Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஊழியருக்கு புதிய சீருடைகள்; ஜொலிக்க போகும் ரயில்வே

Posted: 02 Jul 2017 08:57 AM PDT

புதுடில்லி: நாடு முழுதும் உள்ள ரயில்வே ஊழியருக்கு, அவரவர் பணிகளுக்கு ஏற்ப, புதிய சீருடைகளை அளிக்க, ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆடைகளை, பிரபல ஆடை வடிவமைப்பாளர் ரீது பெரி உருவாக்கி வருகிறார்.

வடிவமைப்புதற்போது, ரயில்வேயில், டி.டி.இ., எனப்படும் பயணச்சீட்டு பரிசோதகர், ஸ்டேஷன் மாஸ்டர்கள், ரயில் கார்டுகள் ஆகியோருக்கு சீருடைகள் வழங்கப்படுகின்றன. பல
ஆண்டுகளுக்கு முன் இவை வடிவமைக்கப்பட்டன. அதே நேரத்தில், மக்களுடன் நேரடி தொடர்பு உள்ள மற்ற ரயில்வே ஊழியருக்கு எந்த சீருடையும் கிடையாது.
இதனால், ரயில்வே ...

ஜி.எஸ்.டி.,யால் விற்பனை பெருகும்! தொழில் கூட்டமைப்பு கணிப்பு

Posted: 02 Jul 2017 09:01 AM PDT

புதுடில்லி: ''ஜி.எஸ்.டி.,யால், வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயருவதுடன், தொழில் துறை யில் போட்டி அதிகரித்து விற்பனை பெருகும்,'' என,இந்திய தொழில் கூட்டமைப்பு கூறியுள்ளது.

தொழில் வாய்ப்பு
சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர் திருத்தமாக கருதப்படும், ஜி.எஸ்.டி., ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.,க்கு ஆதரவாகவும், எதிராகவும் பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலை யில், சி.ஐ.ஐ., எனப்படும், இந்திய தொழில் கூட்டமைப்பு, ஜி.எஸ்.டி., வரிக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.இது குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு தலை ...

எதிர்க்கட்சிகளின் ஓட்டு கிடைக்கும் என பா.ஜ., உற்சாகம்!

Posted: 02 Jul 2017 09:18 AM PDT

புதுடில்லி: ஜனாதிபதி பதவிக்காக நடக்கும் தேர்தலில், எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த ஓட்டுகளும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக, பா.ஜ., உற்சாகத்தில் உள்ளது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், வரும், 24ல் முடிவுக்கு வருகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல், வரும், 17ல் நடக்க உள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக பா.ஜ., சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள மீரா குமார், ஆதரவு கேட்டு நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு ...

அ.தி.மு.க., பிரிவால் அதிகாரிகள் காட்டில் மழை; உளவுத்துறை எச்சரிக்கையை புறக்கணிக்கும் அவலம்

Posted: 02 Jul 2017 10:10 AM PDT

அ.தி.மு.க., பல அணிகளாக பிரிந்து கிடப்பதை சாதகமாக்கி கொள்ளும் அதிகாரிகள், இஷ்டம் போல் செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக, தமிழக உளவுத்துறை போலீசாரின் அறிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், முக்கிய முடிவுகள், கட்சி, அதிகாரிகள் களையெடுப்பு போன்றவற்றை, உளவுத்துறையின் அறிக்கையின்படியே, எடுப்பது வழக்கம். அவரது மறைவுக்கு பின், முதல்வரான பழனிசாமி ஆட்சியில், உளவுத்துறைக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் போலீஸ் உள்ளிட்ட ...

தினகரன் - திவாகரன் போட்டி கூட்டம் நடத்த திட்டம்

Posted: 02 Jul 2017 10:14 AM PDT

தேனியில், தினகரன் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு போட்டியாக, திவாகரன் ஆதரவாளர்கள், மன்னார்குடியில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

ஆட்சியும், கட்சியும் என் தலைமையில் தான் செயல்படுகிறது என்பதை, வெளிக்காட்டும் வகையில், முதல்வர் பழனிசாமியின் செயல்பாடுகள் உள்ளன.
புறக்கணிப்பு
அதனால், 'சசிகலாவால் துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட, தினகரனை ஏற்க முடியாது' என, அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். சமீபத்தில், தமிழக அரசு சார்பில், மதுரையில் நடத்தப்பட்ட, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை, ...

பாஸ்கரன் மீதான புகார்: விசாரணை துவக்கம்; ரூ.6 கோடி மோசடி விவகாரம்

Posted: 02 Jul 2017 10:17 AM PDT

சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரன் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள, 6.5 கோடி ரூபாய் மோசடி புகார் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

சென்னை, பூந்தமல்லி இந்திரா நகரை சேர்ந்தவர் அசோக் குமார், 51; தொழில் அதிபர். இவர், சில தினங்களுக்கு முன், சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்:நண்பர்கள் சித்திரை செல்வம், செந்தில் கருணா ஆகியோர், 2011ல், சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரனை அறிமுகம் செய்து வைத்தனர். ஒரு நாள், தொழில் ரீதியாக அவரிடம் பேசிய போது, 'உங்களுக்கு அரசியலில் ஈடுபட விருப்பமா?' என, ...

ஜெ., அறிவித்த அபராத வட்டி குறைப்பு என்னாச்சு? கிடப்பில் போட்டது வீட்டு வசதி வாரியம்

Posted: 02 Jul 2017 10:34 AM PDT

'வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளர்களுக்கு, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்' என்ற, ஜெயலலிதாவின் அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தள்ளுபடி திட்டம்
வீட்டு வசதி வாரியத்தில், வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்களில், தவணை செலுத்த தவறியவர்கள், பயன் பெறும் வகையில், அபராத வட்டி தள்ளுபடி திட்டம், 2011 முதல் மூன்று முறை செயல்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, 2016 செப்., 17ல், வெளியிட்ட அறிவிப்பு: வீட்டு வசதி வாரியத்தில், ஒதுக்கீடு பெற்றவர்களின் நலன் கருதி, அவர்களின் வட்டி சுமையை குறைக்க, வட்டிச் சலுகை ...

சும்மா இருந்து சம்பளம் வாங்கும் 5,000 ஆசிரியர்களை மாற்ற முடிவு

Posted: 02 Jul 2017 10:43 AM PDT

தென் மாவட்ட அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 5,000 பட்டதாரி ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும் கவுன்சிலிங் மூலம், அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவர். ஆனால், 2011க்கு பின், பள்ளிகள் திறந்த பின், ஜூலையில், இந்த கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
இதனால், பாதி பாடங்களை ஒரு ஆசிரியரும், மீதி பாடத்தை மற்றொரு
ஆசிரியரும் நடத்தும் நிலை ஏற்பட்டது; மாணவர்களுக்கு கற்பித்தலில் சிக்கல் ஏற்பட்டது.
இதற்கு தீர்வு காண, இந்தாண்டு, பள்ளிகள் திறக்கும் முன், மே ...

சினிமா தியேட்டர்களை இன்று முதல் மூட முடிவு!

Posted: 02 Jul 2017 10:55 AM PDT

சென்னை: நாடு முழுவதும் ஒரே வரியான ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வந்துள்ள நிலை யில் தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் இன்று முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்படுகின்றன.

'கோரிக்கை நிறைவேறும் வரை, தியேட்டர்கள் செயல்படாது' என தமிழ் திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளதால் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.நாடு முழுவதும் ஜூலை 1 முதல் சரக்கு மற் றும் சேவை வரியான ஜி.எஸ்.டி., நடை முறை க்கு வந்துள்ளது. இதன்படி 100 ரூபாய் வரையி லான சினிமா டிக்கெட்டுக்கு 18சதவீதம்; அதற்கு மேலான டிக்கெட்டுக்கு 28 சதவீதம் வரி விதிக் கப்பட்டுள்ளது.இது ...

ஒலி மாசு பட்டியலில் மசூதி; பாட புத்தகத்தால் சர்ச்சை

Posted: 02 Jul 2017 12:46 PM PDT

புதுடில்லி: ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில், ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டியலில், மசூதி படம் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சை:
ஐ.சி.எஸ்.இ., எனப்படும், இந்திய சான்றிதழ் இடைநிலை கல்வி வாரியத்தின் ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில், ஒலி மாசு ஏற்படுத்துபவை பற்றி விளக்கப்பட்டுள்ளது. இதில், ரயில், கார், பஸ், விமானம் உள்ளிட்டவற்றுடன், மசூதி படமும் இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரம், சமூகவலை தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஐ.சி.எஸ்.இ., தலைவர் ஜெர்ரி ...

கிரிக்கெட்: பேட்ஸ்மேன்கள் சொதப்பல்; இந்தியா தோல்வி

Posted: 02 Jul 2017 02:20 PM PDT

ஆன்டிகுவா : நான்காவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் வேகத்தில் அசத்த, அந்த அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், இந்தியா 2-0 என முன்னிலை வகித்திருந்தது. இந்நிலையில் நான்காவது ஒருநாள் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது.
இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. யுவராஜ் சிங், அஷ்வின், புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக், ரவிந்திர ஜடேஜா, முகமது ஷமி ...

ஊனமுற்ற ராணுவத்தினரின் ஓய்வூதியம் கணக்கிட புதிய முறை

Posted: 02 Jul 2017 03:23 PM PDT

புதுடில்லி: பணியின்போது காயமடைந்து ஊனம் ஏற்படும் முப்படையினருக்கான ஓய்வூதியத்தை நிர்ணயிக்க, புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த வீரர்கள், பணியின்போது காயமடைந்து, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, பணியில் இருந்து முன்னதாகவே ஓய்வு பெறுகின்றனர். இவர்களுக்கு, ஓய்வூதியம் அளிக்கும் திட்டம், 2006ல் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 100 சதவீதம் ஊனமடைவோருக்கு, அவர்கள் வாங்கிய கடைசி சம்பளத்தின், 30 சதவீதத்தில், டி.ஏ., எனப்படும் அகவிலைப்படி கழிக்கப்பட்டு, ஊனத்துக்கான ஓய்வூதியமாக ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™