Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மோடியும் டிரம்பும் அருகருகே

Posted: 08 Jul 2017 04:23 PM PDT

மோடியும் டிரம்பும் அருகருகே ஜி20 மாநாட்டில் ஜப்பான், கனடா, இத்தாலி, தென்கொரியா உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜி20 அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்றனர். முதல்நாளில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் தனியாக சந்தித்துப் பேசினர். அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் ...

இதற்கொரு கவிதை தாருங்களேன் --{படமும் -கவிதையும் தொடர்}

Posted: 08 Jul 2017 04:00 PM PDT

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}ரமணியன்

படம் முகநூல் நன்றி

காதலிக்கு ஒரு கடிதம்

Posted: 08 Jul 2017 01:51 PM PDT

அன்புள்ள காதலியே எப்படி இருக்கிறாய் – நீ எப்படி இருக்கிறாய்!! காதல் என்பது சேர்ந்து வாழ்தலில் மட்டும் இல்லை – பிரிந்து போயினும் இறுதி வரை நினைப்பதே என்றவளே, இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா? இளமைக் காலத்து தடுமாற்றங்களில்   இந்த காதலும் ஒன்று என்பது பெற்றோர் வாதம் – ஆயினும் இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை மனதில் ஆறாத வடுவை உண்டாக்கி விடுகிறதே!! மறக்க முயற்சித்தேன் நானும் மனைவி வந்தவுடன் குழந்தை பிறந்தவுடன், ஆனாலும் ஒரு ஆச்சரியம் அது மட்டும் முடியவே இல்லை!! உன் ...

அறிமுகம் இரா . கிருஷ்ணன்

Posted: 08 Jul 2017 01:33 PM PDT

பெயர்: இரா . கிருஷ்ணன்
சொந்த ஊர்:சிதம்பரம்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:நண்பர் வழி
பொழுதுபோக்கு:கிரிக்கெட்
தொழில்:இணை பேராசிரியர் (கணினி துறை )
மேலும் என்னைப் பற்றி: என்னைப்பற்றி பல நினைத்து அவை இல்லை என்றறிந்து , என்னை தேடுபவன் .

வாழ்த்தலாம் வாங்க ayyasami ram அவர்களை .

Posted: 08 Jul 2017 12:03 PM PDT

வாழ்த்தலாம் வாங்க ayyasami ram அவர்களை .

30000 பதிவுகள்-ஒவ்வொன்றும் ஒரு விதம்
தேடிப்பிடித்தே  பதிவிடும் தேனீயோ நீர்?

வாழ்த்துகள் ராம் அவர்களே.!    ரமணியன்

ஆண்மை எது ?

Posted: 08 Jul 2017 10:54 AM PDT

மரமே அறம், அரமே மறம்.
இது புது வார்தை விளையாட்டா
இல்லை பழைய வாழ்கை விளையாட்டு
மறமும் அன்பின் துணை என்றாரே அவர்
அரம் கொண்டு மரம் அறுப்பது அறமா?
மரம் அறுத்து அன்பாய் மானுடம் வளர்க்கிறோமோ!
கரத்தில் அரம் கொண்டு இயற்கை நீட்டும் அன்புக்கரத்தை வெட்டுகிறோம் .
கரம் மட்டும் கொண்டு வாழத்துணிந்தால்
மரமே அறம், அரமே மறம்.

‘யங் மங் சங்’கில் சண்டைப் பயிற்சியாளராக நடிக்கும் பிரபுதேவா

Posted: 08 Jul 2017 07:49 AM PDT

- பிரபுதேவா நாயகனாக நடிக்கும் படம் எங் மங் சங். கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மேலும், தங்கர்பச்சான், சித்ரா லட்சுமணன், கே.ராஜன், ஆர்.ஜே. பாலாஜி, பாகுபலி பிரபாகர், கும்கி அஸ்வின், நாகேந்திர பிரசாத், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்க உள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.எஸ்.அர்ஜுன். நடன இயக்குநரான பிரபுதேவா முதன்முறையாக இப்படத்தில் சண்டைப் பயிற்சியாளராக நடிக்கிறார்   தமிழ்முரசு

‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

Posted: 08 Jul 2017 07:39 AM PDT

- அதர்வா, ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணீதா ஆகியோர் நடிக்கும் படம் 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்'. அண்மையில் வெளியான இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளும் பாடல்களும் ரசிகர்கள் இடையே வரவேற்புப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தைத் தணிக்கைக் குழுவினருக்குத் திரையிட்டுக் காண்பித்திருக்கிறது படக் குழு. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், 'யு' சான்றிதழ் வழங்கியதுடன், படம் நன்றாக இருப்பதாகப் பாராட்டியுள்ளனராம். இதையடுத்து இப்படம் வரும் 14ஆம் தேதியன்று வெளியீடு காணும் என அதிகாரபூர்வமாக ...

‘உறுதிகொள்’ – திரைப்படம்

Posted: 08 Jul 2017 07:34 AM PDT

- பள்ளிப் பருவம் என்பது நல்ல கல்வியறிவைப் பெறுவதற்குத்தான் என்ற நல்ல கருத்தைச் சொல்ல வரும் புதிய படம் 'உறுதிகொள்'. இந்தப் பருவத்தில் காதல் என்பது தேவையற்றது, தவறானது என் பதையும் இப்படம் விவரிக்குமாம். ஏபிகே பிலிம்ஸ், சிநேகம் பிலிம்ஸ் ஆகிய இரு பட நிறுவ னங்களும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் 'கோலி சோடா'வில் ரசிகர்களின் மனம் கவர்ந்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மேகனா நடிக்கிறார். மேலும் காளி வெங்கட், தென்ன வன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் முக்கிய ...

naming

Posted: 08 Jul 2017 07:24 AM PDT

மகனுக்கு பெயர், நோ,ய,இ அல்லது பூ என்ற ஆரம்பிக்கும் பெயர்களை கொடுக்கவும் .nanri

சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை நினைவுநாளான 21-ந்தேதி திறக்க ஏற்பாடு

Posted: 08 Jul 2017 03:58 AM PDT

- கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந் தேதி சட்டசபையில் 110-விதியின் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது, 'சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வழங்கப்பட்ட இடத்தில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும்' என்றார். அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கியது. தற்போது அந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சிவாஜி கணேசனின் 16-ம் ஆண்டு நினைவுதினம் வருகிற 21-ந் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. எனவே அன்றைய தினம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை ...

பள்ளிப்படிப்பை முடித்தார் மலாலா யூசுப்சாய்,

Posted: 08 Jul 2017 03:56 AM PDT

லண்டன்: பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய். இவர் மாணவியாக இருக்கும்போதே பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். பெண் கல்வி குறித்தும் குரல் கொடுத்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள் அவர்மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் லண்டன் சென்று சிகிச்சை பெற்றார். அவரது உடல்நிலை சீராகி, மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும், தீவிரவாதத்தை எதிர்த்து இன்னும் உறுதியுடன் ...

முதன் முறையாக விண்ணில் பாய்ந்த கானா செயற்கைகோள்

Posted: 08 Jul 2017 03:48 AM PDT

- அக்ரா: அட்லாண்டின் கடலில் உள்ள மேற்கு ஆப்பிரிக்க தீவு நாடு கானா. இந்த நாடு முதன் முறையாக செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியுள்ளது. அதன் பெயர் கானாசாட்-1. இதை கொபோரிடுயாவில் உள்ள சர்வதேச நாடுகள் பல்கலைக் கழக மாணவர்கள் தயாரித்துள்ளனர். இது சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பப்பட்டது. விண்ணில் பாய்ந்து நிலை நிறுத்தப்பட்டவுடன் அங்கு கூடியிருந்த என்ஜினீயர்கள், ஊழியர்கள் என 400 பேர் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்த விண்கலம் ரூ.4 கோடி செலவில் ...

சென்னையில் ரூ.6,402 கோடி செலவில் மோனோ ரெயில் திட்டம்: தமிழக அரசு

Posted: 08 Jul 2017 03:42 AM PDT

சென்னை: சட்டசபையில் இன்று அரசின் கொள்கை விளக்க குறிபேடு வெளியிடப்பட்டது. - சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தப்படி உள்ளது. அதை நிவர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. - அதன் ஒரு பகுதியாக மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக பூந்தமல்லி - கத்திப்பாரா மற்றும் போரூர் - வடபழனி இடையே மோனோ ரெயில் திட்டத்துக்கான பாதை அமைக்கப்படும். - இந்த மோனோ ரெயில் திட்டத்துக்கு 6402 கோடி ரூபாய் செலவிடப்படும். அடுத்த 2-வது கட்டமாக வண்டலூர் - வேளச்சேரி ...

சிறந்த புத்தகங்கள்

Posted: 08 Jul 2017 03:41 AM PDT

புத்தகங்கள் என்றாலே சிறந்தவை தான் அவற்றில் மிகச்சிறந்த புத்தகங்கள் தலைப்பை இங்கே மேற்கோள் செய்யவும் அல்லது என்னுடைய மின்னஞ்சல் (skss2945@gmail.com) முகவரிக்கு தகவல் தெரிவிக்கவும். நன்றி...

டிரான்ஸ்பார்மர்ஸ் தி லாஸ்ட் நைட் - திரைப்பட விமரிசனம்

Posted: 08 Jul 2017 03:38 AM PDT

- நடிகர் மார்க் வால்பர்க் நடிகை லாரா ஹாடாக் இயக்குனர் மைக்கெல் பே இசை ஸ்டீவ் ஜாப்லன்ஸ்கி ஓளிப்பதிவு ஜொனாதன் சேலா - கடந்த பாகத்தில் பூமியில் ஆட்டோ போட்ஸ் டிரான்ஸ்பார்மர்களின் கூட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்தி வந்த ஆப்டிமைஸ் பிரைம் தன்னுடைய உலகமான சைபர் டிரானுக்கு திரும்புவதோடு படம் முடிந்தது. இந்த பாகத்தில் தன்னுடைய உலகத்தை அடையும் ஆப்டிமைஸ் பிரைம் அது சின்னாபின்னமாகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறது. - அப்போது சைபர் டிரானில் குயின்டெஷாவின் அறிமுகம் கிடைக்கிறது. ...

நேரம் அறிதல்...!!

Posted: 07 Jul 2017 11:11 PM PDT

உயிரினங்களின் ஒலிகளை வைத்தே மணித்துளிகளைக் கணித்தார்கள் நம் முன்னோர்கள். அவற்றில் அறிவியல் ஞானம் செறிந்திருந்ததென்றே கூறலாம். உதாரணமாக! 1. கரிச்சான் குருவி ஒலி கொடுத்தால் காலை 3 மணி 2. குயில் கூவினால் காலை 4 மணி 3. சேவல் கூவினால் காலை 4.30 மணி 4. காகம் கத்தினால் காலை 5 மணி 5. மீன் கொத்தி சத்தமிட்டால் காலை 6 மணி. இன்று இவைகளையெல்லாம் நாமும் அறிந்திருக்கிறோமா? நம் குழந்தைகளுக்கும் கற்றுத் தந்திருக்கிறோமா? இவைகள் விஞ்ஞான அறிவே பெறாத காலத்தில், அனுபவ ஞான அறிவால் கண்டறிந்த உண்மைகள் ...

நல்லது நடந்தது!

Posted: 07 Jul 2017 08:38 PM PDT

- - சக்தி விகடன் 22.11.16 இதழில், திருமருகல் தலத்தைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அந்தக் கட்டுரையிலேயே, வைப்பூரைச் சேர்ந்த செட்டிப் பெண் நாளும் வழிபட்டதும், மிகவும் புராதனமானதுமான ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஜம்புநாதசுவாமி திருக்கோயில் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததையும் குறிப்பிட்டிருந்தோம்.      நாம் அந்தக் கோயிலுக்குச் சென்றிருந்த போது ராமலிங்கம் என்ற அன்பரைச் சந்தித்தோம். கோயிலைப் புதுப்பிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவரிடம் நாம் பேசியபோது, '`செட்டிப் ...

காதை தொட்டுக் கொண்டே...

Posted: 07 Jul 2017 07:35 PM PDT

நான், மதுரை, ஆர்.சி., நடுநிலைப் பள்ளியில், 1984ல் ஒன்றாம் வகுப்பு சேர்ந்த போது நடந்த நிகழ்வு... தற்போது என் வயது 38. அப்போதெல்லாம், பள்ளியில் சேர்வதற்கு, வலது கையால் இடது காதை தொட வேண்டும். அப்படி தொட்டால் தான், பள்ளியில் சேர்த்து கொள்வர். 'நீ பார்ப்பதற்கு சிறுமியாக இருப்பதால், உன் வலது கையால், இடது காதை தொட சொல்லுவர். அப்படி தொட்டால் தான், பள்ளியில் சேர்த்துகொள்வர். எனவே, இப்போதிலிருந்து, காதை தொட பழகிக்கொள்' என்று என் பெற்றோர், இரண்டு நாட்களுக்கு முன்பே பயத்தை ...

கோலொடு நின்றான் இரவு .

Posted: 07 Jul 2017 07:14 PM PDT

ஆட்சியைக் கையிலே வைத்துக்கொண்டு , முறைகேடாக குடிமக்களிடம் பொருள் கேட்கும் அரசனின் செயல் , கொலைக்கருவியைக் காட்டி பயமுறுத்தி வழிப்பறி செய்யும் கொள்ளைக்காரனுக்கு நிகரானதாகும் என்பார் ஐயன் வள்ளுவர் . வேலொடு நின்றான் " இடு " என் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு . ஐயன் வள்ளுவனின் தீர்க்க தரிசனம் இன்று உண்மையாகி உள்ளது . GST என்னும் வேல் காட்டி , மக்களை பயமுறுத்தி கொள்ளையடித்துக்கொண்டு இருக்கிறார்கள் . " இரவு " என்றால் பிச்சை . இரவு என்ற சொல்லுக்கு " இரவு நேரம் " என்ற மற்றொரு பொருளும் உள்ளது ...

ஆன்லைனில் ரயில்வே தேர்வு 319 கோடி பேப்பர்கள் மிச்சம்

Posted: 07 Jul 2017 07:10 PM PDT

இது பற்றி இந்திய ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில்வே பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வ தற்கு, எழுத்து தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இதனால் , 'ஏ 4' அளவுடைய பல கோடி பேப்பர் கள் செலவாகி வந்தன. ரயில்வே அமைச்சராக சுரேஷ் பிரபு பொறுப்பேற்றபின், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ரயில்வே பணிகளுக்கான தேர்வை, ஆன்லைனிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டது. உதவி ஸ்டேஷன் மாஸ்டர், எழுத்தர் உட்பட 14 ஆயிரம் பணியிடங்களுக்கான, முதல் ...

கடும் எதிர்ப்புக்கு இடையே துவங்கியது ஜி20 மாநாடு : இந்தியாவுக்கு சீனா பாராட்டு

Posted: 07 Jul 2017 05:59 PM PDT

ஹம்பர்க் : தொடர் போராட்டம், வன்முறை சம்பவங்களுக்கு இடையே ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜி20 மாநாடு துவங்கியது. இதில் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் கலந்தாலோசிக்க உள்ளனர். ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கு பிரிக்ஸ் தலைவர்களையும் சந்தித்து பேசினார். 12வது ஜி20 மாநாட்டின் துவக்க விழாவில், ஜெர்மனி சான்சிலர் ஏஞ்சலினா மெர்கல் உலக தலைவர்களை வரவேற்றார். ஜி20 யின் ஒரு அங்கமாக நடந்த பிரிக்ஸ் தலைவர்களுடனான சந்திப்பு கூட்டத்தில் பிரதமர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™