Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அ.தி.மு.க., ஆட்டத்தில் அடுத்த மாதம் உச்சகட்டம்! ஜெயிக்க போவது யார்; தினகரனா... பழனிசாமியா?

Posted: 01 Jul 2017 06:05 AM PDT

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை, தங்கள் பக்கம் இழுக்கும் பணியில், முதல்வர் மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அ.தி.மு.க.,வில், தற்போது உச்சகட்ட குழப்பம் நிலவுகிறது. ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. தற்போது, சசிகலா அணியில், முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் அணி என, பிளவு ஏற்பட்டுள்ளது.
அதிர்ச்சி
முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை ஒதுக்கிவிட்டு, கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த, முடிவு செய்து உள்ளனர். இது, தினகரனிடம் அதிர்ச்சியை ...

தி.மு.க., பவள விழாவில் அ.தி.மு.க., மும்மூர்த்திகள்!

Posted: 01 Jul 2017 06:35 AM PDT

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினை, அ.தி.மு.க., கூட்டணி, எம்.எல்.ஏ.,க்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய மும்மூர்த்திகளும், மூன்று முறை சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த மும்மூர்த்திகளும், ஆகஸ்ட்டில் நடக்க உள்ள, 'முரசொலி' நாளிதழ் பவள விழாவில் பங்கேற்று, தி.மு.க., ஆதரவாளர்களாக அணி மாறுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வெற்றி
கடந்த, 2016ல் நடந்த, சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், கருணாஸ் தலைமை யிலான முக்குலத்தோர் புலிப்படை கட்சியும், தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவை கட்சியும், தமிமுன் அன்சாரி தலைமையிலான மனிதநேய ஜன நாயக கட்சியும் ...

பாதுகாப்பான ரயில் பெட்டிகளை தயாரிப்பதில்...இரும்பு 'சப்ளை' செய்ய முடியாமல் 'செயில்' கைவிரிப்பு

Posted: 01 Jul 2017 07:36 AM PDT

புதுடில்லி,விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, பாதுகாப்புடன் கூடிய, ரயில் பெட்டிகளை ரயில்வே தயாரித்து வரும் நிலையில், அதற்கு தேவையான இரும்பை வழங்க முடியாமல், 'செயில்' என்றழைக்கப்படும், மத்திய அரசு நிறுவனமான, 'இந்திய ஸ்டீல் ஆதாரிட்டி லிமிடெட்' திணறி வருகிறது. இதனால், ரயில் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த, மேலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

ரயில் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை, ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதி யாக, பழைய ரயில் பெட்டிகள், தண்டவாளங் கள் மாற்றப்படுகின்றன.தற்போது பயன்பாட் டில் உள்ள, 40 ஆயிரம் ...

தமிழக தலைவர்களுடன் ஜனாதிபதி வேட்பாளர்கள்...சந்திப்பு...! ஆதரவு தருமாறு அனைவரிடமும் கோரிக்கை

Posted: 01 Jul 2017 08:08 AM PDT

தமிழக, எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க் களை சந்தித்து, ஆதரவு திரட்டுவதற்காக, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களான ராம்நாத் கோவிந்த், மீரா குமார் ஆகியோர், நேற்று சென்னை வந்தனர்.

அ.தி.மு.க.,வின் இரு அணிகளைச் சேர்ந்த, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை, பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், தனித்தனியாக சந்தித்தார். அதே நேரத்தில், காங்., வேட்பாளர் மீரா குமார், அவருக்கு ஆதரவளிக்கும், தி.மு.க., - காங்., மற்றும் முஸ்லிம் லீக் கட்சியினரை, ஒரே இடத்தில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.ஜனாதிபதி தேர்தல், வரும், 17ல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ...

சர்ச்சை வரைபடம் வெளியிட்டு சீனா மீண்டும்... சீண்டல்!

Posted: 01 Jul 2017 09:56 AM PDT

புதுடில்லி:வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, சிக்கிமை ஒட்டிய, இந்தியா - சீனா எல்லைப் பகுதியில், ரோந்துப் பணியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள், சீன எல்லைக்குள், அத்துமீறி நுழைந்ததாக அந்நாட்டு அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தியா மற்றும் அண்டை நாடான பூடானுக்கு சொந்தமான பகுதிகளை, சீன எல்லையில் சேர்த்து, அந்நாட்டு அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில், சிக்கம் ஜனநாயக முன்னணியை சேர்ந்த பவன் குமார் சாம்லிங் முதல்வராக உள்ளார். இந்த மாநிலம், அண்டை நாடுகளான, சீனா மற்றும் பூடானுடன் எல்லையை ...

பேனர், போஸ்டர் கலாசாரம் கட்சியினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

Posted: 01 Jul 2017 10:29 AM PDT

சென்னை:'இனியும் கட்சியினர் யாரேனும், பேனர் கலாசாரத்தை கடைப்பிடித்தால், அவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தி.மு.க.,வினருக்கு, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கட்சியினருக்கு எழுதி உள்ள கடிதத்தில்,அவர் கூறியுள்ளதாவது:
ஆடம்பரம், அலங்காரங்களை தவிர்த்து, எளிய முறையில் மக்களை சந்தித்து, அவர்களின் , கோரிக்கைகளை நிறைவேற்ற துணை நிற்பதே நமக்குள்ள முக்கிய பணி.மக்களுக்கு மனதளவில் எரிச்சலுாட்டும் செயல்களை தவிர்க்க வேண்டியது, பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களின் கடமை.
காலில் ...

தமிழகத்தில் உள்ள 29 சோதனைச் சாவடிகள்... மூடல்

Posted: 01 Jul 2017 11:25 AM PDT

ஜி.எஸ்.டி., என, அழைக்கப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்ததால், தமிழக எல்லைகளில் செயல்பட்ட, வணிக வரித்துறையின், 29 சோதனைச் சாவடிகளும் மூடப்பட்டன.

சரக்கு ஏற்றி வந்த வாகனங்கள், 'செக் போஸ்ட்' களில்வரிசை கட்டி நிற்காமல், இலக்கை நோக்கி விரைவாக செல்ல முடிந்ததால்,வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். அதேநேரத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில்,தேசிய நெடுஞ் சாலைகள் ஆணையத்தால் நடத்தப்படும், 'டோல்கேட்'களான,சுங்கச் சாவடிகளும், மாநில எல்லைகளில், வட்டார போக்குவரத்து அலு வலகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளும், வழக்கம் போல இயங்குகின்றன.நாடு ...

மனசாட்சிப்படி ஓட்டு போடுங்க: மீரா குமார்

Posted: 01 Jul 2017 11:29 AM PDT

சென்னை:''ஜனாதிபதி தேர்தலில், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மனசாட்சிப்படி, ஓட்டளிக்க வேண்டும்,'' என, காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமார் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில், காங்கிரஸ் சார்பில், மீரா குமார் நிறுத்தப்பட்டுஉள்ளார். அவருக்கு, தமிழகத்தில், தி.மு.க., முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அக்கட்சி எம்.பி.,க் கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து, ஆதரவு கேட்பதற்காக, மீராகுமார், சென்னை வந்தார். ராஜாஅண்ணா மலை புரத்தில் உள்ள, லீலா பேலஸ் ஓட்டலில் தங்கினார்.ஓட்டலில், காங்கிரஸ், தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ...

ஐ.எஸ்.,சில் சேர முயன்று மனம் மாறிய 350 இளைஞர்கள்

Posted: 01 Jul 2017 11:40 AM PDT

கொச்சி: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர முயன்ற, 350 இளைஞர்களை, 'ஆப்ரேஷன் பீஜியன்' என்னும் திட்டத்தின் கீழ், உளவுத் துறை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கேரள மாநிலத்தில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது சாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் இருந்து, ஐ.எஸ்., பயங்கர வாத அமைப்பில் சேர்வதற்காக, சிரியா செல்லும் முஸ்லிம் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக, மாநில உளவுத் துறையும், மத்திய உளவு அமைப்பும் சேர்ந்து, 'ஆப்ரேஷன் பீஜியன்' என்ற பெயரில் ஒரு குழுவை அமைத்தன.
பயங்கரவாத ...

பெட்ரோல்,டீசல் விலை இன்று(ஜூலை 2) எவ்வளவு?

Posted: 01 Jul 2017 12:33 PM PDT

புதுடில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.44 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.17 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை- 2) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 2காசுகள் குறைத்து ரூ.65.44காசுகளும், டீசல் விலை நேற்றைய விலையை விட 4 காசுகள் உயர்ந்து ரூ.56.17 காசுகள் என விலை நிர்ணயித்துள்ளன. ...

கறுப்பு பணம் பதுக்கல் பிரதமர் மோடி எச்சரிக்கை

Posted: 01 Jul 2017 01:29 PM PDT

புதுடில்லி:''கறுப்பு பணத்தை பதுக்க, உதவுபவர் களுக்குஎதிராக கடும் நடவடிக்கை எடுக்கப் படும்,'' என,பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

புதுடில்லியில், கணக்கு தணிக்கையாளர்கள் அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:நாடு முழுவதும் கறுப்பு பணத்தை பதுக்குவதற்காக உருவாக்கப்பட்ட, 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.கறுப்பு பணத்தை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு உதவி செய்பவர்கள் மீதும் நடவடிக்கை பாயும். நாட்டின் ...

ஒரு சவரன் தங்கம் ரூ.440 கூடுதல் செலவு

Posted: 01 Jul 2017 01:36 PM PDT

ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்ததால், ஒரு சவரன் தங்கத்துக்கு, கூடுதலாக, 440 ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், தங்க ஆபரணங்கள் மீது, ஒரு சதவீதம், 'வாட்' வரி இருந்தது. நாடு முழுவதும், ஜி.எஸ்.டி., வரி அமலுக்கு வந்துள்ளதால், தங்கம் மீது, 3 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தங்க நகைகள் வாங்க, மக்கள், கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:ஒரு கிராம் தங்கத்துக்கு, ஒரு சதவீதம், 'வாட்' வரி இருந்த போது, 27 ரூபாய் வரி செலுத்தப்பட்டது. ...

காங்கிரஸ் திட்டங்களுக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டுது பா.ஜ.,

Posted: 01 Jul 2017 02:35 PM PDT

'காங்கிரஸ் திட்டங்களை எல்லாம், பா.ஜ., கொண்டு வந்தது போல, 'ஸ்டிக்கர்' ஒட்டி விளம்பரம் தேடுகின்றனர்,'' என, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறினார்.
அவரது பேட்டி:இந்த ஆட்சி வேடிக்கையாகவும், காமெடியாகவும் தான் எல்லாராலும் பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் நிலவரங்களை பார்த்து, வெளிநாடுகளில் வாழ்பவர்கள் கூட கிண்டல் செய்கின்றனர். ஜி.எஸ்.டி., வரியை, பா.ஜ., கொண்டு வந்தது போல, மோடி விளம்பரம் தேடுகிறார்.காங்கிரஸ் ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது. 18 சதவீதத்துக்கு மேல் வரி விதித்தால், மிகப்பெரிய ஆபத்தாகி விடும் என, ராகுல் ஏற்கனவே ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™