Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., அணி ரகசிய பேச்சுவார்த்தை

Posted: 08 Jul 2017 05:59 AM PDT

அ.தி.மு.க., - பன்னீர் அணியினர்,தனித்து செயல் படப் போவதாக அறிவித்தாலும், முதல்வர் பழனிசாமி அணியினர், அவர்களுடன் ரகசிய பேச்சில் ஈடுபட்டு வருவது, தினகரன் அணியி னரிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க., இணைப்பு தொடர்பான பேச்சைத் துவக்க, 'சசிகலா குடும்பத்தினரை, கட்சியில் இருந்து விலக்க வேண்டும். ஜெ., மறைவு குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க, அரசு பரிந்துரை செய்ய வேண்டும்' என, பன்னீர் அணி சார்பில், நிபந்தனை விதிக்கப்பட்டது.
இவை, வெளிப்படையான நிபந்தனைகள். அதேநேரம், முதல்வர் மற்றும் பொதுச்செயலர் பதவிகளை, பன்னீர் அணிக்கு ஒதுக்க வேண்டும் என்பது, ரகசிய ...

ஜெ., சசி புகழ் பாடும் சத்தம் மறைந்தது பழனிசாமி புகழ் பாடல் ஒலிக்க துவங்கியது

Posted: 08 Jul 2017 06:09 AM PDT

சட்டசபையில், ஜெ., புகழ் பாடி வந்த, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், தற்போது, முதல்வர் பழனிசாமி புகழ் பாடத் துவங்கி உள்ளனர்.

ஜெ., இருந்தவரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில், அவர் புகழை மட்டும் பாடி வந்தனர். கேள்வி நேரத்தில், கேள்வி கேட்கும் போதும் கூட, ஜெ., புகழுரை பாடிய பிறகே, கேள்வியை கேட்பர்.
அதேபோல், அமைச்சர்கள் ஜெ.,வை புகழ்ந்து சில வார்த்தைகள் பேசிய பின் தான், கேள்விக்கு பதில் அளிப்பர். மானிய கோரிக்கை விவாதத் தில் பேசும் எம்.எல்.ஏ.,க்களும், அதற்கு பதில் அளிக்கும் அமைச்சர்களும், ஜெ.,வை ஐந்து நிமிடங்கள் புகழ்ந்த பிறகே, பேசத் துவங்குவர். சிலர் ...

கிராமம், நகரங்களில் வேலைவாய்ப்பு நிலை குறித்து... மெகா சர்வே....! அரசின் செயல்பாட்டை பிரதிபலிக்கும் என நிபுணர்கள் கருத்து

Posted: 08 Jul 2017 06:52 AM PDT

புதுடில்லி, பிரதமர் மோடியின் ஆட்சியில், வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளதா என்பது பற்றி, கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு அக்டோபரில், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கை, மோடி அரசு பற்றிய மதிப்பீடாக அமையும் என, பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த, 2014ல் லோக்சபா தேர்தல் நடந்தது. தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ., தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திர மோடி, 'ஆண்டுக்கு, 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்' என,வாக்குறுதியளித்தார். , 30 ...

பொது நிலமாக ஒதுக்கப்படும் இடங்களின் பதிவு கட்டணம்... ரத்து  வருவாய் அதிகம் இல்லை என்பதால் தமிழக அரசு முடிவு -

Posted: 08 Jul 2017 07:57 AM PDT

சாலை விரிவாக்கம், பூங்கா அமைத்தல் போன்ற பொது காரணங்களுக்காக, நிலம் வழங்குவோர் எழுதி கொடுக்கும் பத்திரங்களை பதிவு செய்ய, கட்டணம், முத்திரைத் தீர்வை ரத்து செய்யப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில், புதிய மனைப் பிரிவுகளை உருவாக்கும் போது, அதில் சாலை, பூங்கா மற் றும் சிறுவர் விளையாட்டுத் திடல் ஆகிய வற்றுக்காக, 10 சதவீத நிலம், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு களுக்கு, உரிமையாளர் ஒப்படைக்க வேண்டும்.இதே போன்று, புதிய கட்டுமான திட்டங்களை மேற்கொள்வோர், அதற்கான நிலத்தில், 10 சதவீதத்தை, பொது பயன் பாட்டுக்காக, உள்ளாட்சி அமைப்பிடம் ...

பெட்ரோல், டீசல் விலை இன்று(ஜூலை-9) எவ்வளவு

Posted: 08 Jul 2017 09:40 AM PDT

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.05 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.19 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை- 9) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல், விலையை விட 19 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.66.05 காசுகளும், நேற்றைய டீசல் விலையை விட 28 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.57.19 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜூலை-9) காலை 6 மணி முதல் அமலுக்கு ...

லாலு குடும்பத்தினர் மீது அமலாக்க துறையும் நடவடிக்கை தீவிரம்!

Posted: 08 Jul 2017 09:49 AM PDT

புதுடில்லி, :சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகளும், எம்.பி.,யுமான, மிசா பார்தி மற்றும் அவரது கணவருக்கு சொந்தமாக, டில்லியில் உள்ள மூன்று பண்ணை வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

நேற்று முன்தினம், லாலு மற்றும் அவரது குடும்பத்தினரின் வீடுகளில், சி.பி.ஐ., அதிரடிச் சோதனை நடத்தியதை தொடர்ந்து,அமலாக்க துறையும் களத்தில் இறங்கியுள்ளதால், பீஹார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கியஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் ...

பொருளாதார குற்றவாளிகளை ஒப்படையுங்க! பிரிட்டனுக்கு மோடி வேண்டுகோள்

Posted: 08 Jul 2017 09:50 AM PDT

ஹம்பர்க், :பிரிட்டனுக்கு தப்பியோடிய, மது பானத் தொழிலதிபர், விஜய் மல்லையாவை கைது செய்ய, மத்திய அரசு தீவிர நடவடிக்கை கள் மேற்கொண்டு வரும் நிலையில், ''பொருளா தாரக் குற்றங்கள் புரிந்து, தலைமறைவாக உள்ளவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைப்ப தில், பிரிட்டன் ஒத்துழைக்க வேண்டும்,'' என, பிரிட்டன் பிரதமர், தெரசா மேவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரபல மதுபானத் தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல், பிரிட்ட னுக்கு தப்பியோடினார். அவரை கைது செய்து, இந்தியாவுக்கு அழைத்து வந்து, நீதியின் முன் ...

ஜெகன் மோகனுடன் கைகோர்க்கிறார் தேர்தல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர்

Posted: 08 Jul 2017 10:08 AM PDT

தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோரை பயன்படுத்த, ஆந்திராவில் முக்கிய எதிர்க்கட்சி யாக திகழும், ஒய்.எஸ்.ஆர்.காங்., திட்டமிட்டு உள்ளது.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலை வர், சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். முக்கிய எதிர்க்கட்சியாக, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ். ஆர்.காங்., உள்ளது. இந்த மாநிலத்தில் அடுத்த இரு ஆண்டுகளில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. இந் நிலை யில், அடுத்த சட்டசபைத் தேர்தலில், தன் கட்சியை வெற்றி பெறச்செய்ய, இப்போது இருந்தே, திட்டங்களை தீட்ட, ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். தன் கட்சிக்கான தேர்தல் ...

ஜி.எஸ்.டி.,யில் இரட்டை வரி விதிப்பு சலுகையா

Posted: 08 Jul 2017 10:20 AM PDT

தமிழகம் மற்றும் மஹாராஷ்டிராவில் சில சேவைகளுக்கு கூடுதல் வரி விதித்து இருப்பதால் இம்மாநிலங்களுக்கு இரட்டை வரி விதிப்பு உரிமை தரப்பட்டுள்ளதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி., என்ற சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி எந்த ஒரு பொருளுக்கோ அல்லது சேவைக்கோ நாடு முழுவதும் ஒரே விதமான வரி மட்டும் விதிக்க முடியும்.இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்கு களுக்கு ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டு இருந்தும் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க தற்போது முடிவு எடுக்கப்பட்டு ...

முன் அனுமதியின்றி கடைகளில் சோதனை நடத்த அனுமதி...கிடையாது

Posted: 08 Jul 2017 10:24 AM PDT

புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்துள்ள நிலையில்,போலி நபர்களின் அட்டகாசத்தை ஒடுக்க, மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.

'கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு, முன் அனுமதியின்றி சென்று, சோதனை நடத்த, வரித்துறை அதிகாரிகளுக்கு எந்தவிதமான அனுமதியும் அளிக்கப்படவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.கடந்த, 1ம் தேதி முதல், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை அமலுக்கு வந்து உள்ளது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சில சமூக விரோதிகள், கடைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் இருப் பிடங்களுக்கு சென்று, வரித்துறை அதிகாரிகள் ...

அமெரிக்கா - தென் கொரியா பிரமாண்ட போர் ஒத்திகை

Posted: 08 Jul 2017 12:07 PM PDT

சியோல்: அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி, அடாவடியில் ஈடுபடும், வட கொரியாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா - தென் கொரியா கூட்டுப்படைகள், நேற்றும் பிரமாண்ட போர் ஒத்திகையில் ஈடுபட்டன.
கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா.,வின் எதிர்ப்பை மீறி, அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. பதற்றம்அந்நாட்டின் மீது, ஐ.நா., பொருளாதார தடை விதித்துள்ள போதிலும், அதன் எச்சரிக்கையை, வட கொரியா பொருட்படுத்தவில்லை.
சமீபத்தில், அந்த நாடு, அமெரிக்காவின் அலாஸ்கா வரை சென்று தாக்கி அழிக்க கூடிய, கண்டம் விட்டு கண்டம் ...

சிறு குறைகளை பூதாகரமாக்குவதா? எதிர்க்கட்சிகள் மீது முதல்வர் பாய்ச்சல்

Posted: 08 Jul 2017 01:00 PM PDT

சென்னை: ''சிறிய குறைகளையும் பூதாகரமாக்கி அறிக்கைகள் விடுவது, பேட்டியளிப்பது, போராட்டங்கள் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை, ஒரு சிலர் அன்றாட வழக்கமாகக் கொண்டுள்ளனர்,'' என, முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.
சட்டசபையில், காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாத்திற்கு, அவர் அளித்த பதில்:
சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்தும், காவல் துறை செயல்பாடுகள் குறித்தும், சில எம்.எல்.ஏ.,க்கள் குறை கூறியதோடு, எதிர்மறையான கருத்துக்களையும் தெரிவித்தனர்.
அவர்கள், தங்கள் வாதங்களை, அவரவர் கண்ணோட்டத்திற்கு தக்கவாறும், அவர்களுக்கு ...

அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா

Posted: 08 Jul 2017 02:03 PM PDT

சென்னை: ''அரசு பஸ்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பஸ்களில், இலவச, 'இன்டர்நெட்' வசதிக்காக, 'வைபை' வசதி ஏற்படுத்தப்படும்,'' என, சட்டசபையில் நேற்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார்.
சட்டசபையில், போக்கு வரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நேற்று வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
* பொது மக்கள் மற்றும் பயணியர் விரும்பும் வகையில், அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும், பணமில்லா பரிவர்த்தனை படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்
* அரசு பஸ்களில், படிப்படியாக, கண்காணிப்பு ...

ஆதார் - பான் இணைப்பால் போலிகள் 'காலி' ஒரு நபர், பல முகம் இனி இருக்காது!

Posted: 08 Jul 2017 03:05 PM PDT

திருப்பூர் : 'பான்' கார்டுடன், ஆதார் எண் இணைக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், பல நன்மைகள் இருப்பதாகவும், கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்போர் மாட்டிக் கொள்வர் எனவும் ஆடிட்டர்கள், தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வங்கி கணக்கில், 'பான்' எண், ஆதார் இணைக்கப்பட்டுள்ளன; ஜி.எஸ்.டி.,யிலும், இவ்விரண்டும் இணைக்கப்பட்டுள்ளன. அதுபோல், பான் கார்டுடன் ஆதார் இணைப்பதும், கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுக்கோப்பான முறைகளால், வரிஏய்ப்பு செய்வோரை
கண்டறிவது, அரசுக்கு எளிதாகி விடுகிறது.
திருப்பூரைச் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™