Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மறுபக்க மழை – கவிதை

Posted: 04 Jul 2017 12:19 PM PDT

- வாழ்தலை எனக்கு எளிமையாக்கியவள் அவள் சொட்ட நனைந்தபடி வந்தவள் மழையை சபிக்கிறாள் பொய்க்காத பருவ மழை திட்டாதே என்றேன் பொய்க்காமல் பொழிஞ்சிருந்தா நான் ஏன் பத்து தேய்க்கிறேன் ஓடிப்போன கணவன் நோய்மையில் வாடிப்போன பிள்ளை எனத் துவண்டுபோய்விட்டாள் பாவம் கொடுத்த நீரையும் மறுக்கிறாள் குழந்தை சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு என்றாள் எதற்கடி வந்தாய் என்றால் உன்னாலே முடியாதே என்கிறாள் இவள் போல் நல்லோர் இருப்பதால் ஊரெல்லாம் மழை – ————————– – அனுராதா சாயிநாதன் குங்குமம்

அல்சர், உடல் சூடு, மற்றும் தாய்ப்பால் பெருக டிப்ஸ்

Posted: 04 Jul 2017 09:00 AM PDT

உடல் வனப்பு அதிகரிக்க…

Posted: 04 Jul 2017 08:59 AM PDT

அருள்மிகு ஜெகந்நாதர் கோவில்…

Posted: 04 Jul 2017 08:55 AM PDT

- சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் 28 கிலோ மீட்டர் தொலைவில் திருமழிசை உள்ளது. சென்னையில் மக்கள் நெருக்கடி அதிகரித்து வருவதால், திருமழிசையை "துணை நகரம்" ஆக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. எனவே இன்னும் சில ஆண்டுகளில் திருமழிசை எனும் பெயர் தினமும் மக்கள் உச்சரிக்கும் பெயராக மாற உள்ளது. ஆனால் இந்த ஊர் ஆதி காலத்தில் வைணவமும், சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமியாக இருந்தது என்பது பலருக்கு தெரியாது. ஈசனும், மகா விஷ்ணுவும், அம்பிகையும் அருள்புரியும் தலங்கள் எத்தனையோ ...

பிரதமர் மோடி எழுதும் புத்தகம் இந்த ஆண்டு வெளியாகிறது

Posted: 04 Jul 2017 08:53 AM PDT

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் எழுதும் புத்தகம், இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படுகிறது. பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று, ரேடியோ மூலம், 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி வாயிலாக, நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சியில், மாணவர்களை வழிநடத்தும் விதமாக பேசினார். இதற்கு பெரும் வரவேற்பும் கிடைத்தது.இதை தொடர்ந்து, மாணவர்களுக்கு, அவர்களது வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக புத்தகம் ஒன்றை, அவர் எழுதுகிறார். இந்த புத்தகம், ...

ஜி.எஸ்.டி A to Z 30

Posted: 04 Jul 2017 08:41 AM PDT

-இளங்கோ கிருஷ்ணன் - ஜி.எஸ்.டி. என்பது என்ன? - சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax) என்பதன் சுருக்கம். இது நாளை முதல் (ஜூலை 1) மத்திய அரசால் இந்தியா முழுவதும் அமுலாக உள்ளது. இப்போது மத்திய, மாநில அரசுகளால் வசூலிக்கப்படும் வரிகள் எவை? பொதுவாக, ஓர் அரசு நேர்முக வரி (Direct Tax), மறைமுக வரி (Indirect Tax) என இருவகையான வரிகள் வசூலிக்கும். - இதில் நேர்முக வரி என்பது ஒருவர் ஈட்டும் வருமானத்தில் இருந்து நேரடியாக வசூலிக்கப்படுவது. உதாரணம் வருமான வரி. மறைமுக வரி என்பது ...

பொருளுடைமை

Posted: 04 Jul 2017 08:32 AM PDT


அவசர ஆசிக்கென
பாதம் தொடும் பேரனுக்கு
காசுக்கோ, பொம்மைக்கோ
வாய்ப்பற்ற உலர்ந்த முத்தமொன்றை
எஞ்சிய அன்பில் குழைத்து
கன்னம் பதித்த மறுநொடியே
இடக்கையால் அழித்துவிட்டு
அப்பா வாங்கிக் கொடுத்த
இயந்திர பொம்மையை
மார்பில் அரவணைத்தபடி
வந்தவர்களுக்கு பரிசளிக்கும்
அம்மாவிடம் இடம் பெயர்கிறது
வளரும் குழந்தை.

————————
– சுபா செந்தில்குமார்
குங்குமம்

2000 மதிப்பீடுகள் பெற்ற M Jagadeesan அவர்களை வாழ்த்தலாம் உறவுகளே

Posted: 04 Jul 2017 07:52 AM PDT

2000 மதிப்பீடுகள் பெற்ற M Jagadeesan  அவர்களை வாழ்த்தலாம்  உறவுகளே.

வாழ்த்துகள்

ரமணியன்

அப்பா - சிறுகதை

Posted: 04 Jul 2017 04:56 AM PDT

-த.சக்திவேல் - - ''பா.... மழ நின்னுடுச்சுப்பா... பட்டாசு வெடிக்க போகலாம். வாங்கப்பா...'' கதிரவனின் கையைப் பிடித்து மழலை மொழியில் கெஞ்சிக் கொண்டிருந்தாள் ஐந்து வயது லிஜி. எதையும் கண்டுகொள்ளாத மாதிரி சிலையைப் போல நாற்காலியில் அமர்ந்திருந்தான் கதிரவன். ''வாங்கப்பா... நாளைக்கு தீவாளிப்பா. ஃப்ரண்ட்ஸ் எல்லாம் இப்பவே பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சுட்டாங்க...'' பக்கத்து தெருவுக்கு கேட்கிற மாதிரி கத்தினாள் லிஜி. அப்போதும் கல்லைப் போல வெறுமனே அமர்ந்திருந்தான் கதிரவன். ''அப்பாவால இப்ப ...

சிபிராஜிடம் என்னை சிபாரிசு செய்ததே விஜய் ஆண்டனிதான்!

Posted: 04 Jul 2017 02:03 AM PDT

- நெகிழ்கிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி -மை.பாரதிராஜா ''என்னோட முதல் படம், 'சைத்தான்' ஷூட்டிங்கில் பிஸியா இருந்தேன். அப்ப விஜய் ஆண்டனி சாருக்கு ஒரு போன் வந்துச்சு. எதிர்முனையில் சிபிராஜ். தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த அமானுஷ்ய த்ரில்லர் 'ஷனம்' படத்தோட தமிழ் ரைட்ஸ் அவர்கிட்ட இருக்கறதாகவும், அதை டைரக்ட் பண்ண ஒரு சாய்ஸ் சொல்லுங்கன்னு கேட்டார். விஜய் ஆண்டனி சார் கொஞ்சமும் யோசிக்காம சிபி சார்கிட்ட என் பெயரை ரெகமண்ட் செய்தார். உண்மைல இது எனக்கு சர்ப்ரைஸ் ...

தள்ளிப்போகாதே என் அன்பே!

Posted: 04 Jul 2017 01:53 AM PDT

- - இந்தோனேஷியாவின் புகிட் லாவாங் வனப்பகுதியில்தான் இந்த அன்பு பரிமாற்றம். பழம் கொடுத்த இளம்பெண்ணின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்ட குரங்கின் முரட்டு அன்பால் அப்பெண்ணும், காதலரும் டென்ஷனாகிவிட்டனர்.   5 நிமிடம் நீடித்த இந்த மூர்க்கப்பிடி, பழம் கொடுத்ததும்தான் தளர்ந்திருக்கிறது. - ------------------------------------

ஈச்சங்குலை...!!

Posted: 03 Jul 2017 09:19 PM PDT

புது வழி…!! 1. மார்கழியில் எல்லாம் கழி தையில் வரும் புதுவழி. 2. வாழ்க்கைக்கு பணப் பரிமாற்றம் காதலுக்கு மனப் பரிமாற்றம். 3. சாப்பிடும்போது பொறை ஏறியது நினைத்தவள் யாராகயிருக்கும்? 4. ஆதாரமாக எடுத்துக் கொள்வதில்லை கொழுக்கட்டையின் விரல்ரேகை 5. பணமற்ற இந்தியா அட்டைக்குள் முடங்கப் போகிறது 6. சில்லறை இல்லை என்றுதான் சொல்கிறார்கள் இருக்கிறதென்று யாரும் சொல்வதில்லை. * இருப்பவனுக்கு நெருக்கடி இல்லை இல்லாதவனுக்குத் தான் நெரு்க்கடி. ந.க.துறைவன்.

விளம்பரங்களில் ஜெயலலிதா படம் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Posted: 03 Jul 2017 08:46 PM PDT

சென்னை, அரசு விளம்பரங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - தவறாக பயன்படுத்தக் கூடாது. - சென்னையை சேர்ந்த 'டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த மனு: - அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. அதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெறுகிறது. அ.தி.மு.க.,வினரைப் பொறுத்தவரை சொந்த செலவில் அவர்கள் ...

ஆர்.எஸ்.மனோகர் 10

Posted: 03 Jul 2017 08:41 PM PDT

- தமிழ் நாடக உலகில் புரட்சியை ஏற்படுத்தி, 'நாடகக் காவலர்' என்று போற்றப்பட்ட நடிகர் ஆர்.எஸ்.மனோகர் (R.S.Manohar) பிறந்த தினம் (ஜூன் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: - * நாமக்கல்லில் (1925) பிறந்தவர். தந்தை சுப்பிரமணியன் அஞ்சல் துறையில் பணியாற்றியவர். அவரது பணிமாற்றம் காரணமாக குடும்பம் கர்நாடகாவின் பெல் லாரிக்கு குடிபெயர்ந்தது. அங்கு ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தி வந்த இயக்குநரும், நடிகருமான ராகவாச்சாரியின் நடிப்பும், வசன உச்சரிப்பும்தான் இவருக்கு உத்வேக சக்தியாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™