Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பசு பாதுகாவலரை பாதுகாக்க வேண்டாம் என... உத்தரவு!

Posted: 21 Jul 2017 09:06 AM PDT

புதுடில்லி:'பசு பாதுகாப்பு என்ற பெயரில், வன்முறையில் ஈடுபடுவோரை பாதுகாக்கும் வகையில், எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது' என, மத்திய, மாநில அரசுகளுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

பசு பாதுகாவலர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக, சமூக ஆர்வலர் தஸீன் பூனாவாலா என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந் திருந்தார். அவர் தாக்கல் செய்த மனு விபரம்:பசு பாதுகாப்பு என்ற பெயரில், தலித் மற்றும் சிறுபான்மையினர் தாக்கப்படு கின்றனர்.
மீண்டும் விசாரணை
பசு பாதுகாப்பு இயக்கத்தினரின் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன. 'இவர்கள் சமூகத்தின் ...

அனைவருக்கும் இலவச 'ஜியோபோன்' முகேஷ் அம்பானி அதிரடி அறிவிப்பு

Posted: 21 Jul 2017 09:11 AM PDT

மும்பை:'இந்தியர்கள் அனைவருக்கும், 'ஜியோ மொபைல்போன்' இலவசமாக கிடைக்கும்' என, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர், முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

முகேஷ் அம்பானி தலைமையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், 40வது ஆண்டு பொதுக் கூட்டம், மும்பையில் நேற்று நடந்தது. ரிலையன்ஸ் பங்கு முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ், மகள் இஷா ஆகியோர், '4ஜி' தொழில்நுட்ப வசதி உடைய, 'ஜியோபோனை' அறிமுகப்படுத்தினர்.
பின், முகேஷ் அம்பானி பேசிய தாவது:
இந்தியர்கள் அனைவருக்கும், ஜியோ போன், விலையின்றி வழங்கப்படும். இந்த ...

விஷம் கக்கும் சீன பத்திரிகைகள் இந்தியாவுக்கு எதிராக தீவிரம்

Posted: 21 Jul 2017 09:15 AM PDT

புதுடில்லி:இந்தியா - சீனா இடையே எல்லை யில் பதற்றம் காணப்படும் நிலையில், நம் நாட்டுக்கு எதிராக, எதிர்மறையான கட்டுரை களை வெளியிட்டு, சீன பத்திரிகைகள், பிரச்னையை தீவிரமாக்கி வருகின்றன.

சிக்கிம் மாநிலத்தின் எல்லையில், டோகோ லாம் பகுதியில், இந்தியா - சீனா இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், அண்டை நாடான சீனாவில், ஆட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான, 'குளோபல்டைம்ஸ்' உள்ளிட்ட பத்திரிகைகள், கடந்த சில வாரங்களாக, இந்தியாவுக்கு எதிரானஎனப்படும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு, தெலுங்கானா மாநிலம் ...

அனைத்து பள்ளிகளிலும் ராணுவ பள்ளி பாடத்திட்டம்?

Posted: 21 Jul 2017 09:21 AM PDT

புதுடில்லி:'சைனிக் பள்ளி எனப்படும், ராணுவ பள்ளிகளில் உள்ள பாடத் திட்டத்தை, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கு, பிரதமர் அலுவலகம் ஆலோசனை அளித்துள்ளது.

நாடு முழுவதும், 25 சைனிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன. உறைவிடப் பள்ளியான இங்கு, மாணவர்கள் தங்கி படிக்க வேண்டும். வழக்க மான பாடத் திட்டத்துடன், உடல் தகுதியை வளர்த்துக் கொள்வது உள்ளிட்ட, ராணுவத் துக்கு தேவையான பயிற்சி இங்கு வழங்கப் படுகிறது.'கல்வியுடன், ஒழுக்கத்தையும், உடல்ஆரோக்கியத் தையும் ஊக்குவிக்கும், சைனிக் கல்வி முறையை, நாடு ...

'குட்கா ஊழல்: சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்': ஸ்டாலின்

Posted: 21 Jul 2017 10:33 AM PDT

சென்னை:'குட்கா ஊழல் குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:
தமிழக, டி.ஜி.பி.,யாக, டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக் கில், 'குட்கா ஊழல்' குறித்து, வருமான வரித்துறை எழுதிய கடிதம் மற்றும் அறிக்கையை, உயர்நீதி மன்றத்தில், தலைமை செயலர்,கிரிஜா வைத்திய நாதன் மறைத்துஉள்ளார்.தமிழக அரசு நிர்வாகத்தில், 36 ஆண்டுகளாக, பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி நேர்மையான அதிகாரி என, பெயரெடுத்தவர், இவ்வாறு செயல் பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.குட்கா விசாரணையை எதிர்கொள்ள ...

'ரயில்வே உணவை மனிதர் சாப்பிட முடியாது': சி.ஏ.ஜி., ஆவேசம்

Posted: 21 Jul 2017 10:42 AM PDT

'ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் கிடைக்கும் உணவுகளின் தரம் மிகவும் மோச மாக உள்ளது; மனிதர்கள் சாப்பிடக் கூடியதாக, அவை இல்லை' என, சி.ஏ.ஜி., எனப்படும், மத் திய கணக்கு தணிக்கை அமைப்பு கூறியுள்ளது.

ரயில் உணவுகள் குறித்து, ரயில்வே அதிகாரி களுடன் இணைந்து, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அமைப்பு ஆய்வு செய்தது. இதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில், 74 ரயில் நிலையங்கள் மற்றும் 80 ரயில்களில் சோதனை நடத்தப்பட்டன. இந்த சோதனை குறித்த, சி.ஏ.ஜி.,யின் அறிக்கை பார்லிமென்ட் டில் நேற்று தாக்கல் செய்யப் பட்டது. அதில் கூறியுள்ளதாவது: உணவு விஷயத்தில், ...

சசிகலாவுக்கு சலுகை வழங்கியது உண்மையே! கர்நாடக சிறை அதிகாரிகள் ஒப்புதல்

Posted: 21 Jul 2017 10:55 AM PDT

பெங்களூரு:பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அ.தி.மு.க., சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கி முறைகேடுகள் செய்யப்பட்டது உண்மை தான் என கர்நாடக சட்டசபை பொது கணக்கு குழு கூட்டத்தில் கூடுதல் டி.ஜி.பி., என்.எஸ்.மேகரிக், டி.ஐ.ஜி., ரேவண்ணா ஒப்புக் கொண்டுள்ளதால் கர்நாடக அரசுக்கு அடுத்த நெருக்கடி தோன்றியுள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், அதற்காக அவர் தரப்பில் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளால் கர்நாடக சிறைத்துறையில் பல ...

ஆர்.கே.நகரில் கமல் போட்டி?

Posted: 21 Jul 2017 11:15 AM PDT

மதுரை:அரசுக்கு எதிராக கடுமையாக விமர்சித்து வரும், கமல்ஹாசன், ஆர்.கே. நகரில் போட்டியிட உள்ளதாக வெளியான தகவலால் அடுத்த கட்ட பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

விமர்சனம்
'டிவி' நிகழ்ச்சி ஒன்றில் எழுந்த பிரச்னைக்காக, நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டி பல விதங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு விஷயங்கள் பற்றி கருத்து தெரிவித்த கமல், ஊழல் பற்றிய கேள்விக்கு, அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளதாக கூறினார்.இது, தமிழக ஆட்சியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா இருந்த வரை, வாய் மூடி மவுனியாக இருந்த ...

தமிழகத்தில் வரி ஏய்ப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கை... தொடர்கிறது!

Posted: 21 Jul 2017 11:24 AM PDT

தமிழகத்தில் வருமான வரி ஏய்ப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது.

சென்னையில் சொத்துகளை வாங்கிக் குவித்த அரசு கான்ட்ராக்டர் வீட்டில் நேற்று மூன்றாவது நாளாக தொடர்ந்த சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் சிக்கின. கான்ட்ராக்டருக்கு நிலத்தை விற்ற முன்னாள் ஐ.ஜி., மகனுக்கு சொந்தமான இடங்களிலும் 'ரெய்டு' நடந்தது. இதற்கிடையில் வருமான வரித்துறை அலுவல கத்தில் ஆஜரான சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் 'கிடுக்கிப்பிடி' விசாரணை நடத்தினர்.தமிழகத்தில் 2016 துவக்கம் முதல் வருமான ...

இன்றைய(ஜூலை- 22) பெட்ரோல், டீசல் விலை?

Posted: 21 Jul 2017 11:40 AM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.77 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.94 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஜூலை -22) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 2 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.66.77 காசுகளும், டீசல் லிட்டருக்கு 8 பைசா குறைந்து, லிட்டருக்கு ரூ.57.94 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை- 22) காலை 6 மணி முதல் அமலுக்கு ...

வெளிநாட்டு வங்கிகளில் ரூ.19,000 கோடி கறுப்பு பணம்

Posted: 21 Jul 2017 12:33 PM PDT

புதுடில்லி, ''வருமான வரித்துறை சோதனையில் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் 19 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது,'' என நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

லோக்சபாவில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:சுவிட்சர்லாந்தின் எச்.எஸ்.பி.சி., வங்கி உட்பட வெளிநாட்டு வங்கி கணக்குகளில், 700 இந்தியர்கள் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ள தகவல் வெளியானதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மொத்தம், 19 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளதை வருமான ...

காவிரியில் நீர் திறப்பு: கர்நாடகா குறைப்பு

Posted: 21 Jul 2017 01:48 PM PDT

தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே, ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ்., ஆகிய அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைகளில் இருந்து,ஆண்டுதோறும், தமிழகத்தின் தேவைக்காக,192 டி.எம்.சி., நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும். முறைப்படி தண்ணீர் வழங்காமல், கர்நாடக அரசு மறுத்து வருகிறது.

தென் மேற்கு பருவமழை துவங்கியதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து துவங்கியது. இதையடுத்து, காவிரியில், வினாடிக்கு, 4,000 கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டது. இது, சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு ...

எல்லையில் பாக்.,ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர் வீர மரணம்

Posted: 21 Jul 2017 02:43 PM PDT

ஸ்ரீநகர்:காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் வீர மரணம் அடைந்தார்.

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இன்று மாலை முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி மற்றும் சிறிய ரக பீரங்கிகளால் இந்திய நிலையை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இந்திய பாதுகாப்பு படையினரும் பாகிஸ்தான் நிலைகளை தாக்கினர்.
இரு தரப்புக்கும் பல மணிநேரங்களாக சண்டை தொடர்ந்து நடைபெற்றது. பாகிஸ்தான் படையினர் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™