Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு

Posted: 18 Jul 2017 08:55 AM PDT

தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கி ணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட, 40 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் என, தனியார் பள்ளிகளாக, தனி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பள்ளிகளில், மாநிலம் முழுவதும், 5.60 லட்சம் பேர் படிக்கின்றனர்.
பல்வேறு விதிகள்
அரசு பள்ளிகளை பொறுத்த வரை, அரசின் பல்வேறு துறைகள் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது. அதாவது, பள்ளிக்கல்வித் ...

விரைவில் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்! அமைச்சர்கள் பணிச்சுமையால் பிரதமர் முடிவு

Posted: 18 Jul 2017 09:33 AM PDT

வெங்கையா நாயுடு, மனோகர் பரீக்கர் உள்ளிட்டோர், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், அவர்களின் இலாகாக்களை மற்ற அமைச்சர்கள், கூடுதலாக கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மத்திய அமைச்சர்களின் பணிச் சுமை அதிகரிப்பதால், விரைவில், அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்ய, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

ராணுவ அமைச்சராக இருந்த மனோகர் பரீக்கர், கடந்த ஏப்ரலில் நடந்த கோவா சட்டசபைத் தேர்தலுக்கு பின், அம்மாநில முதல்வராக பதவியேற்றார். இதனால், மிக முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ இலாகாவை, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, கூடுதலாக கவனித்து ...

பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி; இரு சபைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு

Posted: 18 Jul 2017 09:35 AM PDT

புதுடில்லி: 'தலித் மக்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், பார்லி., மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாள், அலுவல் முடங்கியது.

பார்லி., மழைக்கால கூட்டத்தொடர், நேற்று முன்தினம் துவங்கியது. இரங்கல் தீர்மானங்களுடன் அன்றைய தினம் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச வேண்டும் என, வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், இரு சபைகளிலும் நேற்று அலுவல்கள் பாதிக்கப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டன.
மாயாவதி ...

ஜி.எஸ்.டி.,யில் ஏமாற்றினால் 5 ஆண்டு சிறையுடன் அபராதம்

Posted: 18 Jul 2017 09:42 AM PDT

புதுடில்லி: 'ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில், முறையான, 'இன்வாய்ஸ்' எனப்படும், பில் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் அல்லது வரி ஏய்ப்பு செய்தால், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகள் வரை சிறைஇது குறித்து, இந்திய கம்பெனி செயலர் மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில், வரி ஏய்ப்பு செய்தாலோ; உரிய பில் இல்லாமல் பொருட்களை விற்பனை செய்தாலோ, அதிகபட்சம், ஐந்து ஆண்டுகள் வரை ...

ஜெ., மரணம் குறித்த விசாரணைக்கு தயார் : அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி அறிவிப்பு

Posted: 18 Jul 2017 10:01 AM PDT

சென்னை: 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை கமிஷன் அமைத்தால், சந்திக்க தயாராக உள்ளோம்,'' என, அப்பல்லோ மருத்துவ குழும தலைவர் பிரதாப் ரெட்டி கூறினார்.

சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், தலைவலி, நினைவாற்றல் குறைவுக்கான சிறப்பு கிளினிக் துவக்க விழா நேற்று நடந்தது.
சிகிச்சையில் கூடுதல் கவனம்இதில் பங்கேற்ற, பிரதாப் ரெட்டி அளித்த பேட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. முக்கியமான நபர் என்பதாலும், மக்கள் நேசிக்கும் நபராக ...

பெங்களூரு சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் அபாயம்!

Posted: 18 Jul 2017 10:01 AM PDT

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அ.தி.மு.க., சசிகலாவும், அவரது உறவினர் இளவரசியும், கைதிகளுக்கான சீருடையை அணியாமல் விதிமுறைகளை மீறி வழக்கமான உடைகளை அணிந்திருந்த வீடியோ காட்சிகள் வெளியானதால் கர்நாடகா காங்., அரசுக்கு தர்சங்கடமான நிலை உருவாகி உள்ளது.

இதையடுத்து சிறையில் சசிகலாவுக்கு அனைத்து சிறப்பு வசதிகளும் ரத்து செய்யப்பட்டு வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கிடையில் உண்மையை வெளிப்படுத்திய டி.ஐ.ஜி., ரூபா, இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து கைதிகள் போராட்டம் நடத்தி வருவதால் சிறைக்குள் கலவரம் வெடிக்கும் அபாயம் ...

கருணாநிதிக்கு அ.தி.மு.க., ஆதரவு

Posted: 18 Jul 2017 10:27 AM PDT

சென்னை: சட்டசபை கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்பதில் இருந்து விலக்கு கோரி, தி.மு.க., கொண்டு வந்த தீர்மானம், அ.தி.மு.க., ஆதரவுடன் நிறைவேறியது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர், ஜூன், 14ல் துவங்கியது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடல்நலக் குறைவால், கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. சட்டசபைக்கு ஒரு நாள் கூட வரவில்லை. நேற்று, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், சட்டசபையில், ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.
சட்டசபை விதி, 20 / 1ன் கீழ்,
அதில், 'முன்னாள் முதல்வரும், எம்.எல்.ஏ.,வுமான கருணாநிதி, உடல்நலம் குன்றி உள்ளார். அவர் பூரண குணமடையும் ...

'நடுவர் மன்ற தீர்ப்பு கடவுளுக்கு உத்தரவிடுவது போல் உள்ளது'

Posted: 18 Jul 2017 10:33 AM PDT

சுப்ரீம் கோர்ட்டில், காவிரி நீர் வழக்கில், கர்நாடகா தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர், பாலி நாரிமன், ''காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயத்தின் உத்தரவு, உரிய அளவு மழை பெய்யச் சொல்லி, கடவுளுக்கு உத்தரவிடுவது போல் உள்ளது,'' என்றார்.

உரிய அளவிலான காவிரி நீர்கர்நாடகாவில், காங்., கட்சியை சேர்ந்த சித்தராமையா முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில் உற்பத்தியாகும் காவிரி நீரை, தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு, ஆண்டுதோறும், குறிப்பிட்ட அளவு பகிர்ந்தளிக்க வேண்டும் என, காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், நடுவர் மன்ற உத்தரவை, ...

சூடுபிடித்தது துணை ஜனாதிபதி தேர்தல்; வெங்கையா, கோபாலகிருஷ்ண காந்தி வேட்பு மனு தாக்கல்

Posted: 18 Jul 2017 11:57 AM PDT

புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், தே.ஜ., கூட்டணி வேட்பாளர் வெங்கையா நாயுடு, எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி உள்ளிட்டோர், நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
துணை ஜனாதிபதியாக உள்ள, ஹமீது அன்சாரியின் பதவிக் காலம், ஆக., 10ல் நிறைவடைவதை அடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஆக., 5ல் நடக்கிறது. இதில், மத்தியில் ஆளும், தே.ஜ., கூட்டணியின் சார்பில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, ராஜ்யசபா எம்.பி., வெங்கையா நாயுடு, டில்லியில் நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ...

சச்சின் அணியின் தமிழ் தலைவாஸ் கபடி அணிக்கு தூதர் ஆனார் கமல்

Posted: 18 Jul 2017 12:26 PM PDT

சென்னை: புரோ கபடி லீக்கில் சச்சின் அணியான தமிழ் தலைவாஸின் விளம்பர தூதராக நடிகர் கமல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கோட்டை தாண்டி புகழை சூடுங்கள்:
புரோ கபடி தொடரில் பங்கேற்கும் சச்சின் அணியான ‛தமிழ் தலைவாஸ்' அணியின் விளம்பர தூதராக நடிகர் கமலஹாசன் அறிவிக்கப்பட்டார். '' முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் பங்கு இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்'' எனத் தெரிவித்துள்ள நடிகர் கமல், கோட்டை தாண்டி புகழை சூடுங்கள் என வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் தலைவாஸ்:
ஐ.பி.எல்., ...

இன்று(ஜூலை-19) பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு?

Posted: 18 Jul 2017 01:14 PM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.67 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.58.04 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை- 19) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் மாற்றமில்லாமல். பெட்ரோல் லிட்டருக்கு ரூ.66.67 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ.58.04 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை-19) காலை 6 மணி முதல் அமலுக்கு ...

இன்று ஓட்டெடுப்பு: நாகாலாந்தில் லய்சீட்சு அரசு தப்புமா?

Posted: 18 Jul 2017 01:49 PM PDT

கோஹிமா: நாகலாந்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பு உத்தரவுக்கு எதிரான மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததையடுத்து, இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.நாகலாந்தில் முதல்வர் லெய்சீட்சுவுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஜெலியாங், தமக்கு பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி, ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னர் ஆச்சார்யாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். இதனால் நாகாலாந்து அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் லெய்சீட்சு வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி ...

ஜாகீர் நாயக் பாஸ்போர்ட் முடக்கம்

Posted: 18 Jul 2017 02:47 PM PDT

புதுடில்லி: விசாரணைக்கு நேரில் ஆஜராகததால் மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.

மத போதகரான ஜாகீர் நாயக் மீது பயங்ரவாதத்தை பரப்புவது, நிதிமோசடி குற்றச்சாட்டு ஆகியவை உள்ளன. வங்கதேசத்தில் இவரது பரப்புரையை கேட்டு 5 பேர் தீவிரவாத செயலில் ஈடுபட்டதாக இவர் மீது விசாரணை நடத்த உத்தரவிடபட்டிருந்தது.
இந்நிலையில் ஜாகீர் நாயக் கடந்தாண்டு ஜுலை 1ம் தேதி தப்பியோடினார். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பதை அரசு வெளியிடாமல் இருந்து வருகிறது. அவர் அடிக்கடி வேறு வேறு நாடுகளுக்கு பயணித்து வருவதாக மட்டும் தகவல் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™