Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


விதிகளை மீறி ரூ.11 கோடி பட்டுவாடா; மின் வாரியத்துக்கு 'குட்டு'

Posted: 19 Jul 2017 09:09 AM PDT

சென்னை: 'ஒப்பந்த விதிகளை மீறி பெறப்பட்ட மின்சாரத்திற்காக கொடுக்கப்பட்ட, 11.45 கோடி ரூபாய் கொடுத்தது முறையற்றது' என, மத்திய கணக்கு தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த, அறிக்கை விபரம்: மின் வாரியம், 2013 ஜூன், 1 முதல், 2014 மே, 25 வரையிலான காலத்தில், 110 மெகா வாட் மின்சாரத்தை, ஆர்.கே.எனர்ஜி நிறுவனத்திடம் இருந்தும்; 5 மெகா வாட் மின்சாரத்தை, சாய் ரீஜென்சி பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம்
இருந்து கொள்முதல் செய்ய, 2013 ஜூனில் ஒப்பந்தம் செய்தது.இரு ஒப்பந்தங்களிலும், மின் கொள்முதல் குறித்த ஒரே வித விதிமுறைகள் ...

3.57 கோடி பேர் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கவில்லை

Posted: 19 Jul 2017 09:11 AM PDT

வருமான வரி துறையின் இ சேவையில் பதிவு செய்துள்ள, 2.45 கோடி பேர் மட்டுமே, ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்; 3.57 கோடி பேர், பான்- ஆதார் எண்ணை இன்னும் இணைக்கவில்லை.

ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள், வருமான வரி செலுத்த வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்து, இ- ரிட்டர்ன் தாக்கல் செய்வது கட்டாயம். அவ் வகையில், நாடு முழுவதும், 6 கோடியே, 32 லட்சத்து, ஒன்பதாயிரத்து, 611 பேர், வருமான வரித்துறை யின், ஆன்-லைன் சேவையை பயன்படுத்தி, இ -ரிட்டர்ன் தாக்கல் செய்கின்றனர்.தனி நபர் கணக்கு விபரங்களை முறைப்படுத்த வும், கண்காணிக்க ஏதுவாகவும், வருமானவரி துறை சார்பில், பான் ...

'நீட்' தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., ஒற்றுமை! ராஜ்யசபாவை அதிர வைத்த தமிழக கட்சிகள்

Posted: 19 Jul 2017 09:45 AM PDT

மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்விலிருந்து, தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரி, ராஜ்யசபாவில், அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள், ஓரணியில் திரண்டு, கடும் அமளியில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

ராஜ்யசபாவில் நேற்று, மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவுத் தேர்வு விவகாரத்தை, தமிழக, எம்.பி.,க்கள் எழுப்பினர். இது குறித்து பேசிய, அ.தி.மு.க., - எம்.பி.,யான செல்வராஜ், ''தமிழக சட்டசபையில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி பல நாட்கள் ஆகியும், ஜனாதிபதியின் ஒப்புதல் வழங்கப்படாமல் இருப்பது சரியல்ல.''மத்திய அரசு ...

சிறையில் சசிகலா ராஜ்யம், துவங்கியது விசாரணை! சிக்கியது எப்படி என்ற பரபரப்பு தகவல் அம்பலம்

Posted: 19 Jul 2017 10:02 AM PDT

பெங்களூரு: பெங்களூரு சிறையில் அ.தி.மு.க., சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வசதிகள் குறித்தும், முறைகேடுகள் குறித்தும், விசாரணை கமிஷன் தலைவர், வினய் குமார் மற்றும் புதிதாக பொறுப்பேற்ற சிறை அதிகாரி, என்.எஸ்.மேகரிக் ஆகியோர், விசாரணையை துவக்கினர்.

சசிகலாவுக்கு சிறையில் கிடைத்த சலுகைகள், எப்படி வெளி உலகிற்கு அம்பலமானது என்பது குறித்த, பரபரப்பான பின்னணி தகவல்களும் வெளியாகியுள்ளன.
ரூ.2கோடி
சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சொகுசு வசதி செய்து கொடுப்ப தற்காக, இரண்டு கோடி ரூபாய் ...

சட்டசபை தொடரால் நன்மை இல்லை: ஸ்டாலின் வேதனை

Posted: 19 Jul 2017 10:50 AM PDT

சென்னை: ''சட்டசபை கூட்டத்தொடரால், மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்ன என, திரும்பி பார்த்தால், வெறுமை தான் மிஞ்சு கிறது,'' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: சட்டசபையில், 2017 - 18க்கான பட்ஜெட், மார்ச், 16ல் தாக்கல் செய்யப்பட்டது. மூன்று மாதங்கள் முடிந்த நிலையில், 'ஆறிப்போன கஞ்சி பழஞ்கஞ்சி' என்ற பழமொழிக்கேற்ப, ஜூன், 14, சட்டசபை துவங்கியது.
நன்மைகள்
இந்த கூட்டத்தொடரில், நடந்தது என்ன; இதனால் மக்களுக்கு ஏற்படவுள்ள நன்மைகள் என்ன என திரும்பி பார்த்து ...

'ஜாக்பாட்'.. எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் இரு மடங்காக உயர்ந்தது

Posted: 19 Jul 2017 10:52 AM PDT

சென்னை:சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று, எம்.எல்.ஏ.,க்களுக்கு, 'ஜாக்பாட்' அடித்தது. அவர்களின் மாதச் சம்பளம், 55 ஆயிரம் ரூபாயில் இருந்து, 1.05 லட்சம் ரூபாயாக, இம்மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. தொகுதி மேம்பாட்டு நிதியும், 2.5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. சொந்தக் கட்சியில் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகள் தரப்பிலும், எதிர்ப்புகள் உருவாகாமல் இருக்க, இந்த அதிரடி அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.

சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:
காங்., - பாண்டி: எம்.எல்.ஏ.,க்கள் சம்பளத்தை, இரண்டு லட்சம் ...

'எம்.பி.,க்களின் ஒழுக்கம் ஜனநாயகத்துக்கு முக்கியம்!'

Posted: 19 Jul 2017 11:05 AM PDT

''பார்லிமென்ட் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதற்கு, எம்.பி.,க்களுக்கு தனி ஒழுக்கம், நம்பகத்தன்மை மிகவும் முக்கியம்,'' என, துணை ஜனாதிபதி, ஹமீது அன்சாரி வலியுறுத்தினார்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த, 'லோக்மாத் மீடியா' என்ற, பத்திரிகை குழுமத்தின் சார்பில், சிறந்த எம்.பி.,க்களுக் கான விருது வழங்கும் விழா, டில்லியில் நேற்று நடந்தது.
ஒழுக்கம்
இந்த விழாவில், விருதுகளை வழங்கி, துணை ஜனாதிபதி, ஹமீது அன்சாரி பேசியதாவது:பார்லிமென்ட் ஜனநாயகத்தின் மீது, மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட, எம்.பி.,க்களுக்கு ஒழுக்கம், ...

பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டம் ரூ.81 ஆயிரம் கோடி

Posted: 19 Jul 2017 11:09 AM PDT

சென்னை: தமிழகத்தில், பொதுத்துறை நிறுவ னங்களின் நஷ்டம், 80 ஆயிரத்து, 925 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, மத்திய கணக்கு தணிக்கை அலுவலக ஆய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து, தமிழக பிராந்திய முதன்மை கணக்கு தணிக்கை அலுவலர் தேவிகா நாயர், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் செயல்படும், பொதுத்துறை நிறுவனங்களில், 41 நிறுவனங்கள், 2015 - 16ல், 811.27 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளன. 21 பொதுத்துறை நிறுவனங்கள், 15 ஆயிரத்து, 684.69 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளன. அதில், மின்வாரியம், 12 ஆயிரத்து, 756.59 கோடி ரூபாய்; எட்டு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 2,600 கோடி ரூபாய் இழப்பு ...

'அ.தி.மு.க., அணிகள் இணைய வாய்ப்புள்ளது'

Posted: 19 Jul 2017 11:14 AM PDT

சென்னை: ''அ.தி.மு.க., அணிகள் இணைய வாய்ப்புள்ளது,'' என, முதல்வர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

சட்டசபை கூட்டத்தொடர், ஜூன், 14ல் துவங்கி, நேற்று நிறைவு பெற்றது. கூட்டத்தொடர் முடிந்ததும், மாலை, 4:00 மணிக்கு, முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் நேராக, ஜெ., நினைவிடம் சென்றனர். அங்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். பின், முதல்வர் பழனிசாமி கூறியதாவது:சட்டசபையில், 'அ.தி.மு.க., எனக்கு பின்னாலும், ஆட்சி அதிகாரத்தில், 100 ஆண்டு காலம் இருக்கும்' என, ஜெ., சுட்டிக்காட்டினார். அவரது லட்சியத்தை, நாங்கள் நிறைவேற்றி உள் ளோம். சட்டசபை கூட்டத்தொடர் சிறப்பாக நடந்து ...

சட்டசபை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பு?

Posted: 19 Jul 2017 12:23 PM PDT

சென்னை: ''தமிழகத்தில், சட்டசபை நிகழ்ச்சிகளை, நேரலையாக ஒளிபரப்ப வேண்டும்,'' என, எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
ஸ்டாலின்: சட்டசபையில் நடக்கும் நிகழ்ச்சிகளை, வாக்காளர்கள் நேரடியாக பார்க்க வேண்டும். அதை செய்வதில், என்ன பிரச்னை உள்ளது. எனவே, சபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப சபாநாயகர் உடனே உத்தரவிட வேண்டும்.
சபாநாயகர் தனபால்: சபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவது, என் அதிகாரத்திற்கு உட்பட்டது தான்; ஆனால், இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ...

மல்லையா வழக்கு ஆதாரங்கள்; அதிகாரிகள் லண்டன் விரைவு

Posted: 19 Jul 2017 01:49 PM PDT

புதுடில்லி: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை, நாடு கடத்தும் வழக்குக்கு தேவையான கூடுதல் ஆதாரங்களை அளிப்பதற்காக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள், லண்டனுக்கு விரைந்துள்ளனர்.
வங்கிகளுக்கு, 9,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ள, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பிரிட்டனின் லண்டனுக்கு தப்பிச் சென்றான். அவனை நாடு கடத்தி, ஒப்படைக்கும்படி, மத்திய அரசு கொடுத்த மனுவின் அடிப்படையில், இது தொடர்பான வழக்கு, லண்டனில் நடந்து வருகிறது.
இந்நிலையில், மல்லையா மீதான வழக்கில், அமலாக்கத் துறை, சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ...

ஜெ., பொருட்கள் நாட்டுடமை..?

Posted: 19 Jul 2017 02:32 PM PDT

சென்னை: ''ஜெ., பயன்படுத்திய பொருட்களை, நாட்டுடமை யாக்கி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்,'' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., முருகுமாறன் கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில், நேற்று அவர் பேசியதாவது: ஜெ., பயன்படுத்திய வாகனங்கள் உட்பட அனைத்து பொருட்களையும், அவருக்கு வந்த பரிசு பொருட்களையும், நாட்டுடமையாக்கி, அவர் வசித்த வீட்டில், பொதுமக்கள் பார்வைக்கு, காட்சியகமாக வைக்க வேண்டும். முதல்வர் பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., அணிகள் இணையும்; இரட்டை இலை சின்னத்தை மீட்போம்.இவ்வாறு முருகுமாறன் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™