Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பார்லி.,யில் பா.ஜ.,வுக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சிகள்... தயார்!

Posted: 13 Jul 2017 09:53 AM PDT

புதுடில்லி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களில் வேட்பாளரை நிறுத்தி, மத்தியில் ஆளும்,பா.ஜ., அரசுக்கு கடும் போட்டி கொடுத்து உள்ள, 18 எதிர்க்கட்சிகள், வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில், ஐந்து முக்கிய பிரச்னை களை முன்வைத்து, அரசுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளன.

ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் களில், வேட்பாளர்களை களமிறக்கி, மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான, பா.ஜ., அரசுக்கு சவால் விடுக்க, காங்கிரஸ் உள்ளிட்ட, 18 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்க சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற, 18 ...

காந்தியின் பேரனை நிறுத்தியது ஏன்? பின்னணியில் காங்கிரசின் பலே ஆட்டம்

Posted: 13 Jul 2017 10:09 AM PDT

வெற்றி வாய்ப்பு இல்லை என, நன்றாக தெரிந்தும், மஹாத்மா காந்தியின் பேரனை, துணை ஜனாதிபதி தேர்தலில், வேட்பாளராக நிறுத்த, காங்கிரஸ் முன்வந்ததன் பின்னணி குறித்த தகவல், தற்போது தெரிய வந்துள்ளது.

மஹாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் கவர்னருமான, கோபாலகிருஷ்ண காந்தி, துணை ஜனாதிபதி தேர்தலில், காங்., தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் போட்டியிட உள்ளார். பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது, ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.
முதல் பரிந்துரை
ஜனாதிபதி வேட்பாளர் தேர்வின் போதே, எதிர்க் கட்சிகள் மத்தியில் பலமாக ...

அ.தி.மு.க., சசிகலா லஞ்சம் கொடுத்தாரா என விசாரிக்க...உத்தரவு----!

Posted: 13 Jul 2017 10:36 AM PDT

பெங்களூரு:பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, சிறைத்துறை, டி.ஜி.பி., மீது, சிறைத்துறை, டி.ஐ.ஜி., குற்றம் சாட்டியுள்ளார்; இது குறித்து, உயர் மட்ட விசாரணைக்கு, கர்நாடக முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகா சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், இம்மாதம், 10ல் ஆய்வு செய்தார். ஆய்வில் பல முறைகேடுகளை கண்டுபிடித் தார். இது குறித்து, கர்நாடகா சிறைத்துறை, டி.ஜி.பி., சத்ய நாராயண ராவுக்கு, 12ம் தேதி, அறிக்கை ...

செம்மொழி தமிழாய்வு நிறுவன முத்திரை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி

Posted: 13 Jul 2017 10:40 AM PDT

சென்னை:''செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன முத்திரையில், தமிழ் எழுத்துக்கள் இடம் பெற, முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா,'' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்த பிறகு நடந்த விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: சென்னையில் உள்ள, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலக முத்திரை யில், இந்தி எழுத்து மட்டுமே உள்ளது. செம் மொழி தமிழாய்வு நிறுவனத்திலேயே, தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை என்பது, அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில், தமிழுக்கு இப்படியொரு நிலை வேதனையானது. இந்நிறுவனத்தின் ...

தாது மணல் விவகாரத்தில் கோர்ட் தீர்ப்புக்கு பின் முடிவு

Posted: 13 Jul 2017 10:42 AM PDT

சென்னை:''தாது மணல் வழக்கில், நீதிமன்ற தீர்ப்புக்கு பின், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், 81க்கும் மேற்பட்ட,தாது மணல் குவாரிகளில், தொடர்ந்து முறைகேடுகள் நடைபெறுவதாக, செய்திகள் வருகின்றன. இதுகுறித்து, முழுமை யாக விசாரணை நடத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.அந்த குழு, தன் அறிக்கையை, 2013 செப்., 17ல், முதல்வராக இருந்த ஜெ.,விடம் ...

லாலு மகன் தேஜஸ்வி பதவி பறிப்பு?

Posted: 13 Jul 2017 10:47 AM PDT

பாட்னா: ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளதால், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர், லாலுவின் மகனும், துணை முதல்வருமான, தேஜஸ்வியை பதவி விலகும்படி, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தி வருகிறார். தானாகவே விலகாவிட்டால், பதவியை பறிக்க, நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊழல் வழக்கு
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமை யிலான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அரசு அமைந்துள்ளது. கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான, லாலு பிரசாத் யாதவ் மீது, சி.பி.ஐ., ஊழல் வழக்கை ...

சிறப்பு வசதிகள் கூடாது; உ.பி., முதல்வர் உத்தரவு

Posted: 13 Jul 2017 10:53 AM PDT

லக்னோ: உ.பி., முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, யோகி ஆதித்யநாத், தான் ஆய்வு செய்யச் செல்லும் இடங்களில், 'ஏசி, சோபா' போன்ற வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டாமென, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. ஜம்மு - காஷ்மீரில் பயங்கர வாதி களுடனான சண்டையில் உயிரிழந்த வீரர்க ளின் வீடுகளுக்கு, முதல்வர் யோகி ஆதித்ய நாத் நேரில் சென்று ஆறுதல் கூறினார். முதல்வரின்வருகையை யொட்டி, அந்த வீடுகளில், 'ஏசி, சோபா' உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன.அதேபோல், ஒரு கிராமத்துக்கு அவர் பயணம் ...

பூரண மதுவிலக்கு எப்போது

Posted: 13 Jul 2017 10:54 AM PDT

சென்னை:'தமிழகத்தில், பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், அண்ணனுாரில், குடி யிருப்பு பகுதிகளில் திறக்கப்பட்ட மதுகடையை அகற்ற கோரிய வழக்கு,நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த பகுதியில் நிலவும் சூழ்நிலையை கருதி நடவடிக்கை எடுக்கவும், அதுகுறித்து அறிக்கை அளிக்கவும், அரசுக்கு, டிவிஷன் பெஞ்ச் உத்தர விட்டது. அந்த நேரத்தில், மது கடைகள் எதிர்ப்பு போராட்டத் தில், நாம் தமிழர் கட்சியினர் மீது தொடரப்பட்ட ...

விதி மீறல் கட்டடங்கள் வரன்முறை ஆன்லைன் திட்டம் துவக்குவதில் சிக்கல்

Posted: 13 Jul 2017 10:58 AM PDT

விதி மீறல் கட்டடங்களை வரன்முறை செய்வதற்கான தகுதி வரம்பை வெளியிடாமல், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மறைப்பதால், ஆன்லைன் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், 2007 ஜூலைக்கு முன் கட்டப்பட்ட விதி மீறல் கட்டடங்களை, வரன்முறை செய்வதற்கான அரசாணை ஜூன், 22ல், வெளியிடப்பட்டது.
இணையதளம்
இதன்படி, கட்டட உரிமையாளர்கள், ஆறு மாதங்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து, வரன்முறை செய்து கொள்ளலாம். இதற்காக, பிரத்யேக இணையதளம் உருவாக்கும்படி, வீட்டு வசதிதுறை செயலர், தர்மேந்திர பிரதாப் யாதவ் ...

'லேடீஸ் ஸ்பெஷல்' ரயில் நிலையம் மும்பையில் அசத்தல் திட்டம்

Posted: 13 Jul 2017 12:15 PM PDT

மும்பை, முழுவதும் பெண்களே பணிபுரியும், நாட்டின் முதல், 'லேடீஸ் ஸ்பெஷல்' ரயில்வே ஸ்டேஷன் என்ற பெருமையை, மும்பையில் உள்ள, மாதுங்கா ரயில்வே ஸ்டேஷன் பெற்றுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. மும்பை அருகேயுள்ள மாதுங்கா ரயில்வே ஸ்டேஷனில், ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட அனைத்து பதவிகளிலும், பெரும்பாலும் ஆண் ஊழியர்களே இருந்தனர்.
தற்போது, இந்த ரயில்வே ஸ்டேஷன், மகளிர் சிறப்பு ரயில்வே ஸ்டேஷனாக அறிவிக்கப்பட்டுள்ளது; இதையடுத்து, ஏற்கனவே இருந்த ஆண் ஊழியர்களுக்கு பதில், பெண் ...

கிரண் பேடிக்கு டி.ஐ.ஜி.,ரூபா நன்றி

Posted: 13 Jul 2017 02:00 PM PDT

பெங்களூரு: தனக்கு வாழ்த்து தெரிவித்த கிரண்பேடிக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் டி. .ஜி., ரூபா. பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, சிறைத்துறை, டி.ஜி.பி., மீது, சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டியுள்ளார்; இந்த குற்றச்சாட்டினை வரவேற்று முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எங்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாலும் அங்கும் ரூபாவின் பங்கு தேவைப்படும் என கருத்து தெரிவித்திருந்தார். கிரண்பேடியின் கருத்துக்கு ரூபா ...

தினகரன் அணியினருக்கு திடீர் முக்கியத்துவம்

Posted: 13 Jul 2017 03:24 PM PDT

சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு, சட்டசபையில் பேச தொடர் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

புகழ்ச்சி:
சட்டசபையில், தினகரன் அணியை சேர்ந்த செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள், தனியாக செயல்பட்டு வருகின்றனர். தங்கதமிழ்செல்வன், ஒரு படி மேலே போய் வெளிநடப்பு செய்தார். அந்த அணி எம்.எல்.ஏ.,க்கள் பேசும் போது, சசிகலாவையும், தினகரனையும் வானளாவ புகழ்ந்து பேசுகின்றனர்; முதல்வர் பழனிசாமியை பெரிதாக குறிப்பிடுவதில்லை. இருப்பினும், அந்த அணியினருக்கு, தொடர்ந்து முக்கியத்துவம் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™