Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட

Posted: 18 Jul 2017 10:19 AM PDT

இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்யும் முறை இப்போது வந்துள்ளது. அதன் மூலம் நாம் எளிமையாக பதிவு செய்வதுடன் ஆன்லைனிலும் பணத்தினை செலுத்திவிடலாம். ஆன்லைனில் செலுத்துவதால் சிலிண்டர் டெலிவரி செய்பவருக்கு அதிக பணம் கொடுக்கவேண்டியதில்லை. மேலும் நாம் ஆன்லைனில் பணம் செலுத்துவதால் வரும் கட்டணத்தில் நமக்கு ஐந்து ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.இனி ஆன்லைனில் எரிவாயு பதிவு செய்வதனையும் -ஆன்லைனில் பணம் கட்டுவதனையும் இப்போது காணலாம். முதலில் நீங்கள் எந்த நிறுவனத்தில் இருந்து சிலிண்டர் வாங்குகின்றீர்களோ ...

பாரதி

Posted: 18 Jul 2017 09:50 AM PDT

பார்ப்பனம் துறந்ததால்
பாரில் பணம் துறந்தவன்
துறத்தலே பார்ப்பனம் ஆவதால்
பார்ப்பனன் ஆனவன்
பார்ப்பனன் ஆனதால்
பலர் பார்வையில் மறைந்தவன்
சிந்தையில் தன் பார்வையை வைத்து
நம் பார்வையை மறந்தவன்
மறந்தது நம் பார்வையையேயாயினும்
சிந்தித்தது நம் நல்வாழ்வையே.

சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!

Posted: 18 Jul 2017 09:39 AM PDT

– டேய் விஜய் சனிக்கிழமை எங்க வீட்ல பார்ட்டி இருக்கு அதுக்கு வருவியா..? – வரேண்டா…! – சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..! – ஏண்டா என் கையால தட்டுனா என்ன..? – டேய் நீ என்ன வெறுங்கையோடவா வரபோற..? "..!!! – =================================================== – ‎நடப்பதும், நடக்காததும்" நிச்சயமா நம்ம கையில் இல்லை! – ஆமாம், கையில எங்க இருக்கு? 'கால்'லதானே இருக்கு!!! – ==================================================== – வந்தவர்: எதுக்கு என் பையனைக் கண்டிச்சீங்க?? – ஆசிரியர்: ...

‘ஸ்லீவ்லெஸ்’ சட்டையுடன் பெண் எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 18 Jul 2017 09:33 AM PDT

- வாஷிங்டன்: அமெரிக்க பார்லிமென்டில், சபாநாயகர் அறையில், முழுக்கை சட்டையுடன் மட்டுமே, பெண்கள் வர வேண்டும் என்ற விதியை எதிர்த்து, 30க்கும் மேற்பட்ட பெண், எம்.பி.,க்கள், 'ஸ்லீவ்லெஸ்' எனப்படும், கையில்லாத சட்டை அணிந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க பார்லியில், சபாநாயகர் அறைக்குள், உறுப்பினர்களும், நிருபர்களும் நுழைய, ஆடைக் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்கள், முழுக்கை சட்டையுடன் மட்டுமே வரலாம்; ஆண்கள், சட்டை, டை அணிந்து வர வேண்டும். இந்த விதியை மீறும் வகையில்,கையில்லாத, ...

நான் ரசித்த குறும்படம் – பாஸ்ட்டென்ஸ்

Posted: 18 Jul 2017 09:29 AM PDT


-
என்ன அருமையான கதை, வசனங்கள் !!
இந்த படத்தை நீங்கள் பார்க்கும்போது மனதினுள்
ஒரு பூ பூப்பதை கண்டிப்பாக தவிர்க்க முடியாது
எனலாம்.

விண்ணை தாண்டி வருவாயா படத்தில் ஜெஸ்ஸி ஜெஸ்ஸி
என்று சிம்பு சுற்றி திரிந்தது போல ஒரு வயதான சிம்பு !!

ஜி.யு.போப் 10

Posted: 18 Jul 2017 09:20 AM PDT

- ஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழுக்கு அருந்தொண்டாற்றிய ஜார்ஜ் உக்லோ போப் (George Uglow Pope) பிறந்த தினம் (ஏப்ரல் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: – ———— கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் (1820) பிறந்தவர். தந்தை வணிகர். இவர் குழந்தையாக இருந்தபோது குடும்பம் இங்கிலாந்துக்கு குடியேறியது. ஹாக்ஸ்டன் கல்லூரியில் பயின்ற பிறகு, சமயப் பணிக்காக 1839-ல் தமிழகம் வந்தார். கப்பலில் பயணம் செய்த 8 மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார். – தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்தில் ...

விண்வெளியில் ஒருவர் இறந்து போனால் அவரது உடல் என்னவாகும்?

Posted: 18 Jul 2017 09:19 AM PDT

விண்வெளி செல்லும் வீரர்களின் பெரும்பாலான இறப்பு ராக்கெட் ஏவும் போதும், விண்கலம் தரை இறங்கும் போதும் அல்லது இதற்கு இடைப்பட்ட பயணத்தில் விபத்து ஏற்பட்டு நிகழ்ந்துள்ளது. இதை தவிர்த்து ஒருவரது மரணம் விண்வெளியில் இருக்கும் போது நிகழ்ந்தால் நான்கு முக்கிய சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 1) இறந்தவரின் சடலத்தை விண்கல லாக்கரில் வைக்க இயலாது. 2) விண்வெளியில் கல்லறை ஒன்றை வடிவமைப்பது அசாத்திய திட்டமாகும். 3) இறந்தவரை பூமிக்கு கொண்டு வருவதற்குள் அவரது உடல் பாதிக்கும் மேல் அழுகிவிடும். 4) ...

ஏர்செல் அறிவித்துள்ள சலுகைகள்

Posted: 18 Jul 2017 08:52 AM PDT

கடந்த வாரம் ஏர்செல் புதிய சலுகையின் படி வாடிக்கையாளர்களுக்கு ரூ.348 விலையில் 84 ஜிபி டேட்டா (தினமும் 1 ஜிபி), 84 நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தர்போது தனது அடுத்த சலுகை குறித்த அறிவிப்பை ஏர்செல் வெளியிட்டுள்ளது. அந்தவகையில் ஏர்செல் நிறுவனம் ரூ.333 விலையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 30 ஜிபி 3ஜி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா பயன்பாட்டிற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. – ——————————- தமிழ் ...

கர்நாடக டிஜிபி மற்றும் சிறைத்துறை ஐஜிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Posted: 18 Jul 2017 08:50 AM PDT

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து
32 கைதிகள் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் வேறு
சிறைகளுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் ஒரே இரவில் 32 கைதிகளை பெங்களூரு மத்திய
சிறையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டபோது,
கடுமையாக தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த செய்தியையொட்டி கர்நாடக டிஜிபி மற்றும்
சிறைத்துறை ஐஜி ஆகியோருக்கு தேசிய மனித
உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
தினத்தந்தி

துணை ஜனாதிபதி தேர்தல் வெங்கையா வேட்பு மனு தாக்கல், அதிமுக எம்.பி.க்கள் உடன் இருந்தனர்

Posted: 18 Jul 2017 08:40 AM PDT

துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவி காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதியுடன் முடிவடைவதால் அவருக்கு பதிலாக புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க ஆகஸ்டு 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் கூட்டணியின் சார்பில் மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார். பாரதீய ஜனதா கூட்டணியின் சார்பில், துணை ஜனாதிபதி பதவிக்கு வெங்கையா நாயுடு போட்டியிடுகிறார். வெங்கையா நாயுடு இன்று தேர்தல் ...

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வது எப்படி?

Posted: 18 Jul 2017 07:33 AM PDT

அனைவருக்கும் வணக்கம்,
வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வது எப்படி?
என் மொத்த ஆண்டு வருமானம் 300000 மட்டுமே...
எனது நிறுவனத்தில் எனக்கு Form60 கொடுத்துள்ளனார்...
நான் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யலாமா?
எப்படி?
உதவுங்கள் நண்பர்களே...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™