னா:சமீபத்தில் மோசடி வழக்கு தொடரப் பட்டுள்ள, லாலு பிரசாத்தின் மகனும், துணை முதல்வருமான தேஜஸ்வியுடன் இணைந்து ஆட்சியை செயல்படுத்த விரும்பாததால், பீஹார் முதல்வர் பதவியை நிதிஷ்குமார், நேற்று ராஜினாமா செய்தார்.

கவர்னர் கேசரிநாத் திரிபாதியை நேற்று மாலை சந்தித்து, பதவி விலகல் கடிதத்தை கொடுத்து, ஆட்சியிலிருந்து வெளியேறினார். அந்த மாநிலத் தின் ஒன்றரை ஆண்டு கூட்டணி அரசை அவர் துாக்கி எறிந்தார். இதனால், பீஹார் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், பா.ஜ.,வின் ஆதரவுடன் நிதிஷ் குமார், ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக ...

ஊழல் இன்ஜினியர்களுக்கு 'கல்தா': உ.பி., முதல்வர் யோகி அதிரடி

Posted: 26 Jul 2017 10:10 AM PDT

லக்னோ: உ.பி.,யில், நீர்ப் பாசனத் துறையில் பணியாற்றும் ஊழல் இன்ஜினியர்களை, கட்டாய ஓய்வில் அனுப்ப, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நீர்ப்பாசனத் துறையில், ஊழல் அதிகரித்துள்ளதாக, தொடர் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர்களுக்கு எதிராக, அதிரடி நடவடிக்கை எடுக்க, முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவுசெய்துள்ளார்.இதுகுறித்து, மாநில நீர்ப்பாசன துறை அமைச்சர், தர்மபால் சிங் கூறியதாவது: ஊழல் இல்லாத, வெளிப்படையான நிர்வாகம் நடத்துவது என, முதல்வர் யோகி ...

உள்ளாட்சி தேர்தலுக்கான உத்தேச கால அட்டவணை : மாநில தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு

Posted: 26 Jul 2017 10:13 AM PDT

சென்னை: தமிழகத்தில், உள் ளாட்சி தேர்தலை நடத்து வதற்கு, உத்தேச கால அட்டவணையை தெரி விக்கும்படி, மாநில தேர்தல் கமிஷனுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில், பழங்குடியினருக் கான ஒதுக்கீடு முறையாக இல்லை என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், 'பழங்குடியினருக்கான ஒதுக்கீடு செல்லும்; உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை முறைப்படி இல்லாததால், 2016, அக்டோபரில் நடப்பதாக அறிவிக்கப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டார். டிசம்பருக்குள் ...

2 ஆண்டுகளுக்கு 'நீட்' விலக்கு?

Posted: 26 Jul 2017 10:18 AM PDT

'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் அவசர சட்ட மசோதாவை, மத்திய அரசு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பவில்லை.

இதனால், மருத்துவ படிப்புகளில், மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதமும், இதர பாடத்திட்ட மாணவர்களுக்கு, 15 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை பிறப் பித்தது.இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. தமிழக அரசின் மேல்முறை யீட்டு மனு, விசாரணையில் உள்ளது. இந்நிலை யில், 'நீட்' தேர்வில் விலக்கு கோரும் சட்டத்துக்கு ஒப்புதல் பெற, முதல்வர் பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள், பிரதமர் மோடி மற்றும் ...

தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் மோதல் : முதல்வர் தொகுதியில் பதற்றம்

Posted: 26 Jul 2017 10:23 AM PDT

சேலம்: சேலம் மாவட்டம், கொங்கணாபுரத் தில், தி.மு.க.,வினர் துார் வாரிய ஏரியில், இரண்டாவது நாளாக நேற்றும், 100க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், லாரிகளில், அ.தி.மு.க., வினர் மண் அள்ளினர். அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் உள்ள, கச்சராயன்குட்டை ஏரியை, தி.மு.க.,வினர் துார்வாரி சீர்படுத்தினர். இந்த ஏரியை பார்வையிட இன்று, ஸ்டாலின் வருகிறார்.'அரசு செய்யாத பணியை நாங்கள் செய்கிறோம்' என, ஸ்டாலின் கூறுவார் என்பதால், அ.தி.மு.க., வினர், நேற்று முன்தினம், ஏரியில் மண் அள்ள அனுமதி பெற்று, ...

எல்லா ஊழல்களையும் கூறாதது தவறு தான்: நடிகர் கமல் காட்டம்

Posted: 26 Jul 2017 10:38 AM PDT

சென்னை: 'அனைத்து விதமான ஊழல்களை பற்றி கூறாதது என் தவறுதான்' என, நடிகர் கமல், 'டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

'தமிழகத்தில், அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது' என, நடிகர் கமல் விமர்சித்தார். அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலை யில், 'டெங்கு பாதிப்பை கவனியுங்கள்; உங்களை நாங்கள் கவனிக்கிறோம்' என, டுவிட்டரில் பதிவு செய்தார். அடுத்தடுத்து, அவர் வெளியிட்டு வரும் கருத்து, அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், 'அனைத்து விதமான ஊழல்களை யும் கூறாதது தவறுதான்' என, நேற்று, கமல் தெரி வித்துள்ளார்.
இது ...

காவிரி, முல்லை பெரியாறு பிரச்னை: வக்கீல் செலவு ரூ.40 கோடி ஒரே நபருக்கு ஆறரை கோடி ரூபாய் 'பீஸ்'

Posted: 26 Jul 2017 11:29 AM PDT

கோவை:காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் முல்லைப்பெரியாறு பிரச்னை தொடர்பாக, வழக்குகளை நடத்துவதற்கு, வக்கீல்களுக்கான கட்டணமாக, தமிழக அரசு, 40 கோடி ரூபாய் செலவு செய்திருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா வுடனும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரளாவுடனும், தமிழகத்துக்கு நீண்ட காலமாக, சட்டப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. கடந்த 1990ல், காவிரி நடுவர் மன்றம் அமைத்ததிலிருந்து, சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு, பல்வேறு திருப்பங்களைச் ...

கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதிஷ் குமார்

Posted: 26 Jul 2017 12:23 PM PDT

பாட்னா: பீகார் கவர்னர் திரிபாதியை சந்தித்த நிதிஷ்குமார், ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து இன்று(ஜூலை 27) மாலை 5 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார்.
உரிமை கோரினார் நிதிஷ்:
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து 53 இடங்களை கொண்டுள்ள பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க நிதிஷ் முடிவு செய்தார். இதனையடுத்து பீகார் கவர்னர் கேசவ்நாத் திரிபாதியை சந்தித்த நிதிஷ்குமார், ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
துணை முதல்வர்:
இதனையடுத்து பீகாரில் ...

இன்று காலை 10 மணிக்கு பதவியேற்கிறார் நிதிஷ் குமார்

Posted: 26 Jul 2017 01:55 PM PDT

பாட்னா: பீகார் முதல்வராக நிதிஷ்குமார் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். நிதிஷ் மற்றும் சுஷில் மோடி இருவர் மட்டுமே இன்று பதவியேற்க உள்ளனர்.

சமீபத்தில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ள, லாலு பிரசாத்தின் மகனும், துணை முதல்வருமான தேஜஸ்வியுடன் இணைந்து ஆட்சியை செயல்படுத்த விரும்பாததால், பீஹார் முதல்வர் பதவியை நிதிஷ்குமார், நேற்று ராஜினாமா செய்தார். தொடர்ந்து பா.ஜ.,வுடன் கூட்டணி அணைத்து ஆட்சி அமைக்க பீகார் கவர்னர் திரிபாதியை சந்தித்து ஆட்சியமைக்க நிதிஷ் உரிமை கோரினார். 132 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு பட்டியலையும் ...

பீகார் அரசியலில் நள்ளிரவு பரபரப்பு; தேஜஸ்வி ராஜ்பவன் நோக்கி ஊர்வலம்

Posted: 26 Jul 2017 02:18 PM PDT

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி, கவர்னரை சந்தித்து பெரும்பான்மையை நிருபிக்க வாய்ப்பு கேட்டுள்ளார். மேலும் நிதிஷ் கட்சியினருக்கு தைரியம் இருந்தால் தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பீகாரில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. இன்று காலை 10 மணிக்கு நிதிஷ் குமார் பா.ஜ., முதல்வராக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நள்ளிரவில் கவர்னர் இல்லமான ராஜ்பவனை நோக்கி ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி, தனது கட்சியினருடன் ஊர்வலம் ...

இன்றைய(ஜூலை 27) பெட்ரோல், டீசல் விலை?

Posted: 26 Jul 2017 03:21 PM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.07 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.93 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை 27) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 1 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.67.07 காசுகளும், டீசல் விலை 1 பைசா குறைந்து, லிட்டருக்கு ரூ.57.93 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை 27) காலை 6 மணி முதல் அமலுக்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™