Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இதற்கொரு கவிதை தாருங்களேன் --{படமும் -கவிதையும் தொடர்} (9 )

Posted: 19 Jul 2017 07:59 AM PDT

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}



ரமணியன்

படம் முகநூல் நன்றி

மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை

Posted: 19 Jul 2017 07:21 AM PDT

ஈகரை சொந்தங்களே நமது தளத்தில் நிறைய நூல்களின் தரவிறக்க சுட்டிகளை பயன்படுத்தும் போது this site is blocked as government of india instruction என்ற செய்தி தான் வருகிறது..புத்தகங்களை எவ்வாறு தரவிறக்கம் செய்வது என்று ஆலோசனை கூறுங்களேன் ..நன்றிகள் பல :வணக்கம்:

மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை

Posted: 19 Jul 2017 07:14 AM PDT

தஞ்சாவூரில் இருந்து, கண்டியூர் வழியாக,  திருக்காட்டுப்பள்ளி செல்லும் பஸ்சில் பயணித்து,  வரகூரில் இறங்கினேன்;  வரகூர், ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் உறியடி  உற்சவம், மிக பிரசித்தம். ஆண்டிற்கு ஒரு முறை,  பெருமாளை தரிசிக்க வந்து விடுவது என் வழக்கம்.  கோவில் சிறியது தான்; ஆனால், கீர்த்தி பெரிது.  பஸ் நிறுத்தத்திலிருந்து, 20 நிமிஷம் நடந்து, கோவிலை  அடைந்தேன். குருவாயூர் கோவில் போன்று, இங்கும் ஆண்கள் சட்டை  அணியாமல், வேட்டியுடன் தான் கோவிலுக்குள் செல்ல  முடியும். அதனால், கோவிலுக்கு ...

பொறுமை… நம்பிக்கை!

Posted: 19 Jul 2017 07:01 AM PDT

-ஜூலை 19 - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் ஆரம்பம் ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்வின் தாரக மந்திரமாக  கொள்ள வேண்டியது, பொறுமை மற்றும் நம்பிக்கை!  இந்த இரண்டையும் கடைப்பிடித்தால், வாழ்வில் வெற்றி  உறுதி என, நமக்கு அறிவுறுத்தியவள், ஆண்டாள். கலியுகம் பிறந்த சமயம், லட்சுமி தாயாரிடம்,  'தேவி... கலியுகம் பிறந்து விட்டது; நாம் பூலோகம்  சென்றால் தான், நிலைமையை சரிப்படுத்த முடியும்.  நீயும் என்னோடு வா...' என்றார், திருமால்.  'சுவாமி... தங்களுடன் சீதையாகவும், ருக்மணியாகவும்  வந்து பட்ட பாடு ...

தமிழக எம்எல்ஏ.க்கள் சம்பளம் ரூ.1,05,000 ஆக உயர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

Posted: 19 Jul 2017 06:44 AM PDT

தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை  ரூ.55,000-த்திலிருந்து ரூ.1,05,000 ஆக அதிகரிக்க  முடிவெடுக்கப்பட்டுள்ளதாக  அவையில் முதல்வர் கே.பழனிச்சாமி அறிவித்தார். ஜூலை 1-ம் தேதி முதல் இந்த உயர்த்தப்பட்ட சம்பளம்  நடைமுறைக்கு வருகிறது. இந்த அறிவிப்பை அடுத்து  பல்வேறு கட்சி எம்.எல்.ஏ.க்களும் வரவேற்பு அளித்தனர். அதே போல் எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு  நிதியும் ரூ.2,50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று  அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ----------------------------- தினமலர்

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?

Posted: 19 Jul 2017 06:43 AM PDT

நண்பர்களே!!! ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?

ஒரே ஆண்டில் படிப்பை பாதியில் விட்ட 889 ஐஐடி மாணவர்கள்

Posted: 19 Jul 2017 04:47 AM PDT

பெங்களூரு : மத்திய மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள புள்ளி விபத்தின்படி, 2016 – 17 ம் கல்வியாண்டில் 889 அதாவது 9 சதவீதம் ஐஐடி மாணவர்கள் தங்களின் படிப்பை பாதியில் விட்டுள்ளனர்.' இவர்களில் 71 சதவீதம் (630) பேர் பட்டமேற்படிப்பு மாணவர்கள், 196 பேர் ஆராய்ச்சி மாணவர்கள், 63 பேர் இளநிலை பட்டபடிப்பு படிப்பவர்கள் ஆவர். நாடு முழுவதிலும் உள்ள 9885 ஐஐடி இடங்களில் 73 காலியாகவே உள்ளன. 2015 – 16 ம் கல்வியாண்டில் 23 ஐஐடி.,க்களைச் சேர்ந்த 656 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். இந்த ...

ரூ.1 லட்சம் லஞ்சம்: ஆர்டிஓ உள்ளிட்ட 3 பேர் கைது

Posted: 19 Jul 2017 04:45 AM PDT

சென்னை:  சென்னை தாம்பரத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம்  1 லட்சம் லஞ்சம் வாங்கிய தாம்பரம் கோட்டாட்சியர்  ரவிச்சந்திரன், ஆலந்தூர் தாசில்தார் தனசேகரன், வருவாய்  ஆய்வாளர் முத்தழகன் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு  துறையினர் கைது செய்தனர்.  அவர்களை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, நீதிபதி தேவநாதன் உத்தரவின்  பேரில் 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 0 ----------------------------- தினமலர்

விமர்சனங்களுக்கு கவிதை மூலம் பதிலடி: அரசியலில் குதிக்கிறார் கமல்?

Posted: 19 Jul 2017 01:34 AM PDT

சென்னை: என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் அறிவிப்புவரும் நடிகர் கமல்ஹாசன் கூறினார். மேலும் கவிதை மூலம் தனது ரசிகர்களை உசுப்பிவிட்டுள்ளார் தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கடந்த வாரம் நடிகர் கமல் பேட்டி ஒன்றில் கூறினார். இதற்கு அமைச்சர்கள் சிலர் நடிகர் கமலை கடுமையாக விமர்சித்து வந்த வண்ணம் உள்ளனர். ஜெயலலிதா இருந்த போது வாய் திறக்காத கமல் இப்போது வாய் திறக்கிறார் என்றனர். விரைவில் அறிவிப்பு - இது தொடர்பாக நடிகர் கமல் டுவீட்டரில் கூறியது, நேற்று முளைத்த காளான்கள் போல் ...

இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை'

Posted: 19 Jul 2017 12:28 AM PDT

ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் இந்திப் பாடல்கள்  மிகவும் குறைவு என்று சொல்லி இந்தி பேசுபவர்கள்  கடுப்பாகி ட்வீட் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்  இல்லையா?  இந்தி பேசும் மக்கள் பலர் வாழும் பெங்களூரில் பல  ஆண்டுகளாக வாழ்பவன் என்ற முறையில் இதை  என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது.  இங்கு மட்டும் இல்லாமல், பொதுவாக இந்தி  பேசுபவர்களுடனும் பல ஆண்டுகளாகப் பழகி வருகிறேன். அவர்களின் கொள்கை ஒன்றே ஒன்றுதான்.  'அண்டார்க்டிகாவுக்கே குடிபெயர்ந்தாலும், நான் இந்தி  மட்டுமேதான் பேசுவேன்; அந்த ஊரின் ...

ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்?

Posted: 18 Jul 2017 11:16 PM PDT

இந்தியா சுதந்திரம் அடைந்தபின் நடந்த முக்கிய வரிச் சீரமைப்பு நடவடிக்கைதான் இந்த ஜி.எஸ்.டி. இந்த வரி பற்றி பலரும் பலவிதமான விமர்சனங்களை முன் வைத்தாலும், அது இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டது.   ஜிஎஸ்.டி நடைமுறைக்கு வருவதற்குமுன், எல்லாத் தரப்பினரிடமும் இருந்த முக்கியமான கவலை, பல்வேறு பொருள்களின் விலை உயர்ந்துவிடுமோ என்பதே. குறிப்பாக, தங்கத்தின் விலை உயர்ந்தால், திருமணத்துக்குத் தேவையான தங்க நகைகளை எப்படி வாங்குவது என்பது பற்றி பலரும் கவலைப்பட்டனர். இதனால் ஜூலை 1-ம் தேதிக்கு முன்பே பலரும் வேக ...

என் வங்கி சேமிப்பு 28 ஆயிரம் ரூபாய்! – சாருஹாசன்

Posted: 18 Jul 2017 08:10 PM PDT

- உங்க வழக்கறிஞர் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ் சம்பவம் ஏதாவது இருக்கா? – சாருஹாசன் பேட்டியில் சொன்னது: நிறைய இருக்கு ,என் அனுபவத்தில் ஒரு கேஸ் நடந்தது. கிராமத்தில் ஒருவன் வீட்டுக்கு முன்னால இருந்த மரத்தை இன்னொருவன் நைட்டோ நைட்டா வெட்டிக் கொண்டு போய் விட்டான். ஒருத்தன் வீட்டுக்கு முன்னால இருக்கும் மரத்தை வெட்டிட்டா அது பெரிய அவமானம். அந்த கேஸ் என்கிட்ட வந்தது. வெட்டி எடுத்துப் போனவனை உடைந்துபோன வாளை அங்கேயே போட்டுவிட்டு போய்விட்டான். நான் மரம் அறுத்தவன் சார்பா ஆஜராகி வாதாடினேன். மரத்துக்கு ...

ஒரே நாளில் 108 அதிகாரிகள் மாற்றம்

Posted: 18 Jul 2017 06:58 PM PDT

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ், துார்தர்ஷன், அகில இந்திய வானொலி, பத்திரிகை தகவல் அலுவலகம் உட்பட பல்வேறு அலுவலகங்கள், இயங்கி வருகின்றன. அத்துறையை நிர்வகித்து வந்த, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக, பா.ஜ.,வால் தேர்வு செய்யப்பட்டதால், நேற்று காலை தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு முன், சென்னை, டில்லி, புனே, புதுச்சேரி, ஐதராபாத் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்த, துணை இயக்குனர், உதவி இயக்குனர்கள், 100 பேரை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™